Home Blog Page 2350

அமேசான் காடுகளை பாதுகாக்க போராடிய மற்றுமொருவர் படுகொலை

அமேசானிலுள்ள பாதுகாக்கப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரேசில் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குவாஜஜரா பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜெசிகோ குவாஜஜராவின் சடலம் கடந்த செவ்வாய்க்கிழமை அவரது கிராமத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதாக பிரேசிலுள்ள மரன்ஹாவ் மாகாண அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் ஆசிரியரான இவர், அமேசான் காடுகளில் மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுவதை எதிர்த்து போராடும் ‘கார்டியன்ஸ் ஆஃப் ஃபாரஸ்ட்’ எனும் குழுவின் ஆதரவாளரும் ஆவார்.

எண்ணற்ற வழிகளில் சுரண்டப்பட்டு வரும் அமேசான் காடுகளை பாதுகாப்பதற்காக போராடி வருபவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், கடந்த ஆறு மாதங்களில் அமேசான் காடுகளை பாதுகாப்பதற்காகவும், அங்கு வாழ்ந்து தொல்குடிகளின் நிலவுரிமைக்காக போராடியதற்காகவும் கொல்லப்பட்ட ஐந்தாவது நபர் ஜெசிகோ.

குவாஜஜராஸ் என்பது 20,000 மக்களைக் கொண்ட பிரேசிலின் மிகப்பெரிய பழங்குடி குழுக்களில் ஒன்றாகும். 2012ஆம் ஆண்டில், அரேரிபோயா பிராந்தியத்தை பாதுகாக்க அவர்கள் ‘கார்டியன்ஸ் ஆஃப் ஃபாரஸ்ட்’ எனும் அமைப்பை தொடங்கினர்.

ஜெசிகோவை கொன்றது யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்னர் – பின்னோக்கிப் பார்த்தல்

கோவிட்-19 இன் தாக்கத்திற்கு இன்று ஒரு மில்லியன் மக்கள் உட்பட்டுள்ளதுடன், 53,000 இற்கு மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.

ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அதாவது மார்ச் மாதம் 3 ஆம் நாள் உலக சுகாதார நிறுவனம் விடுத்த செய்திக்குறிப்பை பார்த்தால்:

உலகில் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை அன்று 90,869 ஆனால் இந்த எண்ணிக்கையின் அளவை நாம் தற்போது சில நாட்களில் எட்டிவிடுகிறோம்.

சீனாவில் தான் அதிக மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர், 80,000 பேர் சீனாவில் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அன்று 95 சத விகித இறப்பும் சீனாவில் தான் நிகழ்ந்தது. அதாவது அங்கு 2,946 பேர் அன்று இறந்திருந்தனர். 166 பேர் மட்டுமே சீனாவுக்கு வெளியில் இறந்திருந்தனர்.

ஆனால் இன்று ஒரு நாளில் சராசரியாக 5,000 பேர் மரணமடைகின்றனர்.

மே 3 ஆம் நாள் உலகம் எவ்வாறு இருக்கும்? எத்தனை பேரை இழந்திருப்போம்?

கொரோனா முகக்கவச பாவனை WHO நியமங்களில் மாற்றம் வரலாம்.

அமெரிக்காவில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவின்படி, கொரோனா பாதித்த ஒருவர் இருமினால் அது ஆறு மீட்டர் வரையும், தும்மினால் எட்டு மீட்டர் வரையும் இருப்பவர்களை பாதிக்கக் கூடும். இது தற்சமயத்தில் உலக சுகாதார நிறுவனத்தால் நம்பப்பட்டு வரும் தூரத்தை விட அதிகம். எனவே, இந்த சிறப்பு குழுவானது வைரஸின் பரவல் தூரம் குறித்து ஆய்வு நடத்த உள்ளது.

அந்த சிறப்பு குழுவின் தலைவரான பேராசிரியர் டேவிட் ஹெய்மான், இந்த புதிய ஆய்வு முகக்கவசங்கள் குறித்து அளிக்கப்பட்டு வரும் வழிகாட்டுதல்களில் மாற்றத்தை கொண்டுவர கூடும் என்று கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான அவர், “முகக்கவசங்களை அணிவது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் அளித்து வரும் பரிந்துரையில் மாற்றத்தை மேற்கொள்ள வேண்டுமா என்பதை தீர்மானிக்க புதிய ஆதாரங்களை மையாக கொண்ட விவாதத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளோம்” என்று அவர் கூறினார்.

நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக இருமல் அல்லது தும்மும் எவரிடமிருந்தும் குறைந்தது ஒரு மீட்டர் தூரம் தள்ளியிருக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.

உடல்நல பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் நோய்த்தொற்று அறிகுறி இருப்பவர்கள் மட்டும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதே உலக சுகாதார நிறுவனத்தின் தற்போதைய பரிந்துரையாக உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இன்னும் நிறைய பேர் முகக்கவசம் அணிய வேண்டுமா?
ஆனால், நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களை கவனித்துக்கொள்ளும் ஆரோக்கியமான உடல்நிலையில் இருப்போரும் முகக்கவசத்தை அணிய வேண்டும் என்று அது அறிவுறுத்துகிறது.

முகக்கவசத்தை சரிவர பயன்படுத்துவதுடன், அடிக்கடி கை கழுவதும் மிகவும் முக்கியமானது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது.

ஒருவருக்கொருவர் இரண்டு மீட்டர் இடைவெளியில் இருந்தால் மட்டுமே அது சமூக விலக்கமாக கருதப்படும் என்று பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்துகின்றன.

திரவ துளிகளின் வாயிலாக மட்டுமே வைரஸ்கள் பரவ முடியும் என்பதைக் காட்டும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்த ஆலோசனை அமைந்துள்ளது.

கொரேனா வைரஸ் – இறப்பு எண்ணிக்கை 53,000

உலகின் இயக்கத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் 1,010,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 53,000 இற்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 210,000 பேர் குணமடைந்துள்ளனர் என ஜோன் கொப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளில் இறந்தவர்களின் விபரம்

இத்தாலி – 13,915 பேர் மரணமடைந்துள்ளதுடன், 115,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயின் – 10,348 பேர் பலியாகியுள்ளதுடன், 102,136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கனடா – 127 பேர் பலியாகியுள்ளதுடன், 10,000 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுவிற்சலாந்தில் – 432 பேர் பலியாகியுள்ளதுடன், 18,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் 2,926 பேர் மரணமடைந்துள்ளதுடன், 33,718 பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெதர்லாந்து – 1,341 பேர் மரணமடைந்துள்ளதுடன், 14,697 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் – 5,387 பேர் மரணமடைந்துள்ளனர்

துருக்கி – 356 பேர் பலியாகியுள்ளதுடன், 18,135 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா – 5,911 பேர் மரணமடைந்துள்ளதுடன், 240,000 இற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனா – 3,332 பேர் மரணம்

ஈரான் – 3,160 பேர் மரணம்

ஜேர்மனி – 1,107 பேர் மரணம்

பெல்ஜியம் – 1,011 பேர் மரணம்

தமிழ்நாட்டில் வைரஸ் தொற்று; பாதிப்பு எண்ணிக்கை 300-ஐ கடந்தது

தமிழ்நாட்டில் மேலும் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 74 பேர் டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் நிகழ்வில் பங்கேற்றவர்கள் என மாநில அரசு தெரிவித்துள்ளது. ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ், தற்போது தமிழ்நாட்டில் 309 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இவர்களில் 264 பேர் டெல்லி மாநாடு தொடர்புடைய நோயாளிகள் என அறியப்பட்டிருக்கிறது.

முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்தல்;கோரிக்கை அரசால் நிராகரிப்பு

கொவிட்–19 வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யாமல் நல்லடக்கம் செய்வது தொடர்பில் முஸ்லிம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (02) சிரேஷ்ட அரசியல்வாதி ஏ.எச்.எம். பௌஸியின் இல்லத்தில் ஒன்றுகூடி கலந்துரையாடினார்கள். இதன்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இதுபற்றி பிரதமருடன் பேசுவதற்கு இணக்கம் காணப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று (02) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் தரப்பில் முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன், பைசர் முஸ்தபா, முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி, அலிசாஹிர் மௌலானா, எச்.எம்.எம். ஹரீஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொவிட்–19 வைரஸ் தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை எரிக்காமல் நல்லடக்கம் செய்யக் கோரும்போது சிலர் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்பதால், பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இதுவிடயமாக தனிப்பட்ட ரீதியில் பேசுவதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனைவரின் மத்தியிலும் பகிரங்கமாக பேசுவதற்கே பிரதமர் இணங்கியுள்ளார்.

இதற்கமைய முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், கொவிட்–19 தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்வதற்குகான காரணங்களை விளக்கிக் கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டல், யுனஸ்கோ நிறுவனத்தின் நியதி என்பவற்றில் காணப்படும் முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டி, இத்தகைய தொற்றுநோயினால் இறப்பவர்களை எரிக்காமல், அதற்கு மாற்றீடாக அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மருத்துவ ரீதியாக மட்டுமல்லாது மக்களின் சமய ரீதியான உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்துகொள்வதன் அவசியம் பற்றி அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றையும் அவர் காண்பித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் தீர்மானத்துக்கமைய, இறந்தவரின் உடலை குறிப்பிட்ட ஆழத்தில் உரிய நிபந்தனைகளுக்கு அமைவாக அடக்கம் செய்யலாம். வழங்கப்பட்ட அறிவுறுத்தலில் சடலம் அவசர அவசரமாக அகற்றப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. புதைப்பதன் ஊடாக இறந்தவரின் உடலிலிருந்து அவ்வாறான கிருமிகள் பரவும் என குறிப்பிடப்படவில்லை போன்ற விடயங்களையும் ரவூப் ஹக்கீம் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

கூட்டத்தில் பிரசன்னமாயிருந்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜயசிங்க இதன்போது எதிர்க் கருத்துகளை தெரிவித்துள்ளார். உடலை அடக்கம் செய்வதால் நிலத்தடி நீர் மாசடையும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்தின் சார்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் கருத்து தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆளும் தரப்பைச் சேர்ந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரும் முஸ்லிம் தரப்பின் கோரிக்கைகளுக்கு எதிர்ப்புக் காட்டியுள்ளனர். ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதித்தால், பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தரப்பில் ரவூப் ஹக்கீம் ஆதாரங்களுடன் முன்வைத்த கோரிக்கைகளுக்கு துரதிஷ்டவசமாக சாதகமான பதில்கள் எவையும் கிடைக்கவில்லை.

முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், பைசர் முஸ்தபா ஆகியோர் இதுபற்றி விரிவாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் மீளாய்வு செய்வதற்கு மருத்துவ துறைகளை சார்ந்த நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானத்துறை நிபுணர்கள் ஆகியோர் உள்ளடங்கிய குழுவொன்றை அவசரமாக நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். அதுகுறித்து யோசிப்போம் என பிரதமர் கூறியுள்ளார்.

சீயோன் தேவாலய தற்கொலை தாக்குதல்;மேலும் இருவர் கைது

மட்டக்களப்பு சியோன் தேவாலத்தில் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் தொடர்பில் மேலும் இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா கவத்துறையினர் தெரிவித்தனர்

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டை கொண்டுச் செல்ல வசதி ஏற்படுத்தி கொடுத்தவர் என்ற குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் நடத்திய விசாரணைகளுக்கு அமைய குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கவத்துறை ஊடகப்பேச்சாளரும் கவத்துறை அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்

வவுனியா பெரியகட்டு இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரனா பரிசோதனை தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து எஞ்சிய 16 விமான பயணிகள் இன்று விடுவிக்கப்பட்டனர்.

கொரோனோ வைரஸ் தாக்கம் நாட்டில் இனம் காணப்பட்ட நிலையில் வெளிநாட்டிலிருந்து வருகைதரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி பரிசோதனைக்குட்டபடுத்தப்படுவார்கள் என்று அரசு அறிவித்திருந்தது.

அந்தவகையில் வவுனியா பெரியகட்டு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை தடுப்பு தனிமைபப்டுத்தல் முகாமுக்கு விமான பயணிகள் கொண்டுவரப்பட்டிருந்தனர்.

இத்தாலி, இலண்டன்,கனடா தென்கொரியா,ஈரான் நாட்டவர்கள் குறித்த முகாமிற்கு கொண்டுவரப்பட்டிருந்ததுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கபட்டு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 16பேர் இன்று வன்னி கட்டளை தளபதி மேயர் ஜெனரல் ரோகிததர்மசிறி தலைமையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் அனைவரும் கனடா, இலண்டன்,நாட்டில் இருந்து வருகைதந்திருந்த நிலையில் அவர்களிற்கு நோய்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் தமது வதிவிடங்களுக்கு செல்ல அனுமதிக்கபட்டிருந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தும் அனைத்து விமானப் பயணிகளும் வைத்திய பரிசோதனை முடிந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

aa1 கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்

a5 1 கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்

a4 1 கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்

a3 1 கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்

aaa கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்

யாழில் அகப்பட்ட வெளிமாவட்ட மக்களுக்கான அறிவுறுத்தல்!

யாழ்ப்பாணத்திற்கு தொழில் நிமித்தமோ பிற தேவைகளுக்காகவோ சென்ற நிலையில் ஊர் திரும்ப முடியாது தவிப்பவர்களை வீடுகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.

அவ்வாறு தங்கியிருப்பவர்கள் தமது பகுதிகளில் உள்ள கிராம அலுவலர்களிடம் தமது பதிவுகளை மேற்கொள்ளவேண்டும்.

அதன் பின்னர் சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் பதிவு செய்யும் நபர்களின் உடல் நிலை குறித்த சான்றிதழ்களை கையளிப்பார்கள்.

பின்னர் இராணுவத்தினர் தமது பாதுகாப்புடன் குறித்த நபர்களை தத்தமது ஊர்களுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடுகளை மேற்கொள்வார்கள் என்று தெரியவருகிறது.

இந்நிலையில் உணவு உட்பட்ட பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இந்த விடயம் தொடர்பில் உடனடியான நடவடிக்கைகளில் ஈடுபடுதவதன் மூலம் சிரமங்களை தவிர்த்துக்கொள்ளலாம் என்று தெரியவருகிறது.

யாழ்ப்பாண மக்கள் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தினுள் நுழைவது முற்றாகத் தடை -பிரதேச செயலர் திருமதி ஜெயராணி

கொரோனாத் தொற்று காரணமாக, யாழ்ப்பாண மாவட்ட மக்கள் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தினுள் நுழைவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்று பிரதேச செயலர் திருமதி ஜெயராணி பரமோதயன் தெரிவித்தார்.

பிரதேச செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால், அந்த நோய் பச்சிலைப் பள்ளிப் பிரதேசத்துக்கும் பரவாமால் தவிர்க்கும் வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் அச்ச சூழ்நிலை முடிவடையும் வரை பச்சிலைப்பளிப் பிரதேசத்துக்குள் வருவது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்று பிரதேச செயலர் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கமநல சேவைகள் நிலையப் பெரும்பாக அலுவலர், சுகாதார மருத்துவ அதிகாரி, பணியக மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட கிராம அலுவலர்கள், பிரதேச அலுவலர்கள் கலந்துகொண்டனர்.