போர்க்குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது; கஜேந்திரகுமார்

பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக் கேட்கும் வரைக்கும் போர் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“இனப்படுகொலையே நடந்தது என்று பாதிக்கப்பட்ட மக்கள் சொல்கின்றோம். இதனை ஏற்றுக்கொள்ள உலகம் தயாராக இருக்கின்றது. இந்த இடத்தில் குற்றவாளிகளைச் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல அழுத்தம் கொடுத்திருக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள்தான் இதனைச் செய்திருக்க வேண்டும்.

இவ்வாறான நிலையில், போர்குற்றவாளியைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றாமல், போர்க் குற்றவாளிகள் தப்பிக்க முயல்கின்ற நிலை அதாவது பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கேட்கும் வரை குற்றாவாளிகள் தப்பிக்கமுடியாது. தமிழர்கள் எந்தளவுக்கு இந்த விடயத்தில் அழுத்தம் கொடுக்கின்றோமோ, அந்தளவுக்கு குற்றவாளிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி தமிழர்களுடன் புரிந்துணர்வுக்கு வரும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்” என்றார்.