Home Blog Page 2286

சிறீலங்காவில் வன்முறைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்காவில் வன்முறைகள் நிறுத்தப்படுவதுடன், சட்டத்தின் மூலம் எல்லா வன்முறையாளர்களும் ஒரே முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் நேற்று (16) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஒரு தெளிவான தலைமைத்துவமும், வன்முறைகளை எல்லா வகையிலும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையும் முக்கியமானது. அரசியல், மத மற்றும் சமூகத் தலைவர்கள் வன்முறைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். அவர்கள் தான் இனங்களுக்கு இடையில் ஒர் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.

தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் வன்முறைகளை துண்டுவதை ஊடகங்களும், பொதுமக்களும் தவிர்க்க வேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்படுள்ளது.

வவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்ற முள்ளி வாய்க்கால் மண்ணில் உயிரிழந்த உறவுகளை நினைவு

வவுனியா மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப் பட்ட, கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி இன்று 817 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்றைய தினம் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்ற முள்ளி வாய்க்கால் மண்ணில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்

இன்று காலை வட்டுவாகல் பொது நோக்கு மண்டபத்துக்கு அண்மையில் ஒன்று கூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காலையில் இருந்து பிற்பகல் 4 மணி வரை அடையாள உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உறவுகளுக்கு ஊடகவியலாளர் சுமந்தன் நீர் ஆகாரம் கொடுத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார். தொடர்ந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறித்த இடத்திலேயே உயிரிழந்த உறவுகளுக்காக பொதுச் சுடர் ஏற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்
அதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபைக்கு நாளையதினம் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் வழங்கப்பட இருக்கின்ற மகஜரை ஊடகங்களுக்கு வெளியிட்டனர் அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் தமிழ் பெற்றோர்கள் நாங்கள் கீழே கையொப்பமிட்டுள் ளோம். இன்று தமிழர்களின் இலங்கை இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நிறைவு தமிழர்களின் நெஞ்சங்கள் வெடித்த நாள் . முள்ளிவாய்க்காலில் நாங்கள் இன்று உண்ணா விரதம் இருக்கிறோம். 145,000 இற்கும் மேற்படட தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் இரக்கம் காட்டாமல் படுகொலை செய்யப்பட்டார்கள்.

காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் பற்றிய உண்மையைச் சொல்வதில் ஸ்ரீலங்கா உறுதியாக இல்லை , காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என இலங்கை அறிவித்துள்ளது. இன்னும் 25,000 தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழர்களை கொலை செய்யும் அல்லது கொடுமைப்படுத்தும் ஒவ்வொரு சிங்கள குற்றவாளிகளையும், ஸ்ரீலங்கா ஒருபோதும் தண்டித்ததில்லை தண்டிக்கப்போவதுமில்லை.

காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை கண்டுபிடிக்க இலங்கைக்கு அல்லது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு கூட இனி காத்திருக்க முடியாது.

யுத்தம் முடிவடைந்ததில் இருந்து தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2009 மே மாதம் 145,000 அப்பாவி மக்களை படுகொலை செய்த சிங்களவர்களை தமிழர்கள் வெறுமனே நம்ப முடியாது. இலங்கை இராணுவம் இன்னமும் தமிழர்களின் வீடுகள், நிலங்கள் மற்றும் பண்ணைகளை ஆக்கிரமித்து வருகிறது. மேலும் இலங்கை இராணுவம் தமிழ் பெண்களையும், ஆண்களையும் பாலியல் பலாத்காரம் செய்து பாலியல் அடிமை முகாம்களை இலங்கையில் நடாத்துகின்றது. ஸ்ரீலங்காவின் கொடூரமான பயங்கரவாத சட்டத்தின் கீழ் இலங்கை இராணுவத்தால் இன்னும் பல தமிழர்கள் கடத்தப்பட்டு கொண்டேயுள்ளனர் .

ஆகையால், இப்போது ஒரு நல்ல நேரம் , சிறிலங்காவின் போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு (ICC) கொண்டு செல்வதற்கும், தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கும், காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுபிடிக்கவும். இதை நீங்கள் செய்ய வேண்டிய நேரம் இது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் யுத்த வெற்றி தினம் கொண்டாடுவோம், நீங்கள் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் அனுசரிக்கலாம் – சிறிலங்கா இராணுவத் தளபதி

தமிழர்களால் நினைவுகொள்ளப்படும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகளை தடுப்பதற்கு படைத்துறை எந்த நடவடியையும் மேற்கொள்ளாது என சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

பெயரில் யுத்த வெற்றி கொண்டாட்டங்கள் இந்த முறையும் ராணுவத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளமையை முன்னிட்டு கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் , இவ்வாறான நினைவு தின நிகழ்வுகளை நடத்துவது சரியானதா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு பதிலளித்த மகேஷ் சேனாநாயக்க,அவசரகால சட்டமும், நினைவு தின அனுசரிப்பும் இருவேறு விடயங்கள் எனவும் சட்டவிதிகளுக்கு உட்பட்டு, நினைவு தினத்தை அனுசரிப்பதற்கான உரிமை அனைவருக்கும் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் பலர் மட்டு.வில் புதைக்கப்பட்டுள்ளனர் – மோகன்

காத்தான்குடியிலுள்ள பிரபல அரசியல்வாதியின் தலைமையில் இயங்கிய ஆயுதக் குழுவினால் கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் சடலங்கள் பல மட்டக்களப்பில் புதைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான சாட்சியங்கள் தங்களிடம் உள்ளதாகவும், மேற்படி இடங்களை தங்களால் அடையாளப்படுத்த முடியும் எனவும், இவை பற்றி கிழக்கு மாகாண இராணுவத் தளபதியிடம் தெரிவித்துள்ளதாகவும் மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்தார்.

தமிழ் உணர்வாளர்களின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. அந்த மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தார். அதில் அவர் மேலும் குறிப்பிடும் போது, கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் 35 பேரின் சடலங்கள் மட்டக்களப்பில் புதைக்கப்பட்டிருக்கின்றன. இவை மட்டக்களப்பு நகர்ப்புறத்தை அண்டிய பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக முக்கியமான பிரபலங்கள் அரசியல் காரணங்களுக்காகவும், தொழில் போட்டி காரணமாகவும் காணாமல் போயுள்ளனர். எனவே உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்டோர் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தாங்கள் வைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

காத்தான்குடியில் ஆயுதக் குழுக்கள் இருப்பதாக பலரும் தெரிவித்திருந்தனர். இது பற்றி மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஒருவர் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். ஆனால் இவ்விடயங்கள் அந்த நேரத்தில் கண்டுகொள்ளப்படவில்லை.

இஸ்லாமிய அரசியல்வாதிகளின் நடவடிக்கையையும், இஸ்லாமியப் பிரதேசங்களில் நடைபெறுகின்ற அபிவிருத்திகளையும் பார்க்கும் போது, இவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான நிதி வருகின்றது என்றும், தெரிவித்திருந்தார்.

கிழக்கின் எல்லையாக கருதப்படும் புனானையில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கின்றனர், தெற்குப் பகுதியில் புல்லுமலையில் தண்ணீர் தொட்டி அமைக்கின்றனர்.  இந்த விடயங்கள் பற்றி முன்னர் குறிப்பிட்டிருந்தோம்.

முற்றுமுழுதாக அராபியக் கலாசாரத்தை வெளிப்படுத்துகின்ற பல்கலைக்கழகத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். என்றும் அந்த நேர்காணலில் மோகன் தெரிவித்திருந்தார்.

 

 

 

 

 

 

அநாமதேய கடிதத்தால் நல்லூர் ஆலயத்திற்கு பலத்த பாதுகாப்பு

நல்லூர் ஆலயத்தை தாக்கவுள்ளதாக அனுப்பபட்ட அனாமதேய கடிதத்தால் ஆலயத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தாள் ஒன்றில் பேனாவால் எழுதப்பட்டு, ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட மேற்படி கடிதத்தில், எனது கணவரும், இன்னும் சிலரும் சேர்ந்து எதிர்வரும் 18ஆம் திகதி நல்லூர் ஆலயத்தை தாக்கவுள்ளனர் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதுடன், ஆலயத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஹிஸ்புல்லா மற்றும் ரிஷாத் ஆகியோரை கைதுசெய்யும்படி சிங்கள அமைப்புகள் முறைப்பாடு

ஹிஸ்புல்லா மற்றும் ரிஷாத் ஆகியோரை கைதுசெய்யும்படி சிங்கள அமைப்புகள் முறைப்பாடு

கிழக்குமாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா,வணிக கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகிறோரை கைதுசெய்ய வேண்டுமெனக் கோரி சிங்கள ராவய, ராவணன் பலய அமைப்புகளை ச் சார்ந்த பௌத்த பிக்குகளின் குழுவொன்று போலீஸ் தலைமையகத்தில்
முறைப்பாடொன்றைப் பதிவுசெய்துள்ளது.

இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுடன் இவ்விருவருக்கும் தொடர்புகள் உள்ளமைக்கு ஆதாரங்கள் உள்ளன என்றும் குறித்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் எல்லா மொழி இணைய கலைக்களஞ்சியமும் முடக்கம்

சீன பெருநிலப்பரப்பில், இணையதள கலைக்களஞ்சியமான விக்கிபீடியா தளம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இத்தகவலை  அந்த வலைதளத்தை நடத்திவரும் விக்கிபீடியா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாத இறுதியில் இருந்து விக்கிபீடியாவின் அனைத்து மொழித்தளங்களையும் சீனாவில் பார்க்க முடியாதுள்ளது.

இது தொடர்பாக தங்களுக்கு அறிக்கை எதுவும் வழங்கப்படவில்லை என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

முகநூல், டிவிட்டர் உட்பட நூற்றுக்கணக்கான வலைதளங்கள் சீன அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளன. சீன மொழி விக்கிபீடியா தளத்தை 2015ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்த முடிவதில்லை.

எவர் வேண்டுமானாலும் பக்கங்களை உருவாக்க, தயார் செய்ய வழியுள்ள விக்கிபீடியாவை 2017-ம் ஆண்டு துருக்கி தடை செய்தது. இந்த ஆண்டு வெனிசுவேலாவில் இந்த தளம் அவ்வப்போது முடக்கப்படுகிறது.

 

 

 

 

புனித அந்தோனியர் தேவாலயம் அருகில் ஒருவர் கைது

கொச்சிக்கடை புனித அந்தோனியர் தேவாலயம் அருகில் வாகன மறுசீரமைப்பு மேற்கொண்டிருந்த சந்தேக நபர் ஒருவரை குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) கைது செய்தனர்.

14ஆம் திகதி புதிய காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட முஹமது ஆதம் லெப்பே என்பவரிடமிருந்து பெறப்பட்ட வரைபட தகவல்களில் இவர் அடையாளம் காணப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் S.P. ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு புனித அந்தோனியர் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்  விசேட அதிரடிப்படையின் (STF) சிறப்பு வெடிகுண்டு அகற்றும் பிரிவினரால் வாகனம் சோதனையிடப்பட்டு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

சந்தேக நபரை கண்ட சாட்சியங்களின் அடிப்படையில் பெறப்பட்ட வரைபட உதவியுடன் வாகன (இலக்கம் WP-PJ 4080) உரிமையாளர்,  அப்துல்லா என அழைக்கப்படும் முகமது அஸ்ஸம் முஹம்மது முபாரக் என்பவர் என அடையாளம் காணப்பட்டார்.

இவர் கிங்ஸ்பெரி ஹோட்டலில் வெடித்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரி குணசேகர தெரிவித்தார்.

சந்தேக நபரும், வாகன உரிமையாளரும், வாகனங்களை மறுசீரமைப்பு செய்யும் மற்றொரு நபரும் இச்சம்பங்களில் ஈடுபட்டிருப்பதாக குற்றவியல் விசாரணைப் பிரிவினரின் விசாரணைகள் தெரிவித்தன.

செவ்வாய் கிரகத்தில் பூமியின் ஆதிகால உயிரிகள்

சில தாவரங்கள் எல்லா சூழலிரும் வாழக்கூடியவை. பிராண வாயு இல்லாத நிலையிலோ, அதிக வெப்பமான பிரதேசத்திலோ உயிர் வாழக் கூடியவை. இவை  பருவ நிலை மாற்றத்தையும், நமது உணவு உற்பத்தியையும் எந்த அளவு பாதிக்கும் என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆர்வமாக ஆராய்ந்து வருகின்றனர். ஆனால் இந்த விடயத்தில தாவரங்கள் ஒன்றைவிட ஒன்று வித்தியாசமாக அமைகின்றது.

இவை பற்றி ஆராய்வு செய்வதற்கு தாவரவியலாளரும், BBC நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஜேமஸ் வோங் என்பவர் முற்பட்டார். அப்போது நமது பூமியின் கடினமான தாவரங்களின் வினோதமான மற்றும் ஆச்சர்யத்துக்குரிய உண்மைகளை அவர் கண்டறிந்தார்.

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு ஏற்ற கடினமான இரண்டு தாவர வகைகளை ஜெர்மனி விஞ்ஞானிகள் அடையாளம் கண்டனர்.

சுவிட்சர்லாந்து மற்றும் அந்தாட்டிகாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கற்பாசிகள் (Lichens) மற்றும் நீலப்பசும் பேக்டீரியா (Cyanobacteria) ஆகிய இரண்டுமே இவைகளாகும்.

இந்த ஆதிகால தாவரங்கள் செவ்வாய்க் கிரகத்தில் உயிர்வாழ முடியுமா என பரிசோதனை செய்வதற்காக – கடுமையான சூரிய வெப்பம், வெப்ப நிலை மாற்றங்கள், அதிக அளவிலான உலர்ந்த நிலை மற்றும் குறைவான காற்றழுத்தம் – போன்ற செவ்வாய் கிரகத்தின் சூழ்நிலைகளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கினர்.

இதன் போது இந்தத் தாவர இனங்கள் உயிர் பிழைத்திருந்தது மட்டுமின்றி, ஒளிச் சேர்க்கை செய்தல் மற்றும் வழக்கமான தாவர செயல்பாடுகள் தொடர்ந்து நடக்கின்றன என்பதைக் கண்டறிந்தார்கள்.

சிறீலங்கா இராணுவம் யாழ் பல்கலைகழக, கிளிநொச்சி வளாகத்தில் சோதனை

யாழ் பல்கலைகழக, கிளிநொச்சி வளாகத்தில் இன்று காலை 8.30 மணிமுதல் சிறீலங்கா இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து சோதனை நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.

எதிர்வரும் 20ம் திகதிக்கு பின்னர் பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகள் நடைபெற இருப்பதனால் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டமைக்கு அமைவாகவே இச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகின்றது.

குறித்த சோதனை நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி படைத்தலைமையகத்தின் கீழ் நாநூற்று ஐம்பது இராணுவத்தினர் மற்றும் தொண்ணூறு காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகிறது. இச் சோதனை நடவடிக்கைகளை செய்தி அறிக்கையிட சென்ற கிளிநொச்சி பிராந்திய செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு தரப்பால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.