06. பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைத்து இம்முறை சுதந்திர தின விழா ஒத்திகையை நடாத்துவதாகப் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த தெரிவித்தார்.
‘இம்முறை சுதந்திர தின விழாவிற்காக 1,873 படை வீரர்கள் பங்குபற்றுவதுடன், அது கடந்த தடவை நடைபெற்ற சுதந்திர தின விழா மற்றும் ஏற்பாடுகளை விட 40% வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது’ என்று பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டார்.
‘அரசாங்க தகவல் திணைக்களத்தில் 77ஆவது சுதந்திர தின வைபவம் தொடர்பாக இன்று (30) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்புச் செயலாளர் இதனைத் தெரிவித்தார்.
இம்முறை விமானப்படையின் விமானங்கள் 03 இற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அவ்வாறே, இம்முறை யுத்த வாகனங்களின் அணிவகுப்பு நடைபெறவில்லை என்றும், கடற்படையினால் நண்பகல் 12.00 மணியளவில் சம்பிரதாயபூர்வமாக கடலின் மத்தியில் கப்பலொன்றிலிருந்து மரியாதை வேட்டுக்கள் 25 தடவை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.



