இலங்கைக்கு மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலை வழங்கி இந்தியா உதவி

173 Views

இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைக் குறைப்பதற்காக இந்தியா மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டரில் இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட SLR 2 பில்லியனுக்கும் அதிக பெறுமதியான அரிசி, பால் மா மற்றும் மருந்துப் பொருட்களை ஏற்றிய கப்பல் இன்றைய தினம் கொழும்புத் துறைமுகத்தை அடைந்தது. இந்த உதவிப் பொருட்களை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

Tamil News

Leave a Reply