ஆனால் அவர்களால் கறுப்புயூலை சம்மந்தமாக பாராளுமன்றத்தில் எதிர்ப்பு காட்டமுடியவில்லை இதற்கான காரணம்.1977, பாராளுமன்றம் மேலும் 5, வருடங்கள் நீடிக்க 1982ல் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு முன்னம் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற ஆயுள்காலத்தை நீடிப்பது தொடர்பான விவாதம் இடம்பெற்றபோது தமிழர் விடுதலை கூட்டணி எதிர்த்து விவாதித்துவிட்டு வாக்களிப்பு நாளில் எதிர்க்காமல் அதில் கலந்துகொள்ளாமல் நழுவிவிட்டனர். அதனை எதிர்த்து வாக்களிக்கவில்லை என்ற விமர்சனம் தமிழ்மக்கள் மத்தியிலும் விடுதலை இயக்கங்கள் மத்தியிலும் அப்போது இருந்தது.
1983, யூலை, 22க்கு பின்னர் பாராளுமன்றம் செல்லக்கூடாது என விடுதலை இயக்கங்கள் தமிழர் விடுதலை கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினர்.1983, யூலை, 23ல் கலவரம் ஏற்பட்டது. 1983 யூலை படுகொலை இடம்பெற்று அடுத்த மாதமே எட்டு தினங்களால் 1983, ஆகஷ்ட் 08ல் ஆறாவது திருத்தச்சட்டம் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பை திருத்துவதற்கான சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.ஆதரவாக 150, வாக்குகள் கிடைத்தன தமிழர்களில் ஆதரவாக கல்குடா ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கே டவிலியூ தேவநாயகம், மட்டக்களப்பு தமிழர் விடுதலை கூட்டணியில் இருந்து அரசுடன் இணைந்த செல்லையா இராசதுரை, பொத்துவில் ஐக்கியதேசியகட்சி பாராளு மன்ற உறுப்பினர் றங்கநாயகி ஆகியோர் ஆறாவது திருத்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்தனர். மறுநாள் 1983, ஆகஸ்ட் 09ல் 6வது திருத்த சட்டத்திற்கு அமைவாக சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.
தமிழர் விடுதலை கூட்டணி பாராளுமன்றத்தில் சமூகம் கொடுக்கவில்லை. ஆறாவது திருத்தச்சட்டம் என்பது இலங்கையின் ஆள்புல கட்டுகோப்பை மீறுவதற்கு எதிரான தடை விதிக்கும் திருத்த சட்டமாகும். இது அரசியலமைப்பின் 157 ஆவது பிரிவின் பின்னர் 157A என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. மேலும், 167A என்ற பிரிவும் சேர்க்கப்பட்டது, இது இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டை மீறுவதற்கெதிரான தடை யைக் குறிக்கிறது.
இந்த சட்டமூலம் ஒரு நாட்டில் பிரிவினை கூறுவது தடைசெய்யப்பட்டதுடன் அதற்கு சார்பாக சத்தியபிரமாணத்தை செய்ய வேண்டும் என்று சட்டத்தில் நிறைவேறியது. இதற்காக “ இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் யாப்பை உறுதியாக போற்றிக் காப்பேன் என்றும்,இலங்கை ஆள்புலத்துக் குள்
ளாகத்தனி அரசொன்று தாபிக்கபடுவதற்கு மறை முகமாகவோ,இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியிலோ ஆதரவு அளிக்கவோ,ஆக்கமளிக்கவோ,ஊக்கிவிப்பு அளிக்கவோ, நிதி உதவவோ, பரிந்துரைக்கவோ மாட்டேன் என்றும் பயபக்தியுடன் வெளிப்படுத்தி உறுதி செய்கிறேன் / சத்தியம் செய்கிறேன். என கையொப்பம் கட்டாயம் இடும் சட்ட மூலமாகவே 6, வது திருத்த சட்டம் அமைந்தது. இந்த சத்தியப்பிரமானத்தை தமிழர் விடுதலை கூட்டணி 18, பாராளுமன்ற உறுப்பினர்களும் எடுக்க கூடாது என்று அப்போது வடகிழக்கில் பலமான சக்தியாக இருந்த சகல விடுதலை இயக்கங்களும் உத்தரவிட்டதற்கு அமைவாக அவர்கள் சத்தியப்பிரமாணம் எடுக்க வில்லை.
அதனால் 18, பாராளுமன்ற உறுப்பினர் களும் தொடர்ச்சியாக மூன்று மாதம் பாராளு மன்றத்திற்கு செல்லாமையால் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை தானாகவே இழந்தனர்.
அந்த 18, பாராளுமன்ற உறுப்பினர்கள் விபரம்:
1. வட்டுக்கோட்டை, அ.அமிர்தலிங்கம்.
2. திருகோணமலை, இரா.சம்பந்தன்.
3. பட்டிருப்பு.பூ.கணேசலிங்கம்.
4. வவுனியா,தா.சிவசிதம்பரம்.
5. நல்லூர்.மு.சிவசிதம்பரம்.
6. யாழ்ப்பாணம்,வே.யோகேஸ்வரன்.
7. முல்லைத்தீவு, அசை.செல்லத்தம்பி.
8. மன்னார்,சோ.சூசைதாசன்.
9. கிளிநொச்சி.வீ. ஆனந்தசங்கரி.
10. சாவகச்சேரி,வீ. என். நவரெத்தினம்.
11. வட்டுக்கோட்டை, நீலன் திருச்செல்வம்.
12. ஊர்காவல்துறை,க.பொ.இரத்தினம்.
13. பருத்தித்துறை, வீ. என். நவரெத்தினம்.
14. உடுப்பிட்டி.த.இராசலிங்கம்.
15. உடுவில்,வீ.தருமலிங்கம்.
16. கோப்பாய்.மு.ஆலாலசுந்தரம்.
17. மட்டக்களப்பு செ.இராசதுரை.
18. பொத்துவில் . எம்.கனகரெட்ணம். (இவர் 1978, ல் சுட்டுக்கொலை, இடைத் தேர்தலில் அவருடைய சகோதரி திருமதி றங்கநாயகி ஐக்கியதேசியகட்சி மூலம் வெற்றியீட்டினார்)
இவர்களில் மட்டக்களப்பு செ.இராசதுரை அரசுடன் இணைந்து இந்துகலாசார அமைச்சர் பதவி பெற்றார். இந்தியாவில் தங்கி இருந்த பருத்திதுறை துரைரெட்ணம் இயற்கை எய்தினார்.பொத்துவில் கனகரெட்ணம் 1978, ஜனவரி, 27ல் கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் இதனை விடுதலைப்புலிகள் செய்ததாக அப்போது கூறப்பட்டது.
கோப்பாய் எம்.ஆலாலசுந்தரம்,உடுவில் வீ.தருமலிங்கம்(தற்போதைய புளட் தலைவர் சித்தாத்தன் தந்தை) இருவரும் 1985, செப்டம்பர் 02ல் கடத்தப்பட்டு யாழ்ப்பாணத்தில் வீதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொலைகளை ரெலோ இயக்கம் செய்ததாக அப்போது கூறப் பட்டது.
‘ஏனையவர்கள் இந்தியாவில் தங்கி இருந்தும், சிலர் ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்தும் சென்றனர். இந்தியாவில் தங்கி இருந்தபோதும் இந்தியப்பிரதமர், தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொண்டு அரசியல் பணியை சிலர் மேற்கொண்டனர்.
1982, டிசம்பர் 22ல் சர்வசனவாக்கெடுப்பு இடம்பெற்று 1989, பிப்ரவரி 15ல் ஏறக்குறைய ஆறுவருடங்கள் பாராளுமன்றம் தொடர்ந்தது.இந்த காலத்தில் வடகிழக்கில் தமிழர் விடுதலை கூட்டணி தமிழர் பிரதிநிதித்துவம் வெற்றிடமா கவே கடந்தன.
1983, யூலை இடம்பெற்ற இனக்கலவரத் தின் பின்னர் பாராளுமன்றத்தில் தமிழர் விடுதலை கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் கள் சமூகம் இல்லை என்பதால் எதிர்ப்பு காட்டவில்லை. 1989, விகிதாசார தேர்தலில்தான் வடகிழக்கில் மீண்டும் தமிழர் விடுதலை கூட்டணி இடம்பிடித்தது.