இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா- சுப்பிரமணியசுவாமி

435 Views

இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா

இலங்கையின் உண்மையான நண்பன் இந்தியா என்பதை ராஜபக்சவினரின் ஆட்சியில் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினரும மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை பிரதமரும் எனது நண்பருமாகிய மகிந்த ராஜபக்சே நவநாத்திரி விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார். எனவே அவரின் அழைப்பை ஏற்று நான் இலங்கை வர உள்ளேன். இந்த பயணத்தில் இலங்கையின் பாதுகாப்புப் படைகளைச்சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்கும் விசேட நிகழ்வொன்றில் தேசியப் பாதுகாப்பு சம்பந்தமான விசேட உரையொன்றையும் ஆற்றவுள்ளேன். அத்தோடு மீனவர் பிரச்சினை உள்ளிட்ட மேலும் சில விடயங்கள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட உள்ளேன்” என்றார்

நன்றி- வீரகேசரி

ilakku-weekly-epaper-150-october-03-2021

Leave a Reply