மாகாணங்களுக்கிடையேயான பயணக் கட்டுப்பாடுகள் இரு வாரங்களுக்கு அமுல்

77364214  மாகாணங்களுக்கிடையேயான பயணக் கட்டுப்பாடுகள் இரு வாரங்களுக்கு அமுல்

கொரோனா அதிகரிப்பு காரணமாக மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் இரு வாரங்களுக்கு வலுப்படுத்தப் பட்டுள்ளன.

இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் இரு  வாரங்களுக்கு மாகாணங்களுக்கு இடையான பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில், கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,47,500 ஆக உயர்வடைந்துள்ளது. அதே நேரம் 5620 பேர் இது வரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கோவிட் – 19 தணிப்பு முயற்சிகளை சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்தை கோரி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் அலைகளை வெற்றிகரமாக கையாண்ட சுகாதாரப் பிரிவுகளின் தலைவர்களை மீண்டும் நியமிக்குமாறு அவர்கள் அரசாங்கத்தை எதிர்க் கட்சியினர் கோரியுள்ளனர்.

ilakku-weekly-epaper-141-august-01-2021

Leave a Reply