கொரோனா அதிகரிப்பு: இன்று முதல் 30 ஆம் திகதி வரை நாடு முடக்கப்படுகின்றது -சுகாதார அமைச்சர்

496 Views

IMG 0981 1 கொரோனா அதிகரிப்பு: இன்று முதல் 30 ஆம் திகதி வரை நாடு முடக்கப்படுகின்றது -சுகாதார அமைச்சர்

இன்று (20) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை வரை நாட்டை முடக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்தும் வழமை போன்று இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சர் வௌியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இது வரையில் 373,165பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம்  6,790 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் டெல்டா லைரஸ் மிக வேகமாக பரவி வருகின்றது.

இந்நிலையில் இலங்கையில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டாலே கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்தலாம் என சுகாதாரத் துறையினர் மற்றும் எதிர் கட்சியினர் தொடர்ந்து அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தனர்.

ஆனல் அரசாங்கம் நாட்டை முடக்குவது குறித்து எந்த தீர்மானமும் எடுக்காத நிலையில், மக்கள் தாமாகவே சுய கொரோனாக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி யிருந்தனர்.

இந்நிலையில், அரசாங்கத்தின் முழு ஊரடங்கு உத்தரவு வெளியாகியுள்ளது .

ilakku-weekly-epaper-143-august-15-2021

Leave a Reply