Home Blog Page 2388

ரவி உள்ளிட்ட 4 பேருக்கும் அன்று 4 மணிவரை அவகாசம்.!

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பெப்பசுவல் டெசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் எலோசியஸ் உள்ளிட்ட நான்கு பேரையும் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு ஆஜராகும் சந்தேகநபர்களுக்கு எதிராக எவ்வித உத்தரவுகளையும் பிறப்பிக்க வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், இன்று (13) பிற்பகல் 4 மணிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜராகாத சந்தேகநபர்கள் தொடர்பில் தற்போது வௌியிடப்பட்டுள்ள பிடியாணைக்கு அமைய நடவடிக்கை எடுக்க சட்டமா அதிபருக்கு அவகாசம் அளிக்கப்படுவதாக குறித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பெப்பசுவல் டெசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட நான்கு பேர் தாக்கல் செய்துள்ள ரிட் மனு இன்று மீண்டும் ஆராயப்பட்ட போது மேன்முறையீட்டு நீதிபதிகளான நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் சோஹித ராஜகருணா ஆகியோரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ரிட் மனு தொடர்பிலான மேலதிக பரிசீலனை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கனடா பிரதமரும் தனிமைப்படுத்தப்பட்டார்

கனடா பிரதமர் ஜஸ்ரின் ரூடோவின் மனைவி சோபி ஜெரேஜிக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று நோய் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் பிரதமர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கனேடிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமரின் மனைவிக்கு கொரோனா வைரசிற்குரிய நோய் அறிகுறிகள் காணப்படுவதால் அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் பிரதமருக்கு நோய்க்கான அறிகுறிகள் காணப்படாத போதும் அவர் சுயமான தனிமைப்படுத்தலுக்கு சென்றுள்ளார்.

யாழில் உணவு,எரிபொருள் தட்டுப்பாடு என்பது வதந்தியே

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள முன் ஆயத்த நடவடிக்கைகளையிட்டு வடமாகாணத்தின் பல மாவட்டங்களில் உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கான தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது என்ற வதந்தியினால் அச்சத்தில் மக்கள் மேற்குறித்த பொருட்களை கொள்வனவு செய்வதில் சிரமங்களுடன் முண்டியடிப்பதாகவும் ஆளுநருடைய கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இது வரையிலும் இவற்றுக்கான எந்தவித தட்டுப்பாடும் வடமாகாணத்தில் இல்லை என்பதை தெரிவிப்பதோடு மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் அவசியம் ஏற்படின் கொழும்பிலிருந்து விரைவாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோன கண்டறிவு மற்றும் பாதுகாப்பு சாதனங்களை வழங்கியது சீனா

இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்துள்ள நிலையில் சீன அரசு இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளது.இதன் முதற்கட்டமாக கொரோனா வைரஸ் தொற்றை பரிசோதிக்கும் 1000 கருவிகள் மற்றும் 50 ஆயிரம் வைத்திய முகக்கவசங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க சீனா முன்வந்துள்ளது.

இலங்கைகான சீன தூதரகம் இதனை தெரிவித்துள்ளது

தமிழரசுக்குத் தாவினார் கோடீஸ்வரன்: திருமலைக் கூட்டத்தில் பூகம்பம்

கடந்த தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகிய க.கோடீஸ்வரன், கட்சிக்கு தெரியாமல் தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

திருமலையில் நேற்று இடம்பெற்ற தமிழத் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் பெரும் பூகம்பத்தைக் கிளப்பியது. இறுதி நிமிடம் வரையில் செல்வம் அடைக்கலநாதனுக்கும் தெரியாமல் இந்த விவகாரத்தை மாவை சேனாதிராஜா கையாண்டிருப்பதால், செல்வம் கடும் சீற்றமடைந்ததாகவும் தெரிகின்றது.

கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியின் மூலம் அரசியல் பிரதிநிதித்துவத்தை பெற்று, பின்னர் வசதி வாய்ப்பிற்காக சிவமோகன், ரவிகரன் போன்றவர்கள் முன்னர் கட்சி தாவிய வரிசையில், தற்போது கோடீஸ்வரனும் இணைந்து கொண்டுள்ளார்.

திருமலையில் நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இந்த விவகாரம் பெரும் பூகம்பத்தை கிளப்பியது. அம்பாறை வேட்பாளர் விவகாரம் நேற்று ஆராயப்பட்டபோது, ரெலோ தமது தரப்பில், தமது கட்சி உறுப்பினரான கோடீஸ்வரனின் பெயரையும், மேலும் இருவரையும் பரிந்துரைத்தது. உடனே, மாவை சேனாதிராசா, அவர் எமது வேட்பாளர் என்றார்.

ரெலோ தரப்பினர் கடுமையாக தர்க்கப்பட்டு, அவர் எமது கட்சியை சேர்ந்தவர் என்பது தெரியாதா எனக்கேட்டனர். அப்படியயன்றால், கோடீஸ்வரனையே கேளுங்கள் என மாவை சொல்ல, செல்வம் அடைக்கலநாதன் தொலை பேசியில் கோடீஸ்வரனைத் தொடர்பு கொண்டார். இதன்போது, கட்சி தாவியமை யைக் கோடீஸ்வரன் ஏற்றுக்கொண்டாராம்.

இதையடுத்து, “”கட்சிக்கு துரோகம் செய்துள்ளாய், நீயல்லாம் ஒரு மனிதனா? என ஒருமையில் செல்வம் கடுமையாக அர்ச்சனை செய்துள்ளார் என இணையத் தளச் செய்திகள் தெரிவித்தன். பதிலளிக்க முடியாமல் திண்டாடிய கோடீஸ்வரன் தொலைபேசியை நிறுத்தி வைத்து விட்டார்.

அவர் இரண்டு மாதங்களுக்கு முன்னரே தமிழ் அரசு கட்சிக்குத் தாம் வரப் போகிறார் என்ற தகவலைத் தங்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தார் என்றும் அதனால் அவரைக் கட்சிக்குள் எடுத்துள்ளோம் எனவும் கூறி மாவை சமாளித்துள்ளார்.

விசாவை இடைநிறுத்தியது இந்தியா; இன்று முதல் பயணம் செய்ய முடியாது

இந்தியாவுக்குப் பயணம் செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள விசாக்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இன்று நண்பகல் 12.00 மணி முதல் இந்தத் தடை நடைமுறைக்கு வருகின்றது.

இது தொடர்பாக தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“இராஜதந்திர, உத்தியோகபூர்வ, ஐ.நா/சர்வதேச அமைப்புக்கள், வேலைவாய்ப்பு, நிகழ்ச்சித்திட்டங்கள் போன்றவற்றுக்கான விசாக்கள் தவிர்ந்த ஏனைய சகல செல்லுபடியாகும் விசாக்களும் 2020 ஏப்ரல் 15 ஆம் திகதிவரை இடை நிறுத்தப்பட்டுள்ளன. புறப்படுகை முனையத்தில் 2020 மார்ச் 13 ஆம் திகதி ஜிஎம்டி நேரப்படி 1200 மணிமுதல் இந்த நடைமுறை அமுலாகும்.

இந்தியாவில் இருக்கும் சகல வெளிநாட்டவர்களதும் விசாக்கள் தொடர்ந்து செல்லுபடியாகும். அவர்கள் தமது விசாக்களை மாற்றுவதற்கு அல்லது நீடிப்பதற்கு விரும்பினால் அல்லது வேறு கொன்சியுலர் சேவைகளை பெற விரும்பினால் e-FRRO ஊடாக அருகிலுள்ள FRRO/FRO அலுவலகங்களை தொடர்பு கொள்ளவும்.

OCIஅட்டைகளை வைத்திருப்பவர்கள் விசா இன்றி பயணிக்கும் அனுமதி 2020 ஏப்ரல் 15 ஆம் திகதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலும் புறப்படுகை முனையத்தில் 2020 மார்ச் 13 ஆம் திகதி ஜிஎம்டி நேரப்படி 1200 மணிமுதல் அமுலாகும்.

அத்தியாவசியமான தேவைக்காக இந்தியாவுக்கு பயணிக்க விரும்பும் வெளிநாட்டவர்கள் அருகில் இருக்கும் இந்திய தூதரகத்தை அணுக முடியும்.

2020 பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு பின்னர் ஸ்பெயின், ஜேர்மனி, பிரான்ஸ், கொரிய குடியரசு, ஈரான், இத்தாலி மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு பயணித்தவர்கள் அல்லது அந்நாடுகளிலிருந்து வருகைதரும் இந்தியர்கள் உள்ளிட்ட சகல பயணிகளும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த அறிவித்தல் புறப்படுகை முனையத்தில் 2020 மார்ச் 13 ஆம் திகதி ஜிஎம்டி நேரப்படி 1200 மணிமுதல் அமுலாகும்.

இந்தியாவுக்கு வருகைதரும் இந்தியர்கள் உள்ளிட்ட சகலரும் அவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளதுடன் அவர்கள் வருகைதரும் நிலையில் ஆகக் குறைந்தது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்

சகல இந்தியர்களும் வெளிநாடுகளுக்கு தேவையற்ற பயணத்தை மேற்கொள்வதை தவிர்க்குமாறு மிகவும் ஆணித்தரமாக அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அவர்கள் நாடு திரும்பும் நிலையில் ஆகக் குறைந்தது 14 நாட்களுக்கு தனிமைப் படுத்தப்படுவார்கள். அதிசிறந்த பரிசோதனை மற்றும் கண்காணிப்பு சோதனை முறைகள் தரை மார்க்கமான சர்வதேச பயணங்களை மேற்கொள்பவர்கள் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்படுவதுடன் இந்த விடயம் தொடர்பாக உள்துறை அமைச்சினால் பிரத்தியேகமாக அறிவிக்கப்படும்.

இலங்கையில் இதுவரை கொவிட் 19 தாக்கம் இருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதலாவதாக பாதிக்கப்பட்டவர் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளார். இரண்டாவது நோயாளி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

2020 மார்ச் 10ஆம் திகதி முதல் தென் கொரியா, இத்தாலி அல்லது ஈரான் ஊடாக அல்லது அந்த நாடுகளிலிருந்து வருகை தரும் சகல பயணிகளுக்கும் கட்டாய தனிமைப்படுத்தல் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது..

இந்த நாடுகளூடான பயணத்தினை கடந்த 14 நாட்களுக்குள் மேற்கொண்ட பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவர்.

பயணிகள் கப்பலின் பயணிகள் மற்றும் மாலுமிகள் கப்பலிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். (2020 மார்ச் 3ஆம் திகதி முதல்)

சுற்றுலா பயணிகளுக்கான வருகைதரு விசா நடைமுறை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது∙ இலங்கைக்கு வருகைதரும் சகல நாட்டவர்களும் வெப்பநிலை பரிசோதனைக்கு முகம் கொடுக்கவேண்டிய அதேநேரம் ஆரோக்கியம் குறித்த தகவல்களையும் வெளிப்படுத்த வேண்டும்.

சுப்பர் மார்க்கெட்களில் முண்டியடித்த மக்கள்! காலியான அத்தியவசியப் பொருட்கள்

கொரோனோ வைரஸ் காரணமாக பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டதையடுத்து நாட்டிலுள்ள பல்பொருள் அங்காடிகள் அனைத்திலும் பெருந்தொகையான மக்கள் முண்டியடித்து அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டிருப்பதை நள்ளிரவு வரையில் காணக் கூடியதாக இருந்தது.

998 சுப்பர் மார்க்கெட்களில் முண்டியடித்த மக்கள்! காலியான அத்தியவசியப் பொருட்கள்பெரும்பாலான கடைகள், பல்பொருள் அங்காடிகள், பெற்றோல் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களைக் கொள்வனவு செய்தார்கள். இதனால், அரிசி, சீனி, பருப்பு போன்ற அத்தியவசியப் பொருட்கள் விற்பனை நிலையங்களில் நள்ளிரவுக்கு முன்னதாகவே காலியாகியிருந்தன.

பெருந்தொகையான மக்கள் கடைகளில் குவிந்ததால் வழமையான நேரத்தக்கு கடைகளை மூட முடியாத நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கும் விற்பனை நிலையப் பணியாளர் ஒருவர், ஆனால், முக்கியமான பொருட்கள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

பொதுத் தேர்தல் நடப்பது உறுதி; தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

கொரோனா தொற்றினால் பொதுத்தேர்தல் இரத்து செய்யப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் இரத்து செய்யப்படவுள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு இதுவரை அவ்வாறான தீர்மானமொன்றை எடுக்கவில்லை எனச் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டார். அத்துடன் தேர்தல் காலங்களில் மக்கள் கூடும் இடங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழு சுகாதார அமைச்சுடன் பேச்சுக்களை முன்னெடுத்துள்ளது.

தேர்தல் கூட்டங்கள் இடம்பெறும் இடங்களில் கொரொனா தொற்று பரவுவதைத் தடுக்க சுகாதார அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சமன் ஸ்ரீ ரத்னப்பிரிய குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில்தான் ஏற்படுத்த வேண்டுமா? சுமந்திரன் கேள்வி

கொரனோ நோயினை கையாள்வதற்கான நிலையங்களை தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் ஏற்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

“வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்களா என்பதை பரிசோதிப்பதற்காக அவர்களை தனிமைப்படுத்தி வைத்திருப்பதற்காக அரசாங்கம் உபயோகிப்பதற்கு எதிராக பிரதேச மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என்பதனை நாம் வலியுறுத்துகின்ற அதேவேளைஇ ஏன் இந்த ஆபத்தான நோயினை கையாள்வதற்கான நிலையங்களை தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் ஏற்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கையானது மக்கள் மத்தியில் அச்சத்தினை தோற்றுவித்துள்ளது.

எனவே நாட்டில் ஒரு சுமூக நிலைமையினை நடைமுறைப்படுத்தும் நோக்கில் அரசாங்கமானது மக்கள் செறிவற்ற பிரதேசங்களை நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கண்டுபிடித்து இத்தகைய தனிமைப்படுத்தும் முகாம்களை அமைக்க வேண்டும் என நாம் வேண்டுவதோடுஇ மக்களின் அபிப்பிராயங்களிற்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம் என்பதனையும் நாம் வலியுறுத்த விரும்புகிறோம்.

போர்க்குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது; கஜேந்திரகுமார்

பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக் கேட்கும் வரைக்கும் போர் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“இனப்படுகொலையே நடந்தது என்று பாதிக்கப்பட்ட மக்கள் சொல்கின்றோம். இதனை ஏற்றுக்கொள்ள உலகம் தயாராக இருக்கின்றது. இந்த இடத்தில் குற்றவாளிகளைச் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல அழுத்தம் கொடுத்திருக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள்தான் இதனைச் செய்திருக்க வேண்டும்.

இவ்வாறான நிலையில், போர்குற்றவாளியைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றாமல், போர்க் குற்றவாளிகள் தப்பிக்க முயல்கின்ற நிலை அதாவது பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கேட்கும் வரை குற்றாவாளிகள் தப்பிக்கமுடியாது. தமிழர்கள் எந்தளவுக்கு இந்த விடயத்தில் அழுத்தம் கொடுக்கின்றோமோ, அந்தளவுக்கு குற்றவாளிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி தமிழர்களுடன் புரிந்துணர்வுக்கு வரும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்” என்றார்.