Home Blog Page 2392

முன்னாள் போராளிகளுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசர கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

அவர் இன்று (10) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், அரசியல் ரீதியாக சரியான பாதையில் பயணிக்க வேண்டும் என்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அப்போதிருந்த தமிழ் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியிருந்தார். இதனை நீங்களும் நன்கறிவீர்கள் எமது மக்களும் நன்கறிவார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பல்வேறு இழுபறி நிலைகள், பிரச்சினைகள், உள்ளக முரண்பாடுகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து சில பங்காளி கட்சிகள் பிரிந்து சென்ற போதிலும் மேற்படி தலைவரினுடைய வழி காட்டலினால் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்ற ஓர் நோக்கத்திற்காகவே எமது கூட்டமைப்பை சிதைவடைய செய்யாமலும் அழிந்து போகாமலும் எமது மக்கள் ஆதரித்து பாதுகாத்து வருகின்றனர்.

அதே போன்று கூட்டமைப்பு உடையக் கூடாது என்பதில் நானும் திடமான உறுதியோடு பயணித்து வருகின்றேன்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததற்கு பின்னர் எமது புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள், மாவீரர் குடும்பங்கள் மற்றும் யுத்தத்தினால் மாற்றுத் திறனாளிகளாக ஆக்கப்பட்டவர்கள் மட்டில் ஓர் விசேட கருத்திட்டம் உருவாக்கப்படாமலும் முன்னுரிமை அடிப்படையில் ஓர் வாழ்வாதார திட்டம் உரிய முறையில் தற்பொழுது வரை உருவாக்கப்படாமலும் இருந்து வருவது ஓர் பாரிய குறைபாடாகவே காணப்படுகின்றது.

பொது மக்களுக்கு அப்பால் இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விசேட கருத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு இவர்களுடைய வாழ்வாதாரம் பிள்ளைகளின் கல்வி என்பன கவனிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் இவை எதுவும் உரிய முறையில் நடைபெறவில்லை இருந்தும் என்னால் முடிந்த இவர்களுக்கான சில கருத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பொழுது இடைநடுவில் நிறுத்தப்பட்டதை நீங்கள் யாவரும் அறிவீர்கள் என நம்புகிறேன்.

மேலும் தேர்தல் காலத்தின் போது அவ்வப்போது இவர்களுடைய தியாகங்களும் வீர செயற்பாடுகளுமே பலருக்கு மேடையில் பேசுபொருளாக இருக்கின்றது.

தேர்தலின் பின்னர் இவர்கள் யாரோ நாம் யாரோ என்ற நிலைதான் காணப்படுகின்றது.

இவை எதிர்காலத்தில் மாற்றப்பட வேண்டும். எத்தனையோ வினைத்திறன் மிக்க புணர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளும்இ தளபதிகளும் குறிப்பாக வினைத்திறன் மிக்க பெண் போராளிகளும் எம்மத்தியில் தற்பொழுதும் வாழ்ந்து வருகின்றார்கள் இவர்கள் அரசியல் நீரோட்டத்தில் எமது தமிழ் தேசிய கூட்டமைப்போடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அவர்களுக்கான உரிய அந்தஸ்து வழங்கப்பட்டிருக்க வேண்டும். பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி சபை என்பவற்றிற்கு உரிய ஆசன ஒதுக்கீட்டின் ஊடாக அனுப்பப்பட்டிருக்க வேண்டும். யுத்தம் முடிவடைந்தவுடன் இவர்களை அரசியல் நீரோட்டத்திற்குள் கொண்டு வருவது மற்றும் வெளிக்கொணர்வது பொருத்தமானதாக இருக்கவில்லை. அதற்கான சூழ்நிலையும் இருக்கவில்லை.

அதனை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பின்னரான காலப்பகுதியில் இவர்கள் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் அவை எதுவும் நடைபெறவில்லை. இது தொடர்பில் பல தடவைகள் சம்மந்தப்பட்டவர்களோடு பேசியிருந்தேன். ஆனால் அவை எதுவும் பயனற்றதாகவே போயிருந்தது கடந்தவை கடந்தவைகளாகவே இருக்கட்டும் இனியாவது சரியாக சிந்தித்து உரிய முறையில் பயணிப்போம். மேலும் எந்தவொரு போராளியும் தனது சுயநலத்திற்காகவோஇ தனது குடும்பத்தின் நலனுக்காகவோ போராட செல்லவில்லை எம்மினம் தலைநிமிர்ந்து உரிமையோடு வாழ வேண்டும்.

எம்மொழி மதிக்கப்பட வேண்டும், எமது கலை கலாசாரம் அழிந்து போகாமல் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக தங்கள் உயிர்களையும் துச்சமென மதித்து கல்வியை தொலைத்து குடும்பத்தை விடுத்து தமது எதிர்காலத்தை மறந்து ஒரு உன்னத நோக்கத்திற்காக சென்றவர்களே இவர்கள்.

எம்மினத்திற்காக தங்களது உயிர்களையே துச்சமென மதித்த இவர்களிடம் ஒரு பொறுப்பை உரிய முறையில் ஒப்படைப்போமெனில் அதனை இவர்கள் எந்தவித அப்பழுக்குகளுமின்றி உயரிய சிந்தனையோடு செய்து முடிப்பார்கள் அதற்கான ஆற்றலும் வல்லமையும் அவர்களிடம் நிறையவே புதைந்து கிடக்கின்றன அதற்கான சரியான தளத்தை உருவாக்கி கொடுக்க வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் தார்மீக கடமையாகும்.

எனவே பலதடவைகள் பாராளுமன்றம் சென்ற எமது முன்னைய பாராளுமன்ற உறுப்பினர்களை எமது கட்சியின் பலமாகவும் சொத்தாகவும் எமது கட்சியை உரிய முறையில் கொண்டு செல்வதற்கான பொறுப்பினை அவர்களுக்கு வழங்குவதோடு வடக்கு கிழக்கில் இருக்கின்ற எட்டு மாவட்டத்திலும் உரிய சிறந்த போராளிகளை தெரிவு செய்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தங்கள் அனைவரையும் தாழ்மையாக வேண்டி நிற்கின்றேன்.

நீங்கள் அவ்வாறு செய்யும் பட்சத்தில் நான் இரவு பகலாக வேலை செய்து இவர்களை வெற்றி பெற வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன். வேற்றி பெற வைப்பேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

எனவே காலம் தாழ்த்தாது விரைவாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மிகவும் பணிவன்போடு கேட்டு நிற்கின்றேன்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டமைப்பை ரணில் ஏமாற்றியது உண்மை; ஒப்புக்கொள்கிறார் சி.வீ.கே.சிவஞானம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, ரணில் விக்ரமசிங்க நம்ப வைத்து ஏமாற்றியது உண்மைதான் என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம்
தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் ஏமாற்றிவிட்டார் என்று எமக்குத் தெரியவந்துவிட்டது. அதுவரை நாம் ஐ.தே.கவைநம்பியது உண்மைதான்.

ரணில் எம்மை நம்ப வைத்து ஏமாற்றியமையும் உண்மைதான். அதனை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஒக்ரோபரில் அரசமைப்பு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது, குழப்பம் வந்தபோது, இதற்கு நான் பொறுப்பில்லை சபையே பொறுப்பு எனக் கூறியிருந்தார். அதில் இருந்து அவர் எம்மை ஏமாற்றிவிட்டார் என நாம் அறிந்து கொண்டோம்.

எனினும் நாம் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும், மஹிந்த குடும்பத்தின் ஆட்சி மீண்டும் வந்துவிடக்கூடாது என்றே தொடர்ந்தும் ஆதரவு கொடுத்தோம். இனிவரும் காலங்களில் ஐ.தே.க.வுக்கு ஆதரவான நாடாளுமன்றப் பிரதிநிதிகள் எம் மத்தியில் இருக்கமாட்டார்கள். நாம்பட்டுத்தெளிந்து விடடோம்.

நாம் அனைவருடனும் பேசுவோம். அதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்குதான் ஆதரவு வழங்குவோம் என்று இல்லை. இனி நிபந்தையுடனேயே இறுக்கமான முறையில் நாம் அணுகுவோம். ஏற்கனவே நாம் அனுபவப்பட்டு விட்டோம்.

மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அண்மைக்காலமாக இந்த நாட்டில் இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை என்றும், அது பொருளாதார ரீதியான
பிரச்சினையே எனக் கூறி வருகின்றார். அவருடைய கருத்துத் தவறானது.

இந்த நாடு சுதந்திரம் பெற்றதன் பின்னர் அல்லது அதற்கு முன்னரும் கூட இங்கு வாழும் தமிழ் மக்களின் தனித்துவ தன்மை பேணப்பட வேண்டும். எமது இனம் சார்ந்த பிரச்சினைகள் இருந்தன. இப்போதும் இருக்கின்றன.

கொக்குவிலில் நேற்றிரவு இரு ஓட்டோக்கள் மோதி விபத்து! மூவர் படுகாயம்

யாழ் காங்கேசன்துறை வீதி கொக்குவில் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில. இரு முச்சக்கர வண்டிகள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் மூவர் படுகாயமைடைந்துள்ளனர்.

யாμப்பாணத்தில் இருந்து காலிகேசன்துறை வீதியூடாக தாவடி நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி கொக்குவில் பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட மற்றுமொரு முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

இவ்விபத்தில் இரு முச்சக்கர வண்டிகளிலும் பயணித்த மூவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற முச்சக்கர வண்டியை ஓட்டியவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சிறைகளை கண்காணிக்க ட்ரோன் கமராக்கள்

தமிழ்நாடு மத்திய சிறைச்சாலைகளின் வளாகங்களை கண்காணிக்க விரைவில் ட்ரோன் கமராக்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மத்திய சிறைச்சாலைகளின் வளாகங்களை விரைவில் ஆளில்லா ட்ரோன் கமராக்களைப் பயன்படுத்தி கண்காணிக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டில் சிறைச்சாலைகளை கண்காணிப்பதற்கு ட்ரோன்களைப் பயன்படுத்துவது இதுவே முதன்முறை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஆண்களுக்கு 9 மத்திய சிறைகளும், பெண்களுக்க 4 சிறப்பு சிறைகளும் உள்ளன. 13,000 இற்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகளும், தண்டனைக் கைதிகளும் உள்ளனர்.

இந்த சிறைச்சாலைகளில் வேலூர், திருச்சி, கோயம்புத்தூரில் உள்ள 3 சிறைகளும் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. மீதமுள்ள சிறைகள் 20 முதல் 45 ஏக்கர் பரப்பளவில் உள்ளன.

சிறைகளில் ஆள் பற்றாக்குறை இருப்பதால், குற்றவாளிகள் குறிப்பாக அதிக ஆபத்துள்ள சிறை அறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களை உன்னிப்பாக கண்காணிப்பது கடினமான பணியாக உள்ளது.

ட்ரோன்கள் வாங்குவதற்காக 21.85 இலட்சம் ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான கேள்வி கோரல் விடுக்கப்பட்டுள்ளது.

சிறைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்கள் செயலிழந்து விட்டன. இத்தகைய சூழ்நிலையில் சிறை வளாகத்தை உன்னிப்பாக கவனித்து கவலரம் போன்ற சூழ்நிலைகளில் உடனடியாக நடவடிக்கை எடுப்பது கடினமான பணியாக இருக்கும். அதனால் சிறைக்குள் சட்டவிரோதமாக பொருட்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் எனவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுவிஸில் வேகமாக பரவிவரும் கொரோனா;தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளும் பாதிப்பு

சுவிஸில் ஆரம்பத்தில் மெதுவாக பரவிவந்த கொரோனா வைரஸ் தற்பொழுது வேகமாக பரவத் தொடங்கியுள்ளதை புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன .

இதுவரை 500 இற்கு அதிகமான கொரோனா தொற்று சம்பவங்கள் அறிவிக்கப் பட்டுள்ளதாக கூட்டாட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மேலும் வோ மாநிலத்தில் 74 வயதுடைய பெண்ணொருவரும்,வாசல் மாநிலத்தில் 76 வயதுடைய நபர் ஒருவரும்,திசினோ மாநிலத்தில் 80 வயதுடைய பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

ஆக்க கூடுதலாக திசினோ மாநிலத்தில் 89 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். தமிழ் மக்கள் செறிந்து வாழும் சூரிச்,போர்ன்,வோ போன்ற மாநிலங்களிலும் அதிகாவில் கொரோனா தோற்று ஏற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

Coronavirus cases in Switzerland – 10.03.2020 15:56
Confirmed cases: 476
Deaths: 3corona swiss சுவிஸில் வேகமாக பரவிவரும் கொரோனா;தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளும் பாதிப்பு

யாழ். பல்கலைக்கழகத்தில் ஒட்டப்பட்டிருந்த எச்சரிக்கை சுவரொட்டி

இனிவரும் காலங்களில் சமூகவிரோத குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். அத்துடன் பெண்கள் மீது கை வைத்தாலோ அல்லது மாணவர்களுடன் சேட்டை விடுத்தாலோ தமிழ் இளைஞர் படையணியால் தண்டனை வழங்கப்படும் என யாழ். பல்கலைக்கழக சூழலில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இன்று(10) ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியால் அங்கு பரபரப்பான நிலைமை காணப்பட்டது. அந்த சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் உடனடியாக சகல விதமான சமுதாய சீர்கேடுகளும் நிறுத்தப்பட வேண்டும். இளைஞர்கள் மீது பெற்றோர் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் எவராலும் காப்பற்ற முடியாமல் போகும்.

இங்கு இனி வாய்ப் பேச்சிற்கு எதுவும் இல்லை. ஆனால் செயலில் செய்வதற்கு நிறைய உண்டு. மக்கள் அனைவரும் நாம் யார், எமது பண்பாடு கலாசாரம் எது என்று உணர்ந்து எம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும்.

தமிழர் தேசத்தின் கலை, பண்பாடு, கலாசாரம் இவற்றை கருத்திற் கொள்ளும் அரசாங்கம் மட்டுமே எமக்கு வேண்டும். அத்தோடு எமது கலை கலாசாரத்தைப் பேணிப் பாதுகாப்பது எமது கடமை. இனிவரும் காலங்களில் சமூகவிரோத செயல்களுக்கு, குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்.

பெண்கள் மீது கைவைத்தாலோ அல்லது மணவர்களுடன் சேட்டை விடுத்தாலோ அதற்கு தண்டனை வழங்கப்படும். “தடை கற்கள் உண்டு என்றால் தடை தாண்டும் கால்களும் உண்டு” எனத் தெரிவித்துள்ள அந்த சுவரொட்டியில், தமிழ் இளைஞர் படையணி மண்ணின் மைந்தர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மட்டக்களப்பு கொரோனோ தடுப்பு முகாமில் உள்ளவர்களிடம் கொடுப்பனவுகள் அறவிடப்படாது இராணுவத் தளதி

மட்டக்களப்பு கொரோனோ தடுப்பு முகாமில் உள்ளவர்களிடம் கொடுப்பனவுகள் அறவிடப்பட மாட்டாது என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மற்றும் கந்தகாட் புனர்வாழ்வு மத்திய நிலையம் என்பவற்றில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமில் உள்ளவர்களிடம் இருந்து எவ்வித கொடுப்பனவும் அறவிடப்பட மாட்டாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேற்படி முகாமில் நாளாந்தம் வழங்கப்படும் உணவிற்காக பணம் செலுத்த வேண்டியுள்ளமை தொடர்பாக அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மக்கள் கவலை வெளியிட்டிருந்தனர். இதற்காக 14 நாட்களுக்கும் மூன்று வேளை உணவை பெற்றுக் கொள்ள 7500 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் எனக் கோரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு அப்பகுதிக்கு அனுப்பப்பட்ட மக்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை கொரோனா தடுப்பு முகாமில் உள்ளவர்களிடம் இருந்து எவ்வித கொடுப்பனவும் அறவிடப்பட மாட்டாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இனவழிப்பு குற்றங்களுக்கு உள்ளக விசாரணைமீது நம்பிக்கையில்லை. யாழில் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம்.

வடக்கு கிழக்கு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழில் போராட்டமொன்றை நேற்று முன்னெடுத்துள்ளனர்.

யாழ் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணி யாழ் கோவில் வீதியிலுள்ள ஐநா அலுவலகம் வரை பேரணியாகச் சென்றது.

WhatsApp Image 2020 03 09 at 2.33.57 AM 3 இனவழிப்பு குற்றங்களுக்கு உள்ளக விசாரணைமீது நம்பிக்கையில்லை. யாழில் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம்.

WhatsApp Image 2020 03 09 at 2.33.57 AM 3 இனவழிப்பு குற்றங்களுக்கு உள்ளக விசாரணைமீது நம்பிக்கையில்லை. யாழில் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம்.

WhatsApp Image 2020 03 09 at 2.33.57 AM 2 1 இனவழிப்பு குற்றங்களுக்கு உள்ளக விசாரணைமீது நம்பிக்கையில்லை. யாழில் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம்.

இவ் ஆர்ப்பாட்டத்தின்போது நாட்டின் சுதந்திரம் என்பது சிங்கள மக்களுக்குத்தான், இனவழிப்பு குற்றங்களுக்கு உள்ளக விசாரணைமீது நம்பிக்கையில்லை சர்வதேச குற்றவியில் நீதிமன்றத்தின் ஊடாக விசாரனை நடாத்தவேண்டும், காணாமல் ஆக்கப்பட்ட எமது எறவுகள் எற்கே என்று வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் யாழ் ஐக்கிய நாடுகள் சபையின் பிராந்திய அலுவலகத்தில் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

WhatsApp Image 2020 03 09 at 2.33.57 AM 1 1 இனவழிப்பு குற்றங்களுக்கு உள்ளக விசாரணைமீது நம்பிக்கையில்லை. யாழில் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம்.
WhatsApp Image 2020 03 09 at 2.33.56 AM 4 இனவழிப்பு குற்றங்களுக்கு உள்ளக விசாரணைமீது நம்பிக்கையில்லை. யாழில் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம்.

WhatsApp Image 2020 03 09 at 2.33.56 AM 3 1 இனவழிப்பு குற்றங்களுக்கு உள்ளக விசாரணைமீது நம்பிக்கையில்லை. யாழில் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம்.

WhatsApp Image 2020 03 09 at 2.33.56 AM 2 இனவழிப்பு குற்றங்களுக்கு உள்ளக விசாரணைமீது நம்பிக்கையில்லை. யாழில் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம்.

WhatsApp Image 2020 03 09 at 2.33.56 AM 1 இனவழிப்பு குற்றங்களுக்கு உள்ளக விசாரணைமீது நம்பிக்கையில்லை. யாழில் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம்.

அதிக வெப்பமான காலநிலையிலும் தமது பிள்ளைகளைத் தேடி தாய்மார் வீதியில் கவனயீர்ப்பு போராட்டம்.

நாட்டில் தற்போது நிலவிவரும் அதி வெப்பநிலையில் குழந்தைகள் முதயவர்களை வெய்யிலில் செல்லவேண்டாம் என்று சுகாதார திணைக்களம் செய்திகள் வெளியிட்டு வரும் நிலையிலும் தமது உறவுகளைத் வலிந்து தொலைத்த பெண்கள் முதியவர்கள், தாய்மாரென அனைவரும் வீதியில் இறங்கி போராடும் நிலையே தாயகத்தில் தொடர்கினது.

இந் நிலையில்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.
சர்வதேச மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து சர்வதேச விசாரணையை கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

சர்வதேச மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்தமையின் வெளிப்பாடாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது தலைகளில் கருப்பு பட்டிகளை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும் ,எங்கே எங்கே உறவுகள் எங்கே ,இலங்கை அரசே பதில் சொல் ,சர்வதேசமே நீதியை பெற்றுத்தா உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.

கோட்டா அரசே நீ கொண்டு போனவர்கள் எங்கே?,சர்வதேசத்தில் மகளிர் கொண்டாட்டம் எங்களிற்கு கண்ணீர் போராட்டம் , சர்வதேசமே இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் ஏற்று ,இலங்கையின் ஜனநாயகம் தமிழின அழிப்பிலா?, கால அவகாசம் வேண்டாம் முறையான நீதி விசாரணையே வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராடடத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் வடக்கு கிழக்கின் 8 மாவட்ட்ங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மத தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் நலன் விரும்பிகள் வர்த்தக சங்கத்தினர் முச்சக்கர வண்டி சங்கத்தினர் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

d 1 அதிக வெப்பமான காலநிலையிலும் தமது பிள்ளைகளைத் தேடி தாய்மார் வீதியில் கவனயீர்ப்பு போராட்டம்.

d 4 அதிக வெப்பமான காலநிலையிலும் தமது பிள்ளைகளைத் தேடி தாய்மார் வீதியில் கவனயீர்ப்பு போராட்டம்.

d 5 அதிக வெப்பமான காலநிலையிலும் தமது பிள்ளைகளைத் தேடி தாய்மார் வீதியில் கவனயீர்ப்பு போராட்டம்.

யாழ் பல்கலை கழக தமிழ்த்துறை குண்டுசட்டிக்குள்ளே குதிரை ஓட்டுகிறது!! தமிழருவி விசனம்.

யாழ்பாண பல்கலைகழக தமிழ் துறையில் இருப்பவர்கள் குண்டுசட்டிக்குள் குதிரை ஓடடிக்கொண்டிருக்கின்றார்களா என வவுனியா தமிழ் சங்கத்தின் தலைவரான தமிழருவி த.சிவகுமார் விசனம் தெரிவித்தார்.

திருவள்ளுவர் குருபூஜை தினம் வவுனியாவில் அமைந்துள்ள அவரது சிலையடியில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

அனைத்தையும் இறக்குமதி செய்யும் இந்தியதேசம் திருவள்ளுவரை மாத்திரம் உலகிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.வள்ளுவரை அனைத்து மதமும் சொந்தம் கொண்டாடுகின்றது. இன்று திட்டமிட்டு ஒரு விடயம் மேற்கொள்ளபடுகின்றது. வடநாட்டிலே இருக்கும் தர்மசாஸ்திரங்களை தமிழிலே மொழிபெயர்த்தது தான் திருக்குறள் என்று வள்ளுவரின் பெருமையை தங்களுக்கு சொந்தமாக்குவதற்கு சமஸ்கிருத அறிஞர்கள் சிலர் முயற்சிமேற்கொண்டுள்ளனர்.

அண்மையில் ஒரு திருவள்ளுவர் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் யாழ் பல்கலைகழகத்தின் கைலாசபதி அரங்கில் இடம்பெற்றது.தமிழ் நாட்டிலிருந்தும் பலர் அந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.அது ஒரு சிறியமண்டபம் அதில் அரைவாசிக்கு கூட சனங்கள் வரவில்லை.அந்த மாநாட்டால் பயனடைந்தவர்கள் மிகவும் குறைவே.அத்துடன் தொடர்ந்த நிகழ்ச்சிகளிலே யாருக்கும் சரியான அறிவித்தல் இல்லை ,அழைப்புகளும் இல்லை. யாழ்பாண பலகலைகழகத்தினுடைய தமிழ் துறை என்ன செய்கிறது என்று கேட்கிறேன்.அந்த துறையிலே இருப்பவர்கள் குண்டுசட்டிக்குள் குதிரை ஓடடிக்கொண்டிருக்கின்றார்களா? இந்து நாகரிகத்தையும் தமிழையும் கற்ற பலர் பல்கலைகழகத்தை விடவெளியிலே இருக்கின்றார்கள்.

இதனால் தமிழ்நாட்டிற்கு திரும்பிசென்ற ஒரு பேராசிரியர் சொல்லியிருக்கிறார் யாழ்பாணமக்களிற்கு திருக்குறளிலே அக்கறையில்லைஎன்று. அந்த பழி எங்களுக்குவேண்டுமா? யாழ்பல்கலைகழகத்தின் சரியான தயாரிப்பில்லாத, முன்ஆயத்தம் இல்லாத விழாவினாலேயே இது ஏற்பட்டது.அந்த தமிழ்நாட்டு பேராசிரியருக்கு ஒன்று சொல்கிறேன். உண்மையில் வள்ளுவரை போற்றுகின்ற தன்மையை பார்க்கவேண்டுமானால் கிராமங்களிற்கு வாருங்கள் வவுனியாவிற்கு வாருங்கள்.என்றார்.