Home Blog Page 2401

2009 ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட மகனைத்தேடி போராடிய மற்றுமொரு தாய் மரணம்.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த முடிவின் போது காணாமல் ஆக்கப்பட்ட தனது ஒரேயொரு பிள்ளையான பாலசுப்ரமணியம் அருட்செல்வனை (காணாமல் ஆக்கப்பட்ட போது வயது 21) கடந்த பத்து வருடங்களாக தேடிக் கொண்டிருந்த தாயார் பாலசுப்ரமணியம் மங்கையற்கரசி (72 வயது) இன்று 4.3.2020 புதன் கிழமை அதிகாலை 2.10 மணியளவில் சுகவீனம் காரணமாக இயற்கை எய்தினார்.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையை சொந்த முகவரியாகவும், வவுனியா புளியங்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட இந்த தாயார், காணாமல் ஆக்கப்பட்டாேரை தேடிக்கண்டறியும் உறவுகளால் வவுனியாவில் நடத்தப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று ஆயிரத்து நூற்று பதினொரு நாட்களை (1111) எட்டியுள்ள நிலையில், அப்போராட்டத்தில் தொடர்ச்சியாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த நிலையில் இயற்கை எய்தியுள்ளார்.

இவரது மகன் பா.அருட்செல்வன் ஓமந்தை சோதனைச்சாவடியில் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக கண் கண்ட சாட்சிகள் தன்னிடம் கூறியிருந்ததாக தாயார் பா.மங்கையற்கரசி தெரிவித்திருந்தார்.

தாயாரது இறுதிக் கிரியைகள் யாழ்ப்பாணம் தட்டாதெருச்சந்தி, இலக்கம் 29/16, உடையார் ஒழுங்கையில் நாளை 5.3.2020 வியாழக்கிழமை 12.00 மணிக்கு இடம்பெறும் என்று உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

தொடர்புகளுக்கு: 077 2671 941

பட்டதாரிகள் அதிர்ச்சியின் பின் மகிழ்ச்சி.

பட்டதாரிகளை நியமனம் செய்வதை தேர்தல் ஆணையர் நிறுத்தம் செய்ததாக வெளிவந்த செய்தி பொய்யானது என்று உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (04) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதுவரை நியமனக் கடிதங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றால் ஜனாதிபதி செயலகம் அல்லது பிரதேச செயலகத்திற்கு முறையீடு செய்யுமாறு அவர் பட்டதாரிகளை கேட்டுக்கொண்டார்.

“சில ஊடகங்கள் தேர்தல் ஆணையர் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்குவதை நிறுத்திவிட்டன என்று சொல்லும் அளவிற்கு செல்கின்றன. இது ஒரு தவறான அறிக்கை. தேர்தல் ஆணையர் அத்தகைய அறிக்கையை வெளியிடவில்லை. நாடாளுமன்றம் கலைப்பதற்கு முன்னர் இந்த செயற்திட்டம் தொடங்கப்பட்டது. எனவே இது ஒரு அரசியல் நிகழ்ச்சித் திட்டம் அல்ல.இந்த மாத தொடக்கத்தில் இருந்து ஜனாதிபதி செயலகம் நியமன கடிதங்களை அனுப்பியுள்ளது.

பயிற்சியாளர்களுக்கு பயிற்சிக்காக நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் வரை ரூ .20,000 வழங்கப்படும். எனவே, பணக்காரக் கட்சிகளுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை நாங்கள் செயல்படுத்தவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வழங்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி, நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. எனவே பயிற்சியை நிறுத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை.

விண்ணப்பதாரருக்கு நியமனக் கடிதங்கள் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் பிரதேச செயலகம் அல்லது ஜனாதிபதி செயலகத்தில் முறையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இன்று அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் ஆலோசனை துண்டு பிரசுரத்தை வெளியிடுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. அவர்கள் முறையாக தொடர்பு கொள்ளாவிட்டால், அவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். ”

நாடாளுமன்ற தேர்தலில் 4 மாவட்டங்களில் உறுப்பினர் எண்ணிக்கையில் மாற்றம்

இம்முறை நடைபெறவுள்ள பொது தேர்தலில் 4 மாவட்டங்களில் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த பொது தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட எண்ணிக்கையிலும் பார்க்க மாற்றம் அடைந்துள்ளது.

தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பாக நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக காலி, பதுளை, மொனராகலை, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையிலேயே மாற்றம் எற்பட்டுள்ளது.

கடந்த பொது தேர்தலில் காலி மாவட்டத்தில் இருந்து 10 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இம்முறை இந்த எண்ணிக்கை 9 ஆக குறைவடைந்துள்ளது. மாத்தறை மாவட்டத்தில் இருந்து கடந்த பொது தேர்தலில் 8 பேர் தெரிவு செய்யப்பட்டனர். இம்முறை இந்த எண்ணிக்கை 7 ஆக குறைவடைந்துள்ளது.

இதேபோன்று பதுளை மாவட்டத்தில் கடந்த முறை 8 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இம்முறை இந்த எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மொனராகலை மாவட்டத்தில் இருந்து கடந்த முறை 5 உறுப்பினர்னகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தற்பொழுது இந்த எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

இந்த வர்த்தமானி அறிவிப்பிற்கு அமைவாக இம்முறை ஆக கூடுதலான உறுப்பினர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்தே தெரிவு செய்யப்படவுள்ளனர். இந்த எண்ணிக்கை 19 ஆகும்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல்கள் தொடர்பாக 4 வர்த்தமானி அறிவித்தல்கள்

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னப்பிரியவின் கையொப்பத்துடன், நேற்றிரவு (03) 4 வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தலின் போது ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் இடங்கள் குறித்த வர்த்தமானியும்,

ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் போட்டியிட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கையை உள்ளடக்கிய வர்த்தமானியும்,

சுயேட்சைக் குழுக்கள் செலுத்தப்பட வேண்டிய கட்டப்பணம் குறித்தும் வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. இதற்கமைவாக வேட்புமனுக்கள் மார்ச் 12ஆம் திகதி தொடக்கம் பொறுப்பேற்கப்படவுள்ளது. பொதுத் தெர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சஜித் கூட்டணி தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அணி தொலைபேசி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார இந்தத் தகவலை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியில் இரண்டு அணிகள் இந்த தேர்தலில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரணில் தலைமையிலான ஓர் அணியும், சஜித் பிரேமதாசா தலைமையிலான மற்றோர் அணியும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளன என்பது எதிர்பார்க்கப்பட்டதே.

சஜித் பிரேமதாசா தொலைபேசிச் சின்னத்தில் போட்டியிடும் அதேவேளை ரணில் அணியின் சின்னம் பற்றி அறிவிக்கப்படவில்லை. பொதுவாக ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்திலேயே போட்டியிடுவது வழக்கம். ரணில் தலைமையிலான கூட்டணி அந்த யானை சின்னத்தைப் பயன்படுத்துமா என்பது முடிவு செய்யப்படவில்லை.

யாழ். மத்திய கல்லூரி மாணவர்கள் 50பேரை விசாரணைக்கு அழைத்த பொலிசார்

யாழ். மத்திய கல்லூரிக்கும், யாழ். பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான “வடக்கின் போர்“ எனப்படும் துடுப்பந்தாட்டப் போட்டி நடைபெறவிருக்கும் சமயத்தில், அந்த போட்டியை முன்னிட்டு யாழ். மத்திய கல்லூரி மாணவர்கள் பாடசாலை சீருடையுடன், பாடசாலைக் கொடிகளைத் தாங்கிய வண்ணம் இசைக் கருவிகள், வாத்தியங்களை இசைத்து ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

இச்செயற்பாடு வீதிகளில் பயணிக்கும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் சிலர் புகார் அளித்ததையடுத்து, அவர்கள் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர். பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு பிற்பகல் 6மணிக்குள் விசாரணைகள் முடிக்கப்படும் என அறியப்படுகின்றது.

இந்த நிகழ்வு வருடாந்தம் நடைபெறும் ஒரு நிகழ்வாகும். வீதிகளில் இறங்கி மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் வர்த்தக நிலையங்களில் பணம் சேகரிப்பதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் சகோதர பெண்கள் பாடசாலை முன்றலில் கோஷங்களை எழுப்பியவாறு கொண்டாட்டங்களில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இந்நிகழ்வுகள் எப்போதுமே நடைபெறும் செயற்பாடாகவே உள்ளது.

வருடா வருடம் இந்த நிகழ்வுகள் பற்றி பாடசாலை அதிபருக்கு அறிவித்த போதும், அவர்களால் எந்தவித இறுக்கமான நடவடிக்கைகளும் எடுக்க முடியாத நிலையில் உள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 8ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

எதிர்வரும் 8ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சங்கத்தின் தலைவி சரோஜினி தெரிவித்தார்.

இன்று வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தாம் போராட ஆரம்பித்து எதிர்வரும் மார்ச் மாதம் 8ம் திகதி மூன்று வருடத்தை நிறைவு செய்யவுள்ளனர். நாம் தொடர்ந்து போராடி கொண்டு இருக்கின்ற நிலையில் எமது போராட்டத்திற்கு எந்த வித தீர்வும் வராத எட்டப்படாத நிலையில் எங்களுடைய உறவுகளை இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட இடமான முல்லைத்தீவு செல்வபுரம் மில்லடியில் இருந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

இதில் அரச அரசசார்பற்ற நிறுவனங்கள், அமைப்புக்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

சம்பந்தன், சுமந்திரன், சேனாதிராஜா அரசியலிலிருந்து வெளியேற வேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்.

வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்றுடன் 1111 நாட்களை எட்டியது.

இதனை முன்னிட்டு அவர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது. அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று மதியம் 12.30 மணியளவில் குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எங்கள் பிள்ளைகள் எமக்கு வேண்டும்
,வெளிநாடு தலையிட்டு எமக்குரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும், உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே, சர்வதேச விசாரணை வேண்டும் போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு கதறி அழுது தமது கவலையை வெளிப்படுத்தியிருந்தனர்.

02 சம்பந்தன், சுமந்திரன், சேனாதிராஜா அரசியலிலிருந்து வெளியேற வேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்.

03 சம்பந்தன், சுமந்திரன், சேனாதிராஜா அரசியலிலிருந்து வெளியேற வேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்.

04 சம்பந்தன், சுமந்திரன், சேனாதிராஜா அரசியலிலிருந்து வெளியேற வேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்.
உறவுகள் கருத்து தெரிவிக்கும் போது, தமிழ்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்றோர் அரசியலிலிருந்து வெளியேறி இளையவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் எனவும் போர்க்குற்றம் ஒரு சர்வதேச குற்றம் எனவே இது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் அல்லது சர்வதேச தீர்ப்பாயத்தினால் விசாரிக்கப்பட வேண்டும். ஐ.நா மனித உரிமைகள் பேரவை வடகிழக்கு வரவேண்டும். வந்து எங்கள் துயரங்களை நேரில் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.

இதன்போது அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கல்லடி பாலத்தின் அருகில் காணி அபகரிப்பு முயற்சி

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் அரச காணியென அடையாளப் படுத்தப்பட்டுள்ள காணியை அடைக்கமுற்பட்டவர்கள் பொதுமக்களின் எதிர்ப்பினால் அங்கிருந்துசென்றுள்ளனர்.

இன்று காலை மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வடிச்சல் பகுதி காணியை சிலர் அடைக்கமுற்பட்டுள்ளனர்.

இதன்போது அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் ஆகியோர் அதற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக காணியை அடைக்கவந்தவர்கள் அங்கிருந்து சென்றதை தொடர்ந்து மக்கள் கலைந்துசென்றனர்.

பல தடவைகள் குறித்த காணியை சிலர் தொடர்ச்சியாக அபகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்த நிலையிலும் மட்டக்களப்பு மாநகரசபையும் அப்பகுதி மக்களும் அவற்றினை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையிலும் சிலர் அக்காணிகளை அடைக்கும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றனர்.IMG 5194 கல்லடி பாலத்தின் அருகில் காணி அபகரிப்பு முயற்சி

கிழக்கு மாகாண காணி ஆணையாளரின் சிபாரிசு கடிதத்தினை வைத்துக்கொண்டு குறித்த காணியை அடைக்கமுனைவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறித்த பகுதியானது மட்டக்களப்பில் வெள்ள நிலைமை ஏற்படும்போது நீர்வழிந்தோடும் பகுதியாகவுள்ள நிலையில் அதனை சிலர் அடைக்கமுனைவதனால் எதிர்காலத்தில் பெரும் நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்ளநேரிடும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதி அடைக்கப்படுமானால் கல்லடி பாலம் தொடக்கம் காத்தான்குடி வரையான பல பகுதிகள் வெள்ளகாலத்தில் வெள்ளத்தில் மூழ்கும் எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.