அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகரில் இடம்பெற்ற பயங்கரமான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியொன்றிலேயே நேற்று சனிக்கிழமை குறித்த துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட துப்பாக்கிதாரி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
21 வயதுடைய பற்றிக் க்ரூசியஸ் எனும் டல்லாஸ் பகுதியில் வசித்த இளைஞரே குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் அவரை கைதுசெய்துள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின தாக்குதலின் பின்னர் இலங்கைக்கு செல்லவிருக்கும் தனது மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் எதிர்வரும் விடுமுறை காலங்களில் இலங்கைக்கு செல்லும் மக்களுக்காக இந்த அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.
பயங்கரவாதிகள் பொது மக்கள் கூடும் சிறிய இடங்களில் சிறிய தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. சுற்றுலா தலங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள், மற்றும் பிற பொதுப் பகுதிகள் பயங்கரவாதிகளின் இலக்காக இருக்கலாமெனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஸ்மார்ட் டிராவலர் பதிவு திட்டத்தில் பதிவு செய்து அவசரகால உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், முகநூல் மற்றும் ட்விட்டரில் வெளியுறவுத்துறையைப் பின்பற்றலாம். என்றும் அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் , முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் தாய் மாமனுமான அநுருத்த ரத்வத்தவின் மகனான, பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான லொகான் ரத்வத்த தனது அடாவடித் தனங்களை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.
கடந்த 30ஆம் திகதி லொகான் ரத்வத்தவின் மனைவி நிலாவெளி கோபாலபுரம் உள்வீதியில் மீன்வியாபாரம் செய்யும் ஒருவரை தனது ஜீப் வண்டியால் மோதிவிட்டு தப்பிச் சென்று விட்டார். அச்சமயம் அவர் போதையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்செயலுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். தனக்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்களை தனது பாதுகாப்பு பிரிவினரை (MSD- அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவினர்) அனுப்பி துப்பாக்கியை காட்டி மிரட்டி அச்சுறுத்தியுள்ளனர்.
இதனையறிந்த குச்சவெளிப் பொலிசார் மக்களை மிரட்டி வழக்கை வாபஸ் பெறும்படி அழுத்தம் கொடுத்துள்ளனர். அப்பகுதி மக்கள் இது தொடர்பாக விசனம் தெரிவித்துள்ளனர்.
இவர் அநுருத்த ரத்வத்தவின் 3 புதல்வர்களில் மூத்த புதல்வராவார். இவரின் மற்றய சகோதரர்கள் மகேன் மற்றும் ஷானுக்க ஆவர். சிறுவயது முதலே சண்டியனாகவே வளர்ந்தவர். தந்தையின் பெயரை வைத்தே சிறுவயது முதலே கிளப், ஹோட்டல்கள், விடுதிகள் போன்றவற்றில் அடாவடித்தனங்களில் ஈடுபடுபவர். தற்போது பாராளுமன்ற உறுப்பினராக வந்தும் தனது இந்த செயல்களை தொடர்ந்த வண்ணமே உள்ளார்.
அவுஸ்திரேலியா அகதிகள் மட்டுமல்ல இந்தோனேசியாவிலுள்ள 14ஆயிரம் அகதிகளும் சொல்லவொண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, மனுஸ் மற்றும் நவுறு தீவுகளைப் போலவே அடிப்படைப் பிரச்சினைகளை இந்தோனேசியாவிலுள்ள அகதிகளும் அனுபவித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
அங்குள்ள பல அகதிகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், அவர்களில் சிலர் தற்கொலைக்கும் முயன்றுள்ளனர்.
தெற்கு ஜாவாவிலிருந்து கிறிஸ்மஸ் தீவிற்கான கடல் வழியை இராணுவ ரீதியாக தடுத்துள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் கூறினாலும் 2014இற்குப் பின்னர் இந்தோனேசியாவில் உள்ள அகதிகள் தொடர்பில் அவர்கள் அக்கறையுடன் நடந்து கொள்ளவில்லை.
குறிப்பாக ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தினால் அகதிகளை மீளக் குடியமர்த்துவதில் பிரதமர் ஸ்கொட் மோரிசன் கடும் போக்குடையவராக செயற்படுவதாகவும் அவுஸ்திரேலிய இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டது.
இதேவேளை அவுஸ்திரேலியா நோக்கி சட்டவிரோதமாக படகுகள் மூலம் சென்ற பெருமளவு இலங்கையர்களும் இந்தோனேசிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்டபோல் பொலிசாரால் தேடப்படும் ரஷ்யாவிற்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, துபாயில் நடைபெற்ற கோத்பயாவின் “வெளிச்சம்“ என்ற பிரசார நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் மிக் 27 ரக விமானங்களின் கொள்வனவின் போது, 14 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி குறித்த குற்றச்சாட்டு இவரின் மேல் சுமத்தப்பட்டிருந்தது.
2016ஆம் ஆண்டு ஒக்டோபர் 16ஆம் திகதி ரஷ்யாவிற்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்யக் கோரி இன்டபோல் சிவப்பு எச்சரிக்கையை கொழும்பு கோட்டை நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாகி திலீபனின் நினைவு தூபி முன்றலில் இருந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
தமிழ் தலைமைகளின் சரணாகதி அரசியலை கண்டித்து இன்று (03) காலை இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தியிருந்தனர்.
முன்னதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் திலீபனின் நினைவுத்தூபிக்கு சுடரேற்றி, மலரஞ்சலி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து
பௌத்த மேலாதிக்கத்திற்கு அடித்தளம் இட்டது கூட்டமைப்பே!
தமிழர்களுக்கு எதிரான புத்த பயங்கரவாதத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வித்திட்டது.
மாவையே , நீர் ஏன் நவற்குழியில் விகாரை கட்ட ஒப்புக்கொண்டீர்.
சுமந்திரன் புத்தத்திற்கு முதலிடம் கொடுத்து, பௌத்த மேலாதிக்கத்திற்கு துணை போனார்
சம்பந்தன் மோடிக்கு ஸ்ரீலங்கா புத்த நாடு என்று கூறி, பௌத்த மேலாதிக்கத்திற்கு துணை போனார்
கன்னியாவில் இந்து கோவில் உடைத்து விகாரை கட்ட முயன்றபோது, கூட்டணி ஏன் ஊமையானது
நீராவியடி பிள்ளையார் இடத்தில் விகாரை கட்டியபோது தமிழரின் வாக்கு பெற்ற கூட்டணி ஏன் வாய் பொத்திக்கொண்டது
தமிழ் தாயகத்தில் விகாரை கட்ட வேண்டாம்.
தமிழ் தலைமையே, “சிங்களவர்கள் வசிக்கும் இடத்தில் விகாரை கட்டலாம்” என சொல்ல வேண்டாம். இது தமிழ் தாயகத்தில் அதிகமான சிங்கள குடியேற்றத்தை ஊக்குவிக்கும் .
வவுனியாவின் நெடுங்கெனியில் 4700 சிங்கள குடும்பத்திற்கு ரி.என்.எ உறுதி பத்திரங்களை வழங்கி, பல விகாரைகளை உருவாக்குகின்றது.
வரவு செலவு திடடத்தில், ரணிலின் வடகிழக்கு 1000 விகாரைகள் = (சமன்)
கூட்டமைப்புக்கு பெற்றுக்கொண்ட 2 கோடி லஞ்சம்
காணாமல் ஆக்கப்படோரை கண்டறியவும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் பௌத்த மேலாதிக்கத்திக்கமே தடையாகவுள்ளது. ____
நேற்று நீராவியடி பிள்ளையார், இன்று கண்ணியா பிள்ளையார், நாளை எந்த கோவில், கூட்டமைப்பே கூறு!
உங்களின் சகோதரம் தாய்மார்கள், காணாமல் ஆக்கப்படவில்லை என்பதாலும் கற்பழிக்கப்படவில்லை என்பதாலும் சிங்கள ஆமி வேண்டும் என விடாப்பிடியாக உள்ளீர்கள்,
தமிழ் அரசுக் கட்சியா? இல்லை.. கொழும்புக்கு ஒரு முகமும் வடக்கு கிழக்குக்கு மறுமுகமும் காட்டும் டபுள் அரசுக் கட்சியா?
காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறியவும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் பௌத்த மேலாதிக்கமே தடையாகவுள்ளது. போன்ற பதாகைகளை தாங்கி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பேரணி நல்லூர் பின்வீதிவழியாக சென்று நல்லூர் ஆலய முன்றலில் நிறைவடைந்தது.
சவுதி அரேபியாவில் ஆண்களின் அனுமதியின்றி பெண்கள் வௌிநாடு செல்ல, அரசு அனுமதி அளித்துள்ளது. சவுதி அரேபியாவின் புதிய இளவரசராக முகமது பின் சல்மான் பொறுப்பேற்ற பின்னர், பெண்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளை ஒவ்வொன்றாக தளர்த்தி வருகிறார். கடந்த ஆண்டு ஜூனில் பெண்கள் கார் ஓட்டுவதற்கும், விளையாட்டு மைதானங்களுக்கு செல்வதற்கும் அனுமதி வழங்கினார்.
எனினும், சவுதி பெண்கள் வெளிநாடு செல்வதற்கு கணவர், தந்தை அல்லது குடும்ப ஆண் உறுப்பினர்களின் அனுமதி பெற வேண்டும் என்பது அரசு விதியாகும். இது பிடிக்காத பல பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று, அடைக்கலம் கோரினர். அடைக்கலம் கோரினார். இது, சவுதி அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், சவுதி அரசு நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், ‘சவுதியை சேர்ந்த 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்், கணவர் அல்லது தந்தையின் அனுமதியின்றி வெளிநாடு செல்லலாம். பெண்கள் தனியாக விண்ணப்பித்தால் பாஸ்போர்ட் வழங்கப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அந்நாட்டு பெண்கள் வரவேற்றுள்ளனர்.
அமெரிக்காவும்-ரஷ்யாவும் கடந்த 1987ம் ஆண்டு செய்து கொண்ட ‘நடுத்தர ரக அணுசக்தி ஏவுகணை ஒப்பந்தத்தை (ஐஎன்எப்) நேற்று முறித்துக் கொண்டன. அமெரிக்கா – சோவியத் யூனியன் இடையே நிலவி வந்த பனிப்போரால், உலகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இருநாடுகளும் போட்டிப் போட்டு அணு ஆயுதங்களை தயாரித்தன. இது, உலகளவில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அமெரிக்கா – சோவியத் யூனியன் இடையே கடந்த 1987ம் ஆண்டு, ‘நடுத்தர ரக அணு ஏவுகணை தடை ஒப்பந்தம் (ஐஎன்எப்)’ ஏற்பட்டது. இதன்படி, 500 கி.மீ முதல் 5,500 கி.மீ தூரம் வரை செல்லும் அணு ஏவுகணைகளின் பயன்பாட்டை குறைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் அப்ேபாதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனும், சோவியத் தலைவராக இருந்த மிக்கேல் கார்பசேவும் கையெழுத்திட்டனர். உலக ஆயுத கட்டுப்பாட்டு நடவடிக்கையில் இந்த ஒப்பந்தம் ஒரு மைல் கல்லாக கருதப்பட்டது.
ஆனால், இந்த ஒப்பந்த விதிமுறைகளை மீறி ‘9எம்729’ என்ற புதிய ரக ஏவுகணைகளை ரஷ்யா தயாரிப்பதாக அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாகவே குற்றம்சாட்டி வந்தது. இந்த ஏவுகணைகள் 1,500 கி.மீ தூரம் பாய்ந்து தாக்கும் திறன் வாய்ந்தவை என நேட்டோ அமைப்பு கூறியது. ஆனால், இது 480 கி.மீ தூரம் வரைதான் செல்லும் என ரஷ்யா கூறி வந்தது. இந்நிலையில், அணு ஏவுகணை ஒப்பந்தத்தை இனிமேல் தொடர்வதில் அர்த்தம் இல்லை என முடிவு செய்த அமெரிக்கா, இதிலிருந்து வெளியேறும் நடவடிக்கையை 6 மாதங்களுக்கு முன்பே தொடங்கியது. அதன்படி, இந்த ஒப்பந்தத்தை அமெரிக்காவும், ரஷ்யாவும் நேற்று முறித்துக் கொண்டன. இந்த ஒப்பந்தம் இறந்து விட்டதாக ரஷ்யா நேற்று அறிவித்தது.
இந்த ஒப்பந்த முறிவுக்கு ரஷ்யாதான் காரணம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ குற்றம்சாட்டினார். இந்த ஒப்பந்த முறிவு இரு நாடுகள் இடையே மீண்டும் ஆயுத போட்டிக்கு வழிவகுக்கும் என்றும், பனிப்போர் மீண்டும் தொடங்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத இயக்கத்திற்கும் பாதுகாப்புப்படைக்கும் இடையே நீண்ட காலமாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் அரசை எதிர்த்து போட்டி அரசு நடத்தும் தலிபான் இயக்கம்இ நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
பயங்கரவாதிகளை ஒடுக்கும் நோக்கில் உள்நாட்டு பாதுகாப்பு படையினரும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப்படையினரும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வருகிறது.
இந்த சண்டையில் பொதுமக்கள் உட்பட பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில்இ ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் போரை நான் நினைத்தால் 7 நாட்களில் முடிவுக்கு கொண்டுவந்து விடுவேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பின்போது டிரம்ப் கூறியதாவது:-
நான் நினைத்தால் ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் தலிபான் பயங்கரவா திகளுக்கு எதிரான போரை 7 நாட்களில் முடிவுக்கு கொண்டுவந்துவிடுவேன். ஒருவேளை நான் அவ்வாறு செய்தால் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழப்பார்கள். அதில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்களாகவே இருப்பார்கள். ஆனால் நான் பொதுமக்கள் உயிரிழப்பதை விரும்பவில்லை.
மேலும் தலிபான் அமைப்புகளுடன் பல கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதில் நல்ல முன்னேற்றமும் நிலவுகிறது. பேச்சுவார்த்தையின் மூலமே பயங்கரவாதத்தினை ஒழிக்கமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தின் இரண்டு பிரதிநிதிகள் மற்றும் தேர்தல்இ சட்ட மற்றும் பாதுகாப்பு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த மூன்று சுயாதீன வல்லுநர்கள் அடங்கிய குழு ஆய்வு பணியை மேற்-கொள்வதற்காக எதிர்வரும் 5ஆம் திகதி இலங்கை வரவுள்ளது. இந்தக் குழு 5ஆம் திகதி முதல் 13ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்குமென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல்களுக்கான ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணி பயனுள்ளதாகவும் சாத்தியமானதாகவும் இருக்குமா என்பதை மதிப்பிடுவதற்காகவும் உண்மை தகவல்களை சேகரிப்பதே இந்த ஆய்வுத் திட்டத்தின் நோக்கமென தெரிவிக்கப்படுகிறது.