அடுத்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு – சிறிலங்கா ஜனாதிபதி

தஜிகிஸ்தான் சென்றுள்ள சிறிலங்கா ஜனாதிபதி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து பேசியுள்ளார்.

தஜிகிஸ்தானில் நடக்கும் ஆசிய கலந்துரையாடல்கள் மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான ஐந்தாவது ஆசிய மாநாட்டில் கலந்து கொள்ள அங்கு சென்ற ஜனாதிபதி ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரி ஆசியாவின் எந்த நாட்டிலும் இனி பயங்கரவாத தாக்குதல் நடக்காத விதத்தில் ஆசிய நாடுகள் இணைந்து செயற்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும் அடுத்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்றும், பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் வல்லமை இலங்கைக்கு உள்ளதெனவும் சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

ஆனால் கடந்த ஏப்பிரல் இடம்பெற்ற தாக்குதலானது சிறீலங்கா படைத்துறையினரினதும், புலனாய்வுக்கட்டமைப்பினதும் தோல்வியாகும் என அனைத்துலக படைத்துறை ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளதும், தாக்குதலின் பின்னர் படைத்துறை மற்றும் புலனாய்வுத்துறை உதவிகளை கேட்டு சிறீலங்கா அரசு உலகநாடுகளுக்கு அழைப்பு விடுத்ததும் நாம் அறிந்தவையே.