சுவாமி விபுலானந்தரின் 73வது நினைவு தினம்

311 Views

முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினைப்பெற்ற முத்தமிழ் வித்தகர் சுவாமி சுவாமி விபுலானந்தரின் 73வது சிரார்த்த தினமும் சிவானந்தா தேசிய பாடசாலையில் ஸ்தாபகர் தினமும் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு விபுலானந்தர் நூற்றாண்டு சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

இன்று காலை மட்டக்களப்பு,கல்லடி,உப்போடையில் உள்ள சுவாமி விபுலானந்தரின் சமாதியில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.

விபுலானந்தர் நூற்றாண்டு சபையின் தலைவர் கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிசன் தலைவர் சுவாமி தக்ஷஜானந்தர் மகராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.IMG 9067 சுவாமி விபுலானந்தரின் 73வது நினைவு தினம்

இதன்போது சுவாமியின் சமாதிக்கு மலரஞ்சலி செய்யப்பட்டதை தொடர்ந்து மங்கல ஆரார்த்திசெய்யப்பட்ட விபுலானந்தர் கீதம் இசைக்கப்பட்டது.சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து மட்டக்களப்பு திருநீற்றுக்கேணி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி விபுலானந்தரின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விபுலானந்தர் நூற்றாண்டு சபையின் உறுப்பினர்கள்ääமாநகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply