Home Blog Page 3081

முஸ்லிம்கள் நிதானமிழந்து கருத்துத் தெரிவிப்பது ஆபத்து – முஸ்லிம் மீடியா போரம்

முஸ்லிம் அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும் உலமாக்களும் தமது உரைகள் மற்றும் கலந்துரையாடல்கள் என்பவற்றின் போது, தேசிய நீரோட்டத்திலிருந்து விலகிய கருத்துக்களைத் தெரிவிப்பது குறித்து, அவதானத்துடன் செயற்படுவது சிறந்தது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆகிய அமைப்புக்களின் தலைவர் என்.எம். அமீன், சகோதா மொழி ஊடகங்களில் தொடர்ந்தேர்ச்சியாக வெளியாகும் இன ரீதியிலான கருத்துக்களைச் சுட்டிக்காட்டி இந்த வேண்டுகோளை சம்பந்தப்பட்டவர்களிடம் விடுக்குமாறு டெய்லி சிலோனிடம் கேட்டுக் கொண்டார்.

நாடு எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில் முஸ்லிம் பிரமுகர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் எல்லா ஊடகங்களிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சில ஊடகங்கள் தங்களது பாணியில் அதனை வெளியிட்டு வருவது கவலைக்குரியதாகவும் அமைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் மொழியில் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்கள், சில போது வேறு மொழிகளுக்கு மாற்றம் செய்யப்படும் போது தவறான கருத்தை வழங்கும் விதத்திலும் எடுத்துச் செல்லப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதனால், வார்த்தைப் பிரயோகங்களை உணர்ச்சிவசப்பட்டு கொட்டிவிடுவதிலிருந்து தவிர்ந்து, நிதானமாக தேசிய நீரோட்டத்திலிருந்து முன்வைப்பது காலத்தின் தேவையாகும் எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் மேலும் கேட்டுக் கொண்டார்.

பெரும்பான்மை பௌத்தர்கள் ஆட்சியமைக்க சிறுபான்மை முஸ்லிம்களிடம் கையேந்தவேண்டியுள்ளது – அத்துரலிய தேரர்

இந்த நாட்டிலுள்ள தேர்தல் முறைமையை மாற்றுதே பௌத்த பிக்குகள் முன்னுள்ள பிரதான பிரச்சினையாகும் எனவும், விகிதாசார தேர்தல் முறைமையினால் பெரிய கட்சிகள் எந்தவொன்றும் தனித்து ஆட்சியமைக்க முடியாமல் காணப்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

அரச நிருவாகம் ஒன்றுக்கான மாறாத கொள்கையொன்றை தயாரிக்கும் தேசிய புத்திஜீவிகள் பிக்கு அமைப்பினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் ஐந்தாவது மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு இன்று (09) கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.

இந்த நாட்டிலுள்ள தேர்தல் முறைமையை மாற்றாத வரைக்கும், சிறுபான்மை முஸ்லிம்கள் எம்மை ஆளும் நிலைமை காணப்படுவதாகவும் தேரர் சுட்டிக்காட்டினார். பெரும்பான்மை பௌத்தர்கள் உள்ள இந்த நாட்டில் சிறுபான்மை முஸ்லிம்களிடம் ஆட்சியமைக்க கையேந்தும் நிலைமை காணப்படுகின்றது.

இதனால் மகாசங்கத்தினரால் அரசாங்கத்திடம் முன்வைக்கவுள்ள 10 அம்ச திட்டத்தில் தேர்தல் முறைமை மாற்றம் குறித்த விடயம் முதலிடம் வகிக்க வேண்டும் எனவும் தேரர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல் தொடர்பில் புலனாய்வு அதிகாரி கைது

ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேரடி தொடர்புள்ளவர் என்ற சந்தேகத்தின் பேரில் இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர் 10 வருடங்களுக்குப் பின்னர் நேற்று (08) ஹங்வெல்லையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டார்.

புலனாய்வு விசாரணைகள் மூலம் கிடைத்த தகவல்களுக்கமையவே அவர் கைது செய்யப் பட்டுள்ளதாக CID உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் கோப்ரலான ராஜபக்ஷலாகே லலித் ராஜபக்ஷ என்ற அதிகாரியே நேற்று கைது செய்யப்பட்டவராவார். 2014இல் ஜேர்மனுக்கான இலங்கை தூதரகத்தில் பணியாற்றிய இவர், 2017இல் இலங்கை திரும்பியிருந்தார். 2009 ஜனவரி 23ஆம் திகதி கம்பஹா இம்புல் கொடையில் தமது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது உபாலி தென்னகோன் மோசமான தாக்குதலுக்கு உள்ளானார்.

மேற்படி தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர்கள் பலரின் கைவிரல் அடையாளங்கள் மோட்டார் சைக்கிளிலிருந்து பெறப்பட்ட நிலையில், மேற்படி இராணுவ வீரரின் விரல் அடையாளம் அதில் மிக நெருக்கமானதாக இருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலரிடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களிலும் விரல் அடையாளங்கள் பெறப்பட்ட நிலையில், மேற்படி இராணுவ அதிகாரியிடமும் விரல் அடையாளம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

இதன் மூலமான விசாரணையிலிருந்து இத் தாக்குதலுடன் அவர் நேரடி தொடர்புபட்டுள்ளதாகப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பதாக இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த ஏழு பேர் சந்தேகத்தின் பேரில் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த அதிகாரிகள் புலனாய்வு ரீதியான சாட்சி மற்றும் தொலைபேசி உரையாடல் மூலமான சாட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கைது செய்யப்பட்டிருந்தனர்.

அன்று இடம்பெற்ற மோசமான அத் தாக்குதலுக்குப் பின்னர் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் உபாலி தென்னக்கோன், அவரது மனைவியான தம்மிக்கா தென்னக்கோன் ஆகியோர் சந்தேக நபர்களை இனங்காண்பதற்கான அணிவகுப்பில் கலந்துகொள்வதற்காக 2016இல் இலங்கைக்கு வந்து சென்றிருந்தனர். இதன்போது சந்தேக நபர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டனர்.

விரல் அடையாள விசாரணையின் மூலம் நேற்று கைது செய்யப்பட்டவர் எட்டாவது சந்தேக நபராவார். அவரை இனம்காண்பதற்கான அணிவகுப்பொன்றை நடத்துவதற்கு குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதற்காக உபாலி தென்னக்கோன் மற்றும் அவரது மனைவியையும் இலங்கைக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.

கீத் நொயர் கொலை முயற்சியில் புலனாய்வு அதிகாரிக்கு தொடர்பு; ஆதாரங்கள் உள்ளன – சட்டமா அதிபர்

ரை கடத்தி கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட வழக்கில் இராணுவ புலனாய்வு அதிகாரியான லலித் ராஜபக்ஷவை சந்தேக நபராக பெயர் குறிப்பிடும்படி சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா சி.ஐ.டி.யினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்ட மாஅதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான இணைப்பு அதிகாரியான அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரட்னவே சட்ட மாஅதிபர் சார்பில் மேற்படி கருத்தை நீதிமன்றத்தில் முன்வைத்தார்.

கீத்நொயரின் கடத்தல் மற்றும் கொலை முயற்சி சம்பந்தப்பட்ட வழக்கில் மேற்படி இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு நெருங்கிய தொடர்பு உள்ளமை ஆதாரங்களுடன் தெரியவந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும் மேற்படி இராணுவ புலனாய்வு அதிகாரி ‘ரிவிர’ ஸ்தாபகரான உப்பாலி தென்னகோனின் தாக்குதலுடன் தொடர்புபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த ஜூலை 08 ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டார். இதற்கமையவே அவரை கீத்நொயரின் கடத்தலுடனும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் சி.ஐ.டி யினரிடம் கேட்டுக்ெகாண்டார்.

ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு  பல்கலைக்கழகத்திற்கு எதிராக கொழும்பில்  நேற்று ஆர்ப்பாட்டம் செய்த அனைத்து பல்கலைக்கழக மாணவர்  ஒன்றியத்தினரை  கலைப்பதற்காக  பொலிசார்  கண்ணீர்புகை  பிரயோகமும் , நீர்தாரை  பிரயோகமும்  நடத்தினர்.

அலரிமாளிகை வரையான ஆர்ப்பாட்டத்தின் காரணமாக  விஜேராமயிலிருந்து நுகேகொடைவரையிலான வீதியில் இன்று பிற்பகல்  கடுமையான வாகன  நெரிசல்  ஏற்பட்டதுஇந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல்  ஸ்ரீஜயவர்தனபுர  பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆரம்பமாகியது.

நுகேகொட ,கிருலப்பனை , தும்முல்ல சந்தியூடாக அலரி மாளிகைக்கு சென்றடைய  ஆர்ப்பாட்டகாரர்கள் முற்பட்டனர்.

மட்டக்களப்பு  பல்கலைக்கழகத்திற்கு  எதிராக  ஆயிரக்கணக்கான  பல்கலைக்கழக மாணவர்கள்  கோஷங்களை எழுப்பியும் , சிவப்பு  நிற  கொடிகளை  ஏந்தியவாறும்   தமது எதிர்ப்பை  வெளிப்படுத்தினர் ஆர்ப்பாட்டகாரர்கள் கொள்ளுப்பிட்டிய சந்தியை சென்றடைந்த போது அந்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு  ஆர்ப்பாட்டகாரர்கள்  தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இருப்பினும் பொலிசாரின் பாதுகாப்பு வேலியை தகர்த்திய ஆர்ப்பாட்ட காரர்கள் முன்னேறிச் செல்ல முற்பட்டனர். இதன் போது  பொலிசார்  ஆர்ப்பாட்டகாரர்களின்  மீது  கண்ணீர்  புகை  மற்றும்  நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டனர்.

மேலும், ஆர்ப்பாட்டத்தின் காரணமாக கொள்ளுப்பிட்டியிலிருந்து , காலிமுகத்திடல் வரையான வீதி நேற்று பிற்பகல் 1.30 இற்கு பின்னர்  தற்காலிகமாக  மூடப்பட்டிருந்ததுடன், பொலிசார்  சாரதிகளை  மாற்றுவழிகளை  பயன்படுத்துமாறு  அறிவுறுத்தியிருந்தனர்.

batti campus ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கொழும்பில் தீவிர சிகிச்சைப்பரிவில் சம்மந்தன்

கூட்டமைப்பு தலைவர் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தன்  அவர்கள்  கொழும்பு நவலோகா வைத்தி யசாலையில் தீவிர சிகிச்சை பிரிவு விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்தற்போதும்  அவர் சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

 

தலைமன்னார் – இராமேஸ்வரம் படகுச் சேவை தமிழக முதல்வர் விரும்பவில்லை

தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் தமிழக முதலமைச்சர் எடப்பாடிக்கு விருப்பமில்லை என்று சிறிலங்காவின் சுற்றுலா, வனவளத்துறை மற்றும் கிறிஸ்தவ அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

ஆனாலும் தமது அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், குறித்த படகுச் சேவையை ஆரம்பிப்பதில் நாம் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் தமிழக முதலமைச்சர் இதை விரும்பவில்லை. இருப்பினும் நாம் சம்பந்தப்பட்ட பிரிவினருடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். என்றார்.

பலாலி விமான நிலையப் பணிகள் éர்த்தியடைந்ததும் இந்தியாவிற்கான விமான சேவைகள் முன்னெடுக்கப்படும். இதன் மூலம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் இராமேஸ்வரம் – தலைமன்னார் பயணிகள் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டால், பயணச் செலவுத் தொகை மிகக் குறைவாகக் காணப்படும். இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

 

ஹொங்கொங் கடல் பகுதியில் சீன விமானப்படை போர் ஒத்திகை

ஹொங்கொங்கில் உள்ள குவாங்டாங் கடற்பகுதியில் சிறியரக மாதிரிக் கப்பல்களைக் குறிவைத்து சீன விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானப்படையின் 74ஆவது படையணியினர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். அப்போது ஏவுகணைகள், எறிகணைகள், துப்பாக்கிகள் மூலம் துல்லியத் தாக்குதல் நடத்தி தங்கள் திறமைகளை அவர்கள் வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தெரிவுக்குழு அழைத்தால் சனாதிபதியாக இருந்தாலும் ஆஜாராகியே ஆகவேண்டும் – சபாநாயகர்


தெரிவுக்குழு முன்னிலையில் வரமறுக்கும் நபர்கள் உண்மைகளை மறைக்கின்றனர் என்றே அர்த்தமாகும். ஜனாதிபதி , பிரதமரை அழைத்தாலும் அவர்களும் வரவேண்டும்.பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டவர்கள் வந்தாக வேண்டும். அவ்வாறு வரவில்லை என்றால் அது பாராளுமன்றத்தை அவமைதிக்கும் செயற்பாடு.பாராளுமன்ற விடயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என சபாநாயகர் கரு ஜெயசூரியவும் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவும் சபையில் தெரிவித்தனர்.

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் விசாரணைக்காக வரவழைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தான் தெரிவுக்குழு முன்னிலையில் வரப்போவதில்லை என  பாராளுமன்றத்தில் சிறப்புரிமை எழுப்பி கருத்து தெரிவித்தார். இதற்கு பதில் தெரிவுக்கும் போதே சபாநாயகரும் சபை முதல்வரும் இதனைக் கூறினார்.

த.தே.கூட்டமைப்பு இன நல்லிணக்கம் என்றபோர்வையில்  தமிழ்மக்களை ஏமாற்றமுனையக்கூடாது- கல்முனை தமிழ்மக்கள்

பிரதேசசெயலகம் தரமுயர்த்தப்பட்டால் மாத்திரமே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குங்கள். இன்றேல் எதிர்த்து வாக்களித்து வீட்டுக்கு அனுப்புங்கள்.இவ்வாறு கோரும் வேண்டுகோளை சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கல்முனை வாழ் தமிழ்மக்கள் அன்பாக விடுக்கின்றனர்.

கல்முனை வாழ் தமிழ்மக்கள் சார்பாக கல்முனையில் உண்ணாவிரதமிருந்த வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் சிவஸ்ரீ.சச்சிதானந்தசிவக்குருக்கள் மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன் அ.விஜயரெத்தினம் அனைத்து இந்து ஆலயங்களின் தலைவரான கி.லிங்கேஸ்வரன் ஆகியோர் இணைந்து கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ரணில் அரசாங்கம்  இந்த நாட்டில் தொடர்ச்சியாக தமிழ்மக்களை ஏமாற்றிவருகிறது. தமிழ்மக்களால் ஆட்சிக்குவந்த பிரதமர் அண்மையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் தமிழ்எம்பிக்களால் தப்பிப்பிழைத்த பிரதமர் ரணில் இம்முறை தமிழ்மக்களை ஏமாற்றமுனையக்கூடாது என்றும் கோருகின்றோம்.

அந்தக்கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 30வருடகாலமாக இத் தரமுயர்த்தல் கோரிக்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்படுகின்றபோதெல்லாம் ஒருசில முஸ்லிம் அரசியல்வாதிகள் முட்டுக்கட்டையாகஇருந்துவந்துள்ளனர். நாமும் பொறுமையாக இருந்துவந்தோம்.
எமது த.தே.கூட்டமைப்பினர் பல தடவைகள் கொழும்பில் பிரதமரையும் அமைச்சரையும் சந்தித்துப் பேசியுள்ளனர். எனினும் சிலபல தடங்கல்களால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுவந்துள்ளோம்.

தமிழ்மக்களின் வாக்குகளை மாத்திரம் பெற்ற த.தே.கூட்டமைப்பினர் தமிழ்பேசும் மக்களுக்கான நிரந்ததீர்வை நோக்கி பயணிப்பதாக கூறுகின்றனர். அதற்காக வாக்களித்த மக்களை மறந்து  தமிழ்பேசும் மக்கள் என்று அடிக்கடி உச்சரித்தும் வருகின்றனர்.

ஹரீசின் எச்சரிக்கை!

த.தே.கூட்டமைப்பினர் தமிழ்பேசும் மக்கள் என்ற ரீதீயில் செய்றபட்டுவருகின்றனனர். ஆனால் ஹரீஸ் போன்ற எம்பிக்கள் அதனை உதாசீனப்படுத்தி தமிழர்பிரச்சினைக்கு தீர்வு என்பது எங்களில்தான் தங்கியுள்ளது என மார்தட்டுகிறார்.
கல்முனையில் தமிழ்த்தரப்பு விட்டுக்கொடுக்கவேண்டும் இன்றேல் வேறுபாதையில் பயணிக்கவேண்டிவரும் என்று எச்சரிக்கிறார்.இத்தனைக்கும் முஸ்லிம்கள் தமிழருக்காக விட்டுக்கொடுத்தது என்ன? ஆனால் தமிழர்கள் நியாயமான அனைத்துவிடயங்களிலும் விட்டுக்கொடுத்தே வந்துள்ளனர்.
இவர்களுக்கு இவ்வளவுகாலமும் கிழக்குமாகாணமுதலமைச்சர் தொடக்கம் அத்தனை விடயங்களிலும் விட்டுக்கொடுத்துவந்ததன் விளைவே அவரது முட்டாள்தனமான பேச்சு என்பதனை மறந்துவிடமுடியாது.
இனியாவது த.தே.கூட்டமைப்பு நல்லிணக்கம் இனஜக்கியம் என்றபோர்வையில்  தமிழ்மக்களை ஏமாற்றமுனையக்கூடாது.

 

விட்டுக்கொடுப்புக்கு இடமேயில்லை!

தமிழ்மக்களின் போராட்டம் வரலாறு தியாகம் என்ன என்பது தெரியாமல் வாய்க்குவந்தபடி பேசுகிறார் ஹரீஸ். இந்தச்சலசலப்புக்கெல்லாம் இந்த தமிழர் அஞ்சமாட்டார்கள்.வீரத்தோடு பிறந்து உலகம்போற்றும்வகையில் வீரத்தோடு வாழ்ந்தவர்கள் நாம்.

கல்முனை மாநகரம் தமிழர்தாயகம். அது எந்தக்காரணம் கொண்டும் யாருக்காகவும் யாருக்கும் விட்டுக்கொடுக்கமுடியாது. நாம் சாகும்வரை உண்ணாவிரதமிருந்தவர்கள். ஒரு மாதகாலத்துள் இது நிறைவேற்றப்படாவிட்டால் நாம் மீண்டும் உண்ணாவிரதத்தில் குதிப்போம். எமது இனத்திற்காக எமது உயிரை விடுவதற்கு கிஞ்சித்தும் தயங்கமாட்டோம்.


தமிழ்பாராளுமன்றஉறுப்பினர்களே!
தமிழ்மக்களால்தான்; நல்லாட்சி உருவானது. நாமே ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் அமைத்தோம். எனவே உங்களது ஆதரவு இல்லாவிட்டால் எந்தக்கொம்பனாலும் அரசாங்கம் கவிழ்வதைத்தடுக்கமுடியாது.

எனவே தயவுசெய்து பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் மறத்தமிழன் என்றரீதீயில் ஒற்றுமையாக எமது கல்முனை உப பிரதேசசெயலகம் தரமுயர்த்தலுக்கு ஒத்துழைத்து உலகத்திற்கு ஒற்றுமையைக்காட்டுங்கள்.

பிரதேசசெயலகம் தரமுயர்த்தப்பட்டால் மாத்திரமே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குங்கள். இன்றேல் எதிர்த்து வாக்களித்து வீட்டுக்கு அனுப்புங்கள்.

இன்னும் ஓரிருதினங்களில் ஒவ்வொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கும் தனித்தனி கடிதம் அனுப்பிவைக்கப்படவுள்ளது எனவும் உண்ணாவிரதிகள் தெரிவிக்கின்றனர்.