அவசரமாக கொழும்பு வருகின்றார் இந்திய வெளிவிவகாரச் செயலாளர்

124 Views

கொழும்பு வருகின்றார்
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா அவசர பயணம் மேற்கொண்டு கொழும்பு வருகின்றார்.

ஒக்ரோபர் 2ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை கொழும்பில் தங்கியிருக்கும் அவர், கொழும்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களைச் சந்திக்கவுள்ளார்.

இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் அமெரிக்காவில் சந்தித்து ஒருவாரம் கழிந்துள்ள நிலையில் இந்திய வெளியுறவு செயலரின் இந்தப் பயணம் இடம்பெறுகின்றது.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது என விமர்சனங்கள் தீவிரமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply