இந்து-பெளத்த மாநாட்டில் கலந்துக்கொள்ள, மனோ கணேசன், காமினி ஜயவிக்கிரம, இந்தியா பயணம்

இந்தியாவின் பீஹார் மாநிலத்தில், மலைகளால் சூழப்பட்டு புண்ணிய தலங்கள் நிறைந்த, புராதன நகரமான ராஜ்கிரில் “தர்ம-தம்ம மாநாடு” என்ற தலைப்பில் புது டெல்லி இந்தியா பவுண்டேசன் நிறுவனம் நடத்தும் ஐந்தாவது சர்வதேச இந்து-பெளத்த மாநாட்டில் கலந்துக்கொள்ள தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன், புத்த சாசன, வயம்ப அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா ஆகியோர் புது டெல்லி நோக்கி பயணமானார்கள்.

இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுமாறு, இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொது செயலாளரும், இந்தியா பவுன்டேசனின் ஆளுநர் சபை உறுப்பினருமான ராம் மாதவ் விடுத்துள்ள அழைப்பை ஏற்றே இலங்கை அரசாங்கத்தில் இந்து, பெளத்த மதங்களுக்கு பொறுப்பான இரண்டு இலங்கை அமைச்சர்களும் இம்மாநாட்டில் கலந்துக்கொள்கின்றனர்.

இதனிடையே பெளத்த மதத்தையும் இந்து மதத்தையும் இணைக்கும் இந்த மாநாடு தமிழர் தாயகத்தில் சைவ ஆலயங்களில் புத்தர் சிலைகளை நிறுவும் சிங்கள அரசின் இனஅழிப்புக்கு துணை பாேகலாம் எனக் கருதப்படுகின்றது.