தேசிய கபடி போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியினர் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம்தோறும் நடத்தும் தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 31வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா கடந்த 27-02-2020 ஆம் திகதி வடமத்திய மாகாண விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது

அந்த வகையில் இன்றைய தினம் (29 2 2020) கபடி போட்டியின் இறுதிப் போட்டி இடம்பெற்றிருந்தது. இதில் தேசிய கபடி போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியினர் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்

முன்னதாக 3ம் இடத்தை தெரிவு செய்வதற்கான போட்டி இடம்பெற்றிருந்தது இதில் பொலனறுவை மற்றும் அனுராதபுர அணிகள் மோதிய போட்டியில் அனுராதபுர அணி வெற்றிபெற்று மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

625.0.560.350.390.830.053.800.670.160.91 1 3 தேசிய கபடி போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியினர் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்

625.0.560.350.390.830.053.800.670.160.91 2 1 தேசிய கபடி போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியினர் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்

625.0.560.350.390.830.053.800.670.160.91 3 1 தேசிய கபடி போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியினர் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்

625.0.560.350.390.830.053.800.670.160.91 5 தேசிய கபடி போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியினர் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்

அதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட அணி மற்றும் அம்பாறை மாவட்ட அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி இடம்பெற்றது இதில் 43 க்கு 36 என்ற புள்ளி அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட அணி முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட அதேவேளை அம்பாறை மாவட்ட அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது

குறித்த இளைஞர் விளையாட்டு விழா எதிர்வரும் முதலாம் திகதி(01-03-2020) மாலை நிறைவுபெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.