Home Blog Page 2336

மாவட்ட நிர்வாகத்தினால் புறக்கணிக்கப்படுகிறோம்-பிரதேசசபை தவிசாளர்கள்

கொரனா வைரஸ் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்திலான தீர்மானங்கள் எடுக்கும் கூட்டங்களில் எதிலும் பிரதேச சபையின் தவிசாளர்கள் எவரும் அழைக்கப்படுவதில்லை.பிரதேச செயலாளர்கள்,உள்ளுராட்சிமன்ற உதவி ஆணையாளரைக்கொண்டு தீர்மானங்களை எடுப்பதை மட்டக்களப்பு மாவட்ட பிரதேசசபை தவிசாளர்கள் ஒன்றியம் வன்மையாக கண்டிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதேசசபைகளின் ஒன்றியத்தின் செயலாளரும் மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளருமான சோ.மகேந்திரலிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிரதேசசபை தவிசாளர்கள் ஒன்றியத்தின் விசேட கூட்டம் நேற்று மண்முனைப்பற்று பிரதேசசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்ட மட்டக்களப்பு மாவட்ட பிரதேசசபை தவிசாளர்கள் ஒன்றியத்தின் தலைவரும் மட்டக்களப்பு தென் மேற்கு பிரதேசசபையின் தவிசாளருமான என்.புஸ்பலிங்கம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதேசசபைகளின் தவிசாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கொரனா அச்சுறுத்தல் நிலவும் இக்காலப்பகுதியில் பிரதேசசபைகளினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் மற்றும் பொதுமக்களுககு வழங்கும் வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

அதனை தொடர்ந்து இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட பிரதேசசபைகளின் ஒன்றியத்தின் செயலாளரும் மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளருமான சோ.மகேந்திரலிங்கம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

பிரதேசசபை தவிசாளர்களின் அதிகாரம் தொடர்பாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் அடிப்படையில் முறையான அதிகாரிகள் என்பது அந்ததந்த பிரதேசங்களில் உள்ள பிரதேசசபைகளின் தவிசாளர்கள் என்பது தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கொரனா வைரஸ் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கும் கூட்டங்களில் எதிலும் பங்குகொள்வதற்காக அழைக்கப்படவில்லையென்பதுடன் பிரதேச செயலாளர்கள்,உள்ளுராட்சி உதவி ஆணையாளர் உட்பட்ட அரச அதிகாரிகளைக்கொண்டு மாவட்ட மட்டத்தில் தீர்மானங்கள் எடுப்பதை மட்டக்களப்பு மாவட்ட பிரதேசசபையின் தவிசாளர்கள் ஒன்றியம் என்ற வகையில் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

எமது மக்களுக்காக இருபத்திநான்கு மணி நேரமும் களத்தில்நின்று ஒவ்வொரு பிரச்சினைக்கும் முகம்கொடுத்து அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இரவு பகல் பாராது செயற்பட்டுவரும் மாவட்ட பிரதேசசபை தவிசாளர்களாகிய நாங்கள் மக்கள் தொடர்பான தீர்மானங்கள் எடுப்பதில் எவ்வித பங்களிப்பினையும் செய்யாத இக்கட்டான நிலைக்கு மாவட்ட நிர்வாகத்தினால் முன்னெடுத்துசெல்லப்படுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

பிரதேச செயலகங்கள் ஊடாக மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடி எடுக்கப்படும் தீர்மானங்கள் உள்ளுராட்சி உதவி ஆணையாளரினால் பிரதேசபையின் செயலாளர்களுக்கு முகவரியிடப்பட்டு அனுப்பிவைக்கப்படுகின்றபோது அவற்றினை செயற்படுத்துகின்ற விதத்தில் மக்கள் நலன் கருதுகின்றவர்கள் என்ற வகையில் பொறுiமையுடன் அந்த தீர்மானங்களை செயற்படுத்திவந்தோம். ஆனால் தொடர்ந்து தவிசாளர்கள் புறக்கணிக்கப்படுகின்ற நிலையில் மாவட்ட செயலக தீர்மானங்களை செயல்படுத்துவதில் நாங்கள் பாரிய இடர்பாடுகளை எதிர்கொள்கின்றோம். மக்களின் கேள்விகளுக்கு எங்களால் பதிலளிக்கமுடியாதநிலையேற்படுகின்றது.

இந்த அடிப்படையில் அதிவிசேட வர்த்தமானியின் அடிப்படையில் தனிப்படுத்தல் ஓழுங்குவிதிகள் ஒழுங்குபடுத்தல் முறையான அதிகாரி என்ற வகையில் பிரதேசசபையின் தவிசாளர்கள் அங்கீகரிக்கப்பட்டு அவர்கள் ஊடாகவே தனிமைப்படுத்தல்ääநிவாரணம் வழங்கல்,தொற்று நீக்கல் உட்பட சகல விடயங்களும் கையாளப்படவேண்டும் என தவிசாளர்கள் ஒன்றியம் தீர்மானம் எடுக்கின்றது.

மற்றும் அனைத்து அரசுசார்,அரசசார்பற்ற நிவாரணங்களும் பிரதேச செயலகத்தினால் வழங்கப்படுகின்றபோது அதில் ஏற்படும் சரிபிழைகள்,பொருத்தப்பாடு அற்ற செயற்பாடுகள்,எமது தவிசாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டு அந்த தவறுகள் நிவர்த்திக்கப்படவேண்டுமாகவிருந்தால் பிரதேச செயலாளர்கள் பிரதேசசபை தவிசாளர்களுடன் கலந்துரையாடவேண்டும்.

எமது பகுதிகளில் உள்ளுர் உற்பத்திகள் போதியளவு உள்ளபோதிலும் வெளியிடங்களில் இருந்து மரக்கறி மற்றும் அதனோடினைந்த பொருட்களை கொண்டுவருவதன் மூலம் எமது உள்ளுர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதோடு தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதிலும் திண்டாடுகின்றனர்.இந்த நிலையினை நீக்குவதற்கு எமது மாவட்ட உள்ளுர் உற்பத்திகளை கொள்வனவு செய்து மாவட்டத்திற்குள்ளும் வெளியிலும் விநியோகம் செய்ய மாவட்ட செயலகம் நடவடிக்கையெடுக்கவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த பலர் தொழில்வாய்ப்புகளுக்காக மாவட்டத்திற்கு வெளியே சென்றவர்கள் உணவுமின்றி மிகவும் கஸ்டமான நிலையில் உள்ளதாக தெரியவருகின்றது.அவர்களை இங்கு கொண்டுவந்து அந்ததந்த பகுதிகளில் தனிமைப்படுத்தல்களை மேற்கொண்டு அவர்களை குடும்பத்துடன் இணைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மாவட்ட செயலகம் மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

அரச மற்றும் தனியார் துறையினருக்கு வீட்டில் இருந்து பணி புரியும் காலம் நீடிப்பு.

வீட்டில் இருந்து பணி புரியும் காலமானது ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரச மற்றும் தனியார் துறையினருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து பணி புரியும் காலமானது விடுமுறை தினம் இல்லை எனவும் அரச மற்றும் தனியார் துறை பிரதானிகளின் அறிவுரைக்கு அமைய முடிந்தளவு வீட்டில் இருந்தவாறு வேலை செய்யுமாறும் தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதாரம், வங்கி, போக்குவரத்து மற்றும் அத்தியவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய தரப்பினருக்கு இவ்வாறு வீட்டில் இருந்து பணி புரிய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

சட்டத்தை மீறிய 25 ஆயிரத்து 31 பேர் கைது.

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியினுள் ஊரடங்கு சட்டத்தை மீறிய ஆயிரத்து 512 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அந்த காலப்பகுதியினுள் 354 வாகனங்களை காவற்துறையினர் பொறுப்பேற்றுள்ளனர்.

கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரை ஊரடங்கு சட்டத்தை மீறியமைக்காக 25 ஆயிரத்து 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஆறாயிரத்து 426 வாகனங்கள் காவற்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

இன்று வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி

எதிர்வரும் தினங்களில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்பப்ங்களில் மின்னல் மற்றும் பலத்த காற்று வீசுவதன் காரணமாக மக்கள் பாதிப்புக்களை குறைத்திட போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறித்த திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 14ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு மேலே உச்சம் பெற்று காணப்படுகிறது. அதன்படி இன்றைய தினம் (13) பகல் 12.11 மணிக்கு வெள்ளான்குளம், உயிலங்குளம் மற்றும் கச்சிலமடு ஆகிய பிரதேசங்களில் உச்சம் பெற்று காணப்படுமெனவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைத்தீவில் இம்முறை சித்திரை புத்தாண்டு..?

ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வரும் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தை போல இவ்வருடம் எந்தவொரு நிகழ்வும் இல்லை.

கொரோனா தொற்றின் தாக்கமே இதற்கான காரணமாகும்.

புத்தாண்டில் கிராமங்களுக்கு செல்லும் மக்களின்றி கொழும்பு நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.

ஏனைய புத்தாண்டு நாட்களைப் போலன்றி இன்று கொழும்பு பிரதான பேருந்து நிலையம், சேவையின்றி நிறுத்தப்பட்ட பேருந்துகளுடன் காணப்படுகிறது.

அதேபோல, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ஒரு புகையிரதம் கூட பார்வைக்கு தென்படாமல் இருக்கிறது.

கொரோனா தொற்றின் காரணமாக ஆடை வியாபாரிகள், பட்டாசு விற்பனையாளர்கள், இனிப்புக்கள் மற்றும் பானை தாயாரிப்பாளர்கள் என அனைவரும் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 114,098 ஆக உயர்ந்தது

கொரோனா வைரசின் தாக்கத்தினால் உலகில் உள்ள நாடுகள் அதிக உயிர் மற்றும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருவது நாம் அறிந்ததே இந்த நிலையில், இதுவரையில் 114,098 பேர் பலியாகியுள்ளதுடன், 1,851,011 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 422,566 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இறந்தவர்களின் விபரம்:

அமெரிக்கா – 22,036

இந்தாலி – 19,899

ஸ்பெயின் – 17,209

பிரான்ஸ் – 14,393

பிரித்தானியா – 10,612

ஈரான் – 4,474

சீனா – 3,339

நெதர்லாந்து – 2,737

ஜேர்மனி – 3,022

பெல்ஜியம் – 3,600

சுவிற்சலாந்து – 1,106

கனடா – 713

இந்தியா – 331

சுவீடன் – 899

வயதானவர்களை 2021 வரையிலும் தனிமைப்படுத்த முயற்சி

கோவிட்-19 வைரசில் இருந்து தம்மை பாதுகாக்க வேண்டுமெனில் வயதானவர்கள் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு வரையிலும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உசுலா வொன் டெர் லெயன் இன்று (12) தெரிவித்துள்ளார்.

ஜேர்மனின் ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வைரசில் இருந்து எம்மை பாதுகாப்பதற்குரிய தடுப்பு மருந்து உற்பத்தி செய்வதற்கு ஒரு வருடம் எடுக்கும் என பல நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே அதனை பெறும் வரை நாம் வயதானவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.

அவ்வாறு தனிமைப்படுத்துவது கடினமானது என்பதை நான் அறிவேன் ஆனால் இது வாழ்வா அல்லது சாவா என்பதை தீர்மானிக்கும் முடிவு. எனவே நாம் ஒழுக்கமாகவும், அமைதியாகவும் இருத்தல் வேண்டும். இந்த வருடத்திற்குள் ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஆய்வுகூடங்கள் இந்த மருந்தை கண்டுபிடித்து விடுவார்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையை கையாள்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் விஞ்ஞான ஆய்வுப் பிரிவின் தலைவர் அண்மையில் தனது பதவியில் இருந்து விலகியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலக்கு-இதழ்-73-ஏப்ரல்12, 2020

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:

இலக்கு-இதழ்-73-ஏப்ரல்12, 2020

கொரோனா தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தல்

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த அல்லது உயிரிழந்தாக சந்தேகிக்கப்படுபவரின் பூதவுடல் தகனம் செய்யப்பட வேண்டும் என அறிவித்து அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் விடுக்கப்படும் பணிப்புகளுக்கு அமைய, ஏதேனும் சாத்தியமான உயிரியல் அச்சுறுத்தலைத் தடுக்கும் நோக்கத்திற்கென முழுமையாக எரிவதற்கு ஆகக் குறைந்தது 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை 800 க்கும், 1,000க்கும் இடையிலான வெப்ப நிலை தன்மையை கொண்டிருத்தல் வேண்டும்.

அத்துடன், அத்தகயை அதிகாரியின் மேற்பார்வையின்கீழ் முறையான அதிகாரியினால் அங்கீகரிக்கப்படும் சுடலை அல்லது இடத்தில் தகனம் செய்யப்படுதல் வேண்டும் என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளெவரும், கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ள அல்லது உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் ஆளொருவரின் பூதவுடலை முறையான அதிகாரியினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் தகனத்திற்கான அவசிய கடமைகளை பொறுப்பேற்கின்ற ஆட்கள் தவிர்ந்த வேறெவரேனும் ஆளுக்கு கையளித்தலாகாது.

அத்தகைய சுடலை அல்லது இடத்தில் பூதவுடலை கையாளுகின்ற ஆட்களினால் பயன்படுத்தப்படும் உடை மற்றும் மீள பயன்படுத்த முடியாத தனிப்பட்ட பாதுகாப்ப கருவிகள் தகனத்தின்போது சவப்பெட்டியுடன் அவற்றை இடுவதன் மூலம் எரிக்கப்படுதல் வேண்டும்.

மீளபயன்படுத்தப்படக்கூடிய கருவியானது சுகாதார பணிப்பாளர் தலைமை அதிபதியினால் விடுக்கப்படும் பணிப்புகளுக்கு இணங்க முறையாக தூய்மைப்படுத்தலும், கிருமி நீக்கப்படுதலும் வேண்டும்.

பூதவுடலின் சாம்பலானதும், உறவினரின் வேண்டுகோளின் பேரில் அத்தகைய உறவினருக்கு கையளிக்கப்படலாம் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்தமானி அறிவித்தலை காண இங்கே அழுத்தவும்

பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் மே மாதம் 4 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை இறுதியாண்டு மாணவர்களுக்காக மே மாதம் 11 ஆம் திகதியும் அனைத்து மாணவர்களுக்காக மே மாதம் 18 ஆம் திகதியும் பல்கலைக்கழகங்கள் ஆரம்பமாக உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது