Home Blog Page 2346

இஸ்ரேலில் ஒரே நகரத்தில் 40% பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

இஸ்ரேல் நாட்டில் ஏராளமான கொரோனா நோயாளிகளைக் கொண்டுள்ள தீவிர பழமைவாத யூத நகரம் ஒன்றில் தற்போது முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல் அவிவ் நகரத்துக்கு வெளியே உள்ள நே பிரேக் நகரில் அவசியத் தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர். சில இன்றியமையாத பணியாளர்கள் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

2 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரில் 40 சதவீதம் பேருக்கு கொரோனா இருப்பதாக மூத்த சுகாதாரத் துறை அதிகாரி கூறுகிறார்.

இஸ்ரேலில் மொத்தம் 8,611 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 51பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் முழுவதும் மக்கள் வீட்டைச் சுற்றி 100 மீட்டர் தொலைவிலேயே இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மக்கள் கூட்டமாக கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. வெளியில் செல்பவர்கள் முகக்கவசம் அல்லது துணியால் முகத்தை மூடிக்கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பரிசோதனையில் தமக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியான பிறகும் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வைரஸ் பரவுவதைத் தடுக்க மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று கூறியுள்ளார்.

வியாழக்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நே பிரேக் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னரே போலீஸார் நகருக்குள் நுழையவும், நகரில் இருந்து வெளியேறவும் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினர். இதற்காக நகரைச் சுற்றி போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் காலத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் -விசேட தொகுப்பு

தமிழர் தாயகப் பிரதேசங்களில் ஒருபகுதியான வடக்கு மாகாணம் விசாயம் மற்றும் சிறுதோட்டப் பயிற்செய்கையை பின்புலமாகக் கொண்ட மக்கள் வாழும் மாகாணம்.

கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தமது வியர்வையை இரத்தமாகச் சிந்தி வெய்யில் மழை எனப் பொருட்படுத்தாது மண்ணைக் கிண்டி விதைத்து மனிதம் காத்துவரும் விவசாய தெய்வங்கள் வாழும் மண்.

தற்போது புறக் கண்ணுக்கு புலப்படாத கொடிய கொரோனா தொற்று நோய் காரணமாக முழு உலகமே முடங்கிக் கிடக்கின்றது.

இவ்வாறான சவால் மிக்க காலத்திலும் தாம் சிறுகச் சேகரித்த நகைகளை விற்றும், அடகு வைத்தும் கடன்வாங்கியும் கொழுத்தும் வெய்யிலில் தோட்டம் செய்து வரும் விவசாயிகள் தமது விளைபொருட்கள் விளைந்து விற்பனைக்கு ஏற்ற காலத்தில் காய்கறிகளை சந்தைப்படுத்த முடியாத நிலையில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். விவசாயத்தையே வெறுக்கும் அளவு மனரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வவுனியா கல்மடு, கிடாச்சூரி, ஈச்சங்குளம், இராசேந்திரகுளம், செட்டிகுளம், நெடுங்கேணி, கனகராயன்குளம், புளியங்குளம், மாங்குளம், மற்றும் முல்லைத்திவு மாவட்டத்தில் பலகிராமங்களிலும். கிளிநொச்சி மாவட்டத்தில் பல கிராமங்களிலும் தக்காளி, கத்தரி, வெண்டி, கறிமிளகாய், பச்சை மிளகாய், போன்ற சிறுதோட்டப் பயிர்கள் தற்போது நன்றாக விழைந்து சாகுபடி செய்யும் நிறையில் இருந்தாலும் அவற்றை விற்பனை செய்வதற்கு ஏற்ற பொறிமுகைள் இல்லாமல் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

நகர்ப் புறங்களில் காய்கறிகள் தட்டுப்பாடான நிலை காணப்படுகின்றது கிராமப்புறங்களில் காய்கறிகள் விற்பனை செய்யமுடியாத நிலையில் காணப்படுகின்றது இவற்றை நிவர்த்தி செய்வாற்கு கமநல சேவைகள் திணைக்களமும், விவசாயத் திணைக்களமும், பொருத்தமான பொறிமுறைகளைப் பயன்படுத்தி விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாக தேவையாகக் காணப்படுகின்றது.

பிரிட்டன் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு 10 நாட்கள் ஆன நிலையில் மேற்கொண்டு பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பாதிப்புகள் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சினைகளால் மருத்துவரின் அறிவுரைப்படி மருத்துவமனைக்குச் செல்வதாகவும் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டார். அவரது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்ட “முன்னெச்சரிக்கை நடவடிக்கை” என்றும் கூறப்படுகிறது.

சிறீலங்காவில் 176 கொரோனா நோயாளிகள்

இன்று (6) மேலும் 5 கோவிட்-19 நோயாளிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் சிறீலங்காவில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. அங்கு இதுவைர 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, கடுமையான வெப்பமான காலநிலை, அதிக ஈரப்பதன் போன்ற காரணகள் வைரசின் பரவலை மிகவும் குறைத்து வருவதாக சிறீலங்காவை தளமாகக் கொண்ட சுயாதீன ஆய்வாளர் கொசிபா அக்பரலி தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மெல்போனை தளமாகக் கொண்ட கலாநிதி அன்வர் சேதுவல, பேராசிரியர் நாதன் பெற்றர் மற்றும் பேராசிரியர் ஜெப்ரி லெப்கோவிற் ஆகியோருடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் இறப்பு எண்ணிக்கை குறைகின்றது – உலகில் 69,330 பேர் பலி

கொரோனா வைரசின் தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான இத்தாலியில் கடந்த சில வாரங்களில் இறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 525 பேர் பலியாகியுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.

ஸ்பெயினிலும் இன்று இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 674 பேர் பலியாகியுள்ளனர்.

பிரித்தானியாவில் இன்று 621 இறந்துள்ளதுடன், 4,934 பேர் இதுவரையில் இறந்துள்ளனர்.

உலகில் இதுவரை 69,330 பேர் இறந்துள்ளதுடன், 1,268,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கொரோனா நோயிற்கு உட்பட்டுள்ள பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் நோய் அறிகுறிகள் தொடர்ந்தும் காணப்படுவதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

லிபியாவின் முன்னாள் பிரதமர் கொரோனாவிற்கு பலி

லிபியாவின் முன்னாள் பிரதமர் மகமூட் ஜெப்ரில் கொரேனோ நோயினால் பாதிக்கப்பட்டு எகிப்தில் உள்ள வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் 26 ஆம் நாள் அவருக்கு நோய் ஏற்பட்டது உறுதிப்படுத்தப்பட்டதாக அவரின் கட்சியான தேசிய படைக் கூட்டணி தெரிவித்துள்ளது. 1952 ஆம் ஆண்டு பிறந்த அவர் மேற்குலக நாட்டில் அரசியல் கல்வியை நிறைவு செய்திருந்தார்.

2011 ஆம் ஆண்டு லிபியாவில் அதிபர் கேணல் கடாபிக்கு எதிராக மேற்குலக நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது தேசிய இடைக்கால சபையின் பக்கம் சென்றிருந்தார். 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் அவரின் கட்சி போட்டியிட்டிருந்தது.

கோவிட் -19 – வைத்தியராகவும் பணியாற்றப் போகிறார் அயர்லாந்து பிரதமர்

அயர்லாந்து பிரதமர் ராய்சேச் லியோ வராட்கார் மீண்டும் தனது மருத்துவத் தொழிலை ஆரம்பிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

அயர்லாந்து பிரதமர் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் ஏழு வருடங்கள் வைத்தியராக பணியாற்றியிருந்தார். அவர் கடந்த மார்ச் மாதம் மருத்து பதிவு ஏட்டில் தனது பெயரை பதிவு செய்திருந்ததாக த ஜரிஸ் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.

பகுதி நேரமாக மீண்டும் மருத்துவத்துறையில் பணியாற்ற அவர் தீர்மானித்துள்ளார். தொலைபேசியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கும் பணியை அவர் முதலில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளார்.

அவரின் மனைவியும், குடும்பத்தில் உள்ள வேறு சிலரும் மருத்துவத்துறையில் பணியாற்றி வருகின்றனர்.

அயர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு 120 பேர் பலியாகியுள்ளதுடன், 4,273 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலக்கு-இதழ்-72-ஏப்ரல்5, 2020

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:

இலக்கு-இதழ்-72-ஏப்ரல்5, 2020

ஊரடங்கு உத்தரவை மீறிய மேலும் 552 பேர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கடந்த 24 மணிநேரத்தில் 552 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி தொடக்கம் இன்று வரையான காலப்பகுதியில் 14,268 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் 3,563 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவி்க்கப்படுகிறது.

முல்லை இளைஞனைக் கொலை செய்த சம்பவத்துடக் தொடர்புடைய – 8 பேர் கைது

குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப் பட்ட 8 பேரும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று (04) குமுழமுனை பகுதியைச் சேர்ந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்து 8 பேரும் முல்லைத்தீவு நீதிமன்றத்தின் பதில் நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் குறித்த சந்தேக நபர்கள் 8 பேரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது