Home Blog Page 2735

கன்னியாவில் முஸ்லிம்கள் பிரதேசங்களும் உள்ளன – உலமா சபை

கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் முஸ்லிம் அடையாளங்கள் உள்ளதாகவும், முஸ்லிம்களே அதனை பாதுகாத்ததாகவும் முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

கன்னியா என்பது தமிழ் பேசும் மக்களின் éமியாகும். இங்கு காலகாலமாக தமிழர்களும், முஸ்லிம்களும் வாழ்ந்தார்கள். கன்னியா வெந்நீரூற்று கிணற்றிற்கு அருகில் ஒரு சிறிய பள்ளிவாசலும் 40 அடி இரு முஸ்லிம் சமாதிகளும் இருக்கின்றன. இவை பல்லாயிரம் வருடத்திற்கு முந்தியவை. இவை இராவணன் மற்றும் அவனின் தாயின் சமாதி என சீக்கிய ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

இராவணன் இந்துவா, முஸ்லிமா என்பதில் கருத்து வேறுபாடு இருப்பினும், இந்த சமாதிகளை பாதுகாத்து வந்தவர்கள் முஸ்லிம்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1990ஆம் ஆண்டு கன்னியாவிற்கு முஸ்லிம்கள் இடம்பெயர்ந்த போது பள்ளியும், சமாதியும் சிதைக்கப்பட்டன. இதனை சிங்களவர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இதற்கு ஐ.தே.க. ஆதரவளிப்பது கண்டிக்கத்தக்கது.

இதேவேளை கன்னியாவில் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடிய தமிழ் மக்கள் மீது வெந்நீர் ஊற்றியமை மிகமோசமான இனவாத செயற்பாடாகும். இந்த ஆக்கிரமிப்பை தமிழ் பேசும் சமூகம் இணைந்து கண்டிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

அமெரிக்காவே மத்திய கிழக்கில் பதற்றத்திற்கு காரணம் – ஈரான்

மத்திய கிழக்கில் உள்ள தனக்கு சார்பான நாடுகளுக்கு பெருமளவான ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்கா, ஏனைய நாடுகளின் பாதுகாப்பு தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிப்பது மத்திய கிழக்கில் பதற்றத்திற்கான காரணம் என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் மொகமட் ஜவாட் சரீப் கடந்த திங்கட்கிழமை (15) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மத்திய கிழக்கில் மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளதாரத் தடைகள் நீக்கப்பட்டு, 2015 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஆணுவாயுத உடன்பாட்டில் அமெரிக்கா மீண்டும் இணைந்தாலே நாம் பேச்சுகளை மீண்டும் ஆரம்பிப்போம்.

நீண்டதூர ஏவுகணைகள் தொடாபில் பேசுவதானால் அதற்கு முன்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் பேச வேண்டும்.

82 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நாம் 16 பில்லியன் டாெர்களை ஆயுதங்களுக்கு செலவிட்டுள்ளோம், ஆனால் ஒரு மில்லியன் மக்கள் தொகையை கொண்ட ஐக்கிய அரபு இராட்சியம் 22 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது. எமது மக்கள் தொகையில் அரை பங்கு மக்கள் தொகையை கொண்ட சவுதி அரேபியா 67 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது. அவர்கள் அமெரிக்காவின் ஆயுதங்களையே வாங்கியுள்ளனர்.

இந்த ஆயுதங்கள் தான் இந்த பிராந்தியத்தில் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் சீதைக்கு ஆலயம் அமைப்பது தொடர்பில் இந்தியாவில் குழப்பம்

சிறீலங்காவின் திவிரும்போல பகுதியில் சீதைக்கு ஆலயம் அமைப்பது தொட-ர்பில் இந்தியாவின் இரு பெரும் கட்சிகளான பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடம் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்காவில் ஆலயம் அமைப்பதை நடைமுறைப்படுத்தாது, அதனை சரிபார்க்கும் நடவடிககைகளில் மத்தியப் பிரதேச அரசு ஈடுபட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சிவராஜ் சிங் சோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சிக்கும் இடையில் நேற்று (16) பலத்த வாக்குவதாம் ஏற்பட்டிருந்தது.

சிறீலங்காவில் சீதை சிறைவைக்கப்பட்டிருந்ததாக கருதப்படும் இடத்தில் அவருக்கு ஆலயம் அமைப்பதாக 2010 ஆம் ஆண்டு பாரதிய ஜதனாக் கட்சி தீர்மானித்திருந்தது. அதற்கு சிறீலங்கா அரசிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.

தற்போது கமல்நாத் அரசு சீதை கடத்தப்பட்டது உண்மையா என விசாரணை நடத்தப்போதவதாக தெரிவிப்பது மக்களை வேதனைப்படுத்தும் செயல் என சிவராஜ் தெரிவித்துள்ளார்.

அசோக வனத்தில் சீதை சிறைவைக்கப்பட்டிருந்ததை உலகமே அறிந்திருந்தது ஆனால் அதனை தற்போது இந்த அரசு விசாரணை செய்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஆலயம் கட்டுவதற்கான எந்த முயற்சியையும் சிவாரஜ் அரசு எடுக்கவில்லை என பொதுமக்கள் தொடர்புத்துறை அமைச்சர் பி.சி சர்மா தெரிவித்துள்ளார். அவர்கள் இதனை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மக்களின் உரிமைகள் தொடர்பில் ஆராய ஐ.நா சிறப்பு தூதுவர் சிறிலங்கா வருகை

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவர் கில்மென்ற் நைலெற்சொசி வோல் நாளை 18 ஆம் நாளில் இருந்து 26 ஆம் நாள் வரையிலும் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக றொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்காவில் மக்கள் அமைதியாகவும் உரிமைகளுடனும் வாழ்கிறார்களா என்பது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஐ.நா சிறப்புத் தூதுவர் 9 நாள் பயணமாக சிறீலங்கா வருகின்றார்.

அவர் கொழும்பு, வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு பயணங்களை மேற்கொள்வதுடன், அரசாங்க, ஊடகத்துறை, பொது அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

புனித ஞாயிறு தாக்குதலின் பின்னர் இடம்பெறும் எனது பயணம் சிறீலங்காவில் வாழும் மக்களின் சுதந்திரத்தை மேலும் உறுதிப்படுத்தும் என ஐ.நா தூதுவர் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் மற்றும் அவசரகாலச்சட்டம் என்பன எவ்வாறு மக்களின் சுதந்திரத்தை பாதித்துள்ளது என்பது தொடர்பில் அவர் ஆய்வுகளை மேற்கொள்வதுடன், எதிர்வரும் வருடம் ஜுன் மாதம் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 44 ஆவது கூட்டத்தொடரில் அவர் தனது அறிக்கையையும் சமர்ப்பிக்கவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது கப்பல்களுக்கான எரிபொருள் நிலையத்தை சிறீலங்காவில் அமைக்கின்றது சீனா

இந்து சமுத்திரக் கடல் பகுதியால் பயணிக்கும் சீனாவின் வழங்கல் கப்பல்களுக்கு எரிபொருள் நிரம்பும் நிலையத்தை சீனாவின் சினோபெக் நிறுவனம் சிறீலங்காவில் அமைக்கவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு வசதியாக சிறீலங்கா எரிபொருள் நிறுவனம் என்ற நிறுவனத்தை சீனா சிறீலங்காவில் பதிவு செய்துள்ளது. கப்பல்களுக்கு பயன்படுத்தும் எரிபொருள் நிலையத்தையே சீனா சிறீலங்காவில் அமைக்கவுள்ளது. இந்த எரிபொருளை மின்சக்தி நிலையங்களுக்கும் பயன்படுத்த முடியும்.

இந்த நடவடிக்கை சிறீலங்காவில் சீனாவின் அடுத்த மிகப்பெரும் முதலீட்டுத் திட்டமாகும். சுயஸ் கால்வாய் மற்றும்; மலாக்கா நீரிணை ஊடாக பயணிக்கும் கப்பல்கள் அம்பாந்தோட்டையை கடந்த செல்வதால் அங்கு அமைக்கப்படும் கப்பல்களுக்கான எரிபொருள் நிரப்பும் நிலையம் அதிக பொருளாதாரத்தை ஈட்டவல்லது என சீனாவின் நிறுவனம் தெரிவித்தள்ளது.
உலகின் மூன்றில் இரண்டு விகித எண்ணைக்கப்பல்கள் இந்த பாதையால் தான் செல்வதுண்டு.

இதனிடையே, அம்பாந்தோட்டைக்கு அருகில் 3.85 பில்லியன் டொலர்கள் முதலீடுகளைக் கொண்ட எண்ணை சுத்திகரிப்பு ஆலை ஒன்றை அமைப்பதற்கு இந்திய நிறுவனமான இந்தியன் அக்கோட் குழுமம் உடன்பாடு ஒன்றை கடந்த மார்ச் மாதம் மேற்கொண்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் நிறுவனமே முதலீடுகளை மேற்கொண்டு பராமரித்து வருவதுடன், எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் 10 மில்லியன் தொன் கப்பல் எரிபொருளை தயாரிப்பதற்கும் சீனா நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலக்கு 34 14-07-2019

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:

இலக்கு 34 14-07-2019

கன்னியா வெந்நீரூற்று கோவிலின் வரலாறு ஒட்டுமொத்த தமிழின இருப்பிற்கும் மிக அவசியமானது!

கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவிலின் வரலாறு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் இருப்புக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழின இருப்பிற்கும் மிக அவசியமானது என தென்கயிலை ஆதீனத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் இன்று (16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“சிங்கள–பௌத்த அரசானது தமிழர் வரலாற்றை மகாவம்ச மைய வரலாறாக திரிபுபடுத்த முயற்சிக்கின்றது. வரலாற்றியலை திரிபுபடுத்தல்,புலமைசார் கற்கைநெறிகளின் ஊடாக முன்னெடுக்கப்படுவதோடு தமிழர் தாயகத்தில் பல்வேறு திணைக்களங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

சிங்கள-பௌத்த மயமாக்கலில் சைவ ஆலயங்கள் பாதிக்கப்படுவது, ஏனைய மதத்தலங்களோடு ஒப்பிடுகையில்,எல்லோருக்கும் தெரிந்த தரவுரீதியல் நிறுவப்பட்ட உண்மை.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் மிகப் பாரிய அளவில் சிங்கள பௌத்த மயமாக்கம் குறிப்பாக பின் முள்ளிவாய்க்கால் தளத்தில் மிக வீரியமாக முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அது தொடர்பான எதிர்வினை,நேர்மறையான, கூட்டு தந்திரோபாய நகர்வுகள் தமிழ் அரச தரப்பிலோ அல்லது தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் இடையேயோ இருப்பதாகத் தெரியவில்லை.

சிங்கள-பௌத்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான பின்-முள்ளிவாய்க்கால் வரலாற்றுத்தளத்தில் மிகச் சிறிய எதிர்வினை முயற்சிகள் அடித்தள மக்களால் ஒழுங்கமைக்ப்பட்டு வருவதோடு இவ் எதிர்வினை நடவடிக்கைகள் பாரியளவில் தமிழ் மக்கள் அரசியல் உரிமைசார்ந்து மாற்றத்தை கொண்டு வந்ததா என்பதை கடந்த ஒரு தசாப்தமாக ஆராயவேண்டிய தேவை உள்ளது.

இவ்வாறான எதிர்வினைகளை ஒரு சமூக இயக்கமாக மாற்றுகின்ற தலைமைத்துவவெளி இன்னும் வெறுமையாகவே உள்ளது.

சிங்கள-பௌத்த காலனித்துவத்திற்கு எதிரான நிறுவனமயமாக்கப்பட்ட தந்திரோபாய நகர்வுகள் கட்டமைக்கப்படும் வரை காலனித்துவம் இன்னும் அகலமாக விரிந்து கொண்டே போகும்.

இன்று கன்னியா பிள்ளையார் கோவில் நாளை கோணேசர் கோவிலாகவும் இருக்கலாம்.

இந்த சிங்கள-பௌத்த அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தை தமிழ் அரசியல் தலைமைகள் இல்லை என்று நிராகரிக்க முடியாது.

இவ்வாறான சிங்கள-பௌத்த அரசியல் நிகழ்ச்சித்திட்டத்திற்கு எதிரான மாற்றுவழியை தமிழ் அரசியல் தலைமைகள் முன்வைக்காதது அவர்களின் பொறுப்புக்கூறலிலிருந்து நழுவுவதாக அமையும்.

கன்னியா பிள்ளையார் கோவில் தொடர்பாக பல தரப்பினரிடம் இது பற்றி கலந்துரையாடி உள்ளோம். அது பற்றிய குறுகிய,நீண்டகால விளைவுகள் பற்றியும் தமிழின இருப்பின் கேள்விக்குட்படுதல் பற்றியும் பல்வேறு தளங்களில் வெளிப்படுத்தி உள்ளோம்.

ஆனால் இதுவரைக்கும் அசமந்தபோக்கு கடைப்பிடிக்கப்படுவது இது தொடர்பாக மத்தியஸ்தம் வகிப்பவர்களின் வகிபங்கை சந்தேகம் கொள்ளச் செய்கின்றது.

இனியும் இவ்வாறான நிலைமை தொடரும் என்றால் மக்கள் மயப்படுத்தப்பட்ட வன்முறையற்ற தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். மக்கள் மைய முன்னெடுப்புப் போராட்டங்கள் சிங்கள-பௌத்த காலனித்துவத்திற்கு தீர்வாக அமையும் என்றால் அவற்றை ஒழுங்குபடுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

இவ்வாறான போராட்ட முனைப்புக்கள் நாங்கள் வேறு இன மத மக்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்பதற்கு அப்பால் தமிழின இருப்பை உறுதிப்படுத்துவதோடு இலங்கையில் பல்லினத்தன்மையையும் தொடர்ந்து பேணுவதற்கு உறுதி செய்யும்.

இன்று கன்னியா நாளை எது என்று தெரியாமல் எதுவுமே நடக்கும் என்ற நிச்சயமற்ற தன்மைக்குள் தமிழினம் வாழத் தள்ளப்படுகின்றது.

சிங்கள-பௌத்த காலனித்துவம் சிறீலங்காவில் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை விரைவுபடுத்துகின்றது.

இது தொடர்பாக பரந்த கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கபட்டு தீர்வுகள் தொடர்பாக விரைந்து செயற்பட ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழைத்து நிற்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

கன்னியாவில் கூடிய தமிழ் மக்கள் – தடுப்பதற்கு இராணுவத்தை பயன்படுத்திய அரசு

சிறீலங்கா அரசின் திட்டமிட்ட இன அழிப்பில் இருந்து தமிழ் மக்களின் தயாகப்பிரேதங்களை காப்பாற்றுவதற்கு தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களின் தொடர்ச்சியாக இன்று (16) பெருமளவான மக்கள் திருமலை மாவட்டத்தில் உள்ள கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில் கூடி தமது எதிர்ப்பை பெருமபான்மை சிங்கள அரசுக்கு தெரிவித்துள்ளனர்.

பௌத்த ஆலயங்களை அமைப்பதன் மூலம் முதலில் நில ஆக்கிரமிக்பையும் பின்னர் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் மேற்கொண்டுவரும் சிறீலங்கா அரசு தற்போது தமிழ் மக்களின் தொன்மையான கலாச்சார மையாமாகத் திகழும் கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியை ஆக்கிரமிப்பதை எதிர்த்து தமிழ் மக்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

பல இடங்களில் இருந்தும் தமிழ் மக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு சென்றபோதிலும், சிறீலங்கா அரசு அதன் இராணுவத்தின் மூலம் பல இடங்களில் மக்களைத் தடுத்துள்ளது.

திரியாய் பகுதியில் மக்கள் சென்ற பேரூந்தை தடுத்த சிறீலங்கா இராணுவம் அதில் சென்றவர்களை போராட்டத்திற்கு செல்லவிடாது தடுக்க முற்பட்டதுடன், பேரூந்தின் சக்கரமும் காற்றுப்போயுள்ளது தமிழ் மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

kanniya2 கன்னியாவில் கூடிய தமிழ் மக்கள் - தடுப்பதற்கு இராணுவத்தை பயன்படுத்திய அரசுkanniya bus கன்னியாவில் கூடிய தமிழ் மக்கள் - தடுப்பதற்கு இராணுவத்தை பயன்படுத்திய அரசு

இன்று தமிழ் மக்களின் விடுதலைக்காண எழுச்சி பயங்கரவாதம் என்ற சொல்லினால் அமுக்கப்பட்டு வருகிறது – க.வி. விக்னேஸ்வரன்

இன்று துயரத்தை தரக்கூடிய பல உண்மைச் சம்பவங்கள் இன்னும் நூறு ஆண்டுகளில் உரு மறைப்பு செய்யப்பட்டு உரிமைக்கான போரின் வடிவம் வேறு கோணத்தில் காட்டப்பட வாய்ப்புக்கள் உண்டு.இன்று தமிழ் மக்களின் விடுதலைக்காண எழுச்சி பயங்கரவாதம் என்ற சொல்லினால் அமுக்கப்பட்டு வருவதை நாங்கள் அவதானிக்க வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் ஓய்வு நிலை உச்ச நீதிமன்ற நீதியரசருமாகிய க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னாரைச் சேர்ந்த ஈழத்தின் பிரபல எழுத்தாளர் சர்மிலா வினோதினியின்   படைப்பான ‘மொட்டப்பனையும் முகமாலைக் காத்தும்’ என்கின்ற சிறுகதைத் தொகுப்பு நூலுக்கான அறிமுக நிகழ்வு  இன்று (16) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த நூலினை வைபவ ரீதியாக வெளியீடு செய்து வைத்த பின் உரை நிகழ்த்துகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

எமது உண்மையான சரித்திரம் வெளி வராமல் சுதந்திரத்தின் பின்னரான காலம் தொடக்கமே எமது சிங்கள புத்தி ஜீவிகள் பார்த்துக்கொண்டமை இன்று யோசித்துப் பார்த்தால் கூட அறுவருப்பை தருகின்றது.

எனவே தான் எமது வரலாற்றில் சம்பவங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் ஆவண மயப்படுத்தப்பட வேண்டும்.

கடந்த 30 ஆண்டு போர் சூழல்களிலும்,இறுதி யுத்தத்தின் போதும்  ஏற்பட்ட இழப்புக்கள் குறித்த சிந்திக்க அல்லது மீட்டுப் பார்க்க முடியாத நிகழ்வுகளாக அமைந்தாலும் கூட அந்த நிகழ்வுகள் ஆவணப் படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இன்று துயரத்தை தரக்கூடிய பல உண்மைச் சம்பவங்கள் இன்னும் நூறு ஆண்டுகளில் உரு மறைப்பு செய்யப்பட்டு உரிமைக்கான போரின் வடிவம் வேறு கோணத்தில் காட்டப்பட வாய்ப்புக்கள் உண்டு.

இன்று தமிழ் மக்களின் விடுதலைக்காண எழுச்சி பயங்கரவாதம் என்ற சொல்லினால் அமுக்கப்பட்டு வருவதை நாங்கள் அவதானிக்க வேண்டும்.

எனவே எழுத்துத்துரை வளர்க்கப்பட வேண்டும்.தரமான படைப்பாளிகள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் உண்மைகள் நடு நிலையில் இருந்து எழுத்துருவில் ஆராயப்படும்.

எம்மிடையே இன்றும் வாழும் எத்தனையோ இலக்கியப்படைப்பாளிகள் தமது படைப்புக்களை அச்சேற்றம் செய்வதற்கும், அவற்றை வினியோகம் செய்வதற்கும் தேவையான முதலீடுகள் அற்ற நிலையில் அமைதியாக இலை மறை காயாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அப்படிப்பட்ட படைப்புக்களை இனம் கண்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கும், அவர்களின் படைப்புக்களை பிரசுரம் செய்வதற்கும் ஏதுவாக ஒரு புதிய வேலைத்திட்டம் வடமாகாண சபையினால் அறிமுகம் செய்யப்பட்டு அப்படைப்பாளிகளுக்கான கௌரவங்கள் மற்றும் சிறப்புப் பரிசில்கள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படைப்பாளிகள் எமது காலத்தின் போது வடமாகாண சபையால் கௌரவப்படுத்தப்பட்டனர்.

அதே போன்றே சமாந்தர வேலைத்திட்மொன்று பிரதேச மட்டங்களில் உள்ள படைப்பாளிகளை அறிமுகம் செய்வதற்காக ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் இயங்குகின்ற கலாச்சார பகுதியினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இருந்த போதும் இன்னும் பல கலைஞர்கள் இன்னமும் அடையாளப் படுத்தப்படாமல் இருக்கின்றார்கள்.தனிப்பட்ட காழ்ப்பணர்ச்சிகள்,வர்க்க ரீதியான சிந்தனைகள் போன்ற காரணங்களே அவர்களை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

நாம் இவ்வாறான குறுகிய சிந்தனைகளுள் இருந்து வெளியே வர வேண்டும்.நாம் யாவரும் தமிழ் பேசும் மக்கள் என்ற தாயக மொழிச் சிந்தனை மேலோங்க வேண்டும்.அவ்வாறான சிந்தனை மேலோங்கினால் தான் எம்மை ஆள்வதற்கு தகமை உடையவர்கள் ஆவோம்.

தன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும்.மீண்டும்  படைப்பாளிகள் ஊக்கப்படுத்தப்படல் வேண்டும்.

அவர்களின் தரமான படைப்புகள் மக்களிடையே உலா வர ஆவனம் செய்ய வேண்டும்.அந்த வகையிலே சர்மிலா வினோதினியும் ஒரு சிறந்த படைப்பாளராக நீண்ட காலம் எம்மக்களிடையே உலா வர வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த நிகழ்வில் எழுத்தாளர்கள், புத்திஜீவிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஒரே இனத்தை உருவாக்க வழி கூறும் பிக்கு

நாட்டில் ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர பரீட்சையில் சித்திப்பெறும் அனைத்து இன மாணவர்களுக்கும் இராணுவ பயிற்சியினை வழங்கி இலங்கையின் வரலாற்றை அவர்களுக்கு ஆழமாக கற்றுக்கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே   ரதன  தேரர்  தெரிவித்தார்.

அநுராதப்புரத்தில் நேற்று இடம்பெற்ற  நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அனைத்து பாடசாலைகளையும் கலவன் பாடசாலைளாக மாற்ற வேண்டும். ஒரே வகையான சீருடைகள் வழங்கப்பட வேண்டும். தலை மற்றும் முகத்தை மூடகூடாது. அவ்வாறு மூடிக்கொண்டு வர வேண்டுமாயின் மத்திய கிழக்கிற்கு அனுப்ப வேண்டும். இலவச கல்வியின் தந்தை கன்னங்கர கூறியது போன்று, மத்திய கல்லூரிகள், மகா வித்தியாலயங்கள் மற்றும் ஆரம்ப பாடசாலைகளுக்கு மாணவர்களை கட்டாயம் அனுப்புங்கள். அதன் பின்னர் உயர் தரப்பரீட்சையில் தேர்ச்சி பெற்ற அனைவரும் இராணுவத்திற்கு சென்று பயிற்சி பெறுங்கள். அப்போது நாம் ஒரே இனமாகின்றோம். அனைவரும் இலங்கையின் வரலாற்றை ஆழமாக கற்றுக்கொள்ள வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளவர்கள் தமிழை கற்றுக்கொள்வதில் பிரச்சினையில்லை. ஏனைய பகுதிகளை சார்ந்தவர்கள் சிங்களத்தில் வியாபாரத்தில் ஈடுப்பட முடியுமாயின் ஏன் அவர்களால் சிங்கள மொழியை பேச இயலாது.

ஆகவே ஒரு தேசிய கல்வி கொள்கைக்குள் அனைத்து இனத்தவர்களையும் உள்ளடக்க வேண்டும் என தெரிவித்தார்.