காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானிடம்  இருந்து இந்தியா பாடம் கற்று கொள்ள தேவையில்லை – ஐநாவில் இந்தியா

163 Views

காஷ்மீர் விவகாரம்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் காஷ்மீர் விவகாரம் தொடர்பான பிரச்னையை எழுப்பியதற்காக பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பான OICக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 48ஆவது கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்தியாவின் நிரந்தர பிரதிநிதித்துவக் குழுவின் முதன்மை செயலர் பவன் பாதே  கருத்துத் தெரிவிககையில்,

பாகிஸ்தான் வெளிப்படையாகவே பயங்கரவாதிகளுக்கு பயிற்சி, பணம் மற்றும் ஆயுதங்களை வழங்கும் ஒரு நாடு.

மேலும் ஐ.நாவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் இவ்வாறு ஆதரவு வழங்குகிறது.    அதை பாகிஸ்தான் தனது அதிகாரபூர்வ கொள்கையாகவே வைத்துள்ளது” என்று சாடியுள்ளார்.

 அதேபோன்று “இந்தியா பாகிஸ்தானை போன்ற ஒரு தோற்றுப்போன நாட்டிடம் இருந்து இந்தியா பாடம் கற்று கொள்ள தேவையில்லை என்றும் பயங்கரவாதம் மற்றும் மனித உரிமை மீறல்களில் பாகிஸ்தான் மைய இடமாக விளங்குகிறது” என்றும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

 ஐநா மனித உரிமை ஆணையத்தை இந்தியாவுக்கு எதிரான தவறான பிரசாரத்திற்கான மேடையாக பயன்படுத்துவதே பாகிஸ்தானின் வேலை என்று பவன் பாதே தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடைபெறும் நீண்டகால பிரச்னையால் நடைபெற்றும் “முறையான” மனித உரிமை மீறல்கள் என கூறப்படும் பிரச்னைகள் குறித்து ஐநா மனித உரிமைகள் அணையம் பேச வேண்டும் என இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply