பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் யாரோ ஒருவரின் அரசியலுக்கு பின்னால் நின்று அந்த அரசியலை பாதுகாப்பதற்காக தனது சமய நிறுவனத்தின் அடையாளத்தை பயன்படுத்துகின்றார் என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நாடு சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என்று கூறுபவர்களை மல்கம் ரஞ்சித் திருப்திப்படுத்த முனைகிறார். இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது என்று அவரும் பல தடவை கூறியுள்ளார்.
ரத்தின தேரரின் போராட்டம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சார்பானது என்றால் எமது அரசியல் கைதிகள் பல போராட்டங்களை செய்தனர், உண்ணாவிரதம் இருந்தனர், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இரு ஆண்டுகளாக போராடுகிறார் அவர்களுக்கு மத்தியில் சென்று ஒருநாள் அவர் உட்கார்ந்திருந்திந்தராவென கேள்வி எழுப்பியுள்ளார்.
விளிம்புநிலை மக்களுக்கு உதவி வழங்கும் அமைப்புக்கள் பல தாசாப்தங்களாக இயங்கி வந்திருக்கின்றன. ஆனால் ஐநா 1945இல் ஆரம்பித்த போதே சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் என்ற பெயரில் அமைப்புக்கள் உருவாகின்றன. ஆரம்பத்தில் ஒரு சில அரசசார்பற்ற நிறுவனங்களே இருந்தன. இந்த ஆரம்ப கால அரசசாரபற்ற நிறுவனங்கள் சமூக நலனுக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து இயங்கியதால் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு இந்த ஆரம்பகால நிறுவனங்கள் ஒரு நற்பெயரை தேடிக்கொடுத்தன.
80களில் தான் அரசசார்பற்ற நிறுவனங்களின் தொகை பிரமிப்பை தரும் அளவுக்கு அதிகரித்தன. ‘மக்கள் திறனை கட்டியெழுப்புதல்’, ‘வறுமையை ஒழித்தல்’, ‘விளிம்பு நிலை மக்களுக்கு குரல் கொடுத்தல்’ போன்ற வாசகங்களுடன் இவற்றின் வளர்ச்சி இவை மக்களுக்கானவை என்ற செய்தியையே கொடுக்கின்றன. இதை மேலும் ஆராய்ந்து தெளிவோம்.
80களில் நவதாராளவாதம் கோலோச்ச ஆரம்பித்த பின்னர் அரசுகள் பொதுச்சேவைகள் வழங்குவதை குறைத்துக்கொள்ள வற்புறுத்தப்பட்டன. இதனால் மக்களுக்கு ஏற்பட்ட அல்லல்களை மட்டுப்படுத்த அரசசார்பற்ற நிறுவனங்கள் களான்கள் போல உலகெங்கும் முளைக்க ஆரம்பித்தன.
80களில் அரசசார்பற்ற நிறுவனங்களின் தொகை 1400 வீதம் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. வளரும் நாடுகளுக்கு அதன் அரசுகளுக்கு ஊடாக முன்னர் கொடுக்கப்பட்ட உதவித்தொகைகளின் பெரும் பங்கு இப்போது அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு ஊடாகவே கொடுக்கப்படுகின்றன. இன்று ஒரு குறிப்பிட்ட பகுதியில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களின் எண்ணிக்கையை அப்பகுதியில் நவதாராளவாதம் மக்களுக்கு ஏற்படுத்தும் அல்லகளின் அளவுகோலாகவே பார்க்க முடியும்.
அரசுகளும், தனியார் பலதேசிய வர்த்தக நிறுவனங்களும் இன்று உலகளாவிய ரீதியில் இருபெரும் அதிகார சக்திகளாக விளங்கும் அதே நேரத்தில் அரசசாரபற்ற நிறுவனங்கள் மூன்றாவது பெரும் சக்தியாக விளங்குகிறது. இந்த மூன்றாவது சக்தி மற்றைய இரண்டு சக்திகளுக்கும் சவாலாக உண்மையில் அடிமட்ட மக்களுக்காகத்தான் இயங்குகின்றனவா? அல்லது மற்றைய இரண்டு சக்திகளுடன் கூட்டாக இயங்குகின்றனவா?
அரசசார்பற்ற நிறுவனங்கள் எங்கிருந்து தம் நிதியை பெற்றுக்கொள்கின்றன என்பதை சிந்தித்தால் இன்னும் சில தெளிவுகள் ஏற்படும்.
இவர்களுக்கு கிடைக்கும் பெரும்பாலான நிதி அரசுகளிடமிருந்தும், அரசு சார்ந்த அமைப்புக்களிடமிருந்தும் தனியார் பலதேசிய வர்த்தக நிறுவனங்களிடமிருந்து பெறப்படுகின்றன. இதனால் இவர்கள்நிதி கொடுப்பவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு மறைமுகமாகவேனும் நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என்பது தெளிவல்லவா?
இவர்கள் ஒருபோதும் நிதி கொடுப்பவர்களுக்கு எதிராக போராட முன்வர மாட்டார்கள். நிதி கொடுப்பவர்கள் போடும் வரம்புகளுக்குள்ளேயே நின்று பெறக்கூடியவற்றையே ஆதரிப்பார்கள்.
அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களாக அரசில் மற்றும் தனியார் பல்தேசிய வர்த்தக நிறுவனங்களில் பதவி வகித்தவர்கள் அமர்த்தப்படுகிறார்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டும். மனித உரிமை காப்பகம் என்ற அமைப்பின் ஐக்கிய-அமெரிக்க சார்பையும் இதன் முக்கிய பதவிகளில் ஐ-அமெரிக்க அரசின் வெளிவிவகார பிரிவில் பணிசெய்தவர்களை அமர்த்தியதையும் கண்டித்து உலகின் பல பெரிய மனிதர்கள் 2014இல் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தார்கள்.
அரசசார்பற்ற நிறுவனங்கள் சிறுதிட்டங்களையே முன்னிலைப்படுத்தும். உறுதியான கொள்கைகள் கொண்ட அமைப்புக்களை ஆதரிக்காது. இத்தகைய அமைப்புக்களுக்கு போட்டியாகவே அவை இயங்கும்.
இதனால் மக்களின் பிரச்சனைகளின் மூலத்தையும் தீர்வுகளையும் ஆராய்வதற்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் தடையாகவே இருக்கின்றன. தனிமனித முயற்சியிலேயே தீர்வுகள் இருப்பதாக காட்டி மக்களை மடக்கி வைத்திருக்கின்றன. இவை சிறு தொகுதி மக்களுக்கே உதவி தருவதால் மக்களை பிளவுபடுத்துவும் வழிசெய்கின்றன.
நவதாராளவாதத்தின் தாக்கத்திற்கும் அரசு பொதுச்வேவைகளை மட்டுப்படுத்துவதற்கும் எதிராக மக்கள் இயற்கையாகவே போராடியிருப்பார்கள். இடதுசாரிகள் இதை முன்னின்று நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு சமூகத்தில் போராட்டத்தை நடத்தக்கூடிய இடதுசாரிகளை இந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் தமக்கு பணிபுரிபவர்களாக மாற்றி அவர்களின் சக்திகளையும் திசைதிருப்பி விடுகின்றன. அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆரம்பத்தில் தமக்கு தேடிக்கொண்ட நற்பெயரும் போராட வேண்டிய இடதுசாரி மக்களை இவ்வாறு திசைதிருப்ப உதவுகிறது. போராட வேண்டிய மக்கள் அரசசார்பற்ற நிறுவனங்களால் திசைதிருப்பப்படுவது ஒரு பெரும்பிரச்சனையாகவே உள்ளது.
இந்நிறுவனங்கள் போராட வேண்டியவர்களில் சிலரை தம் நிறுவனத்தில் உள்வாங்கி போராட வேண்டிய மக்களை பிரிக்கிறார்கள். இவ்வாறு உள்வாங்கப்பட்டவர்கள் தமது நோக்கத்தை குறுக்கி மக்கள் எதிர்நோக்கும் பெரிய பிரச்சனைகளை தவிர்க்க வழிசெய்கிறார்கள். இதனால் இன்று உண்மையான முற்போக்கு கொள்கைகளை கொண்ட மக்கள் அமைப்புக்கள் அரசசார்பற்ற நிறுவனங்களிடமிருந்து உதவி பெறுவதையே தவிர்த்தே இயங்குகின்றன.
மக்களுக்கான நீதியை ஒரு ‘மனித உரிமைகள் தொழிலாக’ மாற்றியதில் இந்த அரசசாரபற்ற நிறுவனங்களுக்கு ஒரு பெரும் பங்குண்டு. மக்களுக்கான நீதியை மனித உரிமை என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்க அரசசார்பற்ற நிறுவனங்கள் உதவுகின்றன.
அநீதியின் உண்மை முகத்தை மறைத்து அதிகாரவர்க்கம் செய்யும் கொடூரங்களையும் போராடும் மக்களின் செய்கைகளையும் ஒரே தராசில் போட்டு இருவரிலும் குறைகண்டு பேசும் ஒரு கலாசாரத்தை உருவாக்க அரசசார்பற்ற நிறுவனங்கள் வழி செய்திருக்கின்றன.
விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்ட காலத்தில் இதை ஈழத்தமிழர்கள் அப்பட்டமாக அனுபவித்தார்கள். ‘மனித உரிமைகள் என்னும் புதிர்’ என்ற நூலில் ரீபிள் என்ற கனேடிய பேராசிரியர் இதை மேலும் விளக்குகிறார். ஐநாவால் மனித உரிமைகள் பிரகடனப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து நவதாராளவாதம் அதற்கு எதிராகவே செயற்படுகிறது என்பதை இவர் விபரிக்கிறார்.
2015இல் யுஎஸ்எயிட் நிறுவனத்தின் தலைவராக முன்னாள் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவைரான கெயில் சிமித் என்பவரை சனாதிபதி ஒபாமா நியமித்தார். ஐ-அமெரிக்காவின் இராணுவ தேவையையும் யுஎஸ்எயிட் நிறுவனத்தையும் இணைக்கும் முயற்சியின் அடுத்த ஒரு படியாக பலர் இந்நியமனத்தை விமர்சித்தார்கள். கெயில் சிமித்; ஆபிரிக்காவின் மோசமான ஆட்சியாளர்களுடன் நெருக்கமானவர் என்பதும் இவ்விமர்சனங்களுக்கு காரணமாக இருந்தது. நாடுகளுக்கு உதவிகள் வழங்குவதன் மூலம் அந்நாட்டில் ஐ-அமெரிக்க கொள்கைகளுக்கு வழிசெய்யலாம் என்பது இவரின் நம்பிக்கையாக இருந்தது. யுஎஸ்எயிட் நிறுவனத்தின் ஊடாக ஐ-அமெரிக்கா தனது இராணுவ தலையீடுகளையும் கிளர்ச்சி-எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுப்பது அண்மைக்காலத்தில் விரிவடைந்து வருகிறது.
அரசசார்பற்ற நிறுவனங்கள் யாவுமே நன்மை செய்யவில்லை என்றும் சொல்லிவிட முடியாது. அவசரகால நிலைமகளில் அரசசார்பற்ற நிறுவனங்களே முதலில் உதவிக்கு வருகின்ற. இப்படியான அவசரகால நிலைமைகளிலும் கூட பல அரசசார்பற்ற அமைப்புக்கள் ஒரே வேலையை செய்வதால் நிதியை விரயமாக்குகிறார்கள் போன்ற குற்றச்சாட்டுகள் பின்னர் எழும்பும். இருந்தாலும் ஒரு உதவியும் இல்லாமல் இருப்பதைவிடவும் இது சிறந்ததே. அரசசார்பற்ற நிறுவனங்கள் ஒருமுகம் கொண்ட பிரச்சாரங்களில் நிச்சயமாக வெற்றிகள் ஈட்டியிருக்கின்றன. உதாரணமாக கொத்தடிமை கலாசாரத்தை ஒழித்தல்;, நிலகண்ணிவெடி தடை போன்றவை இவை கண்ட வெற்றிகள்.
அரசசார்பற்ற நிறுவனங்கள் அரசியல் சார்பற்று இயங்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர்கள் இயங்கும் சூழல் முற்றுமுழுதாக ஒரு அரசியல் சூழலாகவே இருப்பதால் அவர்கள் அரசியலற்று இயங்குவது சாத்தியமில்லை. ஆகையால் மக்களை ஏமாற்றாமல் தம் அரசியலையும் அவர்கள் தெளிவாகவே விளக்கினால் என்ன?
ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்ட காலத்தில் அரசசார்பற்ற நிறுவனங்களின் நடத்தைகள் பலவகையில் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தன.
இவற்றின் உச்சக்கட்டமாக, ஒரு இனவழிப்பு நடக்கப்போகிறது என்று தெரிந்தும் சிங்கள அரசு வெளியேறச் சொன்னவுடன் இந்த அமைப்புக்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு அன்று வெளியேறி சாட்சியமில்லாத ஒரு இனவழிப்புக்கு வழி செய்தன.
இவையெல்லாம் இந்நிறுவனங்கள் யாருடைய நலனை முன்னிறுத்தி இயங்குகின்றன என்பதை தெளிவு செய்கிறதல்லவா?
இன்றும் புலம்பெயர் ஈழத்தமிழர் மத்தியில் இயங்கும் சில அரசசார்பற்ற அமைப்புக்களின் பின்னணியையும் அவை எமது மனித வளங்களை பிளவுபடுத்துகின்றவா என்பதையும் நாம் ஆராய்ந்து தெளிய வேண்டும். நாம் இவற்றுடன் இணைந்து செயற்பட்டாலும் இவற்றின் பின்னாலுள்ள சக்திகளையும் இவை எமது இலக்கிற்கு எதிரானவையா என்பதையும் ஆராய்ந்து தெளிய வேண்டியது எமது கடமை.
சிங்கள பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழினம் அமைதிவழியில் போராடத் தொடங்கிய காலமுதல் சிறிலங்காவின் கொடிய சிறைவாசல்களில் தமிழ்மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக அலைந்த நாட்கள் இன்று கண்முன்னே விரிகின்றன.
ஒவ்வரு இராணுவமுகாம் வாசல்களிலும் பூசா,வெலிக்கடை ,மகசீன்,நாலாம் மாடி, அனுராதபுரம்,போன்ற கொடிய சித்திரவதைச் சிறைக்கூடங்களில் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் அடைக்கப்பட்டு குற்றுயிராய் கிடந்த நாட்கள் அவர்களைப்பார்க்க வடக்கு,கிழக்கு,மலையகம் போன்ற தொலைதூர இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஏழைத்தாய்மார்கள்,மனைவியர்,குழந்தைகள் என தமிழினம் பரிதவித்து பயணித்த நாட்கள் இனக்கொலை வரலாற்றில் எழுதப்படவேண்டிய ஒரு அத்தியாயமே.
இன்று இந்த நிலையை முஸ்லீம் சமூகம் சில மாதங்களாக எதிர்நோக்கி நிற்கிறது. அரைநூற்றாண்டுகளுக்கு மேலாக இந்த வலிசுமந்த இனம் இன்ற வகையில் அவர்களின் வலியை எம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. பதவிக்காக சிங்கள பேரினவாதத்திற்கு முண்டுகொடுக்க இனியும் முஸ்லீம் அரசியல்வாதிகளோ அல்லது தமிழ் அரசியல் வாதிகளோ முயல்வார்களானால் அது இரு இனங்களையும் அழிவுப்பாதைக்கு கொண்டுசெல்லும் ஒரு நடவடிக்கையாகவே இருக்கும்.இதனைப்புரிந்துகொண்டு இரு இனங்களும் செயலாற்றவேண்டும்.
பழைய செம்மலை நீராவியடி பழைய செம்மலை பிள்ளையார் ஆலயத்தில் அடாத்தாக அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமஹா விகாரைக்கு அனுராதபுரம் பகுதியிலிருந்து மூன்று பஸ்களிலிருந்து சிங்கள மக்கள் அழைத்துவரப்பட்டட்டுள்ளனர்.
பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் மற்றும் மூன்று பஸ்களில் அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள் இன்றையதினம் பொசன் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய உரிமைகள் இயக்கத்தின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தலைமையில் 5 க்கும் மேற்பட்ட பிக்குகள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் இந்த வழிபாடுகளில் கலந்துகொண்டுள்ளனர்.
அழைத்துவரப்பட்ட சிங்கள மக்கள் மத்தியில் பௌத்த பிக்குகளால் உரையாற்றப்பட்டது . அதாவது இந்த பகுதியில் பிள்ளையார் ஆலய இருந்ததாக தமிழ் மக்கள் பொய்களை கூறிவருவதாகவும் இங்கே குருகந்த ரஜமஹா விகாரை என்ற விகாரையே பல ஆண்டுகளாக இருந்ததாகவும் ஆனால் இப்போது அந்த விகாரையில் வழிபட முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாவும் அழைத்து வரப்பட்ட சிங்கள மக்கள் மத்தியில் தேரர்களால் உரையாற்றப்பட்டது .
இந்த சர்சைக்குரிய ஆலயப்பகுதியில் இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கமின்றி வழிபாடுகளை மேற்கொள்ளமுடியும் என முல்லைத்தீவு மாவடட நீதிமன்று கடந்த மே மாதம் 6 ஆம் திகதி தீர்ப்பு வழங்கபட்டுள்ள நிலையில் இரண்டாவது தடவையாகவும் பௌத்த பிக்குகளால் சிங்கள மக்கள் அழைத்து வரப்பட்டு இனவாத கருத்துக்கள் பௌத்த பிக்குகளால் போதிக்கப்பட்டுள்ளது .
முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் வெறும் நாடகம் என்பது தற்போது நாட்டுமக்களுக்கு தெட்டத்தெளிவாக புலனாகியுள்ளது. ரிஷாத் பதியுதீனை பாதுகாக்கும் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தந்திரமே இது. ரிஷாத் பதியுதீன் பாதுகாக்கப்பட்டதன் பின்னர் இது நிறைவுக்கு வந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தமது பதவிகளை பொறுப்பேற்கவுள்ளதாக வெளியாகியுள்ள விடயம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் பல முறை அழுத்தம் கொடுத்தோம். இருப்பினும் அதை அரசாங்கம் உதாசீனம் செய்து விட்டது. பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையதாக பல குற்றங்கள் சுமக்கப்பட்டுள்ள ரிஷாத் பதியுதீன் அமைச்சுப்பதவியை வகிப்பது நாகரீகமற்றது. இதை அவரும் உணரவில்லை இந்த அரசாங்கமும் உணரவில்லை. இதன் தாக்கத்தை உணர்ந்த அத்துரலியே ரத்ன தேரர் உண்ணாவிரதம் இருக்கும் அளவுக்கு நிலைமை சென்றது.
தேரருக்கு ஆதரவாக பலர் குரல் கொடுக்க ஆரம்பித்ததை அடுத்து நிலைமையை சமாளிப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அரங்கேற்றப்பட்ட நாடகமே முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல். தற்போது அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் நோக்கம் நிறைவேறி ரிஷாத் பதியுதீன் பாதுகாக்கப்பட்டுள்ளார். ஆகவே பதவி விலகிய அமைச்சர்கள் மீண்டும் தமது பதவிகளை பொறுப்பேற்க போகின்றனர். இது நாட்டு மக்களை முட்டாள்களாக்கும் ஒரு நாடகமாகும். தற்போது மாநாயக்க தேரர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து தமது பதவிகளை மீண்டும் பொறுப்பேற்க போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
இவர்கள் தமது பதவிகளை விட்டு விலகும் போது மாநாயக்க தேரர்களை கேட்டா விலகினார்கள்?. இவை அனைத்தும் நாடகமே.
அவ்வாறு முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தமது பதவிகளை பொறுப்பேற்றாலும் ரிஷாத் பதியுதீன் அமைச்சுப்பதவியை ஏற்கக்கூடாது அதற்கு அவர் தகுதியற்றவர். அவர் அமைச்சுப்பதவியை ஏற்பது நாகரீகமற்றது. இதற்கு எதிராக நாம் தொடர்ந்து குரல் கொடுப்போம்.
தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புக்கு கோத்தாபய ராஜபக்ஷ உதவியதாக முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி பாராளுமன்ற தெரிவுக்குழு முன் சாட்சியமளித்துள்ளார். இது நகைப்புக்குறியதாகும் இவர்கள் எப்போதும் ஐக்கிய தேசிய கட்சிக்கு வக்காலத்து வாங்கும் வகையிலேயே தமது கருத்துக்களை தெரிவிப்பார்கள். இவர்கள்தான் கடந்த காலத்தில் கோத்தபாய ராஜபக்ஷ முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதாக தெரிவித்தனர். ஆனால் தற்போது முஸ்லிம் அமைப்புகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
இதில் எது உண்மை என்பது தான் புரியவில்லை. இவர்கள் கூறும் இருவிடயங்களும் உண்மையாக இருப்பதற்கு சாத்தியமில்லை காரணம் இரண்டும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டது. எனவே இவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டில் எது உண்மை எது பொய் என்பதை முதலில் தெரிவிக்க வேண்டும் என்றார்.
சிறீலங்கா, மாலைதீவு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான கூட்டு முன்னனியை உருவாக்கும் இந்தியாவின் திட்டத்திற்கு அமைவாக மாலைதீவின் அரச அதிகாரிகளை உள்ளடக்கிய 105 பேர் கொண்ட குழு ஒன்று நேற்று முன்தினம் (14) சிறீலங்காவை வந்தடைந்துள்ளது.
மூன்று நாள் பயணமாக வந்துள்ள இந்தக் குழு மாலைதீவின் துணை அரச தலைவர் பைசல் நசீம் தலைமையில் நாடாளுமன்ற பேச்சாளர் மொகமட் நஸ்டீன் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கியதாகும்.
இந்தியா, சிறீலங்கா மாலைதீவு ஆகிய நாடுகள் இணைந்து புலனாய்வுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கிய பின்னர் இந்த குழுவின் பயணமும், இந்தியப் பிரதமரின் பயணமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஆதிக்கத்தை கையகப்படுத்த இந்திய முனைவதைக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியை மையமாக வைத்து, திரைப்படம் ஒன்றைத் தயாரிக்க சென்னையைச் சேர்ந்த இயற்பியல் பட்டதாரி ச.இளங்கோ என்பவர் முடிவு செய்துள்ளார். இவருக்கு உதவியாக இவரின் நண்பர்களான லோகேஸ், இளைய பெருமாள் மற்றும் பாராஜி பாஸ்கரன் என்பவர்கள் இவருடன் இணைந்துள்ளனர். கடந்த நான்கு வருடங்களாக இந்த திரைப்படத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டு திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இசையமைப்பாளர் ஹிப்பொப் தமிழாவின் தயாரிப்பில் “தமிழி“ என்ற பெயரில் வெளிவரவுள்ள இந்த ஆவணத் திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கீழடியில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தகவல்கள் பற்றிய ஆர்வத்தினால் இப்படத்தைத் தயாரிப்பதாக இளங்கோ தெரிவித்துள்ளார். தமிழ் மொழியின் தொன்மை, ஆதியில் எழுதப்பட்ட தமிழ் வடிவம் போன்றவை பற்றி மக்கள் அறிந்திருக்க வேண்டும் என எண்ணியதாலேயே அதை ஆவணப்படமாக்க முடிவு செய்ததாகவும், இவை பற்றி அறிவதற்கு நேரில் செல்லவோ, தெரிந்து கொள்ளவோ மக்களால் முடியாததால், இதை தான் ஆவணப் படத்தின் ஊடாக தெரிவிக்க இருப்பதாக இளங்கோ மேலும் தெரிவித்தார்.
இந்தப் படத்தை தயாரிப்பதற்காக சுமார் 18,000 கிலோமீற்றர் பயணம் செய்திருப்பதாகவும், ஆந்திரா, கர்நாடகா, குஜராத் ஆகிய பிற மாநிலங்களில் உள்ள கல்வெட்டுக்களில் பிராமி எழுத்துக்களைக் கண்டு ஆச்சரியப்பட்டதாகவும், மலைக் கிராமங்களில் கல்வெட்டுக்களை தேடி அலைந்ததாகவும் அவர் கூறுகின்றார்.
தற்போது எழுதப்படும் எழுத்துக்கள் போல் முந்தைய எழுத்துக்கள் இருக்கவில்லை என்றும், எழுத்துக்கள் குறியீடுகளும், வேறுபட்டவையாகவுமே இருந்தன என்றும், இந்த ஆவணப் படத்தில் இவை பற்றி சொல்லப்பட்டுள்ளது என்றும் இளங்கோ தெரிவிக்கின்றார்.
தமிழ் மொழியின் எழுத்துக்களை சமணர்கள் உருவாக்கினார்கள் என்ற கருத்தைப் பலரும் சொல்கிறார்கள். ஆனால் தமிழக பகுதிகளில் உருவான எழுத்து வடிவத்தை தான் சமணர்கள், பௌத்தர்கள் மற்றும் வணிகர்கள் வட இந்தியா உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு சென்றார்கள் என்பதை உணர்த்த அறிவியல் ரீதியான குறிப்புகள் உள்ளன. தேனி மாவட்டத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டு சுமார் கி.மு.500 ஆம் ஆண்டைச் சேர்ந்தது என தெரியவருகின்றது. இந்தியாவில் உள்ள பழமையான அசோகன் பிராமி கல்வெட்டு கி.மு 300 ஆண்டுகளைச் சேர்ந்தது.
குஜராத்தில் உள்ள அசோகன் பிராமி கல்வெட்டு, தஞ்சாëர் பெரிய கோயில், விழுப்புரம் திருநாதர் குன்றில் உள்ள கல்வெட்டுக்கள் மதுரை மாங்குளத்தில் கிடைத்தவை. ஆந்திராவில் ஏர்ராகுடி, கர்நாடகாவில் பெல்லாரியில் உள்ள சான்றுகள் என பல கல்வெட்டுகளை “தமிழி“ திரைப்படம் ஆவணப்படுத்தியுள்ளது.
நான்கு ஆண்டுகளாக உருவாக்கிய காட்சிகளை மிக விரைவில் வெளியிடவுள்ளது.
தஜிகிஸ்தான் சென்றுள்ள சிறிலங்கா ஜனாதிபதி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து பேசியுள்ளார்.
தஜிகிஸ்தானில் நடக்கும் ஆசிய கலந்துரையாடல்கள் மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான ஐந்தாவது ஆசிய மாநாட்டில் கலந்து கொள்ள அங்கு சென்ற ஜனாதிபதி ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரி ஆசியாவின் எந்த நாட்டிலும் இனி பயங்கரவாத தாக்குதல் நடக்காத விதத்தில் ஆசிய நாடுகள் இணைந்து செயற்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மேலும் அடுத்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்றும், பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் வல்லமை இலங்கைக்கு உள்ளதெனவும் சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
ஆனால் கடந்த ஏப்பிரல் இடம்பெற்ற தாக்குதலானது சிறீலங்கா படைத்துறையினரினதும், புலனாய்வுக்கட்டமைப்பினதும் தோல்வியாகும் என அனைத்துலக படைத்துறை ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளதும், தாக்குதலின் பின்னர் படைத்துறை மற்றும் புலனாய்வுத்துறை உதவிகளை கேட்டு சிறீலங்கா அரசு உலகநாடுகளுக்கு அழைப்பு விடுத்ததும் நாம் அறிந்தவையே.
பிரான்ஸில் இருக்கும் ஈபிள் கோபுரத்தின் கீழ் இருக்கும் பூங்காவில் கைகள் ஒன்றோடு ஒன்று பற்றிக் கொண்டிருப்பது போன்ற மிகப் பெரிய ஓவியம் ஒன்று இன்று சனிக்கிழமை (15) திறந்து வைக்கப்பட்டது.
சுற்றுச் சூழலுக்கு ஆபத்து விளைவிக்காத இந்த பூச்சு 600 மீற்றர் தூரத்திற்கு வரையப்பட்டுள்ளது. இது ஈபிள் கோபுரத்தில் இருந்து பார்த்தால் முழுவதுமாகத் தெரியும்.
இது பிரான்சை சேர்ந்த சேய்பேவால் என்ற ஓவியரால் உருவாக்கப்பட்டது. இவர் இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பெரிய ஓவியங்களை வரைவதில் வல்லவர்.
அவரின் ஓவியங்கள் பல மலைப் பகுதிகளிலும், உலகில் உள்ள சில பூங்காக்களிலும் உள்ளன. அவை சில நாட்களுக்கே காட்சியளிக்கும். பின்னர் அழிந்து விடும்.
பியாண்ட் வால்ஸ் என்று அழைக்கப்படும் அவரின் இந்த சமீபத்திய ஓவியம், மத்திய தரைக்கடலில் மூழ்கும் ஆபத்தில் இருக்கும் குடியேறிகளை மீட்கும் பணியில் ஈடுபடும் தொண்டு நிறுவனத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக வரையப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஒரு நாளில் மத்திய தரைக் கடலை கடக்க முயன்ற குடியேறிகளில் சராசரியாக ஆறு பேர் உயிரிழந்தனர் என ஐ.நா. தெரிவித்திருந்தது.
இந்த ஓவியம் பாரிஸ் மேயரால் சனிக்கிழமையன்று (இன்று) திறந்து வைக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து 20 நாடுகளில் சேய்பே தனது ஓவியங்களை பார்வைக்கு வைக்கவுள்ளார்.
லண்டன், பெர்லின், நைரேபி, ஆர்ஜன்டீனா போன்ற நாடுகளில் இதே மாதிரி கைகள் ஒன்றோடு ஒன்று பற்றிக் கொண்டிருப்பது போன்ற ஒவியத்தை சேய்பே வரையவுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா விஜயத்தையடுத்து, 160 இந்திய படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இரு நாடுகளுக்கிடையிலான கலாசார பரிமாற்றலின் ஓர் அங்கமாக இடம்பெற்றுள்ள இந்த நிகழ்வில், 160 சிறிலங்கா படைவீரர்களின் குடும்பங்களும், அவர்களது குடும்ப அங்கத்தவர்களும் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.
சிறிலங்காவிற்கான இந்தியத் தூதுவர் மற்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மஹேஸ் சேனநாயக்கவும் இவர்களை வழியனுப்பி வைத்தனர்.
இதனிடையே, சிறீலங்காவுடன் இணைந்து புலனாய்வுக்கட்டமைப்பை உருவாக்கியுள்ள இந்தியா தற்போது தனது படையினரை சிறீலங்காவுக்கு அனுப்பி வருவது மெல்ல மெல்ல ஒரு படைத்துறை ஆக்கிரமிப்பை மேற்கொள்வதற்கான முயற்சி என தெரிவிக்கப்படுகின்றது.