Home Blog Page 3066

யாழில் ஒன்று திரண்ட வேலையற்ற பட்டதாரிகள்

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள், தமக்கு வேலை வேண்டுமென்று யாழ். ஊடக மையத்தில் இன்று பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

வேலையற்ற பட்டதாரிகளில் ஒரு தொகுதியினருக்கு அரச நியமனம் வழங்கப்போவதாக அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கும் போது, யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய உள்வாரி, வெளிவாரி மற்றும் எச்.என்.டி.ஏ பட்டதாரிகளே தமது பதிவுகளை இன்று மேற்கொண்டனர்.

2017இற்குப் பின்னர் உள்வாரி, வெளிவாரி மற்றும் எச்.என்.டி.ஏ பட்டதாரிகளுக்கு வேலைகள் வழங்கப்படவில்லை. இதனால் வேலையற்ற பட்டதாரிகள் இவ்வாறு ஒன்றுகூடி இந்தப் பதிவை மேற்கொண்டனர். பாரபட்சம் காட்டாது வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டுமென்று வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

 

பிரித்தானிய பிரதமரின் புதிய திட்டங்கள்

பிரித்தானியாவின் புதிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன், புதிய பிரதமர் என்ற வகையில் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதன் போது பிரித்தானியாவில் சட்டéர்வ வதிவிட அனுமதியை பெறாமல் தங்கியுள்ள சுமார் ஐந்து இலட்சம் குடியேறிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சாத்தியங்களை பிரித்தானியாவின் புதிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈழத்தமிழர்கள் உட்பட பிரித்தானியாவில் சட்டéர்வ வதிவிட அனுமதியில்லாமல் சுமார் ஐந்து லட்சம் குடியேறிகள் நீண்ட காலமாக வாழும் நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் அவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு அளிப்பது குறித்து அவர் கருத்துத் தெரிவித்தார்.

பொறிஸ் ஜோன்சன் லண்டன் நகரின் முதல்வராக இருந்த வேளை பிரித்தானியாவில் சட்டபூர்வ வதிவிட அனுமதியில்லாமல் வாழும் குறியேறிகளுக்கு வதிவிட அனுமதி வழங்கும் பரிந்துரையை முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை  அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துமாறு பிரித்தானிய பிரதமரிடம் மனுகையளிப்பு

குறித்த மனுவானது நாடுகடந்த அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களான நுஜிதன் இராசேந்திரம்  பொன்ராசாபுவலோஜன் பிரேம்குமார்சந்திரகுமார் அற்புதம் டக்லஸ்மென்டிசன் ஆகியோரினால் குறித்தமனுவானது கையளிக்கப் பட்டது. குறித்தமனுவில் தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்குகின்ற பிரதானமான முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இறுதிக் கட்டப் யுத்தத்தின் போது போர்க்குற்றங்களும், மனிதநேயக்குற்றங்களும் இடம்பெற்றுள்ளதாக ஐக்கியநாடுகள் சபையின் முன்னைய அறிக்கைகள் அனைத்தும் தெரிவிக்கின்றன.

கடந்த 20 ம் நாள் பிரித்தானிய பிரதமர் வாசஸ்தலத்தில் (10 Downing Street) மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. குறித்தமனுவானது நாடுகடந்த அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களான நுஜிதன் இராசேந்திரம், பொன்ராசா புவலோஜன், பிரேம்குமார் சந்திரகுமார், அற்புதம் டக்லஸ்மென்டிசன் ஆகியோரினால் குறித்தமனுவானது கையளிக்கப்பட்டது. குறித்தமனுவில் தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்குகின்ற பிரதானமான முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இறுதிக் கட்டப் யுத்தத்தின் போது போர்க்குற்றங்களும் மனிதநேயக்குற்றங்களும் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னைய அறிக்கைகள் அனைத்தும் தெரிவிக்கின்றன.

அந்த அடிப்படையில் ஐக்கிய நாடுகள்மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதற்கும்  யுத்தம் முடிவுற்று 10 வருடங்கள் கடந்தநிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வினை இதுவரையில் வழங்கத் தவறியுள்ளமையாலும், கடந்த காலவன்முறைகள் மீளெழுவதைத் தடுப்பதன் பொருட்டு அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியுள்ளமையாலும் ஓர்நிலையான அரசியல் தீர்வினைக்காண்பதை நோக்காகக் கொண்டும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்மானிப்பதன் பொருட்டும் இத்தீவின் வடக்கு கிழக்குப் பிராந்தியத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடாத்துவதற்கும் குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இறுதி யுத்தத்தில் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றம் தொடர்பில் ஐ.நா.வினால் கொண்டுவரப்பட்ட 30/1 மற்றும் 34/1 தீர்மானங்களின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கைஅரசிற்கு இரு வருட காலஅவகாசங்கள்வழங்கியும் அவற்றை இலங்கை அரசு செயற்படுத்த தவறியுள்ள நிலையில் இம்முறை மீண்டுமொருகால அவகாசத்தினை இலங்கைக்கு வழங்காது இணைஅனுசரணை வழங்கிநிறைவேற்றப்பட்ட 30/1, 34/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதையும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வடக்குகிழக்கில் இராணுவத்தின் தொடர்பிரசன்னம், வடகிழக்கில் நடந்துவரும் தொடர்ச்சியான சிங்கள குடியேற்றங் களைநிறுத்துதல், இராணுவசமுள்ள தனியார் காணிகளை விடுவித்தல், செய்யவேண்டும் போன்ற கோரிக்கைகளும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும், இலங்கையின் விவகாரத்தை ஐ.நா வின் பாதுகாப்புசபையிடம் பாரப்படுத்த வேண்டும் எனவும்குறித்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது

10 கட்சிகளுடன் பொதுஜன பெரமுன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து

பொதுஜன பெரமுன, 10 அரசியல்கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்சற்று முன்னர் கைச்சாத்திட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்விஜயராமவில் அமைந்துள்ள எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின்உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்துகைச்சாத்திடப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.

பொதுஜன பெரமுனவுடன் இணைந்துசெயல்பட்ட அரசியல் கட்சிகளும்பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காதஅரசியல் கட்சிகளுமே இவ்வாறுபுரிந்துணர்வு ஒப்பந்தங்களில்கைச்சாத்திட்டு உள்ளன.

மௌபிம ஜனதா கட்சி, இலங்கைதொழிலாளர் ஐக்கிய முன்னணி, தமிழர்ஐக்கிய சுதந்திர முன்னணி, ஈழவர்ஜனநாயக முன்னணி, முஸ்லிம் உலமாகட்சி, லிபரல் கட்சி, நவ சிஹல உறுமய,ஜனநாயக தேசிய இயக்கம், எக்சத் லங்காமகா சபா கட்சி மற்றும் பூமிபுத்திர கட்சிஆகிய 10 கட்சிகளுடனே இவ்வாறுஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்து-பெளத்த மாநாட்டில் கலந்துக்கொள்ள, மனோ கணேசன், காமினி ஜயவிக்கிரம, இந்தியா பயணம்

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில், மலைகளால் சூழப்பட்டு புண்ணிய தலங்கள் நிறைந்த, புராதன நகரமான ராஜ்கிரில் “தர்ம-தம்ம மாநாடு” என்ற தலைப்பில் புது டெல்லி இந்தியா பவுண்டேசன் நிறுவனம் நடத்தும் ஐந்தாவது சர்வதேச இந்து-பெளத்த மாநாட்டில் கலந்துக்கொள்ள தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன், புத்த சாசன, வயம்ப அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா ஆகியோர் புது டெல்லி நோக்கி பயணமானார்கள்.

இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுமாறு, இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொது செயலாளரும், இந்தியா பவுன்டேசனின் ஆளுநர் சபை உறுப்பினருமான ராம் மாதவ் விடுத்துள்ள அழைப்பை ஏற்றே இலங்கை அரசாங்கத்தில் இந்து, பெளத்த மதங்களுக்கு பொறுப்பான இரண்டு இலங்கை அமைச்சர்களும் இம்மாநாட்டில் கலந்துக்கொள்கின்றனர்.

இதனிடையே பெளத்த மதத்தையும் இந்து மதத்தையும் இணைக்கும் இந்த மாநாடு தமிழர் தாயகத்தில் சைவ ஆலயங்களில் புத்தர் சிலைகளை நிறுவும் சிங்கள அரசின் இனஅழிப்புக்கு துணை பாேகலாம் எனக் கருதப்படுகின்றது.

சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் நெருங்கும்போது சம்பந்தருக்கு தோன்றியுள்ள தமிழ்த் தேசிய சிந்தனை

சர்வதேசநாடுகளுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறை வேற்றப்படவில்லை. இந்த நிலையில் சர்வதேச சமூகம் அரசியல், இராஜதந்திர, பொருளாதார ரீதியாக இலங்கை அரசுக்குஅழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்தேசியகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

  நாடாளுமன்றத்தில் நேற்று புதியஅரசியலமைப்பு தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“யுத்தம்முடிந்து தற்போது 10 வருடங்கள்கடந்த போதும் தமிழருக்கு ஒரு அரசியல்தீர்வு கிடைக்கவில்லை. தற்போது தமிழர்கள் இரண்டாந்தர பிரஜைகளாகநடத்தப்படுகின்றனர். சர்வதேச சமூகம் ஒரு பார்வையாளராக மட்டும் இருந்துவிட முடியாது. சர்வதேச சமூகம் அரசியல், இராஜதந்திர பொருளாதார ரீதியாக இலங்கை அரசுக்கு அழுத்தத்தை வழங்கவேண்டும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச சமூகம் உதவியது. இதனால் தமிழ் மக்களே அதிகம்பாதிக்கப்பட்டது.

தமிழருக்கு பாரதூரமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு முன்னர் தமிழர்கள் பிரிவினையை விரும்பியிருக்கவில்லை. நாட்டை பலவழிகளில் பிரிப்பது நாட்டுக்கோ தமிழருக்கோ நன்மையில்லை. அதுதான்சமஷ்டிக் கட்சியின் கொள்கை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வே தமிழர்களின் விருப்பமாகும்.

நாடுசக்திமிக்க ஒன்றாக மாறவேண்டுமானால் தமிழர்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். சமூக, கலாசாரஉரிமைகளை கொண்டுள்ள தமிழ் மக்களுக்கு உள்ள சுயநிர்ணய உரிமையைஉங்களால் மறுக்க முடியுமா?

1956 ஆம் ஆண்டில்இருந்து வட கிழக்குமக்கள்மாற்றத்திற்கு வாக்களித்தனர். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இந்தஅரசு பொறுப்புடன்செயற்பட வேண்டும். சிங்கள பௌத்த மயமாக்கல் வடக்குகிழக்கில் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதால் தான் தமிழர் பிரச்சினை தீர்வுதாமதமாகிறதா என்று தமிழ் மக்களும்நாங்களும் அச்சம் கொண்டுள்ளோம். இதுசூட்சுமமாக முன்னெடுக்கப்படு கிறது.

எல்.எல்.ஆர்.சிஅறிக்கையின் சிபாரிசுகளைநிறைவேற்றுங்கள். சர்வதேச சமூகத்திற்குவழங்கிய வாக்குறுதிகளைநிறைவேற்றாமல் விட்டு மக்களால்நிராகரிக்கப்பட்ட அரசியலமைப்பைவைத்துக் கொண்டு நீங்கள் ஆட்சிசெய்தால் அது தவறு.

அப்படிச்செய்தால் நீங்கள்தோல்வியடைந்த அரசாக, செல்லுபடியற்றஅரசாக ஆகிவிடுவீர்கள். எனவே உச்சபட்சஅதிகாரப்பகிர்வு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும். எமது மக்களை நீங்கள் தொடர்ந்து ஏமாற்ற முடியாது.

தமிழ்மக்கள் சுய நிர்ணயஉரிமையைகோருவதற்கான அனைத்துதகுதியுடையவர்களாக இருக்கின்றனர்.இருந்தாலும் நாம் அவ்வாறான தீர்மானத்திற்கு செல்லவில்லை என்பதைஇங்கு தெரிவித்துக் கொள்கின்றேன். எனவே அமைத்து மக்களுடைய அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் செயற்படுவீர்கள்என எண்ணுகின்றேன்” எனகூறியுள்ளார்

அரசாங்கத்தின் பங்காளியே தமிழ் தேசிய கூட்டமைப்பு : விமல்

சிங்களவர்கள் தமிழ் மக்களின் விரோதிகள் என்ற பிரசாரத்தையே தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டுவருகின்றது.அத்துடன் அரசாங்கத்தின் பங்காளியாக இருந்துகொண்டு வாக்களித்த மக்களை ஏமாற்றுவதற்கே அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட்டுவருகின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையைில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிடடார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக தெரிவித்த அரசாங்கம் இன்னும் எதனையும் செய்யவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு இங்கு தெரிவிக்கின்றது.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளியாகவே இருந்து வருகின்றது. இதனை வாக்களித்த மக்களுக்கு மறைக்கவே அரசாங்காத்துக்கு எதிராக சபையில் கதைக்கின்றனர்.

அத்துடன் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும் எதிர்க்கட்சி தலைவருக்கு கிடைக்கும் அனைத்து வரப்பிரசாதங்களும் அரசாங்கத்தினால் அவருக்கு வழங்கப்படுகின்றன என அவர் சபையில் தெரிவித்தார்.

நன்றி: வீரகேசரி

சுமந்திரனே வாய்ப்பைக் கெடுத்து விட்டார் – டிலான் பெரேரா குற்றம்சாட்டு

தேசிய பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வகையில், அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வை வழங்க மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் சம்மதிக்க இருந்த சந்தர்ப்பத்தை சுமந்திரனே கெடுத்து விட்டார். எனத் அதற்கான பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குற்றம்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்பு தயாரிப்பு நடவடிக்கையில் அதிகார பகிர்வு, தேர்தல் முறை திருத்தம் போன்றவற்றுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அங்கிகரித்துக்கொள்ள முற்பட்டபோது, நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாமலாக்கி மக்கள் கருத்துக்கணிப்புடன் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் அபிலாஷையை சுமந்திரன் நிறைவேற்ற மேற்கொண்ட முயற்சியால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இல்லாமல் போனது.

அதனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சம்மதித்திக்கொள்ள இருந்த சந்தர்ப்பத்தை இல்லாமலாக்கிக் கொண்ட பொறுப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறானதொரு சந்தர்ப்பம் இனி கிடைப்பது சந்தேகம். ஏனெனில் இந்த இரண்டு கட்சிகளும் இனி ஒருபோது இணைந்து செயற்படப்போவதில்லை என்றும் இதன்போது கூறினார்.

 

தரவை பிள்ளையார் வீதி கடற்கரைப் பள்ளி வீதியானது

500வருடங்களுக்கும் மேலாக பழமை வாய்ந்த தரவை சித்தி விநாயகர் ஆலய வீதி (கே.பி.எஸ்) தார்சாலையாக மாற்றியமைத்திருந்தாலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதானது, இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் என அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ரசாக் என்பவர் தன்னுடைய படத்தைப் பெரிதாகப் போட்டு, கே.கே.பி.வீதி என்று பெயர் மாற்றியுள்ளார். இந்தச் சம்பவம் மனதிற்கு வேதனை தரக்கூடிய விடயம் என மாநகரசபை உறுப்பினரான சந்திரசேகரம் சாமுவேல்ராஜன் தெரிவித்தார். இதற்கு அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஒன்றரை வருடத்தின் முன்னர் கடற்கரைப் பள்ளி வீதி என பெயர்ப்பலகை வைக்கப்பட்ட போது, கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதன்போது, நீதவான் நன்கு விசாரித்து, இது கடற்கரைப் பள்ளி வீதியல்ல. தரவைப் பிள்ளையார் வீதி என தீர்ப்பளிக்கப்பட்டது.

சிறிலங்கா வந்து சென்ற மர்ம விமானம்

கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் வருகை தந்திருந்த பெயர் குறிப்பிடப்படாத விமானம் தொடர்பான மர்மம் நீடித்து வருகின்றது. எந்தவொரு நாட்டினதும் இலச்சினைகள் இல்லாது, குறித்த விமானம் வந்து சென்றதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசாங்கம் இது குறித்து விளக்கமளிக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால கேட்டுக்கொண்டுள்ளார். பாதுக்க பிரதேசத்தில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது, நேற்று (25) கேட்டுக்கொண்டார்.

குறித்த விமானம் சிலநாட்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்து மீளவும் கிளம்பிச் சென்றுள்ளது. இந்த விமானம் எந்த நாட்டிற்குரியது, எதற்காக வருகை தந்தது,  இதில் வந்தவர்கள் யார்? போன்ற தகவல்கள் இன்றுவரை வெளியிடப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.