கைதிகளை மிரட்டியது தண்டனைக்குரிய குற்றம்-இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 

420 Views

தண்டனைக்குரிய குற்றம்

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த வெலிக்கடை சிறைச்சாலைக்குள் அத்துமீறி உள்நுழைந்தமை மற்றும் அனுராதபுரத்திற்குச் சென்று அத்துமீறி சிறைச்சாலைக்குள் நுழைந்து கைதிகளை மிரட்டியமை எனும் குற்றச்சாட்டுதல்கள் மிக்க தண்டனைக்குரிய குற்றம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்  தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சட்டமா அதிபர் மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகள் உள்ளடங்கலான அனைத்து துறைசார் அதிகாரிகளும் லொகான் ரத்வத்தவினால் புரியப்பட்ட இக்கடுமையான தண்டனைக்குரிய குற்றச்செயல்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கமானது சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் புனர்வாழ்வு மற்றும் இரத்தினக்கல், ஆபரண தொழில்துறை இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தொடர்ந்தும் அரசாங்கத்தில் தலைமைத்துவப் பொறுப்புகள் கொண்டிருப்பதற்கான தகைமை தொடர்பில் கேள்விகளை எழுப்பி சுமத்தப்பெற்ற குற்றச் செயல்கள் குறித்த அறிக்கை தொடர்பில் கடுமையாக விரக்தியடைந்துள்ளது.

ரத்வத்த தற்பொழுது சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்திருந்தாலும் இரத்தினக்கல், ஆபரண தொழில்துறை இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலக அல்ல என்பதையும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கமானது முன் வைக்கிறது.

ரத்வத்த ஏனைய நபர்களுடன் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் அத்துமீறி உள்நுழைந்தமை மற்றும் அனுராதபுரத்திற்குச் சென்று அத்துமீறி சிறைச்சாலைக்குள் நுழைந்து கைதிகளை மிரட்டியமை எனும் குற்றச்சாட்டுதல்கள் மிக்க தண்டனைக்குரியதும் சட்டவாட்சிக்கு ஓர் அச்சுறுத்தலுமாகும்.

ரத்வத்தே மீதான குற்றச்சாட்டுகள் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் புனர்வாழவ் இராஜாங்க அமைச்சருக்கான நம்பிக்கையை அவர் இழப்பது மட்டுமன்றி, பாராளுமன்றத்தில் எந்த ஒரு தலைமை பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ளும் தகுதியையும் இழக்கிறார்.

இத்தகைய செயல்களானவை முழுமையாகவும் பாரபட்சமின்றியும் விசாரிக்கப்பட வேண்டியவை என்பதுடன் அவை நிரூபிக்கப்பட்டால் நீதிமன்ற தண்டனைக்குரிய நடவடிக்கைகளுக்கும் உள்ளாக்கப்படவேண்டும்.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுதந்திரமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணைகள் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பது முக்கியமானதாகும்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கமானது கைதிகளினது பாதுகாப்பு தொடர்பில் அரசின் கடமையை குறித்து பலமுறை நினைவுபடுத்தி உள்ளது.தனது இராஜிநாமா முடிவால் ரத்வத்த தனது நடத்தைக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் வகிப்பதற்கான தனது உரிமையையும் இழந்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply