Home Blog Page 2420

மக்கள் தந்த ஆணையின் படியே ஜெனீவா தீர்மானத்திலிருந்து வெளியேற்றம்: மஹிந்த சமரசிங்க

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் அளித்த ஆணையின்படியே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நல்லாட்சி அரசின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களிலிருந்தும் விலகுவதற்கு கோட்டாபய அரசு தீர்மானித்துள்ளது என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் முன்னைய அரசின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களிலிருந்தும் விலகுவதற்கு கோட்டாபய அரசு தீர்மானித்திருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. மாறாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘சுபீட்சமான எதிர்காலம்’ என்ற தொனிப் பொருளிலான தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயம் ஏற்கனவே கூறப்பட்டிருக்கின்றது. அதற்கு அமையவே இந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது” என்றார்.

அரசின் முடிவு பாரதூரமான விளைவை ஏற்படுத்தும்: மங்கள சமரவீர கடும் எச்சரிக்கை

“ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகுவது என்ற அரசின் முடிவு முற்றிலும் முரண்பாடான எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்” என ஐ.தே.க. எம்.பி.யும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான மங்கள சமரவீர எச்சரித்துள்ளார்.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் முடிவு தொடர்பாக அவர் கூறுகையில், “ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் இருந்து விலகுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் முற்றிலும் தவறானதாகும்.

சர்வதேசத்தில் இலங்கை இராணுவத்தினரை நல்லாட்சி அரசாங்கம் காட்டிக்கொடுக்கவில்லை. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பிறகு அப்போதைய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் செயலாளர் நாயகம் பன்கீ மூனிடம் இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது யுத்தக் குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அவை தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் குறிப்பிட்டு ஆவணங்களில் கைச்சாத்திட்டுள்ளார்கள். இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பாளியாகக் காணப்பட்டார்.

யுத்தம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அரசாங்கம் ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. குறைந்தபட்சம் எவ்விதமான முன்னேற்றகர நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவும் இல்லை. இதன்காரணமாகவே நாட்டுத் தலைவரும், இராணுவ அதிகாரிகளும் மின்சாரக் கதிரைக்குச் செல்லவேண்டிய நிலை தோற்றம்பெறும் என்ற கருத்தும் அப்போது குறிப்பிடப்பட்டன. சர்வதேச பொறிமுறையிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே ஜெனிவாவின் அழுத்தமான நிலைப்பாடாக இருந்தது.”

அரசாங்கத்தின் முடிவால் சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கும்: பாராளுமன்றத்தில் மாவை

47 நாடுகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையில் இருந்து அரசு விலக எடுத்திருக்கும் தீர்மானத்தினால் சர்வதேசத்தை நாட்டுக்குள் வலிந்து அழைக்கும் நிலை ஏற்படும். அதன்மூலம் தமிழ் மக்களின் இனப்பிச்சினைக்கான தீர்வுக்கு வழிபிறக்க இடமிருக்கின்றது என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம் பெற்ற ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மோசடிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்-

இலங்கை தொடர்பான ஐ.நா.வின் 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசு தற்போது அதிலிருந்து தாம் விலகுவதாக அறிவித்துள்ளது. பொறுப்புக்கூறல், இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுதல், நிலங்களை விடுவித்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் போன்றவற்றுக்கே அனுசரணை வழங்கிய இலங்கை அரசு தற்போது அதிலிருந்து விலகியுள்ளது. அரசின் இந்தமுடிவை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.

அத்துடன் அரசின் இந்த விலகல் அறிவிப்பால் தமிழ் மக்களுக்கு நன்மையும் உண்டு. ஏனெனில் ஐ.நா.வின் 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசு தற்போது அதிலிருந்து தாம் விலகுவதாக அறிவித்துள்ளது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசின் இந்தத் தீர்மானத்தினால் இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கப் போகின்றன. அரசு சர்வதேசத்தை வலிந்து அழைத்துக்கொள்ளப் போகின்றது.

அத்துடன் அரசு விலகப்போகும் தீர்மானமானது மனித உரிமைகள் சபையின் 47 நாடுகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாகும். அதனால் எதிர்காலத்தில் சர்வதேச நாடுகள் இங்கை தொடர்பாகக் கூடுதல் கவனம் செலுத்தும் வாய்ப்பு இருக்கின்றது. சர்வதேச நாடுகளின் இலங்கை மீதான தலையீடுகள் மூலம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு வழிபிறக்கக்கூடும்-என்றார்.

அரசியல் சித்து விளையாட்டில் மருதூர் மக்களின் சந்தோசம் தொலைந்து போனது-மனோ

சாய்ந்தமருது நகரசபையை அங்கீகரித்து வர்த்தமானி பிரகடனம் செய்து, மருதூர் மக்களை பட்டாசு கொளுத்தி, பாற்சோறு பகிர்ந்து கொண்டாட விட்டு, சில தினங்களில் அதை இடை நிறுத்த அமைச்சரவையில் தீர்மானிப்பது அந்த ஊர் மக்களை அவமானப்படுத்தும் அகோர செயல்.

இதற்கு பதில் இப்படி அவசரப்பட்டு கொடுக்காமலேயே இருந்திருக்கலாம்.

இந்த இடை நிறுத்தலுக்கு உள்ளே இனவாத ஓட்டம் இருப்பது நன்கு புலனாகிறது. பல ஆளும் கட்சி அரசியல் அரசியல்வாதிகளும், அரசு சார்பு பெளத்த துறவிகளும் கச்சை கட்டிக்கொண்டு, “இதை ஏன் செய்தீர்கள்” என அரசு தலைவரை மொய்த்தது எங்களுக்கு தெரியும்.

அதேபோல் ஐ.தே.கட்சியை சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்களும் முட்டாள்தனமான கருத்துகளை வெளியிட்டார்கள். இவர்களை நேரில் அழைத்து இப்படி பேசாதீர்கள் என நான் கூறினேன்.

எது எப்படி இருந்தாலும், ஒரு அரசாங்கம் என்கின்ற போது அதற்கு பொறுப்பு அதிகம். “எடுத்தேன், கவிழ்த்தேன்” என அரசாங்கம் காரியமாற்ற முடியாது. தமிழ், முஸ்லிம்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. எனவே அவர்களை நாம் கணக்கில் எடுக்க மாட்டோம் என இந்த அரசு கூறமுடியாது.

யார் வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும், பதவிக்கு வந்த உடன் அது நாட்டு மக்கள் அனைவரது அரசாங்கம்தான். அப்படித்தானே, சுதந்திர தின உரையில் ஜனாதிபதி சொன்னார் என பல திடீர் தேசபக்தர்கள் குதூகலமாக சொல்லி, பட்டாசு கொளுத்தி கொண்டாடினார்கள்.

இதன்மூலம் இந்த அரசு ஒரு சிங்கள பெளத்த அரசு நிறுவனம் மட்டுமே என மீண்டும் ஊர்ஜிதம் ஆகியுள்ளது. நான் இருந்த அரசு அல்லது நமது கூட்டணி ரொம்ப சுத்தமானது என நான் சொல்ல வரவில்லை. ஆனால், கேள்வி கேட்கும் சுதந்திரம் இங்கே இருக்கிறது என்பது கேள்வி கேட்கும் முதுகெலும்புள்ள எனக்கு நன்கு தெரியும்.

இதனால்தான் தம்மை மாற்றிக்கொள்ளாதவரைக்கும் இத்தகைய பெரும் இனவாதிகளுடன் எனக்கு எப்போதும் “செட்” ஆவதில்லை.

இந்த அரசுக்கு இனியும் வெள்ளை அடிக்கும் சிறுபான்மை மேதாவிகளுக்குதான் இது வெளிச்சம். இதற்கும் ஒரு நகைச்சுவை காரணத்தை கண்டு பிடித்து சொல்லுங்கள், மேன்மக்களே!

இந்த இனவாத, அரசியல் சித்து விளையாட்டில் அப்பாவி மருதூர் மக்களின் சந்தோசம் தொலைந்து போனது. இதையிட்டு மனம் வருந்துகிறேன்

அதேபோல் நல்லவேளை நுவரேலியா மாவட்டத்தின் புதிய ஆறு உள்ளுராட்சி மன்றங்களை, விட்டுக்கொடுக்காமல், தடைகளை மீறி அப்போதே செய்து முடித்தோம் என நிம்மதியடைகிறேன்.

“இந்த நாடு, நம்ம நாடு இல்லை” என்ற எண்ணம் இன, மத, மொழி சிறுபான்மை மக்களுக்கு ஏற்படா வண்ணம், ஆட்சி செய்பவர்தான் உண்மை தலைவன் அல்லது தலைவி. அப்படிதான், நெல்சன் மண்டேலா, லீ குவான் யிவ் ஆகியோர் தம் நாடுகளை ஆண்டார்கள்.

இங்கே தலைவர் இல்லை. மதம் பிடித்த தேர்தல் அரசியல் நடிகர்கள்தான் இருக்கிறார்கள்.

வடக்கு கிழக்கை பிரித்த பேரினவாதம் கிழக்கையும் துண்டாடாத் துடிக்கிறது

கடந்த காலத்தில் தமிழர்களை பலவீனப்படுத்துவதற்காக வடக்கு கிழக்கை துண்டாடி இப்போது கிழக்கையும் துண்டாடி மாவட்டத்திலுள்ள வாக்குகளை பிரிப்பதற்காக இனவாதக் கட்சிகள் பல செயல்வடிவங்களை கொடுத்திருக்கின்றன. அதன்கீழ் சமூகத்துடன் எந்த சம்பந்தமும் இல்லாத தமிழர்களின் வலியை உணராத சிலர் போராட்டம் தொடர்பில் எந்த தெளிவும் இல்லாத சிலர் சொந்த நலன்களிற்காகவும் வாக்குகளை பிரிப்பதற்காகவும் மட்டக்களப்பு,அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் முகவர்களாக செயற்படுவதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் தலா ஒரு தமிழ் பிரதிநிதியையாவது பெறுவதற்கு மக்கள் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றனர். மக்களின் விருப்பத்தை குழப்புவதற்கு முயற்சிக்காமல் முகவர்களாக செயற்படுபவர்கள் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.

இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையை பொறுத்தவரை தேர்தல் தொடர்பான அறிவித்தல்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாதிருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் பாராளுமன்ற தேர்தலை நடத்தப்போவதாக அறிவித்த நிலையில் வடக்கு கிழக்கில் தேர்தல் நிலவரங்கள் சூடுபிடித்திருக்கின்றன.

எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக தமிழர்கள் 40வீதம்,முஸ்லிம்கள் 37வீதம், சிங்களவர்கள் 23வீதம் இருக்கின்ற கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை நான்கு தமிழ் பிரதிநிதிகள் உருவாக்கப்பட வேண்டும். அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் தலா இரண்டு பிரதிநிதிகளை உருவாக்க முடியும்.

கடந்த காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் ஒரு தமிழ் பிரதிநிதி வந்தாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பிரதிநிதிகளை இரண்டு தடவைகள் மக்கள் பெற்றிருக்கின்றனர். இந்த தேர்தலிலும் நான்கு பிரதிநிதிகளை பெற வேண்டும் என்பது மட்டக்களப்பு மக்களின் ஆசையாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 76வீதம் தமிழர்களும் 23வீதம் முஸ்லிம்களும் ஏனைய இனத்தவர்கள் 1வீதமும் உள்ள நிலையில் நானடகு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்தேயாக வேண்டும்.

கடந்த காலங்களில் 76வீத தமிழர்களுக்கு 3பாராளுமன்ற உறுப்பினர்களும் 23வீத முஸ்லிம்களுக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டதற்கு தமிழ் சமூகத்திலுள்ள ஒருசிலரின் தனிப்பட்ட நலன்தொடர்பான செயற்பாடுகளே காரணமாகும்.

இந்தத் தேர்தலில் தமிழ் சமூகம் விழிப்படைந்திருப்பதால் 76வீத தமிழர்களுக்கு 4பாராளுமன்ற உறுப்பினர்களை பெறுவதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு தமிழர்கள் தயாராக இருக்கின்றனர்.

கடந்த காலத்தில் தமிழர்களை பலவீனப்படுத்துவதற்காக வடக்கு கிழக்கை துண்டாடி இப்போது கிழக்கையும் துண்டாடி மாவட்டத்திலுள்ள வாக்குகளை பிரிப்பதற்காக இனவாதக் கட்சிகள் பல செயல்வடிவங்களை கொடுத்திருக்கின்றன. அதன்கீழ் சமூகத்துடன் எந்த சம்பந்தமும் இல்லாத தமிழர்களின் வலியை உணராத சிலர் போராட்டம் தொடர்பில் எந்த தெளிவும் இல்லாத சிலர் சொந்த நலன்களிற்காகவும் வாக்குகளை பிரிப்பதற்காகவும் மட்டக்களப்பு,அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் முகவர்களாக செயற்படுவதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்

எமது சமூகம் எதிர்வரும் தேர்தல்களில் அவர்களை நிராகரிப்பார்கள். அம்பாறை மாவட்டத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் தலா ஒரு தமிழ் பிரதிநிதியையாவது பெறுவதற்கு மக்கள் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றனர். மக்களின் விருப்பத்தை குழப்புவதற்கு முயற்சிக்காமல் முகவர்களாக செயற்படுபவர்கள் ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.

தேசிய பட்டியலுக்காக வாக்கெடுப்பதற்கும் கட்சிச் சின்னத்தை அறிமுகப்படுத்துவதற்கும் கட்சிக் கொள்கைகளை சொல்வதற்கும் பாராளுமன்றத் தேர்தல் களம் உகந்ததல்ல.

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ஆயுதப் போராட்டத்தை நடத்திய தமிழ் சமூகம் அரசியல் அதிகாரங்களிலிருந்து உரிமையா சலுகையா என்ற விடயத்தில் உரிமைக்காக தங்களை அர்ப்பணித்தவர்களாவர். அப்படிப்பட்ட தமிழ் சமூகம் விகிதாசாரத்திற்கு ஏற்றாற்போல தங்கள் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக பாராளுமன்ற தேர்தலில் மிகவும் விழிப்படைந்த நிலையில் உள்ளனர்.

அதை பெறுவதற்காக கட்சிகள் பொது உடன்பாட்டிற்கு வரவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் தங்களை தங்களுக்குள் சுயபரிசோதனை செய்துகொண்டு அனைவரையும் அரவணைத்து பொது உடன்பாட்டிற்கு வரவேண்டும். ஒரு மனிதனைப் பொறுத்தவரை சமூகத்திற்காக உழைப்பதும் பேசுவதும் செயற்படுவதும் தன்னை அர்ப்பணிப்பதும் அவனது உரிமையாகும். அந்த உரிமையை மதித்து எதிர்காலத்தில் ஒரு வலுவான அதிகாரமுள்ள தலைமைகளை மாற்றுவதற்கு செயற்படவேண்டும்.

கடந்த வாரம் கிழக்கு மாகாணத்தில் தமிழ் வாக்குகளை பிரித்துவிடக்கூடாது என்பதற்காக பிரிபடுவதற்கு உடந்தையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக எனது கட்சியிலிருந்து தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற செயற்றிட்டங்களில் நான் என்னை இணைத்துக்கொள்ள மாட்டேன் என்ற விடயத்தை தெளிவாக கூறியிருக்கின்றேன்.

இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலை இயக்கம்,தமிழீழ விடுதலைக் கழகம் ஆகிய மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற பிரதிநிதிகளிடம் இரா.துரைரெட்ணமாகிய எனது தலைமையை அங்கீகரிக்க வேண்டும், இணைந்து செயற்பட வைப்பதற்கான உத்தரவாதத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைத்திருக்கின்றேன். இது தொடர்பில் மூன்று கட்சிகளும் ஆராய்ந்து மிகவிரைவில் முடிவுகளை அறிவிப்பார்கள் என நான் நம்புகின்றேன். இதற்கேற்ற வகையில் எனது செயற்பாடுகள் அமையும்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் வாக்குகளை பிரிப்பவர்களுடன் நான் கூட்டு சேர்ந்து தேர்தலில் களமிறங்க மாட்டேன் என்ற உத்தரவாதத்தை வழங்குவதோடு எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கான ஆர்வத்தை நான் வெளிப்படுத்தியிருக்கின்றேன். அதற்கான உறுதிமொழியை அவர்கள் வழங்க வேண்டும்.

இந்த தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் பல விடயங்களை முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து போட்டியிடுவதற்கு நான் தீர்மானித்திருக்கின்றேன்.

தமிழ் வாக்குகள் பிரித்துவிடக்கூடாது,இன ஐக்கியம் பேணப்படவேண்டும் என்பதற்காக மாவட்டத்திலிருக்கின்ற பத்திரிகையாளர்கள் உட்பட பல நல்ல உள்ளம் கொண்டவர்கள் மேற்கொள்கின்ற முயற்சிகள் பாராட்டத்தக்கவையாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு இலட்சம் வாக்குகளில் மூன்று இலட்சம் வாக்குகள் தமிழர்களுடையதாகும். கடந்த பத்து ஆண்டுகளை பார்க்கின்றபோது தமிழர்கள் வாக்களிக்கின்ற வீதமானது அதிகரித்துச்செல்கின்றது. உரிமையா சலுகையா என்ற கேள்விக்கு கிழக்கு மாகாண மக்கள் இரண்டும் தேவை அதிகாரப்பரவலாக்கலும் அவசியம், அபிவிருத்தியும் அவசியம் என்ற முடிவிற்கு வந்திருக்கின்றனர்.

அந்தவகையில் இம்முறை நடக்கவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதேபோல் கட்சிகளுக்கு வாக்களிக்கின்ற வீதமும் அதிகரிக்கும். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 1140கிராமங்கள் இருக்கின்றன,340கிராம சேவையாளர் பிரிவுகள் இருக்கின்றன.இப்பிரிவுகளில் இருக்கின்ற மூன்று இலட்சம் வாக்காளர்களில் 75வீதமானோர் வாக்களித்தால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

மூன்று நான்கு கட்சிகள் ஒன்றிணைந்து கட்சிகளை உருவாக்கியிருக்கின்றன.பல சின்னங்கள் அவர்களிடம் இருக்கின்றன. அவர்கள் கூட்டு சேர்ந்த கட்சிகள்தான் இங்கு போட்டியிடாது என்று கூறியிருக்கின்றனர்.அவர்களிடம் பல கட்சிகளும் சின்னங்களும் கைவசம் இருக்கின்றன. தமிழர்களின் வாக்குகளை சிதைத்து தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதே அவர்களின் நோக்கமாகும்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பிரிந்து தேர்தல் கேட்கக்கூடாது என்ற அடிப்படையில் இருப்பவன் நான். ஆனால் கிழக்கு மாகாணத்தில் தற்போது ஆளுமையிலுள்ள அதிகாரத்திலுள்ள கட்சி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாகும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது பத்து வருடங்களுக்கு முன்னர் விடயங்களை பார்த்தது போன்று இப்போது பார்க்கக்கூடாது. போட்டித்தன்மைக்கு ஏற்றவாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய செயற்றிட்டங்களை முன்வைக்க வேண்டும். மாவட்டத்தில் வாக்குகள் பிரிந்துபோகாமல் பார்த்துக்கொள்வதற்காக பேசாமல் இருப்பதென்பது செயல் வடிவமல்ல, செயற்திறனுமல்ல. வாக்குகளை மொத்தமாக பெற்று நான்கு பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு அனைத்துக் கட்சிகளுடனும் பேசி பொது உடன்பாட்டிற்கு வரவேண்டும். இதனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தீர்மானிக்க வேண்டும். தீர்மானிக்கும் பட்சத்தில் அது ஆரோக்கியமானதாக இருக்கும்.

புதிய கட்சிகள் கிழக்கு மாகாணத்தில் போட்டியிடுவதானது அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் பிரதநிதித்துவத்தை இல்லாமல் செய்யும் செயற்றிட்டமாகும். மட்டக்களப்பில் தமிழ் பிரதநிதித்துவத்தை குறைக்கின்ற செயற்றிட்டமாகும்.

கடந்த காலங்களில் 76வீத தமிழர்களுக்கு 3பாராளுமன்ற உறுப்பினர்களும் 23வீத முஸ்லிம்களுக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டமைக்குரிய முழுப்பொறுப்பும் வாக்குகளை பிரிப்பதற்கு முன்னின்றவர்களே பொறுப்பேற்க வேண்டும். இந்த தவறை எதிர்வரவிருக்கும் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் செய்ய மாட்டார்கள் என நான் நம்புகின்றேன்.

நான்கு பிரதிநிதிகளை பெறுவதற்கான செயல்வடிவங்களை மக்கள் ஏற்கனவே ஆரம்பித்திருக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் தமிழர்வாக்குகளை பிரிப்பதற்கு எதிராக குரல்கொடுப்பதற்கும் அடிப்படை விடயங்களை பேசுவதற்கும் தலைமை தாங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதற்கெதிராக போராடுவதற்கு அணிதிரளுமாறு மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு நான் அறைகூவல் விடுக்கின்றேன்.

தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை.

வவுனியா மாவட்டத்தில் இலை மறை காய்களாக பல திறமைகளுடைய கிராம்ப்மாபுறங்களில் வாழும் மாணவர்கள் ள்அண்மைக்காலங்களில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தமது ஆளுமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்

வ்வுனியாவில் சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்விகற்கும் இரண்டு மாணவிகள் தேசிய மட்டத்தில் இடம்பெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் வெங்கலப்பதக்கத்தை வென்று கிராம்ப்புறங்களில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

14 வயது பெண்கள் பிரிவில் போட்டியிட்டு மயில்வாகனம் பிளசிகா,மற்றும் ராஜசேகரம் வினோதா ஆகிய இரண்டு மாணவிகளும் பல சவால்களுக்கு மத்தியில் தெசிய மட்டத்தில் இடம்பெற்ற குத்துச்சண்டைப் போட்டிக்கு தேர்வாகி மொறட்டுவையில் இடம்பெற்ற போட்டியில் பங்குபற்றி வெங்கலப் பதக்கத்தைப் வெற்றிபெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளனர்.

DSC03975 தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை.

DSC03974 தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை.

DSC03972 தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை.

DSC03971 தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை.

DSC03970 தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை.

DSC03968 தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை.

DSC03982 தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை.

DSC03981 தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை.

DSC03986 தேசியமட்ட குத்துச்சண்டைப் போட்டியில் வவுனியா மாணவிகள் வரலாற்றுச் சாதனை.

மாணவிகளை ஊக்கப்படுத்தும் முகமாக புதுக்குளம் சிவன் ஆலயத்திலிருந்து வாகனப் போரணியுடன் கௌரவமாக அழைத்துவரப்பட்டு மாலை அணிவித்து கௌரவப்படுத்தும் நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் உதவிக்கல்விப்பணிப்பாளர் கு.செந்தில்குமரன் உடல்கல்வி ஆசிரிய ஆலோசகர் இ.ரவிச்சந்திரன் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் திருமதி பத்மா ஜெயச்சந்திரன் பயிற்றுவிப்பாளர்கள் சுரங்கா நிக்சன் மற்றும் பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் பாடசாலை அபிவிருத்திக்குழு பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் கலந்து கொண்டு சாதனையாளர்களை கௌரவித்த நிகழ்க்கான அனுசரணையை லண்டன் சரஸ்வதி பவுண்டேசன் கஜேந்திரன் பிரகலாதினி குடும்பத்தினர் வழங்கி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு

இலங்கை கடற்படையினர் இந்தியக் கடல் எல்லையில் இருந்த மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து இலங்கைத் தூதரை மத்திய அரசு அழைத்து கண்டனம் தெரிவிக்கவேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“வங்கக் கடலில் கச்சத் தீவு அருகே இந்தியக் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஒரு மீனவர் காயமடைந்துள்ளார். இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கதாகும்.

ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத் தீவு அருகே இந்தியக் கடல் எல்லையில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அப்பகுதியில் மீன்பிடிக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதை ஏற்க மறுத்த ராமேஸ்வரம் மீனவர்கள், “இந்தியக் கடல் எல்லைக்குள்தான் நாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கிறோம். அதை ஏன் தடுக்கிறீர்கள்” என்று இலங்கை கடற்படையினரிடம் கேட்டுள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகுகளை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில், ஜேசு என்ற மீனவரின் கண் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்தத் தாக்குதலில் மீன்வர்களுக்கு பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்தியக் கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் நமது எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியிருப்பதை சகித்துக்கொள்ள முடியாது. இது இந்திய இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.

இலங்கை அதிபர், பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருப்பவர்கள் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும், அவர்களிடம் இலங்கைப் படையினரின் அத்துமீறல்கள் குறித்து இந்திய அரசு தெரிவிப்பதும், அதற்கு இனி வரும் காலங்களில் மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்துவதாக இலங்கை அரசு தரப்பில் உறுதியளிக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றாத இலங்கை அரசு, இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவது மன்னிக்க முடியாததாகும். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்காக டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை இந்திய அரசு அழைத்து கண்டிக்க வேண்டும்.

இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்”.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு;9 பேர் உயிரிழப்பு

ஜெர்மனி ஹனூ நகரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இனந் தெரியாத நபர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டால் 9 பேர் பலியாகியதுடன், 5 பேர் வரையில் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜேர்மனியின் பேங்க்பிரட்டின் கிழக்கில் ஹனூ பகுதியில் இருக்கும் ஷீஷா பாரில் ஜேர்மன் நேரப்படி இரவு 10.15 மணிக்கு காரில் வந்த இனந் தெரியாத நபரே குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேக நபர் தாக்குதலுக்குப் பின்னர் அவரது வீட்டில் இறந்து கிடைக்கக் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.தாக்குதலுக்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

150 க்கும் அதிகமான புதிய கட்சிகளுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன- மஹிந்த தேசப்பிரிய

150 க்கும் அதிகமான புதிய கட்சிகளுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.அது தொடர்பான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தற்போது பாராளுமன்ற தேர்தல் மற்றும் புதிய கட்சிகளை பதிவு செய்வது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அதிகளவில் அவதானத்தை செலுத்தி வருவதாகவும், அரசியல் கட்சிகளின் பெயர்கள் மற்றும் சின்னங்களை மாற்றுவது தொடர்பில் பிரச்சினைகளும் காணப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என தாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

செல்லாததானது சாய்ந்தமருது;சிறிலங்கா அமைச்சரவை தீர்மானம்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகரசபையிலிருந்து பிரிந்து சாய்ந்தமருதிற்கு தனியான நகரசபை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தாார்.

நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, கடந்த 15 ஆம் திகதி சாய்ந்தமருதினை தனியான நகர சபையாக அறிவித்து வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.