Home Blog Page 7

யாழ். மந்திரி மனையை பாதுகாக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழர்களின் தொன்மையினை எடுத்தியம்பும் நல்லூர் இராசதானியின் மந்திரிமனையினைப் பாதுகாத்து மீளுருவாக்கம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி திங்கட்கிழமை (செப்டெம்பர் 22) குறித்த மந்திரி மனைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த மந்திரி மனையானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த மழை காரணமாக உடைந்து விழுந்துள்ளது. இந்நிலையில் அதனை பாதுகாக்குமாறு கோரியே இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “இலங்கை அரசே தமிழர்களின் மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடு, இந்த இடத்தை உரிமை கோருபவரே மந்திரி மனையை இடித்துவிட்டு உல்லாச விடுதியா கட்டப்போகின்றார், தொல்லியல் திணைக்களமே பௌத்த சின்னங்களை பாதுகாப்பதைப்போல் தமிழரின் மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடு, மன்னன் சொத்து மக்கள் சொத்து தனிநபரே உரிமை கொண்டாடாதீர்கள்” போன்ற வாசகங்களை எழுதிய பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தியாகி திலீபன் 1987ல் சொன்னதை 2025ல் ஈழத்தமிழர்கள் செய்யவேண்டும் – பா. அரியநேத்திரன்

1987 செப்டம்பர் 15 முதல் 26 வரை நல்லூர் முருகன் ஆலய முன்றலில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட தியாகி திலீபன் இறுதியாக ஆற்றிய உரையில்.. “என் அன்பிற்கினிய மக்களே என்னால் பேச முடியவில்லை. பேச முடியாத நிலையில் இருந்தும் என்னை நீங்கள் தரும் உற்சாகம் பேச வைக்கிறது. நான் மீட்கப்பட முடியாத இடத்திற்கு போய்க் கொண்டிருக்கிறேன்.
நான் வாழ்நாள் முழுவதும் நேசித்த என் தேசத்து மக்களே, உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச் செல்கிறேன். நீங்கள் அனைவரும் பரிபூரணமாக கிளர்ந்தெழ வேண்டும். இங்கே ஒரு மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும். மறைந்த போராளிகள் 650 பேருடன், 651வது போராளியாக நான் மேலே இருந்து மலரும் தமிழீழத்தை மகிழ்வோடு பார்ப்பேன். போராடத் தயாராகுங்கள். எனக்கு விடை தாருங்கள்.” எனகூறிவிட்டே ஆகுதியானார்.
அவர் அப்படிக்கூறி 18 நாட்களுக்குப் பின்னர் தான் 1987 அக்டோபர் 10ல் தமிழீழ விடுதலைப் புலிகள் – இந்தியப்படைகளுடன் போர் ஆரம்பித்தனர் அதன் பின்னர் 1990 ல் இலங்கைப்படையினருடன் போர் ஆரம்பித்து மரபுப்படையணிகளுடன் வளர்ச்சியடைந்து பல்வேறு சமர்கள் செய்து பின்னர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சர்வதேச சதி மூலமாக 2009 மே 18ல் முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் மௌனித்தது
போர் மௌனித்து 16 வருடங்களாகியும் தியாகி திலிபன் கூறிய மக்கள். புரட்சி என்பதை எந்த ஒரு தமிழ்தேசிய கட்சிகளும் தலைமை தாங்கி முன் னெடுக்கத்தவறிவிட்டன.
ஆட்சியில் இருந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ, மைத்திரி பால, கோட்டபாய, ரணில்விக்கிரமசிங்க வரை தமிழர்களுக்கு எந்த அரசியல் தீர்வும் வழங்க தயாக இருக்கவில்லை. தற்போது ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தி அரசின் ஜனாதிபதி அநுராவும் அவருடை ஆட்சியும் சிங்கள மக்கள் மத்தியில் நம்பிக்கை இருந்தாலும் தமிழ் மக்களை பொறுத்தவரை குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கை அற்ற ஒரு ஜனாதிபதி யாகவே அநுராவும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை வடகிழக்கில் செய்து கொண்டுள்ளார்.
தற்போது செம்மணியில் 240, தாண்டி தமிழர் களின் எலும்புக்கூடுகள் இனப்படுகொலைக்கு சாட்சிய மாக வெளிவந்துகொண்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு சென்ற ஜனாதிபதி அநுரா அவர்கள் கச்சதீவுக்கு சென்று படம் காட்டியவர் செம்மணி படுகொலை புதைகுழிக்கு சென்று பார்ப்பதற்கு கூட மனம் வரவில்லை.
அவர் பார்ப்பதால் நீதிகிடைக்கும் என்று இல்லை தமிழ் மக்களுக்கு அவர் பார்த்தார் என்ற ஒருவகை திருப்தி ஏற்பட்டிருக்கும் அதுகூட அவர் செய்யவில்லை, தற்போது ஜெனிவாவில் மனித உரிமை ஆணைக் குழுவில் 60 வது கூட்டத்தொடர் நடக்கும் இந்த சந்தர்பத்தில் ஒட்டு மொத்த தமிழர்களும் சர்வ தேச விசாரணை தேவை என்ற தொடர் அழுத்தம் கொடுக்கும்போது உள்நாட்டு பொறிமுறைதான் தீர்வு என வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் எல்லோரும் ஜெனிவாவுக்கு படை எடுத்து சென்று வலியுறுத்திவருவதை காணமுடிகிறது.
இவ்வாறான சந்தர்பத்தில் ஈழத்தமிழர்கள் ஒற்று மையாக ஒரேகுரலாக மக்களை அணிதிரட்டி தியாகி திலீபன் 1987ல் இதே மாதம் 38, ஆண்டுகளுக்கு கூறிய மக்கள் புரட்சிக்காக ஈழமக்கள் தமிழ் தேசிய கட்சிகள் அணிதிரள வேண்டிய தேவை இப்போது தமிழ் மக்களுக்கு அவசியம் உண்டு.
ஆயுதம் ஏந்தாமல் அறப்போராட்டம் மூலம் ஒருதுளி நீர் கூட அருந்தாமல் உறுதியாக தமது உயிரை இனத்துக்காக தியாகம் செய்யும் போது அவர் கூறிய வார்த்தையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வோர் தமிழருக்கும் உண்டு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தேர்தல் அரசியலுக்காகவும், வாக்கு அரசி யலுக் காகவும் தமிழ்தேசிய கட்சிகள் செயல் படுவதை விட்டு விடுதலை அரசியலுக்காக மக்களை அணிதிரட்டும் காலம் 16 வருடம் கடந்தும் செய்ய தவறினால் தமிழ்மக்களில் இருந்தும், குறிப்பாக தமிழ் இளைஞர்கள் மத்தி யில் இருந்தும் தமிழ்த்தேசிய உணர்வுகள் அற்ற மரக்கட்டைகளாக தமிழினம் மாற்றப் படுவது நிச்சயமாகும்.
இதற்கு உதாரணமாக யாழ்மாவட்டத்துக்கு அடிக்கடி போய்வரும் ஜனாதிபதியும், பிரதம ரும் அபிவிருத்தி திட்டங்களை மட்டும் ஆரம்பித்து பொருளாதாரம் தொடர்பாக மட்டும் உரையாடிச் செல்கின்றனர்.
இனப்பிரச்சனை தொடர்பாகவோ, இனப் படுகொலை தொடர்பாகவோ அவர்களால் வாய் திறக்க முடியவில்லை. ஆளும் தரப்பு தேசிய மக்கள் சக்தி அரசில் உள்ளவர்கள் அப்படி இருந்தாலும் எதிர்கட்சி தலைவராக உள்ள சஜீத் பிரமதாசாவும் தமிழ் மக்கள் தொடர்பாக ஏன் செம்மணி புதை குழி தொடர்பாக இதுவரை அவரும் வாயே திறக்கவில்லை.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை தோற்கடிக்க கருவியாக தமிழரசுக்கட்சியில் சிலர் அவரை பாவிந்தனர் அந்த நன்றிக்காகவது சஜீத் தமிழ் மக்கள் தொடர்பாக எதுவும் பேசாமல் தமது சிங்கள இன வாதத்தை நிருபித்து விட்டார். எனவே 38வது ஆண்டு தியாகி திலீப னுக்கு வணக்கம் செலுத்தும் தமிழ் மக்கள் அவர் கூறிய மக்கள் புரட்சியினை செயல் வடிவம் கொடுப் பதே அவருக்கு உண்மையாக நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.

செயற்கைகோள் இணையத்தளத்தை உருவாக்கும் ரஸ்யா

அமெரிக்காவின் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸால் இயக்கப்படும் ஸ்டார்லிங்கைப் போன்ற ஒரு செயற்கைக்கோள் இணைய வலையமைப்பை ரஷ்யா விரைவில் அறிமுகப்படுத்தும் என ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் நிறுவனத்தின் தலைவர்  டிமிட்ரி பகானோவ் கடந்த புதன்கிழமை(17) தெரிவித் துள்ளார்.
ஸ்டார்லிங்க், பூமியின் குறை ந்த சுற்றுப்பாதையில் இருந்து அதிவேக இணையத்தை வழங்கு கிறது மற்றும் ரஷ்யாவுடனான மோதலில் உக்ரேனியப் படை களுக்கு அது முக்கிய பங்கு வழங் கியிருந்தது, இதனால் அவர்கள் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க வும், கண்காணிப்பை நடத்தவும், முன்னணிக்காவல் நிலைகளில் இரு ந்து  ட்ரோன் அமைப்புகளை இயக் கவும் உதவி யிருந்தது.
சோலோவியோவ் லைவ் நிகழ்ச்சியில் பேசிய பகானோவ், ரஷ்யாவின் இணைய செயற்கைக் கோள்களின் முதல் ஏவுதல்கள் டிசம்பர் 2025 இல் திட்டமிடப்பட்டுள்ளன, சுற் றுப்பாதையில் உள்ள பல சோதனை வாகனங்கள் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டுள்ளன, மேலும் உற்பத்தி வாகனங்கள் அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளன, நாங்கள் இந்த திசையில் விரைவான வேகத்தில் நகர்கிறோம். இரண்டு ஆண்டுகளுக்குள் செயற்கைக்கோள் கூட்டம் முழுமையாக நிலைநிறுத்தப்படும் நெட்வொர்க் ஸ்டார்லிங்கிற்கு இணையாக இருக்கும் என்று கூறினார்.
தேசிய செயற்கைக்கோள் இணைய அமைப்பின் வளர்ச்சி ரஷ்யப் படைகள் அதிக துல்லியத்துடன் ட்ரோன்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்கும் என்று ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் முன்பு தெரிவித்திருந்தார்.
உலகின் மிகப்பெரிய செயற்கைக்கோள் வலையமைப்பை ஸ்பேஸ்எக்ஸ் இயக்குகிறது, இதில் 7,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் விண்கலங்கள் சுற்றுப்பாதையில் உள்ளன. இந்த சேவை 2020 இல் ஆரம்பிக்கப்பட்டது, மேலும் நிறுவனத்தின் கூற்றுப்படி, 140 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 6 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களாக அது வளர்ந்துள்ளது.
2022 முதல் உக்ரைன் 50,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் முனையங்களைப் பெற்றுள்ளது என்று கியேவ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மஸ்க் 2022 செப்டம்பரில் உக்ரைனின் எதிர் தாக்குதலின் போது ஸ்டார்லிங்க் கவரேஜை நிறுத்த உத்தரவிட்டதாகவும், கெர்சன் பிராந்தியம் மற்றும் டோனெட்ஸ்க் மக்கள் குடியரசின் சில பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் சேவையை துண்டித்ததாகவும்  ஜூலையில், ராய்ட்டர்ஸ் தெரிவித்திருந்தது.
உக்ரேனிய ஊடுருவல் ரஷ்ய அணுசக்தி பதிலடியைத் தூண்டக்கூடும் என்ற மஸ்க்கின் கவலையிலிருந்து இந்த உத்தரவு வந்திருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. மாஸ்கோவில் உள்ள அதிகாரிகள் நீண்ட காலமாக இந்த தொழில்நுட்பத்தின் இராணுவ பயன்பாடு குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அமெரிக்கா பயணம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திங்கட்கிழமை ( செப்டெம்பர் 22) அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ அரசமுறை பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80 ஆவது கூட்டத்தொடரில் புதன்கிழமை (செப்டெம்பர் 24) ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இவ்வாரம் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இதற்கமைய ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி இன்று அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார். இவ்விஜயத்தில் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தும் கலந்துகொள்ளவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை  கூட்டத்தில்  புதன்கிழமை (24) அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு (இலங்கை நேரப்படி அதிகாலை 12 மணியளவில்)  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார்.

இந்த பயணத்தின் போது, ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க பயணத்தை நிறைவு செய்ததன் பின்னர்  ஜனாதிபதி ஜப்பானின் ஒசாகாவிற்குச் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.அங்கு சிறப்பு கண்காட்சி 2025 இல் கலந்து கொள்வார். கலாச்சாரம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் நாட்டின் தனித்துவமான சலுகைகள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

அடுத்து மாலைதீவில் போராட்டமா?

பேச்சு சுதந்திரத்தையும் ஊடகங்களையும் முடக் கக்கூடும் என்று விமர்சகர்கள் கூறும் ஒரு மசோதாவை மலைதீவின் ஜனாதிபதி முகமது முய்சுவின் அரசாங்கம் பாராளுமன்றத்தில் கொண்டுவந்தததைத் தொடர்ந்து, மாலைதீவில் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு முக்கிய பத்திரிகையா ளர் சங்கம் இந்த மசோதாவை நிராகரிப்பதாக கடந்த புதன்கிழமை (17) தெரிவித்துள்ளது, அதேநேரத் தில் பிரதான எதிர்க்கட்சி போராட் டங்களுக்கு அழைப்பு விடுத்துள் ளது மற்றும் உலகளாவிய பத்தி ரிகை சுதந்திரக் குழு முய்சுவை சட்டத்தை வீட்டோ செய்ய வலியுறுத்தியுள்ளது.
பாரம்பரிய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் ஆன் லைனிலும் ஆஃப்லைனிலும் எதிர்ப்புகளை அடக்க முயற்சி க்கம் ஒரு மசோதாவை மாலத் தீவு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது, அரச நிர்வாகக் கிளையால் ஊடகங்கள் கைய கப்படுத்தப்படுவதை எதிர்த்து நாங்கள் பத்திரி கையாளர்கள் ஒன்றாக நிற்போம் என்று நாட்டின் மிகப்பெரிய ஊடக ஊழியர்களின் சங்கமான மாலத்தீவு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அகமது நயீஃப் தெரிவித்துள்ளார்.
ஆனால் மாலத்தீவு ஊடக மற்றும் ஒளிபரப்பு ஒழுங்குமுறை மசோதா என்று அழைக் கப்படும் இந்த சட்டம், ஒளிபரப்பு மற்றும் இணையத்தள மற்றும் சமூக  ஊடகங்களை மேற்பார்வையிடவும் “கருத்து சுதந்திரத்திற்கான அரசியலமைப்பு உரிமையைப் பாதுகாக்கவும்” ஒரு ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்க மட்டுமே முயல்கிறது என்று முய்சுவின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட முறையில் பயன்படுத்தப் படும் தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகள் இந்த சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படவில்லை,  இது “தெளிவான தரநிலைகள் மற்றும் நடத்தை விதிகளை” நிறுவும் என்றும், தவறான தகவல் மற்றும் ஒருங்கிணைந்த உள்ளடக்க கையாளுதல் ஆகியவற்றின் சவால்களை நிவர்த்தி செய்யும்” என்று வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் ஓ இல் தெரிவித்துள்ளார்.
500,000 மக்களைக் கொண்ட தீவு நாடான மாலத்தீவில் இந்த சர்ச்சை பதட்டங்களை அதி கரித்துள்ளது, 2008 ஆம் ஆண்டில் இடம்பெற தேர்தல் மூலம் 30 ஆண்டுகால ஒரு நபர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்ததிலிருந்து அதன் ஜனநாயகத்தை வலுப்படுத்த மாலைதீவு போராடி வருகிறது.
அண்மையில் சமூக ஊடகத்தளங்களை தடை செய்த நேபாளத்தின் ஆட்சியை அங்கு ஏற்பட்ட போராட்டம் அகற்றியதை போல மாலைதீவிலும் போராட்டங்கள் இடமட்பெற லாம் என்ற அச்சங்கள் ஏற்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஐ.நாவில் நீதிகோரிய தந்தை!

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில், 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களும் நீதி கோரி இலங்கையர் ஒருவரால் குரல் எழுப்பப்பட்டுள்ளது.

கொழும்பு ஷங்க்ரி-லா விருந்தகத்தில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட விருந்தக ஊழியரான 20 வயதுடைய விஹங்க தேஜந்த என்பவரின் தந்தையான சுராஜ் நிலங்கவினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

தொண்டு நிறுவனங்களின் சார்பாகப் உரையாற்றிய சுராஜ் நிலங்க, தாக்குதல் நடத்தியவர்களுக்கு அப்பால் 260க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட பேரழிவுகரமான குண்டுவெடிப்புகளுக்குப் பொறுப்பான அனைவருக்கும் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், முழுமையான, சுயாதீனமான மற்றும் விரைவான குற்றவியல் விசாரணையையும் கோரினார்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருடமாகின்ற போதிலும், பொறுப்புக்கூறலுக்கான நம்பிக்கைகள் மங்கி வருவதாகவும், மூளையாக செயற்பட்டவர்கள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை என்றும், தொடர்ச்சியான விசாரணைகள் “கடுமையான குறைபாடுகளால்” சிதைக்கப்படுவதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

பொருளாதார, சமூக மற்றும் உளவியல் ஆதரவு உட்பட விரிவான இழப்பீடுகளை கோரிய அவர், பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நீதியை வழங்குவதற்கும் சர்வதேச வழிமுறைகளுடன் ஒத்துழைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவரல்லாத சிலரில் பௌத்தரான தனது மகனும் அடங்குவதாக தெரிவித்த அவர், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஏற்படுத்திய காயங்கள் ஆறவில்லை என்பதையும், உலக அரங்கில் நீதிக்கான கோரிக்கை வலுபெறுகிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் வீழ்ச்சியை நோக்கி பிரான்ஸ்!

வரவு செலவுத்திட்டத்தில் கொண்டுவரப்பட்ட நிதிக் குறைப்புக்கான அரசாங் த் திட்டங்களை எதிர்த்துதொழிற் சங்கங்கள் வெகுஜன வேலை நிறுத் தங்களை ஆரம்பிக்கவுள்ளதால், பிரான்ஸ் நாடு தழுவிய நெருக்
கடிகளுக்குத் தயாராக உள்ளது.
வியாழக்கிழமை(18) ஆசிரியர்கள், சுகாதாரப் பணி யாளர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிட்டோர் நடத் திய வெளிநடப்பு, நாட்டின் சில பகுதிகளை முடக்கியிருந்தது, கடந்த ஆண்டு ஓய்வூதிய சீர்தி ருத்தம் மீதான கடுமையான போராட்டத்திற்குப் பிறகு மிகப் பெரிய அணிதிரட்டல்களில் ஒன் றாக  இதனை தொழிற்சங்கங்கள் பார்க்கின்றன.
சிக்கனத் திட்டங்கள் ஜனாதிபதி  இம்மானுவேல்  மக்ரோனுக்கு எதிரான மக்களின் கோபத்தை அதிகரித்துள்ள. சமீபத்திய பிரத மரின் மாற்றத்திற்குப் பிறகும், அரசுக்கு எதிரான நெருக்கடி குறை ந்து வருவதற் கான அறிகுறியைக் காணவில்லை, மாநிலத் தலைவரின் செல்வாக்கு களும் குறைந்து வருகின்றன.
மக்ரோனின் ஏழாவது பிரதமராக கடந்த வாரம் பதவியேற்ற முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டியன் லெகோர்னு, ஒரு புதிய நடைமுறையை வகுப்பதாக உறுதியளித்துள்ளார். ஆனால் அது தொழிலாளர்களின் விரோதத்தை தணிக்கத் தவறிவிட்டது.
லெகோர்னுவின் முன்னோடியான பிராங் கோயிஸ் பேரூவால் கொண்டுவரப்பட்ட 44 பில்லியன் யூரோ ($52 பில்லியன்) சிக்கனத் திட்டம் குறித்து தொழிற்சங்கங்கள் தொடர்ந்து சீற்றத்துடன் உள்ளன. பிரதமர்கள் வாழ்நாள் முழுவதும் அனுபவித்து வந்த சலுகைகளை ரத்து செய்வதற்கும், இரண்டு பொது விடு முறை நாட்களைக் குறைப்பதற்கான திட்ட த்தை கைவிடுவது என்ற லெகோர்னுவின் வாக்குறுதிகள் குறித்தும் அவர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.
மக்ரோன் இன்னும் 18 மாதங்கள் ஆட்சியில் இருப்பார் ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த மக்கள் ஆதரவு மதிப்பீடுகளை அவர் எதிர்கொள்கிறார்.

போர் குற்றங்கள்: ஐ.நா.விடம் தொழில்நுட்ப உதவியைப் பெற இலங்கை தயார்!

இலங்கையில் கடந்த கால போரியல் குற்றங்கள் குறித்த விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காக, தடயவியல் நிபுணர்கள் உட்பட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மூலம் தொழில்நுட்ப உதவியைப் பெற இலங்கை தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் அகழப்படும் மனித புதைகுழிகளில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண உதவுவதும் இத்தகைய ஒத்துழைப்பில் அடங்கும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
மனித புதைகுழிகளை அகழும் செயற்பாட்டுடன் தொடர்புடைய நீதித்துறை அதிகாரிகளின் உத்தரவுகளைப் பொறுத்து, இந்த உதவியைப் பெறும் செயற்பாடு அமையும் என்று அமைச்சர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்குத் திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் வரைவுத் தீர்மானத்திலான திருத்தங்கள் செப்டம்பர் 25 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
வரைவுத் தீர்மானத்தில் பெரிய திருத்தங்கள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை.

எனினும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்காணிப்பில் இருக்கும் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ளார்.  அதேநேரம் இலங்கையின் பொறுப்புக்கூறல் காலமும் இரண்டு வருடங்களால் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இலங்கை மீதான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரத்தை நீடிக்கும் வரைவுத் தீர்மானத்தை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம், அதன் முக்கிய ஆதரவாளர்களான பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் ஒப்படைத்தன.

காசாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் இனப்படுகொலைகளை உறுதிப்படுத்தியது ஐ.நா

காசாவில் பாலஸ்தீனியர் களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படு கொலை செய்துள்ளது என்று ஐ.நா. விசாரணை ஆணையம் கடந்த செவ்வாயன்று(16) வெளி யிட்ட அறிக்கையில் தெரிவித் துள்ளது.
விசாரணைகளின்படி,2023 இல் ஹமாஸுடனான போர் தொடங்கியதிலிருந்து 1948 இன ப்படுகொலை மாநாட்டின் கீழ் வரையறுக்கப்பட்ட ஐந்து இனப்படுகொலை செயல்களில் நான்கை இஸ்ரேல் செய்துள்ளது. இவற்றில் கொலை, கடுமையான உடல் அல்லது மன ரீதியான தீங்கு விளைவித்தல், பாலஸ்தீனியர்களை முழுமையாகவோ அல்லது பகுதி யாகவோ அழிக்கும் நோக்கில் அவர்களுக்கு நெருக்கடியான  வாழ்க்கை நிலைமைகளை திட்ட மிட்டு ஏற்படுத்துதல் மற்றும் பிறப்புகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விதித்தல் ஆகியவை அடங் கும்.
“காசாவில் இனப்படுகொலைக்கு இஸ் ரேல் பொறுப்பு என்று ஆணையம் கண்டறிந் துள்ளது” என்று ஐ.நா. அமைப்பின் தலைவர் நவி பிள்ளை ஜெனீவாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
“இனப்படுகொலை மாநாட்டின் அளவு கோல்களை பூர்த்தி செய்யும் செயல்கள் மூலம் காசாவில் பாலஸ்தீனியர்களை அழிக்கும் நோக்கம் உள்ளது என்பது தெளிவாகிறது.” “இந்த அட்டூழிய குற்றங்களுக்கு” ​​“உயர் மட்டத்தில் உள்ள இஸ்ரேலிய அதிகாரிகளை” பிள்ளை குற்றம் சாட்டினார், அவர்கள் “காசாவில் பாலஸ்தீன குழுவை அழிக்கும் குறிப்பிட்ட நோக்கத்துடன் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஒரு இனப்படுகொலை நடைவடிக்கையை திட்டமிட்டுள்ளனர்”. இனப்படுகொலைச் செயல்களில் ஈடுபட்டவர் களை விசாரிக்கவோ அல்லது வழக்குத் தொடரவோ இஸ்ரேலிய அதிகாரிகள் தவறி விட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனியர்கள் மீது பட்டினி மற்றும் மனிதாபிமானமற்ற வாழ்க்கை நிலைமைகளை சுமத்துதல் உட்பட காசாவில் இஸ்ரேலிய நடவடிக்கைகளை ஆய்வு செய்ததாக ஆணையம் கூறியுள்ளது,  பாலஸ்தீனியர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையுடன் சுகாதாரம் மற்றும் கல்வியின் அழிவையையும் அது மேற்கோள்காட்டியது.
காசாவில் இனப்படுகொலையை முடிவு க்குக் கொண்டுவர இஸ்ரேலை ஆணையம் வலியுறுத்தியது மற்றும் ஆயுத பரிமாற்றங்களை நிறுத்தி இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்கும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது.

காற்றலை விவகாரம்: தொடரும் மன்னார் மக்களின் போராட்டம் தொடரும்!

மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் நேற்று (21) 50ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில் குறித்த போராட்டத்துக்கு வடக்கின் பல பகுதிகளிலும் ஆதரவு வலுக்கிறது.
வவுனியா பம்பைமடுவில் இருந்து அருட்தந்தை அருட்சகோதரிகள் தலைமையில் இளையோர் குழு ஒன்று மன்னாருக்கு சென்று போராட்டத்துக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட இளையோர் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக எழுதப்பட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். மன்னாரில்  காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு நாளாந்தம் மன்னார் மாவட்டம் உள்ளடங்களாக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கிராம மக்கள், பொது மற்றும் சிவில் அமைப்புக்கள் தொடர்ச்சியாக ஆதரவை வழங்கி வருகின்றனர்.

அதேநேரம் இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை இடம்பெறுகின்ற போதிலும் இதுவரையில் இறுதி தீர்வு எட்டப்படவில்லை.