Home Blog Page 2351

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் கடத்தல்

இலங்கையில் தமழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்குப் பகுதியில் போதைப் பொருள் விற்பனை அதிகம் என்றும், இந்தியாவிலிருந்து கடல் வழியாக இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக குற்றஞ் சாட்டப்படுகின்றது. ஆனால், தற்போது இலங்கை வரலாற்றிலேயே முதன்முறையாக கடல்வழியாக இலங்கைக்கு கப்பலில் கடத்தப்பட்ட 2ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை சிறிலங்கா கடற்படையினர் தற்போது பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 9பேரை கைது செய்து சிறிலங்கா கடற்படை விசாரணை நடத்தி வருகின்றது. இலங்கை வரலாற்றில் அதிக போதைப் பொருள் பிடிபட்டதானது, பொது மக்கள் மற்றும் காவல்துறை மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளின் இருந்த போது போதைப் பொருள் பாவனை என்பது முற்றாகவே தடை செய்யப்பட்டிருந்ததுடன், மக்களும் அதனை புறக்கணித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண மக்களுக்கு சுகாதார அமைச்சரின் அறிவுறுத்தல்

யாழ்ப்பாண மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் யாழ். மக்களை அவதானமாக இருக்குமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், “கொரோனா தொற்றிற்கு இலக்கான சுவிஸ் மத போதகரைச் சந்தித்தவர்களே தொடர்ந்தும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். ஆகவே இந்த வைரஸின் தீவிரத் தன்மையை யாழ். மக்கள் உணர்ந்த ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருப்பதால் தான் யாழில் கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ளது. ஆகவே ஊரடங்குச் சட்ட வேளையில் மக்கள் வீடுகளுக்குள் இருப்பதே பாதுகாப்பானது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனோ இல்லை.

வவுனியாவில் நேற்றையதினம் காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை குறித்த பெண் மரணமடைந்திருந்தார்.

இதேவேளை குறித்த பெண்னுக்கு கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருந்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளிற்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவரது பரிசோதனை அறிக்கையின் பிரகாரம் அவருக்கு கொரோனோ வைரஸ் தொற்றவில்லை என்று வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் வவுனியா கற்குழி பகுதியை சேரந்த 56 வயதுடைய அருட்செல்வன் கலாராணி என்பவரே சாவடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3 ஆவது நபர் குறித்த தகவல்கள்.

நேற்று இரவு கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மூன்றாவது மரணம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க, மேலதிக விபரங்களை உறுதி செய்துள்ளார்.

73 வயதான ஆண் நபரே மரணமானதுடன் இவர் கொழும்பு மருதானை பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த போது இவர் கொரோனா வைரஸ் தொற்று நோயாளியென நேற்றைய தினம்(01) உறுதி செய்யப்பட்டார்.

இந்த நோயாளி அடையாளங்காணப்பட்டு கொழும்பு IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட வேளையில் (On Admission Death) மரணமானார்.

இந்த நோயாளி நீரிழிவு , இரத்த அழுத்தம் ,நீண்ட காலமாக சிறுநீரக பாதிப்பு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நோயாளி நோய் உச்சக்கட்டத்தை எட்டிய வேளையிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ளார்

இலங்கையில் கொரோனா தொற்றால் முதலாவது மரணம் கடந்த 28ஆம் திகதி பதிவானமை குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்ட 148 பேரில் தற்போது 124 நோயாளிகள் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

மருத்துவ மனைகளில் தற்போது 231 பேர் கொரோனா தொற்று தொடர்பான சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

திருமலை கோணேஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழா ஒத்திவைப்பு

பஞ்ச ஈஸ்வரங்களில் பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழலைக் கருத்திற்கொண்டு திருக்கோணேஸ்வரர் ஆலய பரிபாலன சபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

தேவார முதலிகளில் முதல்வரான திருஞானசம்பந்தரால் கோணமாமலை அமர்ந்தார் என போற்றிப் பாடப்பட்ட திருக்கோணேஸ்வரர் ஆலயம் வரலாற்று தொன்மைமிக்கதாகும்.

கிழக்கின் அடையாளச் சின்னமாக விளங்கும் இந்த பாரம்பரிய திருத்தலத்தின் வருடாந்த திருவிழா பங்குனி உத்தரமான எதிர்வரும் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்தது.

எனினும் கொரோனா தொற்று அச்சத்தால் மக்களின் நலன் கருதி திருவிழாவை இந்த வருடம் ஒத்திவைக்க நேற்று (1)நடைபெற்ற நம்பிக்கை பொறுப்பாளர் கூட்டத்தில் உத்தேசிக்கப்பட்டது.

அதற்கான பிராயச்சித்தமாக சமயத்தலைவர்கள் பக்தர்களின் ஆலோசனையின் பிரகாரம் சம்புரோட்சண யாகம் நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.

இதனிடையே வாழ்வாதாரமின்றி இன்னல்களை எதிர்நோக்கியுள்ள சுமார் 200 குடும்பங்களுக்கு திருகோணமலை பலநோக்குக் கூட்டுறவு சங்கத்தின் உதவியுடன் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 47,208 ஆக அதிகரிப்பு

உலகில் உள்ள ஏறத்தாள 200 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோயிற்கு இதுவரையில் 47,208 பேர் பலியாகியுள்ளதுடன், 932,605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இறந்தவர்களின் விபரம்:

இத்தாலி – 13,155

ஸ்பெயின் – 9,387

அமெரிக்கா – 5,116

பிரான்ஸ் – 4,043

சீனா – 3,316

ஈரன் – 3,036

பிரித்தானியா – 2,357

நெதர்லாந்து – 1,173

ஜேர்மனி – 931

பெல்ஜியம் – 828

வவுனியாவில் மரணமான பெண்ணின் இரத்தமாதிரிகள் கொரோனோ பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

வவுனியா வைத்தியசாலையில் நேற்றைய தினம் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட நிலையில் மரணமடைந்த பெண்ணின் இரத்தமாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக பெண் ஒருவரினை தெற்கிலுப்பைக்குளத்தில் இருந்து 56 வயதுடைய கலாராணி என்பவர் கொண்டுவரப்பட்டிருந்தார்.

அவருக்கு வவுனியா வைத்தியசாலையின் வைத்தியர்கள் உடனடி மருத்துவ சேவையினை வழங்கியபோதிலும் இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று காலை குறித்த பெண் மரணமடைந்துள்ளார்.

இதேவேளை குறித்த பெண்ணுக்கு கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளிற்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கண்ணுக்கு தெரியாத உயிரியலுடன் நடாத்துகின்ற ஒரு உயிரியல் யுத்தமாகும்.

கொரோனா நோய் என்பது கண்ணுக்கு தெரியாத உயிரியலுடன் நடாத்துகின்ற ஒரு உயிரியல் யுத்தமாகும். மனிதகுலம் என்ற அடிப்படையில் ஏற்பட்டுள்ள சவாலை நாங்கள் ஒன்றாக இணைந்து முகம் கொடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் எம். உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் முதலாவதாக கடந்த மாச் 15 திகதி கண்டுபிடிக்கப்பட்ட வெளிநாட்டில் இருந்து வந்த கொரோனா தொற்று நோயாளியுடன் நெருங்கி பழிகிய ஓய்வு பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்; வீட்டில் சுய தனிமைக்குட்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் அவர் குறித்த 14 நாள் காலக்கேடு முடிவுற்ற நிலையில் அவருக்கு நோய் தொற்று இல்லை என சுகாதார அதிகாரிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்தார்

எனது நண்பர் ராஜதுரை லண்டனில் இருந்து வந்த நிலையில் சந்தித்து நெருக்கமாக பழகிய சந்தர்ப்பத்திலே அவருக்கு கடந்த 15-3.2020 கொரோனா தொற்றுக்குள்ளான காரணத்தின் அடிப்படையிலே அன்றில் இருந்து எங்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தினோம்.

அதேவேளை எங்களுடன் பழகியவர்கள் பயணித்தவர்கள் என்ற அடிப்படையிலே சுமார் 40 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டது

இந்த நிலையில் சுகாதார உத்தியோகத்தர்களின் கண்காணிப்பிலே அவர்களுடைய உடல்நலம் சார்ந்ததாக கவனிக்கப்பட்டது.

அந்த அடிப்படையிலே 29-03-2020 நாங்கள் அவ்வாறான தொற்று எதுவும் இல்லை சுகாதார வைத்தியர் அதிகாரிகள் காரியாலயத்தில் இருந்து கடிதங்கள் கிடைத்தன

இந்த நிலையில் 18 நாட்கள் கடந்து இன்று சந்திப்பதில் மகிழ்சியாகவுள்ளது.

அதேவேளை என்னுடன் பழகியவர்கள் என்ற அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை எவருக்கும் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என்ற செய்தியையும் அறிய முடிந்தது .

அரசாங்கம் தெரிவிக்கும் அறிவுறுத்தலுக்கமைய நாங்கள் தனித்திருந்து ஏனையவர்களையும் எங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது.

ஆகவே எங்களுடைய மக்கள் இந்த தருணத்தில் ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை செய்து தனித்திருந்து சமூக இடைவெளியை நாங்கள் பேணி இந்த சவாலில் இருந்து மீண்டெழ வேண்டும்.

எங்களுடைய மாவட்டம் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு துன்பங்களை தாங்கிய சமூகமாக இருக்கின்றோம் எனவே இன்று இந்த சவாலுக்கு முகம் கொடுப்பதற்காக அனைவரும் மனிதர்கள் என்ற அடிப்படையிலே சுயமாக சிந்தித்து இணைந்து செயற்படவேண்டும் என்றார்.

இலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 9466 பேர் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 9466 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1015 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரனா பரிசோதனை தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 45 விமான பயணிகள் இன்று விடுவிக்கப்பட்டனர்.

கொரோனோ வைரஸ் தாக்கம் நாட்டில் இனம் காணப்பட்ட நிலையில் வெளிநாட்டிலிருந்து வருகைதரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி பரிசோதனைக்குட்டபடுத்தப்படுவார்கள் என்று அரசு அறிவித்திருந்தது.

அந்தவகையில் வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை தடுப்பு தனிமைபப்டுத்தல் முகாமுக்கு கடந்த 13 ஆம் திகதி 212 விமான பயணிகள் கொண்டுவரப்பட்டிருந்தனர்.

இத்தாலிஇ தென்கொரியா ஈரான் நாட்டவர்கள் குறித்த முகாமிற்கு கொண்டுவரப்பட்டிருந்ததுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கபட்டு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 45 பேர் இன்று (2.4) விடுவிக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் அனைவரும் இத்தாலி நாட்டில் இருந்து வருகைதந்திருந்த நிலையில் அவர்களிற்கு நோய்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் தமது வதிவிடங்களுக்கு செல்ல அனுமதிக்கபட்டிருந்தனர்.

a6 கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.

a5 கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.

a4 கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.

a3 கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.

a2 கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.

a கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.