யாழ் பல்கலை கழக தமிழ்த்துறை குண்டுசட்டிக்குள்ளே குதிரை ஓட்டுகிறது!! தமிழருவி விசனம்.

யாழ்பாண பல்கலைகழக தமிழ் துறையில் இருப்பவர்கள் குண்டுசட்டிக்குள் குதிரை ஓடடிக்கொண்டிருக்கின்றார்களா என வவுனியா தமிழ் சங்கத்தின் தலைவரான தமிழருவி த.சிவகுமார் விசனம் தெரிவித்தார்.

திருவள்ளுவர் குருபூஜை தினம் வவுனியாவில் அமைந்துள்ள அவரது சிலையடியில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

அனைத்தையும் இறக்குமதி செய்யும் இந்தியதேசம் திருவள்ளுவரை மாத்திரம் உலகிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.வள்ளுவரை அனைத்து மதமும் சொந்தம் கொண்டாடுகின்றது. இன்று திட்டமிட்டு ஒரு விடயம் மேற்கொள்ளபடுகின்றது. வடநாட்டிலே இருக்கும் தர்மசாஸ்திரங்களை தமிழிலே மொழிபெயர்த்தது தான் திருக்குறள் என்று வள்ளுவரின் பெருமையை தங்களுக்கு சொந்தமாக்குவதற்கு சமஸ்கிருத அறிஞர்கள் சிலர் முயற்சிமேற்கொண்டுள்ளனர்.

அண்மையில் ஒரு திருவள்ளுவர் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் யாழ் பல்கலைகழகத்தின் கைலாசபதி அரங்கில் இடம்பெற்றது.தமிழ் நாட்டிலிருந்தும் பலர் அந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.அது ஒரு சிறியமண்டபம் அதில் அரைவாசிக்கு கூட சனங்கள் வரவில்லை.அந்த மாநாட்டால் பயனடைந்தவர்கள் மிகவும் குறைவே.அத்துடன் தொடர்ந்த நிகழ்ச்சிகளிலே யாருக்கும் சரியான அறிவித்தல் இல்லை ,அழைப்புகளும் இல்லை. யாழ்பாண பலகலைகழகத்தினுடைய தமிழ் துறை என்ன செய்கிறது என்று கேட்கிறேன்.அந்த துறையிலே இருப்பவர்கள் குண்டுசட்டிக்குள் குதிரை ஓடடிக்கொண்டிருக்கின்றார்களா? இந்து நாகரிகத்தையும் தமிழையும் கற்ற பலர் பல்கலைகழகத்தை விடவெளியிலே இருக்கின்றார்கள்.

இதனால் தமிழ்நாட்டிற்கு திரும்பிசென்ற ஒரு பேராசிரியர் சொல்லியிருக்கிறார் யாழ்பாணமக்களிற்கு திருக்குறளிலே அக்கறையில்லைஎன்று. அந்த பழி எங்களுக்குவேண்டுமா? யாழ்பல்கலைகழகத்தின் சரியான தயாரிப்பில்லாத, முன்ஆயத்தம் இல்லாத விழாவினாலேயே இது ஏற்பட்டது.அந்த தமிழ்நாட்டு பேராசிரியருக்கு ஒன்று சொல்கிறேன். உண்மையில் வள்ளுவரை போற்றுகின்ற தன்மையை பார்க்கவேண்டுமானால் கிராமங்களிற்கு வாருங்கள் வவுனியாவிற்கு வாருங்கள்.என்றார்.