இலங்கை செல்லவிருக்கும் தனது மக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின தாக்குதலின் பின்னர் இலங்கைக்கு செல்லவிருக்கும் தனது மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் எதிர்வரும் விடுமுறை காலங்களில் இலங்கைக்கு செல்லும் மக்களுக்காக இந்த அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.

பயங்கரவாதிகள் பொது மக்கள் கூடும் சிறிய இடங்களில் சிறிய தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. சுற்றுலா தலங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள், மற்றும் பிற பொதுப் பகுதிகள் பயங்கரவாதிகளின் இலக்காக இருக்கலாமெனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஸ்மார்ட் டிராவலர் பதிவு திட்டத்தில் பதிவு செய்து அவசரகால உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், முகநூல் மற்றும் ட்விட்டரில் வெளியுறவுத்துறையைப் பின்பற்றலாம். என்றும் அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.