Home Blog Page 2407

அரசு இணங்கினால் அரசியல் தீர்வைப் பெறமுடியும்-எம்.ஏ.சுமந்திரன்

தற்போதைய ஆட்சியாளர்கள் இணங்கினால் நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

‘ஒருமித்த கருத்து ஒருமித்த பயணமும்’ என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிர்வரும் பொதுத்தேர்தலின்போது நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுமெனவும் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

எனவே எதிர்வரும் பொதுத்தேர்தலினை அதற்கான கருவியாக பயன்படுத்திக்கொள்வதற்கு சகல தமிழ் பிரதிநிதிகளும் ஒருமித்து செயற்பட வேண்டிய தேவை உள்ளதாக அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

நாடுதிரும்பிய இலங்கையருக்கு கொரோனா தொற்று இல்லை

வுகான் நகரில் இருந்து மீட்கப்பட்ட 76 இந்தியர்கள் உட்பட 112 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையில், வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட வுகான் நகரிலிருந்து இந்தியர்களை மீட்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

இதற்காக முதலில் இரண்டு எயார் இந்தியா விமானங்களில் 647 இந்தியர்கள் நாடு திரும்பியிருந்தனர். இதனையடுத்து, வுகான் நகரில் தவிக்கும் மேலும் சில இந்தியர்களை மீட்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக சி17 குளோபல் மாஸ்டர் இராணுவ விமானத்தில் மருத்துவ உபகரணங்களைக் கொண்டு கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி வுகான் நகருக்கு சென்றது.

மருத்துவ உபகரணங்களை சீன அதிகாரிகளிடம் வழங்கிய பின்னர், அந்த விமானத்திலேயே 76 இந்தியர்கள் மற்றும் பங்காளதேசத்தைச் சேர்ந்த 23 பேர், சீனாவைச் சேர்ந்த 6 பேர், மியான்மார், மாலைத்தீவைச் சேர்ந்த தலா 2 பேர், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மடகஸ்கர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 112 மீட்டு கடந்த 27ஆம் திகதி புதுடெல்லிக்கு அழைத்துவந்தனர்.

இந்தியா அழைத்துவரப்பட்ட 112 பேரும் புதுடெல்லியில் உள்ள இராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டனர். இதையடுத்து வுகானில் இருந்து இந்தியா திரும்பிய அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதா என பரிசோதனைகள் செய்யப்பட்டது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில் வுகானில் இருந்து அழைத்துவரப்பட்ட 76 இந்தியர்கள் உட்பட 112 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் வுகானில் இருந்து மீட்கப்பட்ட அனைவரும் இன்னும் சில நாட்களுக்கு முகாமில் தங்கவைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கை.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தினை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கைகளுக்கு இன்று நள்ளிரவுடன் வரவிருக்கிறது.

இந்தநிலையில், நாடாளுமன்றம் நாளை கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், சுப நேரம் இல்லாமையினால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மார்ச் மாதம் 3ஆம் திகதி சுபநேரம் உள்ள போதிலும் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஒரு நாள் பிற்போட நேரிட்டுள்ளது. அவ்வாறு ஒரு நாள் பிற்போட்டால் வேட்புமனு தாக்கல் மற்றும் தேர்தல் நடத்தப்படும் நாளும் பிற்போட நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தை கலைப்பதில் தாமதம் ஏற்படுவதனால் தேர்தலுக்கான சுப நேரம் குறுக்கிடும் எனவும் அந்த பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிடும் எனவும் கூறப்படுகின்றது.

அதற்கமைய தொடர்ந்தும் ஜோதிடர்களின் ஆலோசனை பெற்றுக் கொண்டு எப்படியாவது நாளை திங்கட்கிழமை, நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முப்பாச்சல் போட்டியில் தேசியரீதியில் சாதனைபடைத்த பூநகரி இளைஞன்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் வருடம்தோறும் நடத்தும் தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 31வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா கடந்த 27-02-2020 அன்று வடமத்திய மாகாண விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் நேற்றய தினம் இடம்பெற்ற 20 – 29 வயது பிரிவில் முப்பாய்ச்சல் போட்டியில் 13.69 மீற்றர் பாய்ந்து 2ஆவது இடத்தினை பெற்று கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச இளைஞன் கேதீஸ்வரன் பவீந்திரன் கிளிநொச்சி மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளதோடு வடமாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கு அமைவாக ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்காளர்ளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைவாக எதிர்வரும் தோர்தல்களில் வாக்களிப்பதற்கு இவர்கள் தகுதி பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு வாக்களார் இடாப்புக்கு அமைவாக பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 ஆகும்.

இதற்கு அமைய 2018 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பிலும் பார்க்க வாக்காளர்களின் எண்ணிக்கை 271,789 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை மாவட்டத்துக்கு அமைவாக பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் விகிதாசாரத்தை கவனத்தில் கொள்ளும் போது காலி மாவட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கை ஒன்று ஆக குறைவடைந்துள்ளது.

காலி மாவட்டத்துக்காக இது வரையில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை பத்தில் இருந்து 9 ஆக குறைவடைந்துள்ளது.

பதுளை மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

36,000 நோயாளிகள் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான மொத்தம் 36,117 நோயாளிகள் குணமடைந்து வியாழக்கிழமை மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சீன சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

சீனாவில் 31 மாகாணங்களில் மொத்தம் 78,824 நாவல் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, அத்துடன் 2,788 பேர் இந்த நோயால் இதுவரை இறந்துள்ளனர்

தேசிய கபடி போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியினர் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம்தோறும் நடத்தும் தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 31வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா கடந்த 27-02-2020 ஆம் திகதி வடமத்திய மாகாண விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது

அந்த வகையில் இன்றைய தினம் (29 2 2020) கபடி போட்டியின் இறுதிப் போட்டி இடம்பெற்றிருந்தது. இதில் தேசிய கபடி போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியினர் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்

முன்னதாக 3ம் இடத்தை தெரிவு செய்வதற்கான போட்டி இடம்பெற்றிருந்தது இதில் பொலனறுவை மற்றும் அனுராதபுர அணிகள் மோதிய போட்டியில் அனுராதபுர அணி வெற்றிபெற்று மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

625.0.560.350.390.830.053.800.670.160.91 1 3 தேசிய கபடி போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியினர் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்

625.0.560.350.390.830.053.800.670.160.91 2 1 தேசிய கபடி போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியினர் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்

625.0.560.350.390.830.053.800.670.160.91 3 1 தேசிய கபடி போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியினர் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்

625.0.560.350.390.830.053.800.670.160.91 5 தேசிய கபடி போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியினர் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்

அதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட அணி மற்றும் அம்பாறை மாவட்ட அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி இடம்பெற்றது இதில் 43 க்கு 36 என்ற புள்ளி அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட அணி முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட அதேவேளை அம்பாறை மாவட்ட அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது

குறித்த இளைஞர் விளையாட்டு விழா எதிர்வரும் முதலாம் திகதி(01-03-2020) மாலை நிறைவுபெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகப்பணிகள் தொடர்ந்தும் அரசாங்க கட்டமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்படும் என வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன உறுதியளித்துள்ளார்
அமைச்சர் தினேஸ் குணவர்த்தன நேற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செய்ல் பெச்சலட்டை சந்தித்தார்

இதன்போது ஐக்கிய நாடுகளின் 40-1 யோசனையின் இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகிக்கொண்டமைக்கான காரணங்கள் அவர் விளக்கினார்.

இணை அனுசரணையில் இருந்து விலகுவது மட்டு;மல்லாமல் நாட்டின் அரசியலமைப்புக்கு உட்பட்டு உள்ளக வரையறையின்கீழ் நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வர உள்ளக ஆணைக்குழு அமைக்கமுடியும் என்று அவர் குறிப்பிட்டார்

இதேவேளை நாடாளுமன்ற சட்டத்தின்கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகப்பணிகள் தொடர்ந்தும் அரசாங்க கட்டமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்படும் என வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன உறுதியளித்துள்ளார்

இதன்போது கருத்துரைத்த ஐக்கியநாடுகள் மனிதஉரிமைகள் ஆணையாளர் பெச்சலெட் இலங்கை இணைஅனுசரணையில் இருந்து விலகிக்கொண்டமை குறித்து தமது கவலையை வெளியிட்;டார்.

அதேநேரம் ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரகத்துடன் ஒத்துழைக்கவும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகப்பணிகளை முன்னெடுக்கவும் இலங்கை வழங்கியுள்ள உறுதிமொழிகளை அவர் வரவேற்றார்

இலங்கை பிச்சைக்கார நாடாக மாறப்போகின்றது – ரணில்

இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் இருந்தும் சீனாவிடம் இருந்தும் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்படப்போகிறது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதுஅவர் இதனை குறிப்பிட்டார்

பொருளாதாரத்தை முகாமைப்படுத்த முடியாத நிலைக்கு அரசாங்கம் வந்துள்ளது.

கடந்த காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தை விமர்சித்து வந்த கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து புதிய அரசாங்கம் 100நாள் வேலைத்திட்டத்தை மேற்கொண்;டது

எனினும் முன்னர் அரசாங்கம் மீது முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி வருத்தம் தெரிவிக்கவில்லை என்றும் ரணில் சுட்டிக்காட்டினார்

இந்தநிலையில் இலங்கையை பிச்சைக்கார நாடாக மாறிவிடக்கூடாது என்று ரணில் குறிப்பிட்டார்.இது இலங்கையின் மதிப்பை குறைத்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு நாளில் அதிகமானோர் கொரொனவைரஸினால் பாதிக்கப்படும் நாடாக தென்கொரியா மாறியுள்ளது

அங்கு நாள் ஒன்றுக்கு 594 புதிய கொரோனவைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்படுகின்றனர்

இதன் அடிப்படையில் அங்கு தற்போது 2931 கொரோனவைரஸ் தொற்றாளர்கள் சிசிக்சைப் பெற்று வருகின்றனர்

17பேர் இது வரை உயிரிழந்துள்ளனர்

தற்போதைக்கு சீனாவுக்கு அடுத்தப்படியாக தென்கொரியாவே அதிகமான கொரோனவைரஸ் தொற்றாளர்களை கொண்டுள்ளது.

மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களில் இராணுவம் அனுப்பப்பட்டு கிருமிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன