Home Blog Page 2758

ஞானசார துறவி உறுதிமொழி – கல்முனை போராட்டம் முடிவுக்கு வந்தது

கல்முனை பிரதேசசபையை தரமுயர்த்தக்கோரி மேற்கொள்ளப்பட்டுவந்த அகிம்சைப் போராட்டம் பொதுபால சேன கட்சியின் பொதுச் செயலாளர் ஞானசார துறவி வழங்கிய உறுதிமொழியைத் தொடர்ந்து இன்று (22) முடிவுக்கு வந்துள்ளதாக மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 16 நாட்களாக இடம்பெற்றுவந்த இந்த போராட்டத்தில் மதகுருக்கள், அரசியல்வாதிகள் ஆகியோரும் பெருமளவான மக்களும் கலந்துகொண்டிருந்தனர். காணி மற்றும் நிதி அதிகாரங்கள் செயலகத்திற்கு வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதற்குரிய தீர்வினை எதிர்வரும் 3 மாதங்களில் கொண்டுவருவதாக சிறீலங்காவின் உள்த்துறை அமைச்சர் வஜீர அபயவர்த்தனா இந்த வாரத்தின் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார்.

பிரதேச சபையை தரமுயர்த்துவதற்கு எதிரான முறைப்பாடுகளை பரிசீலனை செய்வதற்கான குழு ஒன்று அமைக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தரமுயர்த்துவதற்கு எதிராக முஸ்லீம் அரசியல்வாதிகள் போராட்டம் மேற்கொண்டுவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசின் காணாமல் போனோர் அலுவலகத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டை ICRC கைவிடவேண்டும் !

இலங்கை அரசாங்கத்தின் காணாமல் போனோரின் அலுவலகத்தையோ அவ் அலுவலகத்தின் செயற்பாடுகளையோ காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுக்காளான நாம் ஏற்றுக்கொள்ளாத நிலையில் அந்த அலுவலகத்தின் செயற்பாடுகளை எம்மத்தியில் சூட்சுமமாக திணிக்கும் முயற்சியில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் செயற்பட்டுவருவதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி மரியாசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார் .

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இன்றுடன் 837 ஆவது நாளாக போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.இன்னிலையில் இன்றையதினம் (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .

மேலும் அந்த ஊடக சந்திப்பில் தெரிவித்ததாவது ,

எமது உறவுகளுக்காக நீதிகோரி போராடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளான எம்மால் ஏற்றுக்கொள்ளாத இலங்கை அரசாங்கத்தின் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு துணைபோகும் செயற்பாடுகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஈடுபட்டுள்ள அதேவேளை காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளான எமக்கு ஆதரவாக இருக்கவேண்டிய சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் தற்போது அரசின் காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தின் கொள்கைகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மத்தியில் நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது . இரகசியமான முறையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் உறவுகள் சிலரை முல்லைத்தீவு மாவட்டத்தில் அழைத்து சந்திப்பினை நடத்தி வருகின்றனர். இந்த செயற்பாட்டால் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக எமது உறவுகளுக்காக நீதிகோரி வீதியில் போராடும் நாம் விரக்தி அடைந்துள்ளோம் . யுத்தம் முடிந்து 9வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் குறித்து எம்மத்தியில் வராத சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இன்று அரசின் காணாமல் போனோரின் அலுவலகத்தின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த எம்மத்தியில் வந்து காணாமல் போன உறவினர்களின் உறவுகளை பிரித்து தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவவதை முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் அக்கப்பட்டவர்களின் உறவுகளான நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.

செயற்கை சூரியன் உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள்

அணுக்கரு இணைவு மூலம் சூரிய சக்தி உருவாவது போல, செயற்கையாக சூரிய சக்தியை உருவாக்கும் இயந்திரம் ஒன்றை சீன விஞ்ஞானிகள் 1999ஆம் ஆண்டு முதல் ஆராய்வு செய்து வருகின்றனர்.

இதை செயற்கை சூரியன் என்றழைக்கப்படும் “சோதனை ரீதியாக மேம்படுத்திய மீக்கடத்தி டோக்காமாக்“ என்ற இயந்திரத்தை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டு வருகின்றது.

இதற்காக சீன விஞ்ஞானிகளே சில ஆண்டுகால முயற்சிக்குப் பின், தரம் வாய்ந்த மீக்கடத்திப் பொருட்களை உருவாக்கியுள்ளனர். இவை அந்த இயந்திரத்தில் பொருத்தப்பட உள்ளன.

இந்த இயந்திரம் எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் முழுமையாகத் தயாராகி விடும் என்றும், 2050ஆம் ஆண்டு முதல் தொழில் முறையில் இதன் மூலமான சக்தி பயன்பாட்டிற்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

பலத்த கண்காணிப்பின் கீழ் யாழ். மாநகரசபை பகுதி

யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில்  Smart Lamp Poles பொருத்தப்பட்டு வரப்படுகின்றது. இதனுடன் கண்காணிப்பு கமரா மற்றும் தொலைத்தொடர்பு அன்டனா போன்றவை இணைக்கப்பட்டும் உள்ளது.

இது மாநகரசபை அனுமதியின்றியே பொருத்தப்பட்டு வரப்படுகின்றது. இந்த நடவடிக்கை உடனே நிறுத்தப்பட வேண்டும் என்றும், இந்த தொழில் நுட்பங்கள் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கப்பட வேண்டும் என்றும் யாழ். மாநகரசபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொண்ட யாழ். மாநகரசபை உறுப்பினர்களான வ.பார்த்தீபன், இ.ரஜீவ் ஆகியோர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

இந்த நடவடிக்கை தொடர்பாக மாநகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் எதிர்காலத்தில் குறித்த Smart Lamp Poles பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அதில் சிறிய ரக தொலைத் தொடர்பு அன்ரனா பொருத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இப்போது கண்காணிப்பு கமரா பொருத்தப்பட்ட Smart Lamp Poles பொருத்தப்படுகின்றன.

இது தொடர்பாக மாநகரசபை முதல்வரின் எந்தவித பதிலும் கிடைக்காத போது, அவசர அவசரமாக Smart Lamp Poles பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 18 Smart Lamp Polesகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை தொடர்பான தெளிவான விளக்கங்கள் மக்களுக்கு வழங்கப்படவில்லை.

அவர்கள் மேலும் கூறுகையில், எமது பிரதேசத்தில் நடைபெறும் எந்தவித அபிவிருத்திப் பணிகளுக்கும் நாங்கள் தடை விதிக்கவில்லை. ஆனால் இதன் தொழில் நுட்பம் தொடர்பான விளக்கத்தினை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்பவையாக அமையும் என்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் எடுத்துக் கூறினர்.

 

இந்தியாவில் இடம்பெற்ற படையினரின் யோகா

இந்தியாவின் ஜம்மு கஸ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் யோகாசனத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் பயிற்சி பெற்ற நாய்களும் பல்வேறு ஆசனங்களை செய்து பார்ப்போரை திகைக்க வைத்தது.

அதேவேளை சென்னை மெரீனா கடற்கரையில் இந்திய கடற்படை மற்றும் தொழில் பாதுகாப்பு படையினர் யோகாசனங்களை செய்திருந்தனர்.

நீர்கொழும்பு தேவாலய தாக்குதல்தாரியின் தலை நீர்கொழும்பில் அடக்கம்

ஏப்ரல் 21 தொடர் தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களில், நீர்கொழும்பு கடுவாப்பிட்டிய கத்தோலிக்க தேவாலயம் மீதான தாக்குதல்தாரியான முஹமத் அப்தூனின் உடற்பாகங்கள் (தலை) இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

தாக்குதல்தாரிகளை இஸ்லாமியர்களாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று சிறிலங்காவில் வாழும் முஸ்லிம்கள் அறிவித்துள்ள நிலையில், தமது மயானங்களில் இவர்களின் உடல்களை புதைக்கவும் அனுமதிக்கப் போவதில்லை என்று அறிவித்திருந்தனர்.

நீர்கொழும்பு தாக்குதலில் 11இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் 200இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் அறிந்ததே.

இதேவேளை மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய முகம்மது நஸார் முகம்மது அஸாத் என்பவரின் சடலத்தை புதைப்பதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் அவரின் உடற்பாகங்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

சிறிலங்கா வந்திருந்த இந்திய முப்படைக் குடும்பங்கள்

சிறிலங்கா மலையகப் பகுதிக்கு இந்தியாவின் முப்படையினரின் குடும்ப உறுப்பினர்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு, கண்டி தலதா மாளிகை, கேகாலை மாவட்டத்திலுள்ள பின்னவள யானைகள் சரணாலயம் ஆகியவற்றிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த மாதம் 15ஆம் திகதி சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொண்ட இவர்கள் நேற்று முன்தினம் இந்தியா திரும்பினர். அதற்கு முன்னதாக அவர்கள் இந்த விஜயங்களை மேற்கொண்டிருந்தனர்.

சிறிலங்காவில் இரகசியமாக மேற்கொள்ளப்படும் மரணதண்டனை நடவடிக்கை

பல ஆண்டுகளின் பின்னர் சிறிலங்காவில் மரணதண்டனை நிறைவேற்றும் முயற்சிகள் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வெளியே தெரிந்தால், மைத்திரபால சிறிசேன கடுமையானவர் என்று தெரியவரும் என்பதால், இத்தண்டனை முறை இரகசியமாக பேணப்படவுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் இச்சமயத்தில் ஜனாதிபதி பற்றிய அவதூறான கருத்துக்கள் நிலவும் என்பதால், இவ்வாறு செய்ய விரும்புவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தில் இந்த தண்டனை முறை நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பான சட்டச் சிக்கல்களை சட்டமா அதிபர் திணைக்களம் கவனத்தில் கொண்டு செயற்படும். மரணதண்டனை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதை இரு அமைச்சர்கள் உறுதி செய்துள்ளனர்.

மரண தண்டனை நிறைவேற்றும் முயற்சிகள் குறித்து தெரிவயந்தால், எழும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காகவே இரகசியமாக முன்னெடுக்க விரும்புவதாக மைத்திரிபால சிறிசேன தனது நெருக்கமானவர்களுக்கு தெரிவித்துள்ளார்

அமெரிக்காவிற்கு புதிய இராணுவ அமைச்சர் நியமனம்

அமெரிக்காவின் பொறுப்பு இராணுவ அமைச்சராக இருந்த, பாட்ரிக் ஷானஹான் பதவியிலிருந்து விலகுவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து புதிய இராணுவ அமைச்சராக மார்க் எஸ்பர் (55) நியமிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தற்போதைய, வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோவின் பள்ளி நண்பரான எஸ்பர், 1990 நடந்த வளைகுடா போரில் பங்குபற்றியவராவார்.

தமிழின அழிப்பிற்கான ஐ.நா விசாரணை கோரி கனேடிய பாராளுமன்றத்தில் தீர்மானம்

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கனேடிய பாராளுமன்றத்தில் தமிழின அழிப்பிற்கான ஐ.நா விசாரணை செய்யக்கோரிய தீர்மானம் 3 முறை தோற்கடிக்கப்பட்டு 4 வது முறையாக இத்தீர்மானம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1)  வன்முறையாலும் போராலும் பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் இரங்கலைத் தெரிவிக்கிறது.

2) உயிர்த்தஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குமாறும், மதச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்குமாறும், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்குமாறும் இலங்கை அரசிடம் கோருகிறது.

3) ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 30/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களின் கீழ் பணிக்கப்பட்டவாறு, தெளிவான கால அட்டவணைக்கு அமைவாக அதன் கடப்பாடுகளை நிறைவேற்றுமாறு இலங்கையிடம் கனேடிய அரசு விடுத்த கோரிக்கையை மீள உறுதிசெய்வதுடன், பொறுப்புக் கூறலை மேற்கொள்வது, சமாதானத்தை ஏற்படுத்துவது, நாட்டில் உள்ள அனைவருக்கும் இடையில் மீளிணக்கத்தை ஏற்படுத்துவது ஆகியவற்றுக்குக் கனடாவின் ஆதரவை மீள உறுதிசெய்கிறது.

4) இலங்கையில் தமிழர்கள் மீது புரியப்பட்டதாகக் கூறப்படும் இனப்படுகொலை மற்றும் 2009 ஆம் ஆண்டில் போரின் இறுதிக் காலம். குறித்த விசாரணை செய்வதற்கு சுதந்திரமான, சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் கனடிய அரசு கோரிக்கை விடுக்கிறது.

இந்த தீர்மானம் NDP கட்சியின் மனித உரிமைக்கு பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர் Cheryl Hardcastle பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.