ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனை ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது.
சுமார் ஒரு மாத காலத்தில் முதல் முறையாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதன் மூலம் மேற்காசியாவில் போர்ச் சூழல் ஆறாவது மாதத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் அமைந்துள்ள ஈரானின் சிறிய தீவு பகுதியில் உள்ள ஈரான் ஏவுகணை ஏவும் தளத்தை அமெரிக்கா தாக்கி உள்ளது. இதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் கொடுத்துள்ளது.
அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படை இதனை உறுதி செய்துள்ளது. இந்த மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு ஒரு டொலர் உயர்ந்துள்ளது. இந்தியா உட்பட சர்வதேச நாடுகளில் பங்குச் சந்தை வர்த்தகம் சரிவை கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



