Home Blog Page 2333

கூட்டுக்களவாணிகள்: எண்ணிக்கைகளும் இது சார்ந்த அரசியலும்

என்னுடைய கருத்துப் பகிர்வுகளில் கோவிட்-19 குறித்த நோய்த்தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கைகளில், யாரும் உண்மையாக இல்லை, வெளிப்படையாக இல்லை. பகிரப்படும் எண்ணிக்கைகள் களநிலவரத்தைப் பிரதிபலிக்கவில்லை என்பதையும் தொடர்ந்தும் வலியுறுத்தியே வந்திருகின்றேன்.

சீனா பொய் சொல்லுகிறது என முழங்கும் ரம்பால், அமெரிக்கா கூட பொய் சொல்லவில்லை என்பதை நிலைநிறுத்த முடியாது. பலவேளைகளில் இவர்கள் அனைவரும் இன்றைய நிலையை எதிர்கொள்ளத்தக்க வகையில் தயாராக இருக்கவில்லை என்பது ஒரு காரணமாக அமைந்தாலும், அதையும் கடந்து பல்வேறு காரணங்களுக்காகவும் உண்மை எண்ணிக்கைகளை வெளியிடப் பல நாடுகளும் அதன் அரசியல் தலைமைகளும் தயாராக இல்லை என்பதுவும் உண்மை.

ஆகவே இந்தக் கூட்டுக்களவாணிகளைக் கடந்து உண்மையின் தரிசனப் பக்கங்களை ஆவணம் கொண்டு தொடர்ந்தும் இங்கு பார்க்கப்ப்போகின்றோம். எது எவ்வாறாயினும் பல உண்மைகள் காலம் கடந்தாயினும் வெளிப்பட்டுத் தானே ஆகவேண்டும்.

அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலம், அமெரிக்காவின் கோவிட்-19 நோய்த்தொற்று மற்றும் இறப்பின் மையப்புள்ளியாக உள்ளது. அமெரிக்காவின் 6 லட்சம் நோய்த் தொற்றில், 2 லட்சத்தையும், 26 ஆயிரம் இறப்பில் 10 ஆயிரத்திற்கு மேலும், அங்கேயே உள்ளது. இதிலும் நியூயோர்க் நகரமே நியூயோர்க் மாநிலத்திலும் முக்கிய மையப்புள்ளி. அங்கு இறப்பு 6589 ஆகவே உத்தியோக பூர்வமாக பதிவாகியிருந்தது. ஆனால் அதை நியூயோர்க் நகரத்தின் சுகாதாரத்துறை 3778 மேலதிக இறப்புக்களால் அதிரடியாக தற்போது அதிகரித்து, புதிய எண்ணிக்கையாக 10367 ஆக அறிவித்துள்ளது. அதாவது பழைய எண்ணிக்கையில் இருந்து 57 சதவீத அதிகரிப்பு. இது எவ்வாறு நடந்நதது என்பது தலையை சுற்றுகிறதா?

அதற்கான காரணம் இலகுவானது. அதாவது கோவிட்-19 நோய்த்தொற்றிற்கான சோதனைகள் செய்யப்படவில்லை, அதனால் நோய்த்தொற்று உண்டு என்று உறுதிப்படுத்தப்டவில்லை, ஆனால் இறந்து போன 3778 பேரில் கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாகவே இறந்ததிற்கான அதிக வாய்ப்புக்களும், அதற்கான அறிகுறிகளும் உண்டு என்ற வகையில், அதனால் இறந்தவர்கள் எண்ணிக்கையில் தற்போது சேர்த்துக் கொள்ளப்பட்டு, ஒரு புதிய கணக்கில் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

ஆனால் இவர்கள் இன்னும் உத்தியோக பூர்வமாக கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதையும் இய்கு கவனத்தில் கொள்க. இங்கு தான் சவாலும் எழுகிறது. அதீத சாத்தியக்கூறுகள் உடையவர்கள் என்ற ரீதியிலேயே எண்ணிக்கை இவ்வாறு என்றால், அவ்வாறான நிலையை வெளிப்படுத்தும் வாய்ப்பையே இழந்து இறந்துபோனவர்கள் நிலை என்னாவது?

சாத்தியமுடையவர்கள் அனைவரும் ஆரம்பம் முதலே உரிய சோதனைகளுக்கு எவ்வித தங்குதடையுமின்றி உட்படுத்தப்பட்டிருந்தால், இந்நிலை எழுந்திராது? ஆனால் இந்நிலை அன்றைய நிலையிலும் பார்க்க குறைந்த நிலையில் என்றாவது, இன்றும் தொடர்வது கோவிட்-19 நோய்த்தொற்றின் மற்றும் இறப்பின் உண்மை எண்ணிக்கைகள் என்றும் வெளிவரும் சாத்தியமில்லை என்பதையும், தற்போதைய உத்தியோகபூர்வ எண்ணிக்கைகளை நோய்த்தொற்றில் 10 மடங்காலும், இறப்பு எண்ணிக்கையை குறைந்த பட்சம் 3 மடங்காலும், பார்ப்பது ஓரளவு பொருந்தும் என்பதே நிலை.

நன்றி: நேரு குணரட்னம்

வவுனியா மாவட்டத்திற்கு 205.51 மில்லியன் ஒதுக்கீடு

அரசாங்கத்தால் தற்போதைய சூழலில் நிவாரணம் வழங்குவதற்காக வவுனியா மாவட்டத்திற்கு 205.51 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்தார்.

இன்று வவுனியா மாவட்டத்தின் நிவாரண விடயங்கள் தொடர்பாக கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தற்போதைய நிலையில் மக்களுக்கான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நிதியை ஒதுக்கியுள்ளது.

அதனூடாக வவுனியா மாவட்டத்தில் பல நிவாரண திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.
அரச உத்தியோகத்தர்கள் தமது சிரமத்தையும் பார்க்காது மக்களுக்கான பணியை முன்னேடுத்துள்ளனர்.

இந்த வகையில் வவுனியா மாவட்டத்திற்கு 205.51 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனூடாக சமுர்த்தி நிவாரணத்திற்காக 147.83 மில்லியன் ரூபாவும் விவசாய காப்புறுதிக்காக 1.595 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய நிவாரணங்களுக்காகவும் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

வவுனியா வைத்தியசாலை ஊழியருக்கு கொரோனோ தொற்று உறுதி!!

யாழில் இடம்பெற்ற ஆராதனை கூட்டத்தில் கலந்துகொண்ட வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது.

குறித்த ஊழியர் சுவிஸ் போதகரால் யாழ்பாணம் அரியாலையில் நடாத்தப்பட்ட ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சுவிஸ்நாட்டை சேர்ந்த போதகருக்கு கோரோனோ வைரஸ்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் அரியாலையில் இடம்பெற்ற ஆராதனை கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த வடக்கின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தலிற்கு உள்ளளாக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் வ்வுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் கணேசபுரம் பகுதியை சேரந்தநபர் உட்பட சுவிஸ் மதபோதகருடன் நெருங்கி பழகிய 20 பேர் அடையாளம் காணப்பட்டு
யாழ் காங்கேசன் துறையில் அமைந்துள்ள தனிமைப்படுத்தலில் முகாமில் கடந்த மாதம்23 ஆம் திகதியிலிருந்துதனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.இந்நிலையில் வவுனியாவை சேர்ந்தநபருக்கு கோரோனோ வைரஸ் தொற்றியிருப்பது யாழில் நேற்றயதினம் மேற்கோள்ளபட்ட பரிசோதனைகளில் உறுதிசெய்யப்பட்டது.

குறித்த நபர் ஆராதனை கூட்டத்தில் கலந்துகொண்டமையினால் அவருடன் இணைந்து பணியாற்றிய மேலும் சில ஊழியர்களும் கடந்த சிலநாட்களாக சுய தனிமைப்படுத்தலிற்குள்ளாக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடதக்கது.

கிழக்கில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் நபர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒன்பது பேர் வெளி மாவட்டங்களில் உள்ள தங்களது உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று மீண்டும் தமது சொந்த இருப்பிடங்களுக்கு வருகை தந்தை நிலையில் நேற்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வருகை தந்தவர்களில் நான்கு பேர் அம்பாறை அக்கரைப்பற்று பிரதேசத்திலும், ஏனைய ஐந்து பேர் யாழ்ப்பாணம், அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து கிரான் பிரதேசத்திற்கு வந்துள்ளதாக கோறளைப்பற்று மத்தி மற்றும் கிரான் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஆர்.இன்பராஜா தெரிவித்தார்.

மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஆர்.இன்பராஜா தலைமையில் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்களான எம்.நௌஷாட், கே.சோபனகாந்தன் ஆகியோரால் ஒன்பது நபர்களின் உடல் நிலைகள் பரிசோதனைகள் செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுறுதியான மேலும் 15 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா தொற்றுறுதியான மேலும் 15 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 14 பேர் கொரோனா தொற்றுறுதியானவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் புத்தளம் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் கொரோனா தொற்றுறதியானவர்களில் நேற்றைய தினம் வரையில் 61 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்தநிலையில் 165 பேர் தற்போது மருத்துவமனைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன் கொவிட்-19 தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்றுறதியாகியுள்ளது.

பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அரியாலை தேவாலயத்தில் ஆராதனை நடத்திய போதகருடன் தொடர்பை பேணியவர்களுள் 8 பேருக்கு தொற்றுறதியாகியுள்ளது.

இதேநேரம் முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தென்பகுதியை சேர்ந்தவர்களுள் நான்கு பேருக்கு கொரோனா தொற்றுறதியாகியுள்ளது.

முன்னதாக வடபகுதியில் 7 பேருக்கு கொரோனா தொற்றுறதியாகியிருந்தது.

இந்த நிலையில் நேற்று 8 பேருக்கு கொரோனா தொற்றுறதியாகியதை அடுத்து வடபகுதியில் நேற்று வரை 15 பேருக்கு கொரோனா தொற்றுறதியாகியுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் அடையாளம் காணப்பட்டமையடுத்து பேருவளை – பன்னில் மற்றும் சீனக் கொட்டுவ பகுதிகள் நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் தாம் உள்ளிட்ட குழுவினர் குறித்த நபர்களை முன்னதாக அடையாளம் கண்டதையடுத்து நோய் தொற்று பரவுதலை கட்டுபடுத்த கூடியதாகவுள்ளதாக பேருவளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வருண செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும் பேருவளை பகுதியில் மாத்திரம் கொரோனா தொற்றுறுதியான 35 பேர் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் கைது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னெடுத்த விசாரணைகளில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீனின் குற்றப்புலனாய்பு திணைக்களத்தினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

41 வயதான அவர் புத்தளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விசாரணைகளில் 40 வயதுடைய மற்றுமொருவரும் புத்தளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

காவற்துறை ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள இருவர் தொடர்பிலும் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசேட விசாரணை குழு ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி மட்டகளப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை நடாத்திய நபரை அழைத்து சென்ற மற்றும் வழிநடத்திய பிரதான சந்தேகநபர் கடந்த மாதம் 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

அவர் கொச்சிக்கடை தேவாலயத்தில் தாக்குதல் நடாத்திய சந்தேகநபரையும் வழிநடத்தியுள்ளதற்கான தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை சினமன் கிரேண்ட் விருந்தகத்தில் தாக்குதல் நடத்தியவருக்கு ஆதரவு வழங்கிய ஒருவர் கொத்தட்டுவ பகுதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான தகவல்.

கொரோனா இடர் வலயங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 19 மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் நாளை பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேநேரம், கொரோனா தொற்று பரவல் இடர் வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதனால் ஏற்படும் கஷ்டங்களை புரிந்துணர்வுடனும் பொறுப்புடனும் பொறுத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொருட்களை கொள்வனவு செய்யும்போது, அத்தியாவசிய பொருட்களுடன் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுககு இடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில், நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக விநியோகிக்க அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 இறந்தோர் எண்ணிக்கை 126,062 ஆக உயர்வு

கோவிட்-19 வைரசின் தாக்கத்தினால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், இதுவரையில் 126,062 பேர் பலியாகியுள்ளதுடன், 1,992,152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 467,187 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இறந்தவர்களின் விபரம்:

அமெரிக்கா – 25,924

இந்தாலி – 21,067

ஸ்பெயின் – 18,056

பிரான்ஸ் – 15,729

பிரித்தானியா – 12,107

ஈரான் – 4,683

சீனா – 3,341

நெதர்லாந்து – 2,945

ஜேர்மனி – 3,294

பெல்ஜியம் – 4,157

பிரேசில் – 1,532

துருக்கி – 1,403

சுவிற்சலாந்து – 1,174

கனடா – 898

இந்தியா – 393

சுவீடன் – 1,033

இஸ்ரேல் – 123

உலகம் கொரோனா வைரஸால் அவதிப்படுகையில், வடகொரியா ஏவுகணை சோதனை

வடகொரியா கிழக்கு கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

இது குறித்து தென்கொரியா தெரிவிக்கையில், “வடகொரியாவின் கிழக்குப் பகுதி நகரமான மன்சோன்னில் உள்ள கடல் பகுதியில் ஏவுகணை சோதனையை காலை 7 மணியளவில் நடத்தியது. வடகொரியா ஏவிய ஏவுகணை 150 கிலோ மீற்றர் தூரம் சென்று பின்னர் நீரில் விழுந்தது.“ என்று தெரிவித்தது.

ஆனால் இதுவரையில், வடகொரியாவில் கொரோனா வைரஸ் பரவியதா? கட்டுப்படுத்தப்பட்டதா? பலி எண்ணிக்கை என்ன என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.

கடந்த 21ஆம் திகதி வடகொரியா கே.என்.-24 என்ற குறுகிய தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்தது.

தொடர்ந்து அத்துமீறி ஏவுகணை சோதனைகளை நடத்தி அண்டை நாடுகளுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் வடகொரியாவிற்கு ஐ.நா. பாதுகாப்பு சபையில் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது.

சீனர்களுக்காக இயங்கும் சிறீலங்கன் விமான சேவை வசந்த சமரசிங்க குற்றச்சாட்டு

வெளிநாட்டில் சிக்கியுள்ள இலங்கை மக்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வராத சிறீலங்கா விமான சேவை நிறுவனம், வெளிநாட்டில் சிக்கியிருக்கும் சீனர்களை தங்கள் விமான சேவை ஊடாக சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றது என மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த சமரசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

வெளிநாட்டில் கல்வி பயின்று வரும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தொழில் நிமித்தம் வெளிநாடுகளில் வசித்து வரும் இலங்கை மக்கள் தங்கள் சொந்த நாடான இலங்கைக்கு திரும்பி வர விரும்பி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அத்துடன் எந்த தனிமைப்படுத்தலுக்கும் தயார் எனவும் கூறியுள்ளனர். ஆனால் அவர்களை அழைத்துவர எந்த ஏற்பாடுகளையும் செய்யாத காரணத்தினால் அவர்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

ஆனால் சிறீலங்கன் விமான சேவை நிறுவனம் பிரிட்டன் தலைநகரான லண்டனில் சிக்கியிருக்கும் 218 சீனர்களை அங்கிருந்த இலங்கைக்கு அழைத்து வந்து பின்னர் மீண்டும் இலங்கையிலிருந்து சீனாவிற்கு அனுப்பி வைத்துள்ளதை நாம் எதற்காக பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் கேள்வி கேட்டுள்ளார்.