இந்தியா- அகமதாபாத் குண்டு வெடிப்பு-38 பேருக்குத் தூக்குத் தண்டனை

இந்தியா- அகமதாபாத் குண்டு வெடிப்பு

2008ம் ஆண்டின் இந்தியா- அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கில்
குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட 49 பேரில் 38 பேருக்குத் தூக்குத் தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப் பட்டுள்ளதாக சிறப்பு அரசு வழக்குரை ஞர் அமித் படேல் ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

கடந்த 2008 ஜூலை 26ம் திகதி அன்று, குஜராத்தின் முக்கிய நகரமான அகமதாபாத்தில் சுமார் 70 நிமிட இடைவெளியில் 21 குண்டுகள் வெடிப்புக்கள் நடைபெற்றன.

குஜராத் காவல் துறையின் சிறப்புப் படை, இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 70 பேரை கைது செய்தது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 49 பேரை குற்றவாளிகள் என பிப்ரவரி 8ம் திகதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 28 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 38 பேருக்குத் தூக்குத் தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தையே கலங்க வைத்த இந்த சம்பவத்துக்கு இந்திய முஜாஹிதீன் மற்றும் தீவிரவாத குழுவான ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி ஆகிய இரு தீவிரவாத அமைப்புகளும்   பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamil News