அதிகரிக்கும் கொரோனாத் தொற்று- இலங்கை சிவப்பு வலயமாகப் பெயரிடப்பட்டது

அதிகரிக்கும் கொரோனாத் தொற்று

அதிகரிக்கும் கொரோனாத் தொற்று: கொரோனா வைரஸ் பரவுதல் வலுப்பெற்றுள்ளமை மற்றும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை படி இலங்கை சிவப்பு வலயமாகப் பெயரிடப் பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 451,401 ஆக அதிகரித்துள்ள அதே வேளை, இந்த தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,806 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இதுவரை 1,26 ,60, 231 பேர் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் 90,07,588 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர் என்றும் தொற்றுநோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மக்களின் வாழ்வில் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வின் அவசியம்

இந்நிலையில், இலங்கை மருத்துவ சங்கத்தின் துணைத் தலைவர் மருத்துவர் மணில்க சுமனதிலக,  “இலங்கை சிவப்பு வலயமாகப் பெயரிடப் பட்டுள்ளது எனவும் இலங்கையைப் பச்சை வலயமாக மாற்ற வேண்டுமானால் நாள் ஒன்றுக்கு அடை யாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 இற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அந்த மாற்றத்தைக் காணவேண்டு என்றால் சுமார் ஒரு வார காலம் ஆகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ilakku-weekly-epaper-144-august-22-2021