Home Blog Page 3069

மகிந்த அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ நேற்று (23) சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் அலினா பி.டெப்லிட்ஸை தனது கொழும்பிலுள்ள அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இக்கலந்துரையாடலில் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பில், சிறிலங்கா – அமெரிக்காவிற்கிடையிலான 3 ஒப்பந்தங்கள் குறித்து கவலை வெளியிட்டிருந்தார்.

பிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தேர்வு

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொரிஸ் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராவார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றதைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட பிரெக்ஸ்ட் உடன்பாட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறமுடியாததால் பிரதமர் திரேசா மே பதவி விலகியிருந்தார்.

ஆட்சியில் உள்ள கட்சியின் தலைவரே பிரதமர் பதவியை வகிக்க முடியும் என்ற பிரித்தானியாவின் சட்டத்திற்கு அமைவாக ஆட்சியில் உள்ள கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவருக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.

இதில் இறுதிச்சுற்றில் ஜெரமி கன்டிற்கும், ஜோன்சனுக்குமிடையில் இடம்பெற்ற போட்டியில் ஜோன்சன் 92,153 வாக்குகளும், கன்ட் 46,656 வாக்குகளையும் பெற்றிருந்தார்.

நேற்று (23) இந்த முடிவு அறிவிக்கப்பட்டபோதும், இன்று (24) பிற்பகல் பக்கிங்கம் அரன்மனைக்குச் சென்று மகாராணியிடம் தனது பதவி ஏற்புக்கான கடிதத்தை உத்தியோகபூர்வமாக ஜோன்சன் கையளிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜுலை இனப்படுகொலை தொடர்பில் இளையோர் அமைப்பின் கண்காட்சி

1983 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இனப்படுகொலை மற்றும் தொடர்ந்து மேற்கொண்டுவரும் இனப்படுகொலை தொடர்பில் பிரித்தானியாவில் இளையோர் அமைப்பனால் இனப்படுகொலை தொடர்பான கண்காட்சி ஒன்று நேற்று (23) இடம்பெற்றுள்ளது.

கலை என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சம் இல்லை அது ஒரு ஆயுதமும் கூட. விடுதலைக்கான ஆயுதமாக கலைழய அடுத்துவரும் எல்லா தலைமுறைகளும் கையிலெடுக்கும் என்பதையே இந்த கண்காட்சி எடுத்துக்காட்டுகின்றது.

july 2019 4 ஜுலை இனப்படுகொலை தொடர்பில் இளையோர் அமைப்பின் கண்காட்சிjuly 2019 1 ஜுலை இனப்படுகொலை தொடர்பில் இளையோர் அமைப்பின் கண்காட்சி july 2019 3 ஜுலை இனப்படுகொலை தொடர்பில் இளையோர் அமைப்பின் கண்காட்சி

பிரான்ஸ் தலைநகர் பாரிசு (லாசப்பல்) பகுதியில் கறுப்பு ஜூலை 83 நினைவூடல் பதாகைகள்

புலம் பெயர் தேசத்தில் பிரான்ஸ் நாட்டில் தலைநகர் பாரிசு (லாசப்பல்) பகுதியில் கறுப்பு ஜூலை 83 நிணைவூடல் பதாகைகள் கட்டப்பட்டு இருப்பதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.

france 2019 2 பிரான்ஸ் தலைநகர் பாரிசு (லாசப்பல்) பகுதியில் கறுப்பு ஜூலை 83 நினைவூடல் பதாகைகள்

அனைத்துலக சக்திகளின் நலன்களுக்கு துணைபோகும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துள்ளது – பேராயர் மல்கம் ரஞ்சித் காட்டம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குல் ஒரு அனைத்துலக சதி என்றும் அனைத்துலக சக்திகளின் நலன்களுக்கு துணைபோன சிறிலங்கா அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துள்ளதாகவும் கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் தெரிவித் துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் சேதமடைந்த நீர்கொழும்பு கடுவாப் பிட்டிய செபஸ்தியார் தேவாலயம் மறுசீரமைக்கப்பட்ட பின்னர் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

குண்டு தாக்குதல்களை நடத்திய இளைஞர்கள் அனைத்துலக சதிகாரர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்துலக சக்திகளுக்கு உலகளாவிய முஸ்லிம் கள் பலியாகி விட்டனர்.

உலகெங்கிலும் அழிவுகளை உருவாக்க இஸ்லாமிய சித்தாந்தங்களைப் பயன்படுத்தும் சதிகாரர்களுக்கு எதிராக உலகளாவிய முஸ்லிம்கள் துணை நிற்க வேண்டும்.நிறைவேற்று அதிகாரத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையிலான மோதலின் விளைவாக பாதுகாப்பு சபை கூட்டங்களை நடத்த முடியவில்லை.

அரசியல் தலைவர்கள் குண்டு தாக்குதல்கள் குறித்து முன் எச்சரிக்கைகளை புறக்கணித்தனர். இதன் விளைவாக கிட்டத்தட்ட 300 பேர் கொல்லப்பட்டனர்.
ஐந்து நாடுகளால் கட்டுப்படுத்தப்படுவது தான் ஐ.நா. அவர்களின் நோக்கங் களை நிறைவேற்றுவதற்காக மட்டுமே அது உள்ளது. ஐ.நா.வை யாரும் நம்ப முடியாது.

குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்களை ஐ.நா. அதிகாரிகள் யாரும் பார்வையிடவில்லை. ஆனால் சர்ச்சைக்குரிய மருத்துவர் உட்பட தாக்கு தலுக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மட்டுமே பார்வை யிட்டனர்.

இந்த நாட்டில் தலைவர்கள் துணிச்சலான முடிவுகளை எடுக்க பயப்படு கிறார்கள். அனைத்துலக சக்திகளை சுதந்திரமாக நடமாட அனுமதித்ததே இதற்குக் காரணம். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ஐ.தே.க சனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச – நாடாளுமன்றக் குழுவில் பரிந்துரை

வரும் அதிபர் தேர்தலில் ஐதேக வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நிறுத்தும் யோசனையை  ஐ.தேக நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் பலரும் நேற்று முன்மொழிந்துள்ளனர்.

இதையடுத்து, கட்சியின் வேட்பாளர் விரைவில்  அதிகாரபூர்வமான தெரிவு செய்யப்படுவார் என ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நேற்று நடந்த ஐதேக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்தும் யோசனை ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்மொழிந்துள்ளனர் என்று தனது பெயரை வெளியிட விரும்பாத உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஐதேக தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் செயற்குழு மற்றும் நாடாளுமன்றக் குழு என்பன அதிபர் வேட்பாளர் குறித்து இறுதி முடிவை எடுக்கும் என்றும், அது அதிகாரபூர்வ முடிவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

எனினும், நேற்றைய கூட்டத்தில், ஐதேக செயற்குழுக் கூட்டத்தையோ நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தையோ எப்போது கூட்டுவது என்று முடிவெடுக்கப்படவில்லை.

அதேவேளை கட்சியின் சில உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவை அதிபர் வேட்பாளராக முன்மொழிந்துள்ளனர் என்று தெரிவித்த ஐதேக பொதுச்செயலர் அகில விராஜ் காரியவசம், ஏனையவர்கள் ஓகஸ்ட் 5ஆம் நாள் தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்கப்பட்ட பின்னர் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.

 

பிரித்தானிய பிரதமர் வாசல் தலத்திற்கு முன்பாக நடைபெற்ற கறுப்பு யூலை நினைவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

இன்று பிரித்தானிய பிரதமர் வாசல் தலத்திற்கு முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.

TCCUK 2019 July 4 பிரித்தானிய பிரதமர் வாசல் தலத்திற்கு முன்பாக நடைபெற்ற கறுப்பு யூலை நினைவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

TCCUK 2019 July 3 பிரித்தானிய பிரதமர் வாசல் தலத்திற்கு முன்பாக நடைபெற்ற கறுப்பு யூலை நினைவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

TCCUK 2019 July 2 பிரித்தானிய பிரதமர் வாசல் தலத்திற்கு முன்பாக நடைபெற்ற கறுப்பு யூலை நினைவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

TCCUK 2019 July 1 பிரித்தானிய பிரதமர் வாசல் தலத்திற்கு முன்பாக நடைபெற்ற கறுப்பு யூலை நினைவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

பத்து ஆண்டுகளைப் போலவே பதினோராவது ஆண்டும் கடந்து செல்லுமா?வேல்ஸ் இல் இருந்து அருஷ்

“இந்த நூற்றாண்டின் கறை” என்பது சீனா அரசு அங்கு வாழும் உகூர் இன முஸ்லிம் மக்கள் மீது மேற்கொண்டுவரும் மத ரீதியான துன்புறுத்தலாம். கூறுவது அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் மைக் பொம்பியோ.

அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் இந்த வாரம் இந்த கருத்தை தெரிவிக்கும்போது சிங்கள அரசின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அமைதியான வழிகளில் தமது காலாச்சார பாரம்பரிய இடமான கன்னியா வெந்நீர் ஊற்றினை மீட்கப் போராடிய தமிழ் மக்கள் மீது பௌத்த துறவிகளும், சிங்களவர்களும் கொதிக்கும் நீரை ஊற்றியுள்ளனர்.

அதாவது சீனா அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாக அவதானிக்கும் அமெரிக்காவுக்கு ஏனைய நாடுகள் அங்கு வாழும் சிறுபான்மை இனங்கள் மீது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மட்டும் கண்ணில் தெரிவதில்லை. ஆனால் அமெரிக்காவின் எந்த அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வதற்கு சீனா தயாராகிவிட்டது. எதிர்த்து நிற்பதன் மூலமே தாம் தப்பிப்பிழைக்க முடியும் என்பது, வரலாறு சீனாவுக்கு கற்றுக்கொடுத்த பாடம். எனவே தான் அமெரிக்காவின் எதிர்ப்புக்களையும் மீறி சிறீலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது சீனா.

அதனை சினோபெக் என்ற எரிபொருள் நிறுவனம் ஒன்றின் ஊடாக மேற்கொள்வதன் மூலம் அரசியல் நெருக்கடிகளை தவிர்த்து பொருளாதார நிறுவனம் தொடர்பான நடவடிக்கையாக அதனை மாற்றி அமைத்துள்ளது சீன அரசு. இந்தியாவின் இந்தியன் அக்கோட் குழுமம் என்ற நிறுவனம் மேற்கொண்ட ஏறத்தாழ 4 பில்லியன் டொலர்கள் பெறுமதியான எரிபொருள் சுத்திகரிப்பு நிறுவனத்திற்குப் போட்டியாக சீனா தனது நிறுவனத்தை களமிறக்கியுள்ளது.chinaoil 1210 1 பத்து ஆண்டுகளைப் போலவே பதினோராவது ஆண்டும் கடந்து செல்லுமா?வேல்ஸ் இல் இருந்து அருஷ்

ஆனால் சீனாவின் திட்டத்தில் இரண்டு இலாபம் உண்டு, ஒன்று உலகில் பயணம் செய்யும் சரக்கு கப்பலிகளில் மூன்றில் இரண்டு பங்கு கப்பல்கள் இந்து சமுத்திர கடற் பிரதேசத்தை அம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக கடந்தே செல்கின்றன. எனவே அவ்வாறு செல்லும் பெருமளவான கப்பல்களுக்கு எரிபொருளை வழங்குவதன் மூலம் வியாபாரத்தை பெருக்குவது, இரண்டாவது தனது முத்துமாலைத்திட்டத்தில் பயணிக்கும் தனது சரக்கு மற்றும் கடற்படைக் கப்பல்களின் எரிபொருள் விநியோகத்தை பாதுகாப்பதன் மூலம் தனது வழங்கல் பாதையை உறுதி செய்வது.

சிறீலங்கா விவகாரத்தில் சீனாவும் இந்தியாவும் தமக்கான இடங்களைத் தெரிவு செய்து தமது ஆளுமைகளை வலுப்படுத்தும் அதேசமயம், அமெரிக்கா அதன் முயற்சிகளில் முன்நகரமுடியாத நிலையிலேயே தற்போதும் உள்ளது.

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பை மனித உரிமை மீறல்கள் என்ற பதத்திற்குள் சுருக்கி அதனை கையில் எடுத்து தமிழ் மக்களை ஏமாற்றியது போல சிறீலங்கா அரசையும், இந்தியாவையும் ஏமாற்றுவதன் மூலம் சிறீலங்காவில் படைத்தளம் ஒன்றை நிரந்தரமாக அமைப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி இந்தியாவின் நேரடியற்ற எதிர்ப்பினால் அந்தரத்தில் தொங்கி நிற்கின்றது.

ஆனால் சீனா தனது அடுத்த நகர்வை சத்தமின்றி மேற்கொண்டுள்ளது. சீனாவின் நடவடிக்கைகளை கடுமையான எதிர்க்காத இந்தியா அமெரிக்காவின் நடவடிக்கைகளை தென்னிலங்கை அரசியல்வாதிகளின் ஊடாக வெற்றிகரமாக முறியடித்துள்ளது. 1987 களில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் மேற்கொண்டது போன்ற ஒரு நகர்வையே இந்தியா தற்போது விரும்புகின்றது.

ஆனால் இந்த பூகோள நலன்சார் அரசியலில் தமிழ் இனத்திற்கான ஆதாயம் என்ன என்பது தான் பிரதான கேள்வி? நாம் எமக்கான தனித்துவத்தை இந்த பிரச்சனைக்குள் உள்நுழைக்க வேண்டும் என்றால் முதலில் அதற்கு பலமான அரசியல் தளம் எம்மிடம் இருக்க வேண்டும். ஆனால் அது தற்போது எம்மிடம் இல்லை.

தாயகத்திலும் புலத்திலும் அதற்கான ஏதுநிலை ஒன்று உருவாகுவதை சிறீலங்கா அரசு தனது புலனாய்வு அமைப்புக்கள் மூலம் சிதைத்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு தமிழ்க் குழுக்களையே அது பயன்படுத்தியும் உள்ளது. உதாரணமாக தற்போது மாற்று அரசியல் தளம் ஒன்று தமிழ் மக்கள் மத்தியில் உருவாகுவதை தடுப்பதிலும் தமிழ்க் குழுக்களே பின்னணியில் உள்ளன.107939890 c527a2d0 135d 4d41 857e dcab75b31332 பத்து ஆண்டுகளைப் போலவே பதினோராவது ஆண்டும் கடந்து செல்லுமா?வேல்ஸ் இல் இருந்து அருஷ்

சிங்கள அரசு அதனைச் செய்யவில்லை. தாயகத்தில் தற்போது மக்கள் போராட்டம் மெல்ல மெல்ல உக்கிரம்பெற்று வருகின்றது. நீராவியடி பிள்ளையார் கோவிலிலும், கன்னியா வெந்நீர் ஊற்றிலும், காணாமல்போனவர்களின் உறவுகள் மேற்கொண்டுவரும் தொடர் போராட்டங்களிலும் அதனை நாம் காணலாம். ஆனால் அதனை சரியான வழியில் நகர்த்துவதற்கு பலமான அரசியல் அணி ஒன்று அவசியமானது. ஆனால் அதனை உருவாக்குவதில் தான் சிக்கல் தோன்றியுள்ளது.தற்போது சிறீலங்காவுக்கு சென்றுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான அதிகாரி கிளெமென்ட் நயாலெட்சோசி வூல் அவர்கள் தனது அறிக்கையை எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கவுள்ளார்.

சிறீலங்காவில் தமது உரிமைகளுக்காக சிறுபான்மை இனம் அமைதியாக ஒன்று கூடுவதற்குரிய சுதந்திரம் உள்ளதா என்பதை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை கொண்டு அவருக்கு அறிக்கை மூலமாக விளக்கம் தர யார் முயற்சிகளை எடுத்துள்ளார்கள் என்பது தான் தற்போதுள்ள வினா?image a2b8dda3a8 பத்து ஆண்டுகளைப் போலவே பதினோராவது ஆண்டும் கடந்து செல்லுமா?வேல்ஸ் இல் இருந்து அருஷ்

அமைதியாக தமிழ் மக்கள் கூடும் இடங்களில் ஆயுதம் தரித்த சிங்கள இராணுவம் குவிக்கப்படுகின்றது, தமிழ் மக்கள் மீது சிங்கள மதகுருக்களும், சிங்களவர்களும் கொதிநீரை ஊற்றுக்கிறனர், தமிழ் மக்கள் செல்லும் பேரூந்துகளின் சக்கரங்களில் இருந்து காற்று பிடுங்கப்படுகின்றது. தமிழ் மக்கள் கூடுவதை தடை செய்யும் சிங்கள நீதிமன்றங்கள் அதே இடத்தில் சிங்களவர்கள் கூடுவதை அனுமதிக்கின்றது.

ஆனால் இவற்றை எல்லாம் அந்த அதிகாரியிடம் எடுத்துக் கூறுவதையோ, அல்லது அதிகாரியை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சந்திப்பதையோ சிறீலங்கா அரசும் அதனைக் காப்பாற்றத் துடிக்கும் தமிழ் அரசியல்வாதிகளும் அனுமதிக்கமாட்டார்கள். ஆனால் அதனையும் தாண்டி அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது தளத்தில் உள்ள சமூக அமைப்புக்களினதும், ஏனைய தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகளினதும் கடமை. அதனை நெறிப்படுத்தி, ஆலோசனைகள் மற்றும் உதவிகளை வழங்கவேண்டியது புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகளின் கடமை.

ஆனால் நாம் அதனை தவறவிட்டுவிட்டு, சிங்கள அரசினால் தனக்கு சாதகமாக பயன்படுத்தப்படும் அதிகாரிகள் ஐ.நாவில் சமர்ப்பிக்கும் அறிக்கைக்கு எதிராக ஐ.நா வாசலில் நின்று கோசம் போடுவதால் எந்த பலனும் கிட்டப்போவதில்லை, மாறாக பத்து ஆண்டுகள் கடந்து சென்றதைப்போல பதினோராவது ஆண்டும் கடந்து செல்லும் என்பதே யதார்த்தம்.

கறுப்புயூலை 1983 தமிழினப்படுகொலை : பிரித்தானிய பிரதமர் வாயிற்தளத்தில் நீதிகோரிய தமிழர்கள் !!

இலங்கைத்தீவில் தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனப்படுகொலைகளில் ஒன்றாகவுள்ள கறுப்புயூலை 1983 தமிழினப்படுகொலையின் நீதிகோரி, பிரித்தானிய பிரதமர் வாயிற்தளத்தில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

எதிர்வரும் யுலை 23ம் நாளன்று,  கறுப்புயூலையின் 36வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வுகள் உலகெங்கும் இடம்பெற இருக்கின்ற நிலையில், முன்னராக 21ம் நாளன்று நீதிகோரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த ஒன்றுகூடலில் பெருந்திரளானவர்கள் பங்கெடுத்திருந்தனர்.

காலம் பல கடந்து சென்றாலும் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் ஆன்மாவில் ஓர் பெரும் துயர வடுவாக நிலைத்திருப்பதோடு, என்ன விலை கொடுத்தேனும் அரசியல் சுதந்திரத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற பற்றுறுதியை தமிழர் தேசத்திடம் கறுப்பு யூலை நினைவுகள் விதைத்திருக்கின்றன என இக்கவனயீர்ப்பு போராட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.IMG 0373 கறுப்புயூலை 1983 தமிழினப்படுகொலை : பிரித்தானிய பிரதமர் வாயிற்தளத்தில் நீதிகோரிய தமிழர்கள் !! IMG 0380 கறுப்புயூலை 1983 தமிழினப்படுகொலை : பிரித்தானிய பிரதமர் வாயிற்தளத்தில் நீதிகோரிய தமிழர்கள் !! IMG 0422 கறுப்புயூலை 1983 தமிழினப்படுகொலை : பிரித்தானிய பிரதமர் வாயிற்தளத்தில் நீதிகோரிய தமிழர்கள் !! IMG 0445 கறுப்புயூலை 1983 தமிழினப்படுகொலை : பிரித்தானிய பிரதமர் வாயிற்தளத்தில் நீதிகோரிய தமிழர்கள் !! IMG 0467 கறுப்புயூலை 1983 தமிழினப்படுகொலை : பிரித்தானிய பிரதமர் வாயிற்தளத்தில் நீதிகோரிய தமிழர்கள் !!

யாழ்.பல்கலையில் தடைகளை மீறி கறுப்பு ஜூலை நினைவுகூரல்

1983 இல் தமிழினம் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நாள் இன்றாகும்.
இதனை தாயகத்தில் மட்டுமன்றி உலகெங்கும் உள்ள தமிழர்கள் துயருடன் நினைவு கூறுகின்றனர்.

இந்தவகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தடைகளையும் மீறி இந்த நாளை பல்கலைக்கழக வளாகத்தில் நினைவு கூறுகின்றனர். இதனைத்தடுக்க சிறிலங்கா படையினர் அங்கு விரைவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.