ஓமிக்ரோன் கொரோனா: வெளிநாடுகளிலிருந்து வருபவர்களின் தனிமைப்படுத்தல் காலத்தை அதிகரித்த இந்தோனேசியா

310 Views

தனிமைப்படுத்தல் காலத்தை அதிகரித்த இந்தோனேசியா

ஓமிக்ரோன் கொரோனா: வெளிநாடுகளிலிருந்து வருபவர்களின் தனிமைப்படுத்தல் காலத்தை அதிகரித்த இந்தோனேசியா: உருமாறிய புதிய கொரோனா கிருமித்தொற்றான ‘ஓமிக்ரோன்’ உலகின் பல நாடுகளில் பரவுவதைத் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து இந்தோனேசியாவுக்குள் நுழைபவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலம் மூன்று நாட்களில் இருந்து ஒரு வாரமாக மாற்றப்பட்டுள்ளது.

அதே போல், தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, நமிபியா, ஜிம்பாவே, லெசோத்தோ, மொசாம்பிக், எஸ்வாத்தினி, மலாவி, அங்கோலா, சாம்பியா, ஹாங்காங் (சீனா) ஆகிய நாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்குள் சென்ற வெளிநாட்டினருக்கு இந்தோனேசியாவுக்குள் நுழைய அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், இதுவரை இந்தோனேசியாவில் ஓமிக்ரோன் கொரோனா தொற்று எவருக்கும் கண்டறியப்படவில்லை.

இதையடுத்து முன்னெச்சரிக்கைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திவரும் சிங்கப்பூர் இந்தப் புதிய உருமாறிய கிருமியால் மீண்டும் அவற்றைக் கடுமையாக்கலாம் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், தமிழகத்தில் ஒமைக்ரான் வைரசை தடுக்க கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: ஒமைக்ரான் வகை கொரோனாவை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிட் பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad ஓமிக்ரோன் கொரோனா: வெளிநாடுகளிலிருந்து வருபவர்களின் தனிமைப்படுத்தல் காலத்தை அதிகரித்த இந்தோனேசியா

Leave a Reply