9.7 மில்லியன் சிறுவர்களின் கல்வி பாதிப்பு – உலக சுகாதார நிறுவனம்

212 Views

உலகில் தற்போது நிலவிவரும் கொரோனோ வைரஸ் நெருக்கடிநிலை காரணமான ஏற்படப்போகும் நிதிக்குறைப்பு நடவடிக்கைகளால் உலகில் 9.7 மில்லியன் சிறுவர்கள் பாடசாலைகளுக்கு செல்லமுடியாத நிலை உருவாகும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (17) ஊடகங்களுக்கு வழங்கிய செய்திக்குறிப்பில் உலகசுகாதார நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சுகாதாரத்துறைப் பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது உலகில் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் சுகாதாரப் பணியளர்களின் எண்ணிக்கை 10 விகிதமாகும். 690 மில்லியன் மக்கள் கடந்த ஆண்டு உலகில் பட்டினியை எதிர்நோக்கியிருந்தனர். இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு மேலும் 132 மில்லியன்களால் அதிகரிக்கும்.

இந்த ஆண்டின் இறுதியில் 9.7 மில்லியன் சிறுவர்கள் தமது கல்வியை இழப்பதுடன் மேலும் மில்லியனுக்கு மேற்பட்ட சிறுவர்கள் கல்வியில் பின்தங்கிய நிலையை அடைவார்கள். எதிர்வரும் காலங்களில் ஊடச்சத்துக் குறைபாடு, இடப்பெயர்வுகள், உணவுத் தட்டுப்பாடு, தொற்றுநோய்கள் என்பவற்றின் தாக்கம் அதிகளவில் கணப்படுவதற்குரிய சந்தர்ப்பங்கள் உள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளர்.

Leave a Reply