Home Blog Page 2272

பெருவில் பாரிய நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்

பெருவில் இன்று(26) பிரித்தானியா நேரம் காலை 8.41 மணியளவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலைநகர் மொயபம்பாவில் இருந்து 180 கி.மீ கிழக்காக 105 கி.மீ ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

8.0 அளவுடைய இந்த நில நடுக்கம் இந்த வருடத்தில் ஏற்றட்ட நில நடுக்கங்களில் பெரியது என அது மேலும் தெரிவித்துள்ளது.

பல இடங்களில் கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும், பிரேசில், கொலம்பியா மற்றும்  ஈகுவடோர் அகிய நாடுகள் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெருவில் உள்ள லிமா என்னும் நகரத்தில் உள்ள விடுதியின் 9 ஆவது மாடியில் தான் அதிர்வை உணர்ந்ததாக அமெரிக்கப் பயணி ஒருவர் தனது ருவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளதாக றொய்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலம் 600 மைல்களுக்கு அதிர்வுகள் உணரப்பட்டதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

முஸ்லீம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் – சிறிலங்கா பிரதமர்

இலங்கையில் முஸ்லீம் பெண்களுக்கான திருமண வயது வரம்பை
18 ஆக அதிகரிக்கும் வகையில் முஸ்லீம் திருமண மற்றும் விவாகரத்து சட்ட த்தில் திருத்தம் கொண்டுவரப்படுமென சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.இந்த நடவடிக்கை முடிந்தவரை தனிப்பட்ட சட்டங்களை ஒன்றிணைப்பதனை நோக்கமாகக் கொண்டிருக்கும் எனவும் அவர் கூறினார்.

கல்வித் துறை மற்றும் நாட்டின் சட்டத்துறை ஆகியவற்றை சீர்திருத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது எல்லா சமூகங்களுக்கு பொருந்தக்கூடியவாறு அவை அமையவேண்டும் எனவும் இதனடிப்படையிலேயே முஸ்லீம் மதப் பள்ளிகளை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரும் நடவடிக்கை ,மற்றும் முஸ்லீம் பெண்களின் திருமண வயதை 18 அதிகரித்தல் என்பன அமைவதாக அவர் கூறினார்.

ஈழம் வருமாறு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த விக்கி

இந்திய தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்த, முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்,  தனது பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன்,  மு.க.ஸ்டாலினை ஈழம் வருமாறும், அதற்குரிய ஒழுங்குகளை தான் மேற்கொண்டு தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலினுக்கு அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில், இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது, திராவிட முன்னேற்றக் கழகம் செயற்பட்ட விதம் தொடர்பாக எமது மக்கள் மத்தியில் இன்றும் ஏமாற்றமும், கசப்புணர்வும் இருந்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.

எமது மக்களின் அரசியல், பொருளாதார சமூக முன்னேற்றங்களை நிறைவேற்றும் வகையில் நீங்கள் எதிர்காலத்தில் திட்டங்களை முன்னெடுப்பீர்கள் என நம்புகின்றேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் உங்களின் தலைமையில் எதிர்காலத்தில் மென்மேலும் பல வெற்றிகளையும் சாதனைகளையும் கண்டு, தமிழகத்திற்கும் உலகில் வாழும் தமிழ் மக்களுக்கும் நல்ல பணிகளை நிறைவேற்றும் என நம்புகின்றேன்.

இவை தொடர்பாக என்னாலான உதவிகளையும் ஒத்தாசைகளையும் நிச்சயம் உங்களுக்கு நான் வழங்குவேன். எமது மக்களின் பிரச்சினைகள் பற்றி அறிந்து கொள்ளவும், எமது மக்களுக்கும் தமிழக மக்களுக்குமிடேயே சமூக, கலாசார தொடர்புகளை வலுப்படுத்தவும் நீங்கள் ஒருதடவை இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு தான் தயாராக இருப்பதாகவும் விக்னேஸ்வரன் மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

5 மாவட்டங்களில் பாரிய தேடுதல் – 24 பேர் கைது…இன்றும் தேடுதல் தொடரும்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் (26) சோதனை நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருடன் இணைந்தே குறித்த சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரோஷன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.5 மாவட்டங்களில் நேற்றும் சோதனை நடவடிக்கையை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுத்துறை, கொழும்பு, கம்பஹா, குருணாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது 24 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கம்பஹா பகுதியில் இருந்து 11 பேரும், தும்மலசூரிய பகுதியில் இருந்து 9 பேரும், களுத்துறை பகுதியில் 2 பேரும், மக்கும்பர பகுதியில் இருந்து 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள், இராணுவ சீருடைகளை வைத்திருந்தமை, போதைப் பொருட்களை வைத்திருந்தமை மற்றும் இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தியமை தொடர்பிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரோஷன் செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

 

உயீர்நீத்தவர்களுக்காக சுதந்திரமாக அஞ்சலி செய்வதைக்கூட சிறீலங்கா அரசு தடுக்கின்றது- புவனராஐ்

உயீர்நீத்தவர்களுக்காக சுதந்திரமாக அஞ்சலி செய்வதைக்கூட தடுத்து விட வேண்டும் என்றே கோணத்திலேயே பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக ஒளிப்படம் வைத்திருந் தார்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசாரபீட   மாணவர்  ஒன்றிய தலைவர் த.புவனராஐ் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் இலக்கு வார இதழுக்கு வழங்கிய கருத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

எமது சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிகோரியும், எமது இனத்தின் விடுதலையை வலியுறுத்தியும் நடைபெறும் சனநாயக போராட்ட ங்களில் பல்கலைக்கழக மாணவர்களாக நாம் பங்கெடுத்து வந்தோம். தற்போதும் கூட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் எமது வாழ்வுக்காக தம்மை அர்ப்பணித்தவர்களுக்கு உயர்வு ரீதியாக அஞ்சலி செலுத்தியுள்ளோம்.

ஆனால் எமது நியாயமான அபிலாைசகளை வழங்கி விடக்கூடாது என்ற பெரும்பான்மை இனத்தின் சிந்தனையில் எள்ளளவும் மாற்றமில்லை. குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் தமது சமூகம் சார்ந்து சிந்தித்து செயற்படுவதற்கு கடிவாளம் கட்ட வேண்டும் என்பதில் பெரும்பான்மை தரப்புக்கள் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகின்றன.

ஆகக்குறைந்தது உயீர்நீத்தவர்களுக்காக சுதந்திரமாக அஞ்சலி செய்வ தைக்கூட தடுத்து விட வேண்டும் என்றே கோணத்திலேயே பல செயற் பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக ஒளிப்படம் வைத்திருந் தார்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலைப்பயன்படுத்தி பாது காப்பு என்ற பெயரில் படைத்தரப்பு பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்திரு க்கின்றது. போர் நிறைவடைந்து ஒரு தசாப்தத்தினை நாம் பூர்த்தி செய்திரு க்கின்ற போதும் அதன் வடுக்களை ஆற்றுவதற்கு சிறீலங்கா அரசாங்கமோ பெரும்பான்மை தேசிய வாதிகளோ தயாராக இல்லை.

மேலும் மேலும் தமிழினத்தை ஒட்டுமொத்தமாக நசுக்கி விட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் செயற்பாடுகளை முன்னெடுகின்றார்கள். இந்த நிகழ்ச்சி நிரல் நிச்சயம் தோற்கடிக்கப்பட வேண்டும். எமது விடுதலைக்கான பயணத்தில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்று இப்புனித நாளில் திடசங்கல்பம் பூண வேண்டும். பத்தாண்டுகள் அல்ல எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் எமது ரணங்களுக்கு உரியவர்கள் பதில் கூறியே ஆகவேண்டும்.

 

ரணில் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்த மாவை தற்போது தமிழ் அரசியல் கைதிகளுக்காக குரல் கொடுக்கிறார்

ஞானசார தேரரை விடுதலை செய்த அரசிற்கு பலவருடங்கள் சிறையில் வாடும் தமிழ் இளைஞர்களை கண்ணிற்குத் தெரியவில்லையா? என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தின் போது பாராளுமன்றில் கேள்வியெழுப்பினார்.

அவசரகாலச் சட்டத்தால் தமிழ் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள், தென்னிலங்கையை விட மிகவும் கடுமையான நடவடிக்கைகள் வடக்கில் மேற்கொள்ளப்பட்டன.

மாணவர்களின்பாடப்புத்தகப் பைகளை சோதனையிடும் போது அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்

இன்று ஞானசார தேரரை உங்களால் விடுதலை செய்ய முடியுமாயின் ஏன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான தமிழ் இளைஞர்களை விடுவிக்க முடியாது? இவர்களின் விடுதலைக்காக சட்டத்தரணிகளை வைத்து வாதாட முடியாத நிலையில் பலர் உள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும். இனப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிகள் பின்தள்ளி வைக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தற்போதைய ரணில் அரசைக் காப்பாற்றுவதற்காக நிபந்தனையற்ற ஆதரவுகளை வழங்கிய தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தற்போது அரசியல் கைதிகள் தொடர்பில் அரசை குற்றம் சுமத்துவது வேடிக்கையானது என கொழும்பைத் தளமாகக் கொண்ட அரசியல் அவதானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலையை கூட அவர்களால் ஏன் நிபந்தனையாக வைக்க முடியவில்லை என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

சிறீலங்காவின் வெளிநாட்டுக்கடன் தொகை 32.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

கடந்த வருடத்தின் முடிவுடன் சிறீலங்கா அரசின் வெளிநாட்டுக்கடன் தொகை 32.54 பில்லியன் டொலர்களாகும் என சிறீலங்காவின் வெளிநாட்டுவளத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சிறீலங்காவின் கடன் சுமை 32.54 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. இந்த கடன் தொகைக்கு செலுத்த வேண்டிய சேவைகள் வரி 2,920 மில்லியன் டொலர்களாகும்.

அதுமட்டுல்லாது கடன் மீள் செலுத்தும் தொகையாக 1,805.7 மில்லியன் டொலர்களையும், வட்டியாக 1,114.3 மில்லியன் டொலர்களையும் சிறீலங்கா அரசு செலுத்த வேண்டியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கடந்த மாதம் இடம்பெற்ற தாக்குதல் சிறீலங்காவின் சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு முதலீட்டுத்துறை ஆகியவற்றை அதிகம் பாதித்துள்ளதால் சிறீலங்கா அரசு கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே தான் வெளிநாட்டு பிரதிநிதிகளை இந்த வாரம் சந்தித்த சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா பயணத்தடைகளை நீக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

பாப்பரசரின் பிரதிநிதி, நீர்கொழும்பு தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்

பாப்பரசரின் பிரதிநிதியான கர்தினால் பிலோனி, சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டு, நீர்கொழும்பு தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கு முழந்தாளிட்டு அஞ்சலி செலுத்தினார்.

தேவாலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட கர்தினால் பிலோனி, திடீரென முழந்தாளிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்த தேவாலயத்திலேயே கடந்த ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

தென்னாப்பிரிக்காவின் அதிபராக மீண்டும் சிரில் ராமபோசா பதவியேற்றார்

இரு வாரங்களுக்கு முன் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது.இதன்பின் அதிபருக்கான தேர்வில் சிரில் ராமபோசாவின் பெயரே முன்மொழியப்பட்டது. அவர் போட்டியின்றி மீண்டும் தென்னாப்பிரிக்க குடியரசின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதனை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தலைமை நீதிபதி மொகோயெங் கடந்த வாரம் அறிவித்தார்.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவின் நிர்வாக தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள லாப்டஸ் வெர்ஸ்பெல்டு ஸ்டேடியத்தில் அதிகாரிகள் மற்றும் குடிமக்கள் முன்னிலையில் முறைப்படி இன்று அதிபராக ராமபோசா பதவியேற்று கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநில தலைவர்கள் மற்றும் மாநில முன்னாள் தலைவர்கள், சர்வதேச தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தென்னாப்பிரிக்க நாட்டின் அதிபராக பதவி வகித்து வந்தவர் சிரில் ராமபோசா (வயது 66). அந்நாட்டின் வர்த்தக அமைப்பு தலைவர், தொழிலதிபராக இருந்து வரும் அவர், 2014ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை நாட்டின் துணை அதிபராக இருந்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் (ஏ.என்.சி.) தலைவராக பொறுப்பேற்று கொண்டார். அவர் தேசிய திட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்

ஐ.நா. வாகனங்கள் தொடர்பாக வெளிவந்த செய்திகளில் உண்மையில்லை – சிறீலங்கா இராணுவம்

.நா. சபை இலட்சினை பொறிக்கப்பட்ட வாகனங்கள், மாலி இராச்சியத்தில் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கு அனுப்புவதற்காக தயாரித்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரட்ண தெரிவித்துள்ளார்.

குறித்த தகவல்கள் தொடர்பாக சமூகவலைத் தளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் தொடர்பாக ஊடகங்களின் வினாக்களுக்கு பதிலளிக்கும் வகையில் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேற்படி தெரிவித்தார்.

அந்த வாகனங்கள், மாலி இராச்சியத்தில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவத்தினருக்கு அனுப்பி வைப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதை பரீட்சித்த போது புகைப்படம் எடுக்கப்பட்டு, அவை முகநூல் ஊடாக பரப்பப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

வாகனங்கள் வேறிடத்திலிருந்து கொண்டு வரப்படவில்லை என்றும், இராணுவத்தினரிடமிருந்த ஒரு ரக வாகனங்களே புதுப்பிக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே இத்தகவல்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.