கிளிநொச்சியில் சற்று முன்னர் பிரதேச சபை ஊழியர் திடீரென வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மதிய உணவிற்காக செல்வதாக புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் பகுதியைச் சேர்ந்த, 47 வயது மதிக்கத் தக்க விஜயகுமார் என்ற வெளிக்களத் தொழிலாளியே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசரணைகளை முன்னெடுத்துள்ளனர்.