Home Blog Page 3057

ஆண்கள் அனுமதியின்றி பெண்கள் வெளிநாடு போகலாம் : சவுதி அரசு

சவுதி அரேபியாவில் ஆண்களின் அனுமதியின்றி பெண்கள் வௌிநாடு செல்ல, அரசு அனுமதி அளித்துள்ளது. சவுதி அரேபியாவின் புதிய இளவரசராக முகமது பின் சல்மான் பொறுப்பேற்ற பின்னர், பெண்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளை ஒவ்வொன்றாக தளர்த்தி  வருகிறார். கடந்த ஆண்டு ஜூனில் பெண்கள் கார் ஓட்டுவதற்கும், விளையாட்டு மைதானங்களுக்கு செல்வதற்கும் அனுமதி வழங்கினார்.

எனினும், சவுதி பெண்கள் வெளிநாடு செல்வதற்கு கணவர், தந்தை அல்லது குடும்ப ஆண் உறுப்பினர்களின் அனுமதி பெற வேண்டும் என்பது அரசு விதியாகும். இது பிடிக்காத பல பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று, அடைக்கலம் கோரினர். அடைக்கலம் கோரினார். இது, சவுதி அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், சவுதி அரசு  நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், ‘சவுதியை சேர்ந்த 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்், கணவர் அல்லது தந்தையின் அனுமதியின்றி வெளிநாடு செல்லலாம். பெண்கள் தனியாக விண்ணப்பித்தால் பாஸ்போர்ட் வழங்கப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அந்நாட்டு பெண்கள் வரவேற்றுள்ளனர்.

அமெரிக்கா – ரஷ்யா இடையே மீண்டும் பனிப்போர் துவங்கியது;32 ஆண்டு ஏவுகணை ஒப்பந்தம் முறிவு

அமெரிக்காவும்-ரஷ்யாவும் கடந்த 1987ம் ஆண்டு செய்து கொண்ட ‘நடுத்தர ரக அணுசக்தி ஏவுகணை ஒப்பந்தத்தை (ஐஎன்எப்) நேற்று முறித்துக் கொண்டன. அமெரிக்கா – சோவியத் யூனியன் இடையே நிலவி வந்த பனிப்போரால், உலகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இருநாடுகளும் போட்டிப் போட்டு அணு ஆயுதங்களை தயாரித்தன. இது, உலகளவில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அமெரிக்கா – சோவியத் யூனியன் இடையே கடந்த 1987ம் ஆண்டு, ‘நடுத்தர ரக அணு ஏவுகணை தடை ஒப்பந்தம் (ஐஎன்எப்)’ ஏற்பட்டது. இதன்படி, 500 கி.மீ முதல் 5,500 கி.மீ தூரம் வரை செல்லும் அணு ஏவுகணைகளின் பயன்பாட்டை குறைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் அப்ேபாதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனும், சோவியத் தலைவராக இருந்த மிக்கேல் கார்பசேவும் கையெழுத்திட்டனர். உலக ஆயுத கட்டுப்பாட்டு நடவடிக்கையில் இந்த ஒப்பந்தம் ஒரு மைல் கல்லாக கருதப்பட்டது.

ஆனால், இந்த ஒப்பந்த விதிமுறைகளை மீறி  ‘9எம்729’ என்ற புதிய ரக  ஏவுகணைகளை ரஷ்யா தயாரிப்பதாக அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாகவே குற்றம்சாட்டி வந்தது. இந்த ஏவுகணைகள் 1,500 கி.மீ தூரம் பாய்ந்து தாக்கும் திறன் வாய்ந்தவை என நேட்டோ அமைப்பு கூறியது. ஆனால், இது 480 கி.மீ தூரம் வரைதான் செல்லும் என ரஷ்யா கூறி வந்தது. இந்நிலையில், அணு ஏவுகணை ஒப்பந்தத்தை இனிமேல் தொடர்வதில் அர்த்தம் இல்லை என முடிவு செய்த அமெரிக்கா, இதிலிருந்து வெளியேறும் நடவடிக்கையை 6 மாதங்களுக்கு முன்பே தொடங்கியது. அதன்படி, இந்த ஒப்பந்தத்தை அமெரிக்காவும், ரஷ்யாவும் நேற்று முறித்துக் கொண்டன. இந்த ஒப்பந்தம் இறந்து விட்டதாக ரஷ்யா நேற்று அறிவித்தது.

இந்த ஒப்பந்த முறிவுக்கு ரஷ்யாதான் காரணம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ குற்றம்சாட்டினார். இந்த ஒப்பந்த முறிவு இரு நாடுகள் இடையே மீண்டும் ஆயுத போட்டிக்கு வழிவகுக்கும் என்றும், பனிப்போர் மீண்டும் தொடங்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டுவர 7 நாட்கள் போதும்: டிரம்ப்

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத இயக்கத்திற்கும்  பாதுகாப்புப்படைக்கும் இடையே நீண்ட காலமாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் அரசை எதிர்த்து போட்டி அரசு நடத்தும் தலிபான் இயக்கம்இ நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

பயங்கரவாதிகளை ஒடுக்கும் நோக்கில் உள்நாட்டு பாதுகாப்பு படையினரும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படையினரும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த சண்டையில் பொதுமக்கள் உட்பட பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில்இ ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் போரை நான் நினைத்தால் 7 நாட்களில் முடிவுக்கு கொண்டுவந்து விடுவேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பின்போது டிரம்ப் கூறியதாவது:-

நான் நினைத்தால் ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் தலிபான் பயங்கரவா திகளுக்கு எதிரான போரை 7 நாட்களில் முடிவுக்கு கொண்டுவந்துவிடுவேன். ஒருவேளை நான் அவ்வாறு செய்தால் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழப்பார்கள். அதில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்களாகவே இருப்பார்கள். ஆனால் நான் பொதுமக்கள் உயிரிழப்பதை விரும்பவில்லை.

மேலும்  தலிபான் அமைப்புகளுடன் பல கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதில் நல்ல முன்னேற்றமும் நிலவுகிறது. பேச்சுவார்த்தையின் மூலமே பயங்கரவாதத்தினை ஒழிக்கமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.

 

ஐரோப்பிய ஒன்றிய குழு சிறிலங்கா வருகிறது

ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தின் இரண்டு பிரதிநிதிகள் மற்றும் தேர்தல்இ சட்ட மற்றும் பாதுகாப்பு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த மூன்று சுயாதீன வல்லுநர்கள் அடங்கிய குழு ஆய்வு பணியை மேற்-கொள்வதற்காக எதிர்வரும் 5ஆம் திகதி இலங்கை வரவுள்ளது. இந்தக் குழு 5ஆம் திகதி முதல் 13ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்குமென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல்களுக்கான ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணி பயனுள்ளதாகவும் சாத்தியமானதாகவும் இருக்குமா என்பதை மதிப்பிடுவதற்காகவும் உண்மை தகவல்களை சேகரிப்பதே இந்த ஆய்வுத் திட்டத்தின் நோக்கமென தெரிவிக்கப்படுகிறது.

போரை முடித்து வைத்த எனது ஆயுதங்கள்

நாம் மூன்றில் ஒரு பங்கு நிறைவு செய்திருந்த யுத்தத்தையே மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் போரை முடித்து வைத்தது. அதற்கான அனைத்து ஆயுதங்களும் தன்னுடைய அரசாங்கமே கொண்டு வந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித் துள்ளார்.

களனிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இவ்வாறு கூறினார்.“நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்த நிலையிலேயே தற்போதைய அரசாங்கத்திடம் ஒப்படைத்து ள்ளது. 2005 ஆம் ஆண்டு நான் நாட்டை ஒப்படைக்கும் போது நாட்டின் பொருளாதார நிலை சிறந்த மட்டத்தை அடைந்தி ருந்தது. தற்போதைய அரசாங்கமும் தவறுகளைச் செய்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

 

இந்த வருட முடிவுக்குள் மீண்டும் தீவிரவாதத் தாக்குதல் இடம்பெறலாம் – ஐ.நா

தற்போது அமைதியாக உள்ள தீவிரவாதிகள் இந்த வருட முடிவுக்குள் மீண்டும் பாரிய தாக்குதலை உலகில் உள்ள நாடுகளில் நடத்தும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் ஐ.நா பாதுகாப்புச்சபை மேலும் தெரியவருவதாவது:

உலக அமைதிக்கு முஸ்லீம் தீவிரவாதம் மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. சிரியா மற்றும் ஈராக் பகுதிகளில் போரிட்டுவந்த 30,000 இற்கு மேற்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்போதும் இயங்குநிலையில் உள்ளனர்.

அவர்களில் பலர் அல்கைடாவில் இணைந்துள்ளனர், சிலர் வேறு அமைப்புக்களில் இணைந்துள்ளதுடன், சிலர் தலைவர்களாகவும் உருவாகலாம்.

இந்த அறிக்கை ஐ.நாவில் அங்கம் வகிக்கும் நாடுகளின் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

2015 மற்றும் 2016 களில் பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய நாடுகளில் இடம்பெற்ற தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

எனவே ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ளது. சரணடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் புனர்வாழ்வு அதிக பயனைத் தரவில்லை. அவர்கள் மீண்டும் தீவிரவாதத்தை நாடுகின்றனர். அதற்கு வறுமை, நம்பிக்கையின்மை, வேலைவாய்ப்பின்மை, புறக்கணிக்கப்படுகின்றோம் என்ற உணர்வு என்பனவும் சில காரணங்கள்.

ஐரோப்பிய நாடுகளில் இருந்து 6,000 இற்கு மேற்பட்டவர்கள் ஐ.எஸ் இல் இணைந்திருந்தனர். அவர்களிள் 2,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர், மிகுதியானவர்கள் தப்பியுள்ளனர்.; 2,000 பேர் ஐரோப்பாவுக்கு திரும்பியுள்ளனர், ஏனையோர் உலகின் பலபகுதிகளுக்குச் செல்லலாம்.

ஐ.எஸ் வசம் தற்போதும் 50 மில்லியன் தொடக்கம் 300 மில்லியன் டொலர்கள் வரையிலான பணம் உள்ளது என அதில் மேலும் தொவிக்கப்பட்டுள்ளது.

தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டுஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்!

தியாகதீபம் லெப். கேணல். திலீபனின் 32 ஆவது நீங்காத நினைவை நெஞ்சில் சுமந்தும், தமிழன அழிப்பிற்கு நீதிகோரியும், “ பிரான்சு பாரிசிலிருந்து – ஜெனீவா ஐ.நா. மனிதவுரிமைகள் செயலகம் நோக்கி ஒட்டுமொத்த தமிழினத்தின் வலிகளை கால்களிலும், நெஞ்சிலும் சுமந்து சர்வதேசத்திடம் நீதிகேட்கும் நடைபயணம்.

28.08.2019 புதன்கிழமை பிரான்சு பாராளுமன்றம் முன்பாக ஆரம்பமாகி

16.09.2019 திங்கள் ஜெனீவா ( முருகதாசு திடல் ) நீதிக்கான பேரணியன்று நிறைவடையும்.

அன்பான எமது புலம்பெயர் தேசமக்களே! பிரான்சு வாழ் மக்களே !

கண்ணீரிலும், செந்நீரிலும் இன்று குளித்துக் கொண்டிருக்கும் எம் தமிழீழ மண் சிங்களத்தால் அங்குலம் அங்குலமாக கபளீகரம் செய்யப்படுகின்றது. தாயகத்தில் குரல் கொடுக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகளும், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மௌனித்து வாய்கள் கட்டப்பட்ட நிலையில் புலத்தில் எம் உயிலும் மேலான மொழியையும், கலை பண்பாடுகளையும் பாதுகாக்க அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கும் நாம் அந்த மொழியும் பண்பாடும் வாழ, பறிபோய்க்கொண்டிருக்கும் எமது மண்ணையும் பாதுகாக்க வேண்டுமல்லவா ?

இன்று களத்திலும், புலத்திலும் தாயகம் நோக்கி நடைபெறும் அனைத்து சனநாயகவழிப் போராட்டங்களும் ஏதோவொரு வகையில் பறிபோகும் எமது மண்ணை நிறுத்தி வைக்கும்.

புலத்தில் எம்மக்களினால் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான சனநாயக போராட்டம் இன்றைய சர்வதேச அரசியல் சூழ்நிலையில் எமது மண்ணையும், போராட்டத்தை உன்னிப்பாக கவனிக்க வைக்கும் என்பதை நம்புவோம்.

இவ்வாறு பல்வேறு எமது நியாமான கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐ.நா.வின் மனிதவுரிமைகளின் 42 ஆவது கூட்டத்தொடரின் போது நடைபெறவிருக்கும் இவ் நடைபயணப்போராட்டத்தில் இளையவர்கள் முதற்கொண்டு பெரியவர்கள் இணைந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

“எனது தாயகம் அணலிடை வாழ நாம் மட்டும் நலம் காண்பதேது ! உணவு உறக்கங்கள் ஏது!

உடல்கள் சாயலாம் ! சாயலாம் ! உயிர்கள் சாயலாம் ! சாயலாம் ! உலகில் அறம் சாயுமா ? கடல்கள், புயல்கள், ஓயலாம், ஓயலாம் தமிழர் படை நாம் எமது நடைபயணம் ஓயுமா ? ஓயாது !

நடைபயணத்தில் தம்மை இணைத்து பங்களிக்க விரும்புவோர்.

0033 75 80 87 084 – 01 43 15 04 21 தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு அலுவலகத்துடன்

பி பகல் 14 மணிமுதல் 20.00 மணிவரை தொடர்பு கொண்டு உங்கள் விபரத்தைத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

விடுதலைப் புலிகள் தங்கள் சொந்த மக்களுக்களின் விடுதலைக்காக தங்கள் முழு வாழ்வையும் உவந்தளித்தவர்கள் – மெலனி திசநாயக்கா

விடுதலைப் புலிகளின் தியாகங்களும் அற்பணிப்புகளும் வார்த்தைகளுக்கு அப்பாலானவை. அவர்கள் தங்கள் சொந்த மக்களுக்களின் விடுதலைக்காக தங்கள் முழு வாழ்வையும் உவந்தளித்தவர்கள் எனவும் சட்டத்தரணி மெலனி திசநாயக்கா தெரிவித்துள்ளார். . சட்டத்தரணி மெலனி திசநாயக்கா தெரிவித்துள்ளார்.

தான் ஒரு சிங்களக்குடிமகளாக இலங்கையரசு எங்களிற்கு அளித்த பொய்யான கருத்துருவாக்கங்களால் விடுதலைப்புலி அங்கத்துவர்களை கொடுமையான பயங்கரவாதிகள் என்றே நம்புவது வழமை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஏன் விடுதலைப்புலிகள் அவர்களது இறுதி முயற்சியாக ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் ? ஏன் தமிழ் இளைஞர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ளவும் அவர்களது சொந்த உரிமைக்காக யுத்தம் செய்வதையும் தேர்ந்தெடுத்தார்கள்?

நேர்த்தியான ஒழுக்கக் கட்டுப்பாட்டைப் பேணியவர்கள் விடுதலைப்புலிகள். இது போன்ற நல்ல கட்டுக்கோப்பான இராணுவத்தினையோ அல்லது அமைப்பினையோ பற்றி நான் ஒருபோதும் பார்த்தோ அல்லது கேட்டோ அறிந்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனப்பிரச்சனை விவகாரத்துக்கு ஒரு போரில்லாத முடிவைப் பெறுவதற்கு உண்மையான நம்பிக்கையுடன் சமாதானப் பேச்சுக்களில் விடுதலைப்புலிகள் நுழைந்தபோது , இலங்கையரசாங்கம் குறிப்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமாதானப் பேச்சுக்களை விடுதலைப்புலிகளுக்கு வைக்கப்படும் ஒரு பொறியாக வடிவமைத்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

விடுதலைப்புலிகளது பலத்தையும் விடுதலைப்புலி வீரர்களது மனோபலத்தையும் சிதைப்பதற்கு மிகவும் வஞ்சகத்தனமும் தந்திரமும் கொண்ட பொறியாக அது வடிவமைக்கப்பட்டதாகவும்,ஆரம்பத்தில் சமாதானம் சீராகச் சென்றுகொண்டிருந்தாலும் சிறிலங்கா அரசின் கோழைத்தனமான யுத்தநிறுத்த மீறல்களால் படிப்படியாக சமாதானம் சீர்குலையத்தொடங்கியதால் , ஆச்சீர்குலைவுகளே மீண்டும் ஒரு யுத்தத்திற்கு வழிகோலியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையரசாங்கம் ஒரு லட்சத்து நாற்பதினாயிரத்துக்கும் அதிகமான தமிழ்மக்களைக் கொன்று ஒரு இரத்தம் தோய்ந்த முடிவையே போரின் மூலம் வழங்கியதாகவும், வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த பல விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஈவிரக்கமற்று கொல்லப்பட்டார்கள். ஏனையவர்கள் சித்திரவதைகளுக்கும் பாலியல் வல்லுறவகளுக்கும் ஆளானார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்மக்கள் அவர்களது சொந்த உரிமைக்காகவும் சொந்த சுதந்திரத்துக்காகவும் போரிட்டார்கள் என்றும், விடுதலைப்புலிகளே தமிழ் மக்களது ஒரேயொரு பிரதிநிதிகளாகவும் இருந்தார்களே தவிர பயங்கரவாதிகளாக அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்மக்கள் சிங்கள மக்களைப் போலவே சுதந்திரத்துடன் கூடிய அமைதியான வாழ்க்கையை வாழ்வதற்கு நிறையவே உரிமை பெற்றிருக்கிறார்கள் எனவும், அவர்கள் எல்லா வழிகளிலும் சிங்களமக்களுக்கு சமமானவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் எந்தவொரு உண்மையான பௌத்தனோ அல்லது , நல்ல சிங்களக்குடிமகனோ இன அழிப்பைச் செய்த கடந்தகால தற்கால இலங்கை அரசுடன் ஒருபோதும் ஒத்துப்போகப் போவதில்லை எனவும் சட்டத்தரணி மெலனி திசநாயக்கா தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் முரளி படத்தில் இருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படத் திலிருந்து பிரபல நடிகர் விஜய் சேதுபதி விலகுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட முரளிதரன் இலங்கை அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் ஆவார் 1992 ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 133 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று உள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் பெண்ணோடு விக்கெட்டுகளை வீழ்த்திய முரளி சாதனை படைத்திருந்தார் இதனை கொண்டாடும் விதமாக முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் இன்னொரு என்ற பெயரில் திரைப்படமாக படுகிறது. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் முத்தையா முரளிதரன் தமிழராக இருந்தாலும் இலங்கை அரசு இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர் என்றும் சிங்கள கிராமங்களுக்கு உதவி செய்துவரும் அவர் தமிழர்களை ஒருபோதும் கண்டுகொள்வதில்லை என்றும் முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்றும் ஈழத்தை சேர்ந்தவர்களும் தமிழகத்தின் சில அமைப்புகளும் குரல் எழுப்பினர்

இந்த நிலையில் விஜய் சேதுபதிக்கு நெருக்கமான சிலர், இலங்கை தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் தமிழ் திரைப்படங்களுக்கு மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது, அவர்களின் எதிர்ப்புக்கு ஆளாவது உங்களுடைய எதிர்காலத்துக்கு நல்லதல்ல என ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை குறித்த திரைப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக முடிவு செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

 

மூதூரில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு 13 ஆண்டுகளாகியும் நீதி கிட்டவில்லை – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான நடவடிக்கை அமைப்பு என்ற அரச சார்பற்ற நிறுவன பணியாளர்களுக்கு நீதி கிடைக்கவில்லை, 13 ஆண்டுகள் ஆகியும் குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படவில்லை என அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் காண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் நான்காம் நாள் சிறீலங்கா படையினரே 17 பணியாளர்களையும் படுகொலை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இந்த நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் திருமலை மாவட்டத்தில் உள்ள மூதூரில் பகுதியில் அவர்களின் அலுவலகத்தில் வைத்தே படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

திட்டமிட்ட முறையில் படுகொலைகளை மேற்கொண்டவர்களை 13 ஆண்டுகள் ஆகியும் சிறீலங்கா காவல்துறையினரால் அணுகக்கூட முடியவில்லை என அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கொள்கைப் பணிப்பாளர் ஜேம்ஸ் றோஸ் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கையானது இந்த படுகொலை மட்டுமல்லாது ஏனைய படுகொலைகள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்துவதற்கு அனைத்துலக நீதி உதவிகள் தேவை என்பதை உணர்த்துகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களில் 4 பெண்கள் உட்பட 16 தமிழர்களும் ஒரு முஸ்லீம் இனத்தவரும் அடங்கியிருந்தனர். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் பணிகளை இந்த அரச சார்பற்ற நிறுவனம் மேற்கொண்டிருந்தது.

2015 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மனத்தை சிறீலங்கா அரசு நிறைவேற்றவில்லை என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.