Home Blog Page 2757

சூரியன் மறையாத அதிசய தீவு

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நோர்வேயில் உள்ள சொம்மாரோயி என்ற தீவு உலகின் மற்றைய பகுதியிலிருந்தம் முற்றிலும் மாறுபட்டுக் காணப்படும். ஆர்ட்டிக் வட்டத்தின் வடக்கில் அமைந்துள்ள இத்தீவில் நவம்பரில் இருந்து ஜனவரி வரை இருட்டாகவே இருக்கும். அதே போல் மே 18ஆம் திகதியிலிருந்து ஜுலை 26ஆம் திகதி வரை 69 நாட்கள் சூரியன் மறையாமலே இருக்கும். இதனால் அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறை மாற்றமாகவே இருக்கும்.

இங்கு வசிக்கும் மக்கள் நோர்வே அதிகாரிகளை சந்தித்து ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அதாவது கடிகாரத்தை நிறுத்தி வைத்து, நேரமில்லாத பகுதியாக அறிவிக்க வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை ஆகும். இது மிகவும் ஆச்சரியமாக விடயமாக இருக்கின்றது.

கால நேரத்திற்கு எதிராக வாழ வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் இம்மக்கள், சூரியன் இருக்கும் இரவு நேரத்தையும், சூரியன் உதிக்காத காலை நேரத்தையும் அனுபவிக்கும் நிலையில் உள்ளனர்.

 

”நம்பிக்கைக் கொலை: ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” ( 2) – தமிழில் ந. மாலதி

வில்லியம் பிளம் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு நூல்:”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – (Killing Hope: US Military and CIA Interventions Since World War II) – பாகம் 2

இத்தாலி 1947-1948: ஹொலிவுட் பாணியில் சுதந்திரமான தேர்தல்

1946 இல் இத்தாலியின் கம்யூனிஸ்ட் கட்சியும், சோசலிஸ்ட் கட்சியும் தனித்தனியாக எடுத்த வாக்குகள் ஏனைய எல்லா கட்சிகளையும்விட அதிகமானது. 1948இல் இவ்விரு கட்சிகளும் இணைந்து போட்டியிட திட்டமிட்டன. இதனால் இத்தாலியில் ஒரு இடதுசாரி ஆட்சி வருவது மிகவும் சாத்தியமானதாக இருந்தது. இத்தருணத்தில்தான் ஐ-அமெரிக்கா தனது பல் வேறு பொருளாதார அரசியல் தந்திரங்களை இத்தாலியின் மேல் பிரயோகிக்க தொடங்கியது. பொதுமக்களின் கருத்துக்களை மாற்ற தான் கூர்மையாக்கி வைத்திருந்த ஹாலிவூட் மற்றும் ஏனைய தந்திரங்களையெல்லாம் பாவித்தது. இத்தாலியில் இருந்த அடிப்படை பிரச்சனைகளான விவசாயம் பொருளாதார சீர்திருத்தம் போன்றன தேர்தல் பிரச்சாரப் பொருளாக வரக்கூடாது என்பதில் கவனம் செலுத்தியது. தேர்தல் கம்யூனிசத்துக்கும் ஜனநாயத்திற்கும் இடையேயான போட்டியாக மாற்றப்பட்டது.degasperitogliatti ”நம்பிக்கைக் கொலை: ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” ( 2) – தமிழில் ந. மாலதி

ஜனவரி 1947 இல் இத்தாலியின் பிரதமர் கஸ்பேரி வாஷங்டனின் அடைப்பில் அங்கு சென்றார். அங்கு போரால் பாதிக்கப்பட்ட தனது நாட்டை கட்டியெழுப்ப நிதியுதவி கேட்கும் நோக்கத்துடன் சென்றார். இத்தாலிக்கு திரும்பி மூன்று நாட்களில் எதிர்பராத விதமாக தனது அமைச்சரவையை கலைத்தார். இவ்வமைச்சரவையில் பல கம்யூஸ்டுகளும் சோசலிஸ்டுகளும் இருந்தனர். அமைச்சரவை கலைக்கப்பட்டதற்கும் பிரதமரின் ஐ-அமெரிக்க பிரயாணத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும் அரசாங்கத்தில் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கை குறைப்பதற்காகவே இது கலைக்கப்பட்டதாகவும் மக்கள் பேசிக்கொள்கிறார்கள் என்று செய்திகளை அக்காலத்தில் ஊடகங்கள் வெளியிட்டன. இருந்தாலும் புது அமைச்சரவை அறிவிக்கப்பட்டபோது அதில் இடதுசாரிகள் இருப்பதை பிரதமரால் தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும் இடதுசாரிகள் முக்கியமான சில அமைச்சர் பதவிகளை இழந்திருந்தார்கள்.

தொடர்ந்த மே மாதத்தில் துணைப்பிரதமர் ஒரு குழுவை வாஷிங்டனுக்கு அழைத்துச் சென்றார். ஐ-அமெரிக்க உதவியை மீண்டும் கேட்பதுவே இவர்கள் நோக்கம். அத்துடன் முன்னர் தருவதாக ஐ-அமெரிக்கா உறுதி செய்து பின்னர் காரணம் தெரிவிக்காமல் முடக்கி வைத்திருந்த கடனை கேட்பதும் அவர்கள் எண்ணமாக இருந்தது. இடதுசாரியினரை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றும் வரை ஐ-அமெரிக்கா உதவியையும் கடனையும் முடக்கியிருக்கிறது என்று அக்காலத்தில் இத்தாலியின் இடதுசாரிகள் பலமுறை சொல்லி வந்தார்கள். நியுயோர்க் ரைம்ஸ் பேப்பரும் இம்மாதிரியான ஒரு கருத்தை அப்போது வெளியிட்டிருந்தது.

இதுதான் இறுதியில் நடந்தது. தொடர்ந்த சில மாதங்களில் ஐ-அமெரிக்காவின் பெரும் தொகையான நிதி உதவிகள் இத்தாலியை அடைந்தது. அத்துடன் இத்தாலியின் ஒரு பில்லியன் டொலர் கடனும் இரத்துச் செய்யப்பட்டது. இதே காலத்தில் ஐ-அமெரிக்காவிடம் உதவி எதிர்பார்த்திருந்த பிரான்ஸ் நாட்டின் அரசிலிருந்தும் பல கம்யூனிஸ்டுகள் வெளியேற்றப்பட்டார்கள். இத்தாலியின் இடதுசாரி முன்னணிக்கு எதிரான பல செயற்பாடுகளால் அவர்களின் செல்வாக்கு மிக துரிதமாக நலிவுற்றது. இச்செயற்பாடுகளில் சில:

அமெரிக்க இத்தாலியர்கள் இத்தாலியில் உள்ள தமது உறவினருக்கு ‘கம்யூனிஸ்டுகளின் வெற்றி இத்தாலியை நாசமாக்கும். ஐ-அமெரிக்கா உதவிகளை நிறுத்தி விடும். இதனால் இன்னுமொரு உலகப் போர் உருவாகும். அழகான இத்தாலியை கொடுமையான கம்யூனிஸ்டுகளின் கைகளில் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்துறோம்…’ என்பன போன்ற கடிதங்களை பெரும் தொகையாக அனுப்பினார்கள்.

  • இதையோ ஐ-அமெரிக்கா அரசும் தனது அறிக்கைகளில் வெளியிட்டது, ‘கம்யூனிஸ்டுகள் வென்றால்…ஐ-அமெரிக்காவிடமிருந்து ஒரு உதவியும் கிடைக்காது.’
  • ஐ-அமெரிக்க அரசின் பின்னணியுடன், அங்குள்ள அமெரிக்க பிரபலங்களின் பங்குடன் தினமும் இத்தாலியை நோக்கிய சிற்றலை ஒலிபரப்புக்கள், ‘உங்கள் தெரிவு கம்யூனிசமா அல்லது ஜனநாயகமா, கடவுளா அல்லது கடவுளற்றதா, ஒழுங்கா அல்லது குழப்பமா’ போன்ற செய்திகளை பரப்பின.
  • பல வர்த்தக வானொலிகள் ‘இந்த கடினமான நேரத்தில் போப்பாண்டவருக்காக பிரார்த்தனை செய்வதாக..’ இத்தாலிக்கான சிறப்பு சேவைகளை ஐ-அமெரிக்க கத்தேலிக்க தேவாலயங்களிலிருந்து ஒலிபரப்பின. இவற்றில் ஒரு வானொலியில் ஒரு கிழமை முழுவதும் ஐ-அமெரிக்காலுள்ள இத்தாலியர்கள் ஒரு நிமிட செய்திகளை சிற்றலையில் இத்தாலிக்கு வழங்கினார்கள்.
  • ‘அமெரிக்காவின் குரல்’ என்ற அரச வானொலி தனது இத்தாலிக்கான சேவையை மிகவும் அதிகப்படுத்தியது. இதில் ஐ-அமெரிக்கா இத்தாலிக்கு வழங்கிய உதவிகளையும் தமது நட்பையும் சொல்லிக்காட்டின. அமெரிக்காவின் பிரபலங்கள் பலரும் இதில் பங்கேற்றார்கள்.
  • இத்தாலியிலிருந்த ஐ-அமெரிக்கர்கள் ஐ-அமெரிக்காவின் பொருளாதார உதவிகள் பற்றிய துண்டுப்பிரசுரங்களை எங்கும் விநியோகித்தார்கள். குறைந்த வருமான மக்கள் மத்தியில் பல கண்காட்சிகளை இதே போல் நடத்தினார்கள்.
  • ஐ-அமெரிக்கா நீதி திணைக்களம், கம்யூனிஸ்ட் கட்சியை சேரும் இத்தாலியர்கள் அமெரிக்காவுக்கு வர முடியாது என்று அறிவிப்புகள் விட்டன. அமெரிக்காவுக்கு போவது அன்று பல இத்தாலியர்களின் கனவாக இருந்தது.
  • ஐ-அமெரிக்காவும் இத்தாலியும் 10 வருட ‘நட்பும், வணிகமும், கடல் போக்குவரத்தும்’ என்ற ஒரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஐ-அமெரிக்கா கைச்சாத்திட்ட முதலாவது ஒப்பந்தம் இதுவே.

ஐ-அமெரிக்காவின் இந்த நாடகத்தின் முடிவில் இத்தாலியில் வலதுசாரிக் கட்சியான ‘ஜனநாயக கிறிஸ்தவர்’ கட்சி 48 வீதம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. இடதுசாரி முன்னணி 31 வீதம் வாக்குகள் பெற்று தோல்வியடைந்தது. இத்தகைய ‘அறப்போரையே’ வலதுசாரிகளின் தந்திரமாக பின்னர் இவ்வாறு சித்தரிக்கப்பட்டது: ’20ம் நூற்றாண்டின் வலதுசாரிகளின் தேர்தல் கலை என்பது செல்வத்தை பாவித்து ஏழ்மை தனது அரசியல் சுதந்திரத்தின் மூலம் செல்வத்தை அதிகாரத்தில் அமர்த்துவதே’.

பாகம் -3 தொடரும்

 

பாகம் -1

”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – தமிழில் ந. மாலதி

ஆளில்லா ஹெலிகொப்டர் சீனா வெற்றிகர சோதனை

சீனா உருவாக்கிய ஆளில்லா ஹெலிகொப்டர் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டதாக அந்நாட்டு அரசிற்குச் சொந்தமான குளோபல் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

ஏவி 500 எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ஹெலிகொப்டர், ஹைனன் மாகாணத்தில் பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள வேண்டிய சூழலில் இரவில் இயக்கிப் பார்க்கப்பட்டதாகவும், இதன்மூலம் சீன இராணுவம் இதனை தங்களது படையில் இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

 

 

 

வவுனியா பிரதேச செயலகத்தில் பிரித் ஓதும் நிகழ்வு

வவுனியா பிரதேச செயலகத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி மாலை 6 மணியளவில் பிரித் ஓதும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதில் பிரதேச சபை உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும், நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவரும் வெண்ணிற ஆடை அணிந்து வருமாறும்  பிரதேச செயலர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதேச செயலாளர் கையொப்பமிட்டு கடிதம் ஒன்றை அனைத்து பிரதேச சபை கிளை அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

வவுனியா பிரதேச சபை தமிழர்களுக்குரிய பிரதேச சபையாகக் காணப்படும் போது அங்கு எதற்காக பிரித் ஓதும் வைபவம் ஒழுங்கு செய்யப்பட்டது என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன் பௌத்த மதத்தினரின் வழிபாட்டு உடையான வெள்ளை ஆடையை அணியவும் பணிக்கப்பட்டுள்ளனர். இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு திணிப்பாகும்.

வவுனியா மாவட்டத்தில் பல இடங்களிலும் பௌத்த சின்னங்கள் பிரதிஸ்டை செய்யப்படுவதும், சிங்களவர்கள் குடியேற்றப்படுவதும் இடம்பெற்று வருகின்றமை இங்கு கருத்திற் கொள்ளப்பட வேண்டியுள்ளது.

பிற மதத்தினர், மதம் மாறுவோருக்கு மரண தண்டனை – சொல்கிறது இலங்கையில் இஸ்லாமிய பாடத்திட்டம்

இஸ்லாம் மார்க்கத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கான தண்டனை கொலை என்று இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள பாடசாலை இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

1980ஆம் ஆண்டு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் கற்கும் 9,10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியிடப்பட்ட இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் “இஸ்லாமிய தண்டனைகள் ஒழுங்காக அமுல் நடத்தப்படுமாயின் உலகில் குற்றங்கள் அமைவது மிக அரிதாகவே அமையும் என்பதில் சந்தேகமேயில்லை” என்று கூறப்பட்டு அதன் கீழ் உள்ள ‘குற்றங்களும் தண்டனைகளும்’ என்று தலைப்பிடப்பட்ட பட்டியல் ஒன்றில் குற்றமாகக் கருதப்படும் செயல்கள் மற்றும் அவற்றுக்கான தண்டனைகள் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து, பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என இலங்கை கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.107498994 5520b976 9621 4217 86db 6d3c59be232c பிற மதத்தினர், மதம் மாறுவோருக்கு மரண தண்டனை - சொல்கிறது இலங்கையில் இஸ்லாமிய பாடத்திட்டம்

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆரய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தன்னிச்சையாக முன்வந்து சாட்சியமளித்த, ரிஷ்வின் இஸ்மத் என்பவரால் இந்த விடயம் வெளியிடப்பட்டது.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட ரிஷ்வின் இஸ்மத், பிறப்பிலிருந்தே முஸ்லிம் என்றதுடன், அவர் 2013ஆம் ஆண்டு இஸ்லாத்தை விட்டு வெளியேறியுள்ளதாகக் கூறினார்.

எந்தவொரு மதத்தையும் தற்போது தான் பின்பற்றாத பின்னணியில் தன்னை கொலை செய்ய சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டதாக அவர் தெரிவுக்குழு முன்னிலையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

ரிஷ்வின் இஸ்மத்திற்கு விடுக்கப்பட்டதாக கூறப்படும் மரண அச்சுறுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து இதன்போது விசாரணைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

‘ரித்தத்” என்ற சொல் குறிப்பிடப்பட்டு, அதற்கு தண்டனையாக எச்சரிக்கைகளின் பின் கொலை என்பது தண்டனையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரித்தத் என்ற சொல்லின் பொருள் மதம் மாறல் என்பது. ஒருவர் இஸ்லாத்தில் இருந்து அல்லது இஸ்லாத்தை ஏற்றுவிட்டு மீண்டும் இஸ்லாத்திலிருந்து வெளியேறுதல் அல்லது இஸ்லாம் அல்லாத வேறு மதங்களுக்கு சென்று விடுவதை ‘ரித்தத்” என கூறப்படுகின்றது.

இந்த நிலையில், இலங்கையில் புதிய பாடநெறி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய பாடபுத்தகத்திலும் சில பாரதூரமாக வசனங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.107482924 img 20190620 195222 பிற மதத்தினர், மதம் மாறுவோருக்கு மரண தண்டனை - சொல்கிறது இலங்கையில் இஸ்லாமிய பாடத்திட்டம்

மேலும், இஸ்லாம் அல்லாத ஏனைய மதங்களை பிற்பற்றுவோருக்கு ‘மரண தண்டனை’ என்பதற்கு பதிலாக ‘கொலை’ என பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இஸ்லாத்திலிருந்து வேறு மதங்களுக்கு செல்வோர் கொலை செய்யப்பட வேண்டும் என குரானில் எங்கும் கூறப்படவில்லை என தெரிவித்த அவர், அது அதீஸ்-இல் கூறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, எகிப்து நாட்டிலுள்ள போதகரான யூசுப் அல் கர்தாரி என்பவரினால் அந்த நாட்டு தொலைக்காட்சியொன்றுக்கு தெரிவிக்கப்பட்ட சில விடயங்கள், இலங்கையை தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய அமைப்பான ஸ்ரீலங்கா ஜமாத்தே இஸ்லாமிக்கினால் வெளியிடப்படுகின்ற மாதந்த சஞ்சிகையான அல்-ஹசனா சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளதாக ரிஷ்வின் இஸ்மத் குறிப்பிட்டார்.

இஸ்லாத்தை விட்டு வெளியேறுவோர் கொலை செய்யப்பட வேண்டும் என்ற சட்டம் இல்லாத பட்சத்தில், இஸ்லாமிய மார்க்கம் அழிந்து போய் விடும் எனவும், தற்கொலை தாக்குதல் சரி என்ற விதத்திலும் இந்த சஞ்சிகையில் கட்டுரையொன்று பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இலங்கையில் அந்த கட்டுரையை எழுதிய நபர் “தற்கொலை” என்பதற்கு பதிலாக “தற்கொடை” என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தியுள்ளார் எனவும் ரிஷ்வின் இஸ்மத் கூறுகின்றார்.

தன் உயிரை மாய்த்துக் கொள்ளுதல் என்பதற்கு பதிலாக, தனது உயிரை கொடை செய்தல் என பொருட்படும் விதத்தில் இந்த கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனை ஆராய்ந்த தெரிவுக்குழு உறுப்பினரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கட்டுரையின் ஊடாக வார்த்தைகளினால் விளையாடியுள்ளனர் என கூறியிருந்தார்.

ரிஷ்வின் இஸ்மத்திடம், நாடாளுமன்ற தெரிவுக்குழு ரகசிய விசாரணைகளையும் நடத்தியிருந்தது.

இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் தவறான கொள்கைகள் பரப்பப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள விடயம் தொடர்பில் தான் கவனம் செலுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவிக்கின்றார்.

இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து வேறு மதங்களுக்கு செல்வோர் கொலை செய்யப்படும் என்ற விதத்தில், பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தொடர்பாக பிபிசி தமிழ், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமிடம் வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக, பேராசிரியர்கள் உள்ளிட்ட கல்விமான்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு, பாடத்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவும் தான் நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறினார்.  –  நன்றி – பிபிசி தமிழ்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த ஹக்கீம் இசைவு ;விரைவில் வர்த்தகமாணி அறிவிப்பு

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழுமையான நிர்வாக அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக இயங்கவைக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணக்கம் தெரிவித்துள்ளது.

மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நடத்திய சந்திப்பின்போதே இந்த இணக்கம் காணப்பட்டுள்ளது.

கல்முனை விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்திலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் முக்கிய சந்திப்பு நடைபெற்றது. உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தனவும் இதில் கலந்துகொண்டார். இதன்போது, கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தப்படும் என பிரதமர் உறுதியளித்தார்.

அதன்பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பிரதமர் பேச்சு நடத்தினார். இதில் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்தப் பேச்சில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழுமையான நிர்வாக அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக இயங்கவைக்க மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம் இணக்கம் தெரிவித்தார்.

இதற்கான முதற்கட்ட அறிவிப்பை உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு வெளியிடவுள்ளது.

விரைவில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் முழுமையான – தனியான பிரதேச செயலகமாக இயங்க ஆரம்பிக்கும். அதற்கான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்படும்.

காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் யாழ் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோத்தாவுக்கு பணிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் ஆட்கொணர்வு மனு நேற்று யாழ்.நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, சாட்சியத்துக்கு அழைக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் வழக்கு விசாரணையை செப்டம்பர் 27ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷவை அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகிசாட்சியமளிக்கும் வகையில் அவருக்கு மீளவும் அறிவித்தல் வழங்குமாறு யாழ். நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ். நகரில் நடைபெறவிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்காலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர்.

இது தொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஆட்கொணர்வு மனு 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணையின் போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றத்துக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து யாழ். நீதிவான் நீதிமன்றில் 2012ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகின. ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித்குமார, குகன் முருகானந்தனின் மனைவி, லலித்குமார் வீரராஜின் தந்தையார் ஆகியோர் ஆரம்பத்தில் சாட்சியமளித்திருந்தனர்.தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உள்ளிட்ட சிலர் சாட்சியமளித்திருந்தனர்.

சிறீலங்கா அரசின் அசமந்தப்போக்கே குண்டு வெடிப்புக்கும், கல்முனை பிரச்சனைக்கும் காரணம் – விக்கினேஸ்வரன்

கடந்த ஏப்பிரல் 21 ஆம் திகதி குண்டுவெடிப்பு பற்றி அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்த அரசாங்கம் கல்முனை விடயத்திலும் இவ்வாறான போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது என்று வலியுறுத்துகின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் அரசாங்கத்திற்கு மாமாவேலை செய்து கால அவகாசத்தை எடுத்துக் கொடுக்கப் பார்க்கின்றது என முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான திரு வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கனடா வாணிபம் வியாபார தகவல் கையேட்டு நிறுவத்தின் உதவியுடன் கிளிநொச்சிப் பகுதியில் இடம்பெற்ற மக்கள் நலன் காப்பகத்தின் மூதாளர் மாதாந்த உதவித்திட்ட ஆரம்ப விழாவில் இன்று (22) கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவரின் உரையின் முழு வடிவம் வருமாறு:

இன்றைய நிகழ்வைத் தலைமை தாங்கி நடாத்திக் கொண்டிருக்கின்ற மக்கள் நலன் காப்பகப் பொருளாளர் திரு.த.பாலசுரேஸ் அவர்களே, சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருக்கின்ற ஓய்வுபெற்ற அதிபர் திரு.க.நாகராஜா அவர்களே, மற்றும் இலண்டனில் இருந்து வந்திருக்கும் திரு.இரட்ணகுமார் வைத்தியநாதன் அவர்களே, கௌரவ விருந்தினர்களே, மக்கள் நலன் காப்பக அங்கத்தவர்களே, தமிழ் மக்கள் கூட்டணியின் அங்கத்தவர்களே, இன்றைய நிகழ்வில் உதவிகளைப் பெற்றுக் கொள்ளவிருக்கின்ற மூதாளப் பெருமக்களே, சகோதர சகோதரிகளே!
இன்றைய இந்த ஆரம்ப நிகழ்வு ஈகையின் சிறப்பை வெளியிடுவதாக அமைந்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்துங் கூட திரு. இரட்ணகுமார் வைத்தியநாதன் போன்றவர்கள் இங்கே வந்து கலந்துகொண்டிருப்பது எமது பாதிக்கப்பட்ட மக்கள் மீது கடல்கடந்த நாடுகளில் வசிக்கின்ற எமது உறவுகள் எவ்வளவு கரிசனை கொண்டிருக்கின்றார்கள் என்பதனை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது. இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்க முன்வருவதே ஈகை. எமது வெளிநாட்டு உறவுகள் தரும் உதவிகளை இங்கு பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்குக் கொண்டு செல்லும் புனிதப் பணியில் மக்கள் நலன் காப்பகம் ஈடுபட்டுள்ளது.

மக்கள் நலன் காப்பகம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளடங்கலாக 8 மாவட்டங்களில் தன்னார்வ பணியாளர்களின் உதவியுடன் போரினால் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை இலக்காகக் கொண்டு பல்வேறு வகையான உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள். வாழ்வாதார உதவிகள், இலவச மருத்துவ சேவைகள், திடீர் அனர்த்தங்களுக்கான உதவிகள், குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் உதவிகள் என பல்வேறு வகையான உதவித் திட்டங்களை அரச அங்கீகாரம் பெற்று ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாக செயற்படுத்தி வருகின்றனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம் பெற்ற நீண்ட கால தொடர் யுத்தத்தின் காரணமாக தேவையுடைய மக்களின் எண்ணிக்கை பல மடங்காகப் பெருகியுள்ளது. அரசாங்கம் உதவிகளை தருவதாக அறிவித்தும் எம் மக்களின் வாழ்வில் ஒளி பிறப்பதாக இல்லை.அரசாங்கம் தருபவை தகுந்தவர்களைப் போய்ச் சேருகின்றதா என்பதில் சந்தேகமே எழுகின்றது. ஆகவே தான் எமது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளைச் செய்ய வேண்டியுள்ளது. ஆனால் வழங்கப்பட வேண்டிய உதவு தொகைகளை வழங்குவதற்கு இவ்வகையான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நிதிப் பற்றாக்குறையினால் அல்லல்படுவதை பல்வேறு சந்தர்ப்பங்களில் அவதானித்திருக்கின்றோம். இருந்தும் கிடைப்பதை வஞ்சகமின்றி கொடுக்கவே காப்பகத்தினர் விரும்புகின்றார்கள்.

எம் மக்களின் மேம்பாடு தொடர்பில் நானும் எனது கட்சியும் அதீத அக்கறை உடையவர்களாக இருக்கின்ற போதிலும் இவர்களுக்கான உதவித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு கட்சி என்ற ரீதியில் எம்மால் முடியாமல் இருந்தது. எனினும் எமது அவாவையும் உதவித் திட்டங்களை வழங்குவதற்கு நாம் எடுக்கின்ற முயற்சிகளையும் அவதானித்த அன்பர் ஒருவர் ஒரு தொகைப் பணத்தை ஆரம்ப உதவித் திட்டங்களுக்காக எமக்கு அனுப்ப முன்வைந்துள்ளார்.

அவர் தந்த நிதியை சமமாகப் பகிரந்தளிப்பதன் மூலமாக 35 அங்கத்தவர்களுக்கு தலா ரூபா 5000 வீதம் உதவித் தொகையை இன்று வழங்கயிருக்கின்றோம். இது மிகவும் சிறிய அளவிலான உதவு தொகையாக இருப்பினும் இந்த உதவித் திட்டங்கள் பற்றி அறிந்து கொள்கின்ற அல்லது கேள்விப்படுகின்ற மேலும் பல அன்பர்கள் தமது உதவிக்கரங்களை நீட்டுவார்கள் என எண்ணுகின்றேன். வெளிநாடுகளில் வாழுகின்ற பல அன்பர்கள் இவ்வாறான வேலைத் திட்டங்களுக்கு நிதிகளை வழங்குவதற்கு விருப்பமுடையவர்களாக இருக்கின்ற போதிலும் தமது உதவு தொகைகள் முறையாகப் பயன்படுத்தப்படுமா என்பதில் சந்தேகம் கொண்டிருக்கின்றார்கள்.

இவர்கள் அனைவருக்கும் நாம் பகிரங்கமாக ஒரு அழைப்பு விடுத்திருந்தோம். உங்களிடமிருந்து கிடைக்கப் பெறுகின்ற நிதி மூலங்கள் அனைத்தும் முறையாக கணக்கு வைக்கப்பட்டு அதன் செலவீனங்கள் அனைத்தும் ஒரு விபரமான அறிக்கையாக தயாரிக்கப்பட்டு உங்களுக்கு அனுப்புவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

இந்த விசேட வேலைத்திட்டத்திற்கென ஒரு ஓய்வு பெற்ற பிரதம கணக்காளர் ஒருவரை கடமையில் அமர்த்தி கணக்கு வழக்குகள் அனைத்தும் மிக நேர்த்தியாக முன்னெடுக்கப்படுகின்றது என்ற செய்தியை உங்களுக்கு குறிப்பாக புலம்பெயர் மக்களுக்கு மகிழ்வுடன் தெரிவிக்கின்றோம். நான் முதலமைச்சராக கடமையேற்ற காலத்தில் இருந்து எனது பதவிக்காலம் முடியும் வரை பல தரப்பட்ட மக்கள் உதவிகளை வழங்கியிருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் உதவு தொகைகளுக்கான செலவு விபரங்கள் முறையாக எம்மால் அனுப்பி வைக்கபட்டிருந்தன. செலவு விபரங்கள் எனக் குறிப்பிடும் போது நீங்கள் தவறாக எண்ணி விடக் கூடாது. உதவிகள் அனைத்தும் தேவையுடைய மக்களுக்கான உதவு தொகைகளாகவே செலவிடப்பட்டுள்ளன. அத் தொகைகளிலிருந்து எமது நிர்வாக செலவுகளுக்கோ, பதில் கடிதங்கள் அனுப்புவதற்கான செலவுகளுக்கோ கூட ஒரு சதமேனும் எம் மக்களின் உதவு தொகைகளில் இருந் துசெலவு செய்யப்படவில்லை என்பதை தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றேன்.

எமது மக்களை உள்நாட்டு யுத்தம் என்ற பெயரில் அவர்களின் உடமைகளை உறவுகளை அழித்து ஏதிலிகளாக்கிய பொறுப்பை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். எவர் எவர்களின் வீடுகளை அரசபடைகள் அழித்து நிர்மூலமாக்கியதோ அவர்களுக்கான வீடுகள் அம் மக்களுக்கு அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். அதே போன்று இல்லாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உலக நியமங்களிற்கு ஏற்ப நியாயமாக நடந்து கொள்வதுடன் அவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். அரசாங்கம் பயங்கரவாதிகளுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டியதில்லை என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கின்றது.

பயங்கரவாதம் என்ற பதத்தை வைத்து எம் மக்களைப் பயங்கரமாகப் பதம் பார்த்தது அரசாங்கமே. நாம் கேட்ட நியாயமான அரசியல் கோரிக்கைகளை அரசாங்கங்கள் தந்திருந்தால் மக்கள் கிளர்ந்தெழத் தேவை எழுந்திருக்காது. அரச பயங்கரவாதம் எம் மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிராது. இவைபற்றியெல்லாம் அரசுடனும் சர்வதேசத்துடனும் பலவழிகளில் பேசிப் பார்த்தாயிற்று. எமது அனைத்து முயற்சிகளும் ஏதோ வகைகளில் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றன. அரசியல் ரீதியாக நன்மை பெறவே அரசாங்கம் முயற்சிக்கின்றது.அதனால்த்தான் எமது அரசியல்வாதிகளைக் காசு கொடுத்து வாங்க எத்தனித்திருக்கின்றது.

இந் நிலையில் எமது பாதிக்கப்பட்ட உறவுகளை தாங்கிக் கொள்ள அவர்களை பொருளாதார நிலையில் ஓரளவுக்காவது முன்னேற்றிவிட அவர்களின் மன அழுத்தங்களில் இருந்து அவர்களை விடுவிக்க எம்மவர்களே முயற்சிக்க வேண்டும். அதற்கு இதுபோன்ற அமைப்புக்கள் பெரிதும் உதவுகின்றன. மேலும் கடல் கடந்த நாடுகளிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற உதவிகள் ஒரு முறையான வரைமுறையில் செயற்பட வேண்டும் என்று நாம் கருதுகின்றோம். அதற்கு அனைவரும் கைகோர்த்து முன்வர வேண்டும் எனத் தெரிவிக்கின்றோம். மேலும் மேலும் எமது ஈகையானது பார் முழுதும் இருக்கும் எமது உறவுகளை பாதிக்கப்பட்ட எம் மக்களுடன் தொடர்புபடுத்துவதாக அமையவேண்டும்.

இத் தருணத்தில் ஒரு முக்கியமான விடயத்தை நினைவுபடுத்த வேண்டி உள்ளது. கல்முனை உபபிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்துவது சம்பந்தமாக நாங்கள் கடந்த ஏப்ரல் 21ந் திகதி மட்டக்களப்பில் இருந்து கல்முனைக்கு நடைபவனி ஆரம்பித்திருந்தோம். சுமார் ஒரு கிலோமீற்றர் நாம் நடந்துபோனபோது பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டோம். அங்கிருக்கும் கிறீஸ்தவ ஆலயத்தில் குண்டுவெடிப்பு அன்று காலை நடந்தது பற்றி அப்போதுதான் அறிந்து கொண்டோம். நடைபவனியை நாம் அன்று கைவிட்டாலும் பாதிக்கப்பட்ட மக்களுடன் இன்று வரையில் தொடர்பில் இருந்து வருகின்றோம். உண்ணாவிரதிகளைக் கண்டு எமது ஆத்மார்த்த ஆதரவினை வெளிப்படுத்தி வருகின்றோம்.

ஆனால் நேற்றைய சம்பவங்கள் எனக்கு அதிர்ச்சியூட்டுகின்றன. அரசாங்கம் காலம் கடத்தினால் உண்ணாவிரதிகளின் உயிருக்கு ஆபத்து விளையக்கூடும் என்று பயப்படுகின்றோம். தமிழ் பிரதேசசெயலகத்தை தரமுயர்த்துவதாக அறிவித்து உண்ணாவிரதிகளின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும். அவர்களின் கோரிக்கை நியாயமானது.

அவர்களைக் காப்பாற்றாது விட்டால் நிலமை மிக மோசமாகி விடும். தமிழ் முஸ்லீம் சிங்கள மக்கள் அடிபட்டு சாகக்கூடிய நிலைமை உருவாகக்கூடும். 21ந் திகதி குண்டுவெடிப்பு பற்றி அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்த அரசாங்கம் இதிலும் இவ்வாறான போக்கைக் கடைப்பிடிக்கக் கூடாது என்று வலியுறுத்துகின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் அரசாங்கத்திற்கு மாமாவேலை செய்து கால அவகாசத்தை எடுத்துக் கொடுக்கப் பார்க்கின்றது. அவர்கள் இந்த மாமாவேலை செய்யும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். நிலைமையை அறிய பிரதமர் உடனே குறித்த இடத்திற்குப் போனால் நல்லது என்று கூறி எனது சிற்றுரையை முடித்துக் கொள்கின்றேன்.

நன்றி. வணக்கம்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர்
வடமாகாணம்
செயலாளர் நாயகம்
தமிழ் மக்கள் கூட்டணி

தமிழர் பிரதிநிதிகளின் இயலாமை போராட்டத்தை வேறுதளத்திற்கு கொண்டு சென்றுள்ளது: மனோ

அம்பறை மாவட்ட தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் தரப்பின் இயலாமை தற்போதைய கல்முனை பிரச்சனையை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது என்ற உண்மையை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும் என சிறீலங்கா அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது சமூகவலைத்தளத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஞானசார பௌத்த துறவி கல்முனை தமிழர் தரப்பு உண்ணாவிரதத்தை முதற்கட்டமாக கருதி முடித்துவைப்பதாக என்னிடம் இன்று தொலைபேசியில் தெரிவித்தார். அதற்கு நான் நன்றி, நல்லது செய்யுங்கள் என்று கூறினேன்.

ஆனால் அம்பறை மாவட்ட முஸ்லீம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட முஸ்லீம் தரப்பின் பிடிவாதமும், தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் தரப்பின் இயலாமையும் இந்த பிரச்சனையை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது என்ற உண்மையை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

படையினருடன் வந்த உளவு விமானத்தை நாம் தப்பவிட்டுள்ளோம்: ஈரான்

இந்த வாரம் ஈரானிய கடற்பகுதியில் வைத்து அமெரிக்காவின் ஆளில்லாத விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டபோது அமெரிக்கப் படையினருடன் வந்த விமானத்தின் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்த்ததாக ஈரானின் வான்படை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்கப் பபடையினருடன் வந்த மற்றுமொரு உளவு விமானம் சுடப்பட்ட விமானத்திற்கு அண்மையக பயணித்தது. ஆனால் எமது விமான எதிர்ப்புப் படையினர் அதனை குறிவைக்கவில்லை.

பி-8 வகையான உளவு விமானமே 35 அமெரிக்கப்படையினருடன் உளவு நடவவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. அதனைத் தாக்கி அழிக்கும் உரிமை எமக்கு இருந்தது எனினும் தேவையற்ற உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்காக நாம் அதனை தாக்கவில்லை என தெரிவித்துள்ளது.