செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் முதல் கட்ட 15 நாள் அகழ்வுப் பணிக
ளின் நிறைவில் மொத்தமாக 65 மனித என்புக்கூட் டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப் பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டி ருந்த நிலையில் தற்காலிகமாக ஓய்விற்காக நிறுத்தப்பட்டி ருந்த அகழ்வுப் பணிகள் மீண்டும் 21.07.2025 ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அன்றைய தினம் திருகோணமலை சம்பூர் பகுதியில் மனிதப் புதைகுழி என சந்தேகப்படும் இடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள் ளது.
திருகோணமலை, சம்பூர் கடற்கரையை அண்டிய பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மனித மண்டையோடு உள்ளிட்ட சில மனித எலும்புத் தொகுதிகள், மனித எச்சங்கள் வெளி வந்ததையடுத்து குறித்த கண்ணிவெடி அகழும் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.
அங்கு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ள இடம் தொடர்பிலும் சம்பூர் தொடர்பி லும் சற்று ஆழமாக உற்று நோக்கினால்.
ஈழத்தில் நடந்த உள்நாட்டுப் போரின் கொடூரமான காலப்பகுதியையும் குறிப்பாக வடக்குக் கிழக்கில் நடந்த மனிதப் பேரவலங்க ளான மனிதப் படுகொலைகளின் வரிசையில் கிழக்கில் சம்பூரில் நிகழ்ந்த படுகொலைகளின் பயங்கரத்தையும், அதன் நினைவுகளையும் மீண்டும் மக்கள் மனதில் எழுப்பியுள்ளதோடு அதற்கு நீதி கிடைக்குமா எனும் ஏக்கத்தையும் உண்டாக்கியிருப்பதோடு இங்கு தற்போது மீட்கப்படும் மனித எச்சங்கள் யாருடையது, எக்காலத்திற்குரியது, இதற்கும் சம்பூர் படு கொலைக்கும் தொடர்பிருக்கிறதா எனும் சந்தேகங் களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ள தோடு, மனிதர்கள் நடமாடித் திரிந்த இந்த பிரதேசத்தில் காணப்படும் சிறுவர் பூங்கா, மீனவர் சங்கக் கட்டிடம், சம்பூர் படுகொலை நினைவுத் தூபி, என்பன அமைந்துள்ள இந்த பிரதேசத்தில் நடைபெறும் கண்ணிவெடி அகழ்வுப் பணிகள் இப்போது இடம்பெறுவது பற்றியும் ஏன் எனும் கேள்விகள் உள்ளதாகவும் ஆனாலும் இந்தப் பகுதியில் சில இடங்களில் வெடி பொருட்கள் சிலவற்றை பொதுமக்களின் தகவலுக்கமைய மீட்டுள்ளதாகவும் கூறப்பட்டதோடு, யுத்த காலங்க ளில் மோதல்கள் இடம்பெற்ற பிரதேசமாகவும் இது காணப்படதாகவும் பிரதேச வாசிகளும் கூறினர்.
கடந்த வியாழக்கிழமை (2025.07.17) மூதூர் – சம்பூர் கடற்கரையோரப் பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணிகள் ஆரம்பிக்கப் பட்டிருந்தது. இந் நிலையில் சம்பூர் சிறுவர் பூங்காவின் முன்பாக மீனவர் சங்கக் கட்டிடம்,சம்பூர் படுகொலை நினைவுத் தூபி என்பன அமைந்துள்ள கடற்கரையோரப் பகுதியில், கடந்த ஒரு வாரகாலமாக (MAG) எனப்படும் கண்ணிவெடி அகழும் நிறுவனம், தங்களுக்குரிய தளபாடங்கள் மற்றும் பொருட்களுடன் முகாமிட்டு, கடந்த வியாழக்கிழமை முதல் கண்ணிவெடி அகழும் பணிகளைத் தொடர்ந்தது.
இதன்போது 2025.07.20 ஞாயிறு குறித்த பகுதியில் மனித மண்டையோடு உள்ளிட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அகழ்வுப் பணி உடனடியாக நிறுத்தப்பட்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு அது நீதிபதிக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எம்.நஸ்லீம் குறித்த இடத்தை பார்வையிட்டதோடு குறித்த பணியை 23ஆம் திகதிவரை தற்காலி
கமாக இடைநிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டி ருந்ததோடு குறித்த பகுதியை திபதியின் முன்னிலையில், அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் ஆகிய திணைக்களங்களின் பிரசன்னத்துடன் புதன்கிழமை (2025.07.23) அகழ்வதற்கும் உத்தரவிட்டதுடன் பொலிஸாரைக் குறித்த பகுதியில் பாதுகாப்புக் கடமைகளுக்காக ஈடுபடுத்துமாறும் பொலிஸாருக்கு நீதிபதி உத்தர விட்ட நிலையில் பொலிஸாரின் பாதுகாப்பும் குறித்த பிரதேசத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.
குறித்த பகுதிக்கு (2025.07.23) புதன்கிழமை கள ஆய்வை மேற்கொண்டிருந்த நீதிபதி குறித்த இடத்தை பார்வையிட்டதுடன் அங்கு வருகை தந்திருந்த திணைக்கள அதிகாரிகளுடன் கலந்து ரையாடியதோடு சட்ட வைத்திய அதிகாரிக்கு இப்பகுதியில் அகழ்வுப்பணியை முன்னெடுப்பது தொடர்பில் மிதிவெடி அகற்றும் பணிகளை முன்னெடு க்கும் நிறுவனத்துடன் கலந்துரையாடி அறிக்கை சமர்ப்பிக் குமாறும் அறிவுறுத்தியதோடு, தொல்லியல் திணைக்களத் திடம் குறித்த இடத்தில் மயானம் இருந்ததா என்பது தொடர்பில் ஆராய்ந்து உரிய அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும், குறித்த அறிக்கைகளை எதிர்வரும் புதன்
கிழமை (2025.07.30) நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி. எச்.எம். தஸ்னீம் பௌசான் உத்தர விட்டுள்ளார்.
அன்றைய தினம் குறித்த இடத்திற்கு அரச பகுப்பாய்வுத் திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச் சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியகம், காணாமல் போனோர் அலுவல கம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக் களங்களின் அதிகாரிகள் இன்றைய தினம் வருகை தந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டிருந்தனர்.
குறித்த பகுதிக்கு இன்றைய தினம் (23) உரிய திணைக்களங்களின் அதிகாரிகள் பிரசன்ன மாகியிருந்ததுடன் அப்பகுதியானது தொடர்ந்தும் பொலிஸாரின் பாதுகாப்பின்கீழ் இருந்து வரு கின்ற அதேவேளை அப்பகுதிக்குள், குறித்த திணைக்களத்தினரைவிட்டு வேறு எவரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை, ஊடகவியலாளர்களும் உட்செல்ல அனுமதிக்கபடவில்லை என்பதோடு எதிர்வரும் 30ஆம் திகதி கிடைக்கப்பெறுகின்ற சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் திணைக்கள அறிக்கைகளை ஆராய்ந்த பின்னர்தான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படும் எனவும் அறிய முடிகின்றது.
கிழக்கில் இராணுவமும், முஸ்லீம் ஊர்காவல் படைகளும் இணைந்து அரசின் திட்டமிடலுடன் நடத்தப்பட்ட படுகொலைகளா கக் கருதப்படுகின்ற அம்பாறை மாவட்டத்தின் உடும்பன்குளம்,திராய்க்கேணி,வீரமுனை உள்ளிட்ட இன்னும் பல படுகொலைகளும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை,மகிழடித்தீவு,சத்துருக்கொண்டான்,சித்தாண்டிப் படுகொலைகள் போன்ற மிகக் கொடிய படுகொலை நடந்த இடமே இந்த சம்பூர்ப் படுகொலையாகும்.
திருகோணமலை சம்பூர் பகுதி, இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது பல மனித உரிமை மீறல்களுக்கும், பொதுமக்கள் படுகொலைகளுக்கும் சாட்சியாக இருந்துள்ளது. குறிப்பாக, சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் 1990.07.07 ஆம் திகதி இப்பகுதியில் நடந்த ஒரு கோரமான சம்பவத்தில், அப்பாவிப் பொதுமக்கள் பெருமளவில் இராணு வம் மற்றும் முஸ்லிம் ஊர்காவல் படைகளும் படுகொலை செய்யப்பட்டனர்.
சம்பூர் கிராமத்தில் வெட்டியும் சுட்டும் 57 பேர் கொல்லப்பட்டதாகப் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவங்களின் விளைவாக, அப்பகுதி மக்கள் இடம்பெயரச் செய்யப்பட்டு அவர்களின் சொத்துகளும்,காணிகளும் கூட சூறையாடப் பட்டன இவ்வாறான பெருத்த துன்பங்களை அனுபவித்த அந்த மக்களின் உயிரிழந்த உறவுக ளின் உடல்கள் மீட்கப்படாமலும், முறையாக அடையாளம் காணப்படாமலும்,உரிய முறை யின்றி புதைக்கப்பட்டும் இருந்தது.
இந்தப் படுகொலைகளின் நினைவாகவே சம்பூர் கடற்கரையோரத்தில் தூபியொன்று அமைக் கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் அந்த மக்களால் அங்கு அஞ்சலிகள் செய்யப்படுவதோடு நீதிக்கான குரல் தொடர்ந்தும் ஒலித்து வந்தது.இந்நிலையில் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ள மனித எச்சங்கள் அந்தப் பகுதி மக்களின் நீதியும் உண்மைக்குமான தேடலுக்கு மேலும் நல்ல நம்பிக்கையும் வலுவும் சேர்த்துள்ளது.
சம்பூர் படுகொலை நீதிக்காகக் குரல் கொடுப்போம்.