இலங்கையில் இனி முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை

348 Views

முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை

இலங்கையில் முகக் கவசம் அணிவது வெள்ளிக்கிழமை ஜூன் 10 முதல் கட்டாயம் கிடையாது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அசேல குணவர்தன அறிக்கையொன்றின் ஊடாக இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, உள்ளக அரங்குகள் மற்றும் வெளியக பகுதிகளில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில், சுகாதார வழிகாட்டல்கள்படி நாளை (ஜூன் 10) முதல் அந்த விதிகளை இரத்து செய்வதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், கோவிட் – 19 தொற்றை கண்டறிவதற்காக நடத்தப்படும் பி.சி.ஆர் மற்றும் ரெபிட் அன்டீஜன் பரிசோதனைகள் நாளை (10) முதல் நடத்தப்படுவது அவசியமற்றது என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tamil News

Leave a Reply