இலங்கை வருகின்றார் சுப்பிரமணியம் சுவாமி; புதுடில்லியில் மிலிந்தவுடன் பேச்சு

531 Views

சுப்பிரமணியம் சுவாமி
இலங்கை வருகின்றார் சுப்பிரமணியம் சுவாமி-புதுடில்லியில் மிலிந்தவுடன் பேச்சு: இந்தியாவிற்கான இலங்கையின் புதிய உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, பாஜக தலைவர் சுப்பிரமணியம் சுவாமியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். புதுடில்லியிலுள்ள சுப்பிரமணியம் சுவாமியின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதனை சுப்பிரமணியம் சுவாமி தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

“நாங்கள் காத்திரமான நட்பு ரீதியிலான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம்” எனத் தெரிவித்துள்ள அவர், “நான் விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு எனது அருமை நண்பர் ராஜபக்‌ஷ குடும்பத்தை சந்திக்கவுள்ளேன். அனைத்து விபரங்களும் இறுதியானதும் ருவிற்றரில் அது தொடர்பில் தகவல்களை வெளியிடுவேன்” எனவும் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply