Home Blog Page 3077

வவுனியாவில் கைதி தப்பியோட்டம் தேடுதலில் பொலிஸார்

வவுனியாவில் சிறைக்கைதி தப்பியோடியமையினால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டிருந்தது. வவுனியா சிறைச்சாலையில் இருந்து நேற்று மாலை 2 மணியளவில்  சிறைச்சாலைக்கு வெளியே சென்ற  நபரே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் கொழும்பை சேர்ந்த வீரசிங்கம் முதியன்சலாகே பியந்த அப்புகாமி என்ற நபர் உட்பட பலர் சிறைச்சாலையை சுற்றி சுத்தப்படுத்தி கொண்டிருந்த போது தப்பித்து சென்றுள்ளார்.

வேலைசெய்த இடத்திலிருந்து கைதி பலமணிநேரமாக  திரும்பாததால் சிறைக் காவலர் சென்று பார்த்தபோது கைதி தப்பிச் சென்றுள்ளமை தெரியவந் துள்ளது. தப்பிச் சென்ற இக்கைதியைத் தேடி வவுனியா சிறைக்காவலர்கள் வவுனியா பொலிசாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்களை மேற்கொண்டு வருகின் றனர்.எனினும் தப்பிச் சென்ற கைதியை தேடி கண்டு பிடித்து சிறைச்சாலைக்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கையை மேற்கொண்டு ள்ளனர். இதன் பின்னணியில் யாரும் செயற்பட்டார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆயிரக்கணக்கான மக்கள் கணீர்மல்க அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களின் உடல் நல்லடக்கம்

தமிழ் மக்கள் மீதானா இனப்படுகொலையின் சாட்சியமாக இறுதி வரை பல்வேறு தளங்களிலும் தனது சாட்சியை துணிவுடன் பதிவு செய்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதனின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாருக்கு தாயகத்திலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள்   கணீர்மல்க அஞ்சலி செலுத்தினார்கள்

தாயகத்திலே முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட நெடுங்காலமாக பங்குத்தந்தையாக ஆன்மீக பணிகளை ஆற்றிவந்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளார் கடந்த 11 ஆம் திகதி மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார்.

இதனையடுத்து நேற்றுமுன்தினம் முல்லைத்தீவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவரின் உடல் மக்களின் அஞ்சலிக்காக மாங்குளம் புனித அக்கினேஸ் தேவாலயத்தில் வைக்கப்  பட்டிருந்தது.

இரங்கல் வழிபாடு இடம்பெற்று யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட அன்னாரின் உடல், நேற்றும் இன்றும் மக்களின் அஞ்சலிக்காக யாழ் ஆயர் இல்லத்தில் அமைந்துள்ள சிற்றாலயத்தில் வைக்கப்பட்டது.

இதன்போது அருட்தந்தையின் பூத உடலுக்கு யாழ் மாவட்டத்தில் இருந்து மாத்திரமன்றி தமிழர் தாயகத்தின் ஏனைய பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்களும் அருட்தந்தை மற்றும் அருட்சகோதரிகளும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அத்துடன் மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என மேலும் பலர் அன்னாரின் பூத உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

pathinathar 2 ஆயிரக்கணக்கான மக்கள் கணீர்மல்க அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களின் உடல் நல்லடக்கம்இதனையடுத்து இறைபதம் அடைந்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாருக்கு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆன்ம இளைப்பாற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

யாழ் மரியன்னை பேராலயத்தில் யாழ் ஆயர் பேரருட் கலாநிதி ஜஸ்ரின் ஞானப் பிரகாசம் ஆண்டகையின் தலைமையில் இந்த திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்ட பின்னர் அடிகளாரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசினால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் கொடூரங்களில் ஒன்றான வலைஞர் மடம் தேவாலயம் மீதான தாக்குதலின் காயமடைந்து அத்தாக்குதலின் சாட்சியமாக இறுதிவரை ஜேம்ஸ் பத்திநாதன் குரல் கொடுத்திருந்தார்.

 

 

முகமாலையில் குண்டு வெடிப்பு

கிளிநொச்சி- முகமாலை பகுதியில் இரும்பு பொறுக்கிய நபா் ஒருவா் அங்கிருந்த பழைய வெடிபொருள் ஒன்றை எடுக்க முயன்றபோது அது வெடித்த நிலையில் கையை இழந்துள்ளாா்.

இந்தச் சம்பவம் கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் இன்று நடந்துள்ளது.  வெடிப் பொருள்கள் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கும் பகுதியில் இரும்புத் துண்டுகள் பொறுக்கச் சென்றவர்,

அங்கு காணப்பட்ட வெடிப் பொருளை எடுத்து வந்து அதனுள் காணப்பட்ட வெடி மருந்தை அகற்ற முற்பட்ட போது வெடிபொருள் வெடித்துள்ளது இதன் போது அவரது கையில் படுகாயம் ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப் படவேண்டும் என்று கோரும் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

 

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என்று கோரும் பிரேரணை காரைதீவு பிரதேச சபையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 07 வாக்குகளும், எதிராக 04 வாக்குகளும், நடுநிலையாக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டது. அதன்படி 03 மேலதிக வாக்குகளால் அப்பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

காரைதீவு பிரதேசசபை அமர்வு இன்று (15) திங்கட்கிழமை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் சபையின் சபாமண்டபத்தில் நடைபெற்றது.
அதன்போது த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் திருமதி கே. ஜெயராணி குறித்த பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றியிருந்தார்.

அதனை சபையில் த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர் த. மோகனதாஸ் முன்மொழிய ஸ்ரீ.ல.சு.கட்சி உறுப்பினர் மு.காண்டீபன் வழிமொழிந்தார்.

பின்னர் சபையில் கருத்துகளுக்கு பிரேரணை விடப்பட்டது. சகல உறுப்பினர்களும் கருத்துக்களைக் கூறினார்கள்.

தவிசாளர் உள்ளிட்ட 07 தமிழ் உறுப்பினர்களையும் 05 முஸ்லிம் உறுப்பினர்களையும் கொண்ட காரைதீவு பிரதேச சபையில் இப்பிரேரணை விரிவாக பலராலும் ஆராயப்பட்டு அவரவர் சமுகம் சார்ந்து நியாயங்களை முன்வைத்து கருத்துரைக்கப்பட்டது.

இறுதியில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது தவிசாளர் கி. ஜெயசிறில் திருமதி கே. ஜெயராணித.மோகனதாஸ், ச.நேசராசா, மு.காண்டீபன், இ.மோகன், ஆ. பூபாலரெத்தினம், ஆகிய 07 பேரும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

எதிராக உபதவிசாளர் எம்.ஜாகீர் உறுப்பினர்களான எம். இஸ்மாயில், ஏ. ஜலீல், எம். றனீஸ் ஆகியோர் வாக்களித்தனர்.

மாளிகைக்காடு சுயேச்சை உறுப்பினர் எ. பஸ்மீர் நடுநிலை வகித்தார்.

திருமண வயதெல்லையை 18ஆக அதிகரித்தல் உள்ளிட்ட விடயங்களில் முஸ்லீம் தரப்பு இணக்கம்

முஸ்லிம்களின் திருமண விவாகரத்து சட்டத்தில் அத்தியவசியமான சில சரத்துக்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான யோசனைக்கு, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாக முஸ்லிம் எம்.பிகள் தெரிவித்தனர். இதற்கமைய, குறித்த யோசனையை விரைவில் நீதி அமைச்சர் தலதா அத்துகோரலவிற்கு சமர்ப்பிக்க இருப்பதாக சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.

இது அமைச்சரவையின் அனுமதி கிடைத்த பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.

திருமண வயதெல்லையை 18ஆக அதிகரித்தல், திருமண பதிவின் போது மணப்பெண் கையெப்பமிடுவதை கட்டாயமாக்குதல், காதி நீதிமன்றத்திற்கு பெண்களையும் நியமித்தல் அடங்கலான யோசனைகள் தொடர்பில் முஸ்லிம் எம்.பிக்களிடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பில் நீண்டகாலமாக பேசப்பட்டு வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட குழுவொன்றை நியமித்திருந்தார்.இது தொடர்பில் இரு யோசனைகள் முன்வைக்கப்பட்டன. முன்னாள் நீதியரசர் சலீம்மர்சூப் தலைமையில் ஒருகுழுவும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் ஒரு குழுவும் இரு வேறு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தன.இது தொடர்பில் இழுபறி நிலை ஏற்பட்ட நிலையில் நீதி அமைச்சர் தலதா அத்துகோரளவும் பல முஸ்லிம் அமைப்புகள் மற்றும் எம்.பிகளுடன் பேச்சு நடத்தியிருந்தார்.

அரச தலைவர் தேர்தல் போட்டியில் சிங்கள தேசம்

சிறீலங்காவில் இடம்பெறவுள்ள எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் பதவியை கைப்பற்றுவது தொடர்பில் சிறீலங்காவின் தென்னிலங்கை அரசியல்வாதிகளும், கட்சிகளும் மற்றும் உலக வல்லரசுகளும் கடும் போட்டியுடன் களமிறங்கியுள்ளன.

அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களை ஏமாற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து திட்டத்தை வகுத்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி. அதற்காகவே தற்போது சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா யாழ்ப்பாணத்தில் உள்ளார்.

ஆனால் தமது வேட்பாளரே வெற்றியீட்டுவார் என தெரிவித்துள்ளார், எதிர்ச்சட்சித் தலைவரும் முன்னாள் அரச தலைவருமான மகிந்தா ராஜபக்சா.

தற்போதைய அரசின் இயலாமையை மக்கள் உணரத்தலைப்பட்டுள்ளனர். மக்கள் மிகவும் அறிவாற்றல் உள்ளவர்கள் எமது அரசு கடந்த முறை என்ன செய்தது என்பதை அறிவார்கள். தற்போதைய அரசு பொருளாதாரத்தை சீரழித்துள்ளது. நாட்டில் பாதுகாப்பு முற்றாகவே அற்றுப்போயுள்ளது என மகிந்த இன்று (15) ஊடகவியலாளர்களிடம் பேசும் பொது தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் ஜே.வி.பி எமது உதவிகளை கோரவில்லை, எம்முடன் கலந்துரையாடவில்லை. அவ்வாறு மேற்கொண்டிருந்தால் நாம் ஆதரவு வழங்கியிருப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சஜித் பிரேமதாசாவின் மனைவியான ஜலானி பிரேமதாச தான் நாட்டின் முதலாவது பெண்மணியாக வருவேன் எனவும், அதாவது எதிர்கால சிறீலங்கா அரச தலைவரின் மனைவி எனவும் ஹட்டனில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போது நேற்று (14) தெரிவித்துள்ளார்.

மகிந்தா அணியில் இருந்து கோத்தபாயா அரச தலைவராக வருவதை அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வருகின்றது. ஆனால் அமெரிக்கத் தளம் சிறீலங்காவில் அமைவதை மறைமுகமாக தடுக்கும் இந்தியா தனக்கு சார்பான ஒருவரை தேடிவருகின்றது.

அதேசமயம், சிங்கள அரசின் தேர்தலை புறக்கணித்து தமது அரசியல் எதிர்ப்பையும் இன ஒற்றுமையையும் காண்பிப்பதற்கும், சிறீலங்கா அரசுகளின் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பை நிறுத்துவதற்கும் தமிழ் சமூகம் தன்னை தயார்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல்- யாழ். நகர அபிவிருத்திகளில் ரணில் அதிக அக்கறை

சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா நேற்று (14) யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் சிறிலங்கா பிரதமரை ஐக்கிய தேசியக் கட்சியினர் சந்திப்பர்.

அதன் பின்னர் இன்று (திங்கட்கிழமை) சுன்னாகம் – ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொள்வார்.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் அழைப்பின்  பெயரில் ரணில் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதுடன், ஐந்தரைக் கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் கலையரங்கத்திற்கான அடிக்கல்லையும் நாட்டவுள்ளார்.

மேலும் ரணில் காரைநகருக்கான விஜயம் ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக யாழ். நகர அபிவிருத்திகளில் ரணில் அதிக அக்கறை செலுத்துவதாகத் தெரிகின்றது. ஜனாதிபதி தேர்தல்  நெருங்கி வரும் சமயத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் இச் செயலானது, வாக்கு  கேட்கும் ஒரு நடவடிக்கையாக அமைவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

யாழ். பலாலியிலிருந்து தமிழ்நாட்டிற்கு விமானப் பயணம்

யாழ். பலாலியிலிருந்து இந்தியா தமிழ்நாட்டின் திருச்சி அல்லது மதுரைக்கு விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கு இந்தியா இணக்கம் கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது.

கடந்த வாரம் பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. சிறிலங்கா அரசாங்கம் 1950 மில்லியன் ரூபாவும் இந்தியா 300 மில்லியன் ரூபாவையும் செலவு செய்யவுள்ளன. தற்போது ஓடுபாதை சீர் செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும், சிவில் விமான சேவைகள் நிறுவனத்தினால், அனைத்துலக விமான நிலையமாக இயக்கப்படவுள்ளது. இருந்தாலும் சிறிலங்கா விமானப்படையே தொடர்ந்தும் விமான நிலையத்தை நிர்வகிக்கும் என அறிய முடிகின்றது.

தற்போது 200 பயணிகளைக் கையாளக்கூடிய ஒரேயொரு முனையம் மாத்திரமே உள்ளது. குறைந்த கட்டண விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் நெருக்கமான ஆசனங்களைக் கொண்ட சிறிய விமானங்களின் மூலம் இந்தியாவின் சில நகரங்களுக்கே சேவைகள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்போது இங்கிருந்து விமானப்படையின் C – 130, AN – 32, MA – 60  போன்ற விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு சிறிலங்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தினால் 15,400 வணிக விசாக்களும், 121,000 சுற்றுலா விசாக்களும் வழங்கப்பட்டுள்ளன  என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ்.காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவிற்கு பயணிகள் கப்பல் சேவை

காங்கேசன்துறை – காரைக்கால் துறைமுகங்களை இணைக்கும் வகையிலும், அதேபோல் கொழும்பு – தூத்துக்குடி துறைமுகங்களை இணைக்கும் வகையிலும், இரண்டு பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம், இருதரப்பு வணிக செயற்பாடுகள் மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என சிறிலங்கா துறைமுக அதிகார சபையின் தலைவர் கவன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும் பயணிகள் கப்பல் சேவையின் மூலம் சுற்றுலாத்துறைக்கும், சிறிய அளவிலான வணிகத்திற்கும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தென்னிலங்கையிலிருந்து இந்தியாவிற்கு பயணிக்கும் பௌத்த சுற்றுலாப் பயணிகளுக்கு இது சாதகமாக இருக்கும். அத்துடன் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அருகாமையில் வாழும் சமூகங்களுக்கு வணிக வாய்ப்புகளை அதிகரிக்கும்.

2011இல் தூத்துக்குடி – கொழும்பிற்கிடையில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது, என்றாலும் அது வணிக ரீதியாக போதிய வருமானத்தை அளிக்காததால், இந்த கப்பல் சேவையை நடத்திய தனியார் நிறுவனம் அதை நிறுத்திக் கொண்டது. தற்போது காங்கேசன்துறை துறைமுகத்தை அரசு தரமுயர்த்தி வருகின்றது. இதற்காக 45.27 மில்லியன் டொலரை இந்தியவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து பெற்றுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனையத்தை (ECT) மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முயற்சியில் இந்தியாவும் ஒரு பங்காளியாக உள்ளது. இந்த முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இந்த ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளன. இது 700 மில்லியன் டொலர் வரை மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 51% பங்கை சிறிலங்கா வைத்திருக்கும். மிகுதியை எவ்வாறு பிரிப்பது என்பது விவாதத்தில் உள்ளது.

யாழிலிருந்து மேற்கொள்ளப்படும் இந்த கப்பல் சேவை, விமான சேவை என்பனவற்றை மேற்கொள்வதில் சிறிலங்கா அரசாங்கம் அதிகளவான அக்கறை காட்டி வருகின்றது. இதற்கான அடிப்படைக் காரணம் தமிழ் மக்களின் நன்மைக்காக என்பதல்ல, தமது வியாபாரத்திற்கும் சிங்கள இனத்தவரின் போக்குவரத்திற்கு செலவு குறைவான ஒரு வழியை அமைத்துக் கொடுப்பதும் தான் என்பதை தமிழ் மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் அறிந்து கொள்ள வேண்டும்.

இப்படியான செயற்பாடுகளை விடுதலைப் புலிகள் இருந்த காலப்பகுதியில் மேற்கொள்ள முடியாது போனதால், தற்போது இவற்றை அவசர அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எண்ணுகின்றனர்.

விடுதலைப் புலிகள் இருந்த காலப்பகுதியில் இந்த அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டால், விடுதலைப் புலிகள் தம்மை பலப்படுத்திக் கொள்வர் என்ற அச்சம் அரசாங்கத்திற்கு இருந்து வந்தது. அத்துடன் எவ்வளவு பாதுகாப்பு கொடுத்தாலும் சிங்களவர்கள் இந்த போக்குவரத்தை மேற்கொள்ள நிச்சயம் சம்மதிக்க மாட்டார்கள் என்பது அரசிற்கு நன்கு தெரிந்திருந்தது.

இதனாலே தான் இப்போது இவற்றை செய்கின்றதே ஒழிய தமிழ் மக்களின் அக்கறையிலோ அல்லது வடக்கிற்கான அபிவிருத்தியோ என தவறாக மக்கள் ஏமாந்து விடக்கூடாது.

 

நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்(5) – தமிழில் ந. மாலதி

வில்லியம் பிளம் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒ நூல்:”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – (Killing Hope: US Military and CIA Interventions Since World War II) – பாகம் – 4

ஐ-அமெரிக்க பேரரசு: 1992 இருந்து இன்றுவரை

1991 இல் இராக்கின் மேல் குண்டுகள் போட்ட பின் ஐ-அமெரிக்கா பின் வரும் இடங்களில் தனது இராணுவத் தளங்களை அமைத்துக்கொண்டது: சவுதி அரேபியா, குவேய்த், பஹ்ரேயின், கட்டார், ஒமான், மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்.

1999 இல் யுகோசுலோவியா மேல் குண்டுகள் போட்ட பின் ஐ-அமெரிக்கா பின் வரும் இடங்களில் தனது இராணுவத் தளங்களை அமைத்துக்கொண்டது: கொசோவா, அல்பேனியா, பல்கேரியா, மசிடோனியா, ஹங்கேரி, பொஸ்னியா, மற்றும் குரோசியா.

2001 இல் ஆப்கானிஸ்தான் மேல் குண்டுகள் போட்ட பின் ஐ-அமெரிக்கா பின் வரும் இடங்களில் தனது இராணுவத் தளங்களை அமைத்துக்கொண்டது:; ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்ஜிஸ்தான், ஜோர்ஜியா, மற்றும் யெமென்.

2003 இல் இராக்கின் மேல் குண்டுகள் போட்ட பின் ஐ-அமெரிக்கா இராணுவத் தளங்களை அங்கு அமைத்துக்கொண்டது.

இது ஒன்றும் ஒரு நுண்ணிய வெளிநாட்டுக் கொள்கை அல்ல. நிச்சயமாக இது மறைமுக செயற்பாடும் அல்ல. ஐ-அமெரிக்க பேரரசை ஆளும் ஆண்கள் சுலபமாக சங்கடத்துக்கு ஆளாக மாட்டார்கள்.

ஒரு பேரரசு இப்படித்தான் வளரும். ஒவ்வொரு அயலிலும் இராணுவத் தளங்கள். பேரரசுக்கு உண்மையான அல்லது கற்பனையான ஆபத்து வரும் போல இருந்தால் அதை அடக்க அவை தேவை. இரண்டாம் உலக போர் முடிந்து 58 வருடங்களின் பின்னரும் ஐ-அமெரிக்கா ஜெர்மெனியிலும் ஜப்பானிலும் இராணுவத் தளங்களை வைத்திருக்கிறது. கொரிய யுத்தத்திற்கு பின் 50 ஆண்டுகள் கடந்தும் பல ஆயிரம் பேர்கள் கொண்ட ஐ-அமெரிக்க படை தென்கொரியாவில் தரித்திருக்கிறது.

‘நாங்கள் முன்னெப்போதும் எண்ணியிருக்க முடியாத வகையில் இப்போது மத்திய ஆசியாவில் எமது கவனமும் இருப்பும் தக்க வைக்கப்படும்’ என்று ஐ-அமெரிக்க வெளியுறவு செயலாளர் கொலின் பவல் 2002 சொன்னார். அதே ஆண்டில் ‘வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் ஐ-அமெரிக்க படைகள் உலகின் மூலைமுடுக்குகளில் இப்போது நிற்கின்றன’ என்றது ஐ-அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு. இவ்வாறான கருத்துக்களை ஐ-அமெரிக்கா எவ்வித தயக்கமுமின்றி வெளியிட்டு வருகிறது.carte BASES US 1024 நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்(5) – தமிழில் ந. மாலதி

சோவித் குடியரசு உடைந்த காலத்திலிருந்து மக்களை ஏமாற்றுவதற்காக உயர்ந்த நோக்கங்களை பிரகடனப்படுத்தியும் அதன் நிழலில் உலகை ஆளுவதில் தனக்குள்ள விருப்பத்தையும் காட்டி வருகிறது. இவ்வாறான கருத்துக்கள் வெள்ளை மாளிகை, பென்ரகன் போன்ற இடங்களிலிருந்து வரும் கொள்கைப் பிரகடன்களிலும் அரசால் அமைக்கப்பட்ட ஏனைய கொமிசன்களின் அறிக்கைகளிலும் தொடர்ந்து வெளியிடப்படுகிறது.

இதன் ஆளும் ஆசையின் வெளிப்பாடகவே 2002இல் அது ஒரு பொதுவிவகார குழுவை உலகின் போர் நடக்கும் இடங்களுக்கு சென்று அங்கு ஊடகவியலாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி அங்குள்ள ஐ-அமெரிக்க தளபதிகளுக்கு உதவியாக செய்திகளையும் படங்களையும் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பிவைப்பதற்காக நிறுவியது. அதையே தலைமைச்செயலகம் மக்களிடம் பரப்பும். ‘தகவல் மேலாண்மை’ என்று இந்த செயற்பாட்டை விபரித்தார்கள்.

பனிப்போர் முடிந்தது. நீடுழி வாழ்க பனிப்போர்.

21ம் நூற்றாண்டிலும் ஐ-அமெரிக்கா அப்பாவி மக்கள் மீது பயங்கரமான குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது. இப்படி உலகம் இருக்கும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. 1980 இல் சோவித் குடியரசின் தலைவர் கோபசேவ் மாற்றங்கள் மூலம் அந்த அரசுக்கு ஒரு முடிவு கொண்டுவந்தார். 1989 இல் பெர்லின் சுவர் உடைக்கப்பட்டது. ஐரோப்பிய மக்கள் இதை மகிழ்வாக கொண்டாடினார்கள். இதை கொண்டாடுவதற்கு இச்சுவர் விழுந்த சில வாரங்களில், ஐ-அமெரிக்கா பனாமா நாட்டின் மீது படை எடுத்தது.

அதே நேரத்தில் ஒரு இடதுசாரி அரசை தோற்கடிப்பதற்காக நிக்கராகுவா தேர்தலில் தலையிட்டது. தொடர்ந்து தெற்கு ஆபிரிக்கா நெல்சன் மன்டேலாவை விடுதலை செய்தது. அந்நாட்டின் நிறவெறி அமைப்புக்கள் உடையத்தொடங்கின. 1990 ஆம் ஆண்டு முடிவதற்கு முன்னரே ஹய்டி நாட்டில் முதல்முதலாக முறையான தேர்தல் நடைபெற்றது. ஒரு முற்போக்கான ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டார். பல நன்மைகளும் நடைபெறப்போகிறது போன்ற ஒரு நம்பிக்கை உருவாக தொடங்கியது.

ஆனால், அமெரிக்க ஊடகங்களின் வார்த்தையில் ‘கம்யூனிசத்தின் பிடியிலிருந்து புதிதாக சுதந்திரமடைந்த’ பல்கேரியாவும் அல்பேனியாவும் வாஷிங்டனுக்கு ஏற்பில்லாத அரசுகளை தெரிவு செய்த போது ஐ-அமெரிக்கா தலையிட்டு இரண்டு அரசுகளையும் கவிழ்த்தது. இதே காலத்தில் ஐ-அமெரிக்கா இராக்கின் மீதும் அதன் மக்கள் மீதும் 40 நாட்களுக்கு, இரவும் பகலும் எதுவித காரணமுமின்றி குண்டுகள் போட்டது.

ஒரு புதிய உலகம் உருவாகிறது என்ற நம்பிக்கை அத்துடன் முடிவடைந்தது. ஐ-அமெரிக்க தலைவர்களுக்கு இது போதவில்லை. 1993 இல் சோமாலியா நாட்டின் அரசியல் வரைபடத்தை மாற்றும் எண்ணத்துடன் அதன் மீது தாக்குதல் நடத்தினார்கள். லத்தீன் அமெரிக்காவில் பனிப்போர் ஆரம்பித்தது போல, 1960, 1970, 1980, 1990களிலிலும் தொடர்ந்து, பெரு, மெக்சிகோ, கொலம்பியா மற்றும் இகுவடோர் நாடுகளில் தலையிட்டு அங்கு தோன்றிய போராட்ட அமைப்புக்களை அழித்தார்கள்.

1990களில் ஐ-அமெரிக்கா முன்னாள் சோவியத் குடியரசின் பகுதிகளாக இருந்த, ரசியா, மொங்கோலியா மற்றும் பெஸ்னியா நாடுகளின் தேர்தல்களில் தலையிடுவதை காணக்கூடியதாக இருந்தது. 1999 இல் சேர்பியர், கொசோவா நாடுகளின் மேல் 78 நாட்கள் தொடர்ச்சியாக குண்டுகள்  போட்டது ஐ-அமெரிக்கா. சோசலிச யுகோஸ்லோவியா நாட்டை உடைக்கும் அதன் திட்டம் இத்துடன் நிறைவேறியது.

மீண்டும் 2001 இல் நிகராகுவா தேர்தலில் நேரடியாக தலையிட்டு இடதுசாரி அரசு வருவதை தடுத்தது. தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் அதே ஆண்டு குண்டுகள் போட்டு செப்டம்பர் 11 தாக்குதலில் ஐ-அமெரிக்காவில் கொல்லப்பட்டவர்களை விட அதிகமானோரை கொலை செய்தது. அப்போது ஆப்கானிஸ்தானில் இருந்த வெளிநாட்டு ‘பயங்கரவாதிகள்’, அல்கேய்தா முகாம்களில் பயிற்சி எடுத்து கொண்டிருந்தவர்கள் உட்பட, சோவியத் படைகளுக்கு எதிராக பேரிடுவதற்காகவோ அல்லது தலிபானின் உள்நாட்டு போரில் ஈடுபடவோ தான் அங்கு நின்றார்கள். அவர்களுக்கு இது ஒரு சமயப்போர்.

பயங்கரவாதமோ அல்லது ஐ-அமெரிக்காவுக்கு எதிரானதோ அல்ல. ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட பல்லாயிரம் மக்களில் ஒருவராவது செப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புள்ளவர்கள் என்று அடையாளப்படுத்தப்படவில்லை. செப்டம்பர் 11 தாக்குதல் செய்தவர்கள் ஒரு அடையாள கட்டடத்தை அதற்கு தெரிவு செய்தார்கள். ஐ-அமெரிக்காவும் பதில் தாக்குதலுக்கு ஒரு அடையாள நாட்டை தெரிவு செய்தார்கள். ஆப்கானிஸ்தான் மீது கொடுமையான தாக்குதல்கள் நடத்திக்கொண்டிருந்த அதே நேரத்தில், வாஷிங்டன் வெனிசுவேலாவின் தலைவர் ஹூகோ சாவேஸையும் அவரின் பிரபலமான அரசையும் கவிழ்க்கும் திட்டத்திற்கும் உதவி வழங்கினார்கள்.20134714357543580 20 நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்(5) – தமிழில் ந. மாலதி

இதே காலத்தில் கியூபாவின் கழுத்தை நெரித்த படியும், அந்நாட்டின் கொன்டானமோ பேஸை பிடித்துவைத்துக் கொண்டு, அதை ஒரு சாத்தானின் தீவாக மாற்றி, உலகின் பல பாகங்களிலிருந்தும் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் பிடித்து வந்தவர்களை, சிறுவர்கள் உட்பட, அடைத்து வைக்கும் இடமாக்கியது ஐ-அமெரிக்கா. பனிப்போர் முடிந்து எதிர்பார்த்தபடி சமாதானத்தின் பலன்கள் எதுவும் ஐ-அமெரிக்கர்களுக்கோ உலகின் ஏனைய மக்களுக்கோ கிட்வில்லை.

சோவியத் குடியரசு உடைந்தும், அதனுடன் சேர்ந்திருந்த நாடுகள் விடுதலை பெற்றும், முன்னாள் கம்யூனிச நாடுகள் முதலாளித்துவ நாடுகளாக மாறியும், ஐ-அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை எதுவும் மாறவில்லை.

ஐரோப்பாவை சோவியத் தாக்குதலிலிருந்து காப்பாற்றுவதற்காக என்று மக்களிடம் சொல்லி உருவாக்கப்பட்ட இராணுவ அமைப்பான நேரோ (NATO), சோவியத் குடியரசு உடைந்த பின்னரும் தொடர்நதது. எங்கேயெல்லாம் ஐ-அமெரிக்காவின் கொள்கை,  இரணுவத்தை போகச் சொல்கிறதோ அங்கெல்லாம் அதன் அடியாளாக செல்வதற்கு ஆயத்தமாக இது மேலும் வளர்ந்தது.

இதன் இராணுவம் பால்கன் நாடுகளின் மேல் ஆதிக்கம் செய்வதற்கும், நேரோவின் அங்கத்துவ நாடுகள் ஆப்பானிஸ்தானில் ஐ-அமெரிக்காவுடன் சேர்ந்து கொள்வதை நியாயப்படுத்துவதற்கும் இது வளர்ந்தது. இது முழுவதுமே ஒரு ஏமாற்றுத்தான். சோவியத் குடியரசும், கம்யூனி அச்சுறுத்தல் என்று சொல்லப்பட்டதும் உண்மையான காரணங்கள் அல்ல. உண்மையான எதிரி யாரென்றால், ஐ-அமெரிக்கா பேரரசின் விரிவுக்கு தடையாக இருக்கும் எந்தவொரு அரசோ, அமைப்போ, தனி மனிதரரோ தான். இதற்கு ஐ-அமெரிக்கா எதேதோ பெயர்கள் கொடுக்கும்: கமியூனிஸட், கெட்ட அரசு, போதைபொருள் கடத்துபவர், பயங்கரவாதி இத்தியாதி.

ஐ-அமெரிக்கா உண்மையில் பயங்காரவாதத்தின் எதிரியா?

அரசியல் காரணத்திற்காக ஒரு விமானத்தை தாக்கி 73 பொதுமக்களை கொன்றவரை எப்படி அழைக்கலாம்? ராஜதந்திரிகள் பலரை கொல்ல முயற்சித்தவரை எப்படி அழைக்கலாம்? ஐ-அமெரிக்க துறைகளில் தரித்திருக்கும் கப்பல்களின் மேல் குண்டுகள் எய்பவரை எப்படி அழைக்கலாம்? ஐ-அமெரிக்காவிலும் ஏனைய இடங்களிலும் வணிக கட்டிடங்களிலும் தூதுவராலயங்களிலும் குண்டுகள் வைப்பவரை எப்படி அழைக்கலாம்? அவர் ஐ-அமெரிக்காவிலுள்ள மியாமியில் வசிக்கும் கியூபா நாட்டை சேர்ந்த ஒலன்டோ போஸ்ச்.orlando bosch 59e95116 3deb 465f 8b82 b9586540c76 resize 750 நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்(5) – தமிழில் ந. மாலதி

அவரை அமெரிக்க அரச துறைகள் எதுவும் தொந்தரவு செய்வதில்லை. மியாமி நகரம் ஒரு முறை அவரை மதிக்கும் விதமாக அவர் பெயரில் ஒரு நாளை பிரகடனப்படுத்தி இருந்தது. விமானத்தை தாக்கியதற்காக அவர் வெனிசுவேலாவில் சிறையிடப்பட்டிருந்தார். ஐ-அமெரிக்காவின் அழுத்தங்களினால் விடுதலை செய்யப்பட்டார். அவர் 1988இல் ஐ-அமெரிக்காவுக்கு திரும்பினார். ஐ-அமெரிக்க நீதிமன்றம் அவரை கொடுமையான பயங்கரவாதி என்று கண்டித்து அவரை நாடு கடத்துவதற்கு ஆயத்தமானது. இதை ஜனாதிபதி முதலாவது புஷ் தடுத்தார். அவ்வறானால் புஷ் பயங்கரவாதத்திற்கு எதிரானவரா அல்லது தமக்கு நண்பனாக இல்லாத பயங்கரவாதிகளுக்கு மட்டும் எதிரனவரா?

வாஷிங்டனின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை வேறும் பல விடயங்கள் கேள்விக்கு உட்படுத்தும். அவர்கள் ஆதரித்த கொசவோ விடுதலை அமைப்பு பல்கனின் பல பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. ஆனால் தாக்கப்பட்டவர்கள் வாஷிங்டனுடன் சேர்ந்து நிற்காதவர்கள். 1980களில் கம்யூனிசத்திற்கு எதிரான வியட்நாம், கம்போடியா மற்றும் லவோஸ் நாட்டை சேர்ந்தவர்கள் ஐ-அமெரிக்காவில் தங்கி தமது சொந்த நாட்டவர்களுக்கு மேல் தாக்குதல் நடத்த ஐ-அமெரிக்க உதவிகள் செய்தது. இவர்கள் தமது நாட்டிற்கு சென்று அத்தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள்.

ஒரு கேள்வியை நாம் கேட்க வேண்டும். உலகத்தில் எந்த நாட்டில் அதிகமாக பயங்கரவாதிகள் பாதுகாக்கப்படுகிறார்கள். மேலே குறிப்பிட் போஸ்ச் என்பவரை தவிர மேலும் மியாமில் வசிக்கும் பல கஸ்ரோவுக்கு எதிரான கியூபா நாட்டைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கான பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள். அவர்களையும் அவர்களை போல கௌதமாலா, எல்சல்வடோர், ஹய்டி, இந்தனேசியா இன்னும் பல நட்பான பயங்கரவாதிகளை ஐ-அமெரிக்கா பாதுகாத்து வருகிறது.