Home Blog Page 2700

மகிந்தாவிடம் யப்பானும் நட்புக்கரம் நீட்டுகின்றது

யப்பானின் மூத்த இராஜதந்திரியும், ஐக்கிய நாடுகள் நிர்வாகசபையின் உறுப்பினருமான யாசூசி அகாசி அவர்கள் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் சிறீலங்கா அரச தலைவருமான மகிந்தா ராஜபக்சாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நேற்று (19) இடம்பெற்ற இந்த சந்திப்பை முன்னாள் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரீஸ் ஒழுங்குபடுத்தியிருந்தார். இந்த சந்திப்பில் கேகலிய றம்புக்வெல மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் கர்சா விஜயவர்த்தனா ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.

மகிந்தாவின் சகோதரர் கோத்தபாய அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து மேற்குலகின் இராஜதந்திரிகள் மகிந்தாவை தொடர்ச்சியாக சந்தித்துவருவது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதான உடன்படிக்கை மற்றும் அதனைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு உலகநாடுகளால் இழைக்கப்பட்ட அநீதிகளில் அகாசி முக்கிய பங்கு வகித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இராணுவ தளபதி நியமனம் தொடர்பில் நெருக்கடி – ஊடக சந்திப்பை நிறுத்தியது சிறிலங்கா இராணுவம்

சிறிலங்கா இராணுவம் ஆண்டு தோறும் நடத்தும், கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு தொடர்பாக இன்று நடத்தவிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு திடீரென காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.புதிய இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து அனைத்துலக சமூகமும் உள்ளூர் செயற் பாட்டாளர்களும், அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில், சிறிலங்கா இராணு வத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிறிலங்கா இராணுவம் ஆண்டு தோறும் நடத்தும், கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு வரும் 29, 30ஆம் நாள்களில், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற வுள்ளது,இந்தக் கருத்தரங்கு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் நேற்று சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதை அடுத்து, உள்நாட்டிலும், அனைத்துலக அளவிலும் கடுமையான எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அமெரிக்கா, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளும் இந்த நியமனம் குறித்து கவலை வெளியிட்டுள்ள நிலையில், இன்றைய ஊடக சந்திப்பை சிறிலங்கா இராணுவம் காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.

சிறிலங்கா இராணுவத்தளபதி நியமனம் – ஐ.நா பொதுச்செயலர் கவலை

சிறிலங்கா இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கவலையடைவதாக, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசின் சார்பில், அவரது பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.நியூயோர்க்கில் நேற்று நடந்த நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறினார்.“சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட் டுள்ளமை குறித்து சிலர் கேள்வி எழுப்பியி ருந்தனர்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம், ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிக்கையை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

எமது தரப்பில், இந்த நியமனம் குறித்து நாங்களும் கவலையடைகிறோம்.ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கைகளில்,நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பணியாளர் களும், மிக உயர்ந்த மனித உரிமை தரங்களுக்கு அமைய இருக்க வேண்டும் என்ற விடயத்தில், ஐ.நா உறுதியுடன் உள்ளது.

ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் அனைத்து சிறிலங்கா சீருடை பணியாளர்களும் விரிவான மனித உரிமைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.” என்றும் அவர் தெரிவித்தார்.

படையினரால் கைதாகிய பளை வைத்தியரை விடுவிக்கக்கோரி மக்கள் போராட்டம்

பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி மருத்துவமனையின் பொறுப்பதிகாரியான மருத்துவர் சி.சிவரூபன் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது    செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது  இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் பளை வைத்தியசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றசாட்டில் வைத்தியர் எஸ். சிவரூபன் நேற்று முன்தினம் இரவு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.f படையினரால் கைதாகிய பளை வைத்தியரை விடுவிக்கக்கோரி மக்கள் போராட்டம்

இந்நிலையில் கைதான பளை வைத்தியசாலை வைத்தியரின் விடுதலையை வலியுறுத்தியும் பதில் வைத்தியரை நியமிக்குமாறு கோரியும் மக்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முஸ்லிம்கள் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முஸ்லிம் ஒரு­வரை நிறுத்த வேண்டும் -நஸீர் அஹமட்

எந்­த­வொரு ஜனா­தி­பதி வேட்­பா­ளரும் இம்­முறை 50 சத­வீத வாக்­குகளைப்­பெறப் போவ­தில்லை. சிறு­பான்மை மக்­களின் வாக்குகளே ஜனா­தி­பதி யார் என்­பதை உறுதி செய்­யப்­போ­கின்­றது.  எனவே முஸ்லிம் மக்கள் தமது சக்தி எத்­த­கை­யது என்­பதை வெளிக்­காட்டும் விதத்தில் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முஸ்லிம் ஒரு­வரை நிறுத்தி அவ­ருக்கு ஒட்­டு­மொத்­த­மாக தமது முத­லா­வது வாக்கை அளிக்­க­வேண்டும்.

இரண்­டா­வது வாக்கை முஸ்­லிம்­களின் கோரிக்­கை­களை ஏற்று அதற்கு உத்­த­ர­வாதம் அளிக்கும் வகையில் செயற்­ப­டக்­கூ­டிய பிர­தான வேட்­பா­ள­ருக்கு வழங்­க­வேண்டும். இத்­த­கைய நட­வ­டிக்­கையே சம­கால அர­சியல் போக்கில் முஸ்­லிம்­க­ளுக்கு சிறந்த பெறு­பேற்­றைத்­தரும் என கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்சர் நஸீர் அஹமட் தெரி­வித்தார்.

இது­கு­றித்து அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

சம­கால அர­சியல் நிலையில், ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் மிக­முக்­கி­ய­ வ­கி­பாகம் பெறு­கின்­றன. எனவே, முஸ்லிம் மக்கள் தமது ஒட்­டு­மொத்­த­மான 10 இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட வாக்­கு­களை எவ்­வாறு அளிக்கப் போகின்­றார்கள் என்­பது முக்­கி­ய­மா­னது. இந்தப் பொறுப்பை சரி­வர உணர்ந்து தமது பங்­க­ளிப்பைச் செய்­ய­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.

கடந்த காலங்­களில் நம்­பிக்கை நிமித்தம் மேற்­கொள்­ளப்­பட்ட உடன்­பாடுகள், உத்­த­ர­வா­தங்கள், ஒன்­றி­ணைந்த பங்­க­ளிப்­புகள் அனைத்தும் முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வ­ரையில் பாத­கங்­க­ளையும் ஏமாற்­றங்­க­ளை­யுமே ஏற்­ப­டுத்­தின. சமூ­கத்­துக்கு நன்­மை­ய­ளிக்கும் விட­யங்கள் எது­வுமே நடக்­க­வில்லை. ஒரு  அங்­கு­லக்­கா­ணியைக் கூட விடு­விக்க முடி­யாத நிலையும் சாதா­ரண  அர­சியல் அதி­கா­ரத்­தைப்­பெற்றுக் கொள்­ள­மு­டி­யாத அவ­ல­நி­லை­யுமே காணப்­பட்­டது.

இனியும் அதன் வழி­ந­டப்­ப­தற்கு நாம் முயற்­சிக்­கக்­கூ­டாது. முஸ்­லிம்கள் கோழை கள் அல்லர் என்­பதை நிரூ­பிக்கும் விதத்தில் நாம் எமது அரசியல் பாதையை வகுக்­க­வேண்டும். சமூ­கத்தின் தலை­வி­தியை எந்­த­ச­மூ­கமும் நிர்­ண­யிக்­கா­த­வரை அல்­லா­ஹு­த­ஆலா அதை­மாற்ற மாட்­டான்­ என்­கி­றது அல்­குர்ஆன். இதற்­கான சந்­தர்ப்­ப­மா­கவே இம்­முறை ஜனா­தி­பதித் தேர்தல் அமைந்­துள்­ளது. எனவே எமக்­கான ஒரு­வேட்­பா­ளரை நாம் களம் இறக்­க­வேண்டும். முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இதில் கள­மி­றங்­கு­வா­ரானால் அதுவும் சிறப்­பா­னதே.

எமது அபி­லா­ஷைகள், கோரிக்­கைகள், எதிர்­பார்ப்­புகள் போன்­ற­வற்றைச் சரி­வர புரிந்­து­ கொண்டு- ஏற்­றுக்­கொண்டு அவற்­றுக்கு உறு­தி­யான முறையில் உத்­த­ர­வாதம் அளிக்­கக்­கூ­டிய ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கு நாம் ஆத­ர­வ­ளிப்­பது முக்­கி­ய­மா­னது. எனினும் எமது ஒட்­டு­மொத்த  ஒன்­றித்த சக்தி எத்­த­கை­யது என்­பதை நாம் அவர்­க­ளுக்கு காட்­ட­வேண்­டி­யதும் அவ­சியம்.

ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரான முஸ்­லி­முக்கு எமது முத­லா­வது வாக்கை அளிக்­க­வேண்டும். பின்னர் எமது கோரிக்­கைகளை ஏற்றுக் கொண்ட வேட்­பா­ள­ருக்கு இரண்­டா­வது வாக்கை அளிக்­க­வேண்டும். காரணம் முஸ்லிம் வேட்­பாளர் பெற்­றுக்­கொண்ட அத்­த­னை­வாக்­கு­களும் மற்­றைய வேட்­பா­ள­ருக்கும் கிடைக்­கப்­பெற்­ற­தையும் இந்­த­வாக்­குகள் மூலமாகத்தான் அவர் வெற்றி பெற்றார் என்பதையும் உறுதி செய்யவேண்டியதும் அவசியமானது.

இந்த முக்கியத்துவத்தில் எமது வகிபாகம் எத்தனை சக்திமிக்கது என்பதை எடுத்தி யம்பவே முஸ்லிம் தமக்கான ஒரு வேட்பா ளரை நிறுத்தி அவருக்கு தமது ஒட்டுமொத்த வாக்குகளை முதலில் அளித்து தமது சத்தியை வெளிப்படுத்த வேண்டும் என்ப தை வலியுறுத்த விரும்புகிறேன்  என்றார்.

டெங்கு நோயினால் நாட­ளா­விய ரீதியில் 56 பேர் உயி­ரி­ழப்பு , சுமார் 38,180 பாதிப்பு

இலங்கையில் டெங்கு நோய்த் தாக்­கத்­தினால் இவ்வருடம் ஜன­வரி முதல் ஆகஸ்ட்  16 ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் நாட­ளா­விய ரீதியில் மொத்தம் 56 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும், சுமார் 38,180பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சுகா­தார அமைச்சின் தக­வலில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

குறித்த காலப்­ப­கு­தியில் மேல் மாகா­ணத்தில் மாத்­திரம் 17,069 பேர் டெங்­கினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கொழும்பு மாவட்­டத்தில் மாத்­திரம் 8,052 பேர் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சுகா­தார அமைச்சு மேலும் தெரி­வித்­துள்­ளது.

தற்­போ­தைய மழையுடன் கூடிய கால­நி­லையைத் தொடர்ந்து டெங்கு நோய் தொடர்பில் எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் கொழும்பு, கம்­பஹா, களுத்­துறை, இரத்­தி­ன­புரி, காலி, மாத்­தறை ஆகிய ஆறு மாவட்­டங்கள் டெங்கு வலயங்களாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

டெங்கு நோய் தொடர்பில் பொது­மக்கள் எப்­போதும் அவ­தானம், முன்­னெச்­ச­ரிக்­கை­யுடன் நடந்துகொள்ள வேண்டும் என வைத்­தி­யர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். காய்ச்சல் ஏற்­பட்­ட­வுடன் தாம­தி­யாது அரு­கி­லுள்ள அரச வைத்­தி­ய­சா­லையில் அல்­லது தர­மான வைத்­தி­ய­ரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்­டு­மென பொது­மக்கள் கேட்டுக்கொள்ளப்­பட்­டுள்­ளனர்.

அத்­துடன், சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குண­ம­டை­யாது இரண்டு நாட்­க­ளுக்கு நீடிக்­கு­மானால் முறை­யான இரத்தப் பரி­சோ­தனை அவ­சி­ய­மெ­னவும், வீட்டு வைத்­தியம் வேண்­டா­மெ­னவும் பொது­மக்கள் மேலும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளனர்.

குறிப்­பாக கர்ப்­பிணித் தாய்­மார்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்த வேண்­டு­மெ­னவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. கர்ப்­பி­ணித் தாய்மார் காய்ச்­ச­லினால் பாதிக்­கப்­படும் முதல் நாளே வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட வேண்டும் எனவும் ஆலோ­சனை தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

காய்ச்சலினால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் வைத்­தி­ய­ரினால் சிபார்சு செய்­யப்­பட்ட மருந்து மாத்­தி­ரை­களை மாத்­திரம் உட்­கொள்­வ­துடன், வேலைத்­த­ளங்கள், பாட­சா­லைக்குச் செல்­லாது, வீட்டில் ஓய்­வெ­டுக்க வேண்டும் எனவும் வைத்­திய ஆலோ­சனை தெரி­விக்­கின்­றது.

அனைத்­து­வி­த­மான டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் தொடர்பில் பொது மக்கள் விஷேட அவ­தானம் செலுத்த வேண்­டு­மெ­னவும், வீடுகள், அலு­வ­ல­கங்கள், பாட­சா­லைகள் மற்றும் சுற்­றுப்­புறச் சூழலை, சுத்தம் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுள்ளனர். குறைந்தது வாரமொன்றிற்கு 30 நிமிடங்களை டெங்கு ஒழிப்பு துப்புரவுக்காக ஒதுக்கி, பணியில் ஈடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விமானப்படை  அதிகாரி பலி; பரசூட்டில் இருந்து குதித்த போது சம்பவம்

சிறிலங்கா இராணுவ சிறப்புப் படைப் பிரிவின் அதிகாரி ஒருவர், பரசூட்டில் இருந்து குதித்த போது, நிலத்தில் வீழ்ந்து மரணமானார்.

அம்பாறை சிறிலங்கா விமானப்படைத் தளத்தில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா விமானப்படை விமானத்தில் இருந்து, பரசூட் மூலம் குதிக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரே, எதிர்பாராத விதமாக நிலத்தில் வீழ்ந்து மரணமானார்.

சுமார் 7000 அடி உயரத்தில் இருந்து குதித்த வொரன்ட் ஒவ்பிசரின், பரசூட் சரியாக விரியாததால், அவர் நிலத்தில் வீ்ழ்ந்தாக, தகவல்கள் தெரிவிக் கின்றன.

 

அமெரிக்கவின்  நிகழ்ச்சிநிரல் படியே தாக்குதல் நடைபெற்றது.விமல் வீரவன்ச

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நடத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். ஹொக்கந்தர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார்.

தற்கொலைதாரி சஹ்ரான் திடீரென உருவாகியமைக்கு என்ன காரணம்? அவருக்கு அதுவரை எந்தவொரு கோரிக்கையும் இருக்கவில்லை. தாக்குதலு க்கான உரிமையை ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஏற்ற போதிலும் அவர்கள் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.

சஹ்ரான் போன்ற தீவிரவாதிகள் 2015 ஜனவரி 8 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிக்காக வேலை செய்தனர். சஹ்ரான் உள்ளிட்டவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர செயற்பட்டதாக சாய்ந்த மருது மக்கள் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கூறினர்.

2017 ஆம் ஆண்டில் குண்டு தயாரிப்பிற்கான பொருட்களை நாட்டுக்கு கொண்டு வந்ததுடன் அப்போது அவர்களுக்கு எதிராக பொலிஸார் செயற்படவில்லை, அவசர தருணங்களில் ஆட்சியை காப்பாற்றும் சக்தியாக சஹ்ரானை பாவித் தனர்.

சஹ்ரான் பின்னால் மேற்குலக நாடுகள் இருந்தன. அவர்களே ரணில் விக்ரமசிங்க என்ற பொம்மையை பிரதமராக்கினர். அவர்கள் அதனூடாக நாட்டை கைப்பற்ற முனைகின்றனர். நாட்டில் உள்ள பல இடங்களை கையகப் படுத்தும் நோக்கில் அமெரிக்கா விசேட காணிச்சட்டத்தை கொண்டுவர உதவியதாகவும் விமல் வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளார்.

 

ஆசியாவிலுள்ள அமெரிக்காவின் இராணுவதளங்களை ஒரு சிலமணித்தியாலங்களில் அழிக்ககூடிய திறன் சீனாவிற்குள்ளது

ஆசியாவிலுள்ள அமெரிக்காவின் இராணுவதளங்களை ஒரு சிலமணித்தியாலங்களில் அழிக்ககூடிய திறன் சீனாவிற்குள்ளது என அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைகழகத்தின் அமெரிக்கா குறித்த கற்கை நிலையம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஆசியாவில் அமெரிக்கா மாத்திரம் தற்போது  வலிமையான சக்தியில்லை  என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய அறிக்கை சீனாவின் ஏவுகணைகளால் ஓரிரு மணித்தியலாங்களில் அமெரிக்காவின் தளங்களை  அழிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.

இந்தோபசுவிக்கிற்கான அமெரிக்காவின்  பாதுகாப்பு தந்திரோபாயம் கடும் குழப்பநிலையிலுள்ளது எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா சீனாவிடமிருந்து தனது சகாக்களை பாதுகாப்பதில் நெருக்கடியை சந்திக்கலாம் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவின் சக நாடுகளான அவுஸ்திரேலியா ஜப்பான் போன்றவை தங்கள் படையணிகளை மீள கட்டியெழுப்பவேண்டும் , அமெரிக்காவுடனான உறவினை மேலும் பலப்படுத்தவேண்டும் எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா அதன் சகாக்களைவ விட சீனா ஏவுகணை விடயத்தில் மிகவும் பலம் பொருந்தியதாக மாறி வருகின்றது என  குறிப்பிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

இலங்கை – இந்தியாவிற்கிடையிலான கப்பற் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டிருந்த சேவையை மீள ஆரம்பித்த போதும், அதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்ததால் நிறுத்தப்பட்டிருந்தது,

எனினும் இதனை மீள நடைமுறைப்படுத்தப்படுத்துவதன் மூலம் பயணிகளின் போக்குவரத்து வசதி போன்று பொருட்களின் பரிமாற்றத்திற்கும் அத்தியவசியமானதாக அமையும். அத்துடன் சுற்றுலாத்துறையும் அபிவிருத்தி அடையும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுடன் நேரிடையான தொடர்புகளை மேற்கொள்வதற்கு அண்மைக்காலமாக இந்தியா முயன்றுவருவது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போதைய திட்டங்கள் சிறீலங்காவில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.