Home Blog Page 2247

அணுக்கழிவுகளை புதைக்கும் இடமாக தமிழ்நாடு- கொந்தளிக்கும் மக்கள்

அணுக்கழிவுகளை முழுமையாகச் செயலிழக்க வைக்க தொழில்நுட்பங்கள் இல்லாத நிலையில், அதை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் வகையில் அணுக்கழிவு மையம் அமைக்க இந்தியாவில் கூடங்குளம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் ஜூலை 10ந்தேதி பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் அணுஉலைகள் மூடப்பபட்டு வரும் நிலையில், இந்தியாவில் தற்போது வரை 22 அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. கூடங்குளத்தில் 2 அணுஉலைகள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 2அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நாடு முழுவதும் மேலும் 20 அணு உலைகள் புதியதாக வரப்போவ தாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் முதன்முறையாக அணுக்கழிவுகளை சேமித்து வைக்கும் மையம் அமைக்க கூடங்குளம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே இது தொடர்பான வழக்கில், கூடங்குளத்தில் இருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை என்ன செய்யப்போகிறீர்கள் என்ற நீதிமன்றத்தில் கேள்விக்கு, தேசிய அணுமின் கழகம், நாட்டில், அணுக்கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் இல்லை என்றும், `கூடங்குளத்தில் உற்பத்தி யாகும் அணுக்கழிவுகளை கோலார் தங்கவயலில் வைக்கப் போகிறோம்’ என தெரிவித்தது. அத்தீர்ப்பு வெளியான சில மணிநேரங்களில் கர்நாடகா, தங்கள் மாநிலத்தில் அணுக்கழிவுகளை கொட்ட விடமாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக ஜூலை 10ந்தேதி பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த இருப்பதாக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து உள்ளது.

இந்த கருத்துக்கேட்பு கூட்டம் ராதாபுரத்தில் உள்ள என்.வி.சி. அரசு பள்ளியில் இந்த கூட்டம் நடை பெறும் என்றும், பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் அணுஉலை, மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற நாசகார திட்டங்களை கொண்டு வந்து, தமிழகத்தை சுடாகாடாக மாற்றி வரும் மத்தியஅரசு, தற்போது அணுக்கழிவு களை பாதுகாக்கும் மையம் அமைக்க கூடங்குளத்தையே தேர்வு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

அணுக்கழிவுகளை முழுமையாகச் செயலிழக்க வைக்க புதிய தொழில்நுட்பங்கள் இல்லாமல் உலக நாடுகளே திணறி வரும் நிலையில், இந்தியா கூடங்குளத்திலேயே அணுக்கழிவு மையம் அமைக்க முன்வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தை நிர்முலமாக்க மத்திய மோடி அரசு முடிவு செய்துள்ளதுபோலும்

இந்த நாட்டில் சட்டம் இருந்தால் சிங்கள அடிப்படைவாதிகளையும் தடை செய்ய வேண்டும் – பதியுதீன்

என்மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் எனக்கு மரண தண்டனை விதித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கின்றேன்.அதற்காக என்னை பழிவாங்குவதாக தெரிவித்து முஸ்லிம் சமுகத்தை பழிவாங்கோ முஸ்லிம்களின் பொருளாதார நிலையங்களை தாக்கவோ வேண்டாம்.

அத்துடன் நாங்கள் யாருக்கும் பயந்து அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்யவில்லை.நாட்டுக்காகவே இராஜினாமா செய்தோம்.இந்த நாட்டில் சட்டம் இருந்தால் சிங்கள அடிப்படைவாதிகளையும் தடை செய்ய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று தேயிலை சபை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், உலக பயங்கரவாதம் இந்த நாட்டில் புகுந்து இலங்கையிலுள்ள சில முஸ்லிம் இளைஞர்களை அதற்குள் சம்பந்தப்படுத்தி இந்த நாட்டில் நாம் எதிர்பார்க்காத பயங்கரவாதத்தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலுடன் அப்பாவி 22 இலட்சம் முஸ்லிம்களையும் தொடர்புபடுத்தி வகாபிவாதிகள், அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் அழகாக சிங்கள மொழியில் பேசுகின்ற அரசியல்வாதிகள் இந்தப் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் உருவாகியுள்ளனர். முஸ்லிம்களையும் உலமாக்களையும் மிக மோசமான வார்த்தைகளால் பேசுகின்ற செயற்பாட்டினை நாம் பார்க்கின்றோம்.அதற்கு சில ஊடகங்களும் துணை போகின்றன.

நாடு பாதுகாக்கப்பட வேண்டுமென்ற உணர்வோடுதான் இன்றுவரை முஸ்லிம் சமூகம் உள்ளது.

ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத செயலை கண்டித்ததோடு மட்டுமல்லாது அந்த செயலோடு சம்பந்தப்பட்டவர்கள் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சொந்தங்களாக,நண்பர்களாக இரத்த உறவுகளாக இருந்தாலும் கூட அவர்களைக் காட்டிக்கொடுக்கும் பணியை முஸ்லிம் சமூகம் செய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இணைந்த வடக்கு கிழக்கில் அதிகாரக் கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம்- விக்னேஸ்வரன்

இலங்கையில் புத்த பிக்குகளின் செல்வாக்கு சட்டம், ஒழுங்கு மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைக் குழிதோண்டி புதைக்கும் நிலையினை உருவாக்கியுள்ளது என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பசிக்கு சகோதர முஸ்லிம் மக்கள் இரையாகிவரும் இந்த தருணத்தில் தமிழ் மக்கள் அவர்களை ஆதரவுடனும் பாசத்துடனும் ஆரத்தழுவுவதாகவும் அவர்களின் துயரத்தில் பங்குகொள்வதாகவும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களைப் பல தசாப்தங்களாக பலிகொண்டுவரும் சிங்கள பேரினவாதத்தின் பார்வை தற்போது முஸ்லிம் மக்களின் மீது திரும்பியிருக்கும் இந்த வேளையில், தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கைகோர்த்து, இணைந்த வடக்கு கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்காகப் பாடுபடவேண்டியதன் அவசியத்தை நடைபெறுவரும் நிகழ்வுகள் காட்டுவதாகவும் அத்தகைய ஒரு கட்டமைப்பு மட்டுமே இரண்டு சமூகங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்றும் இன்று செய்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்களின் அரசியல், பொருளாதார பலத்தை இலக்குவைத்து பௌத்த பேரினவாதம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் பேராபத்தை உணர்ந்துகொண்டு வெவ்வேறு கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையை வெளிப்படுத்தி இருப்பது மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் இதனை வெகுவாகப் பாராட்டுவதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசாரித்து தேவையெனில் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் குற்றஞ்செய்யாதவர்களையும் பெரும்பான்மையினம் தண்டிக்க விழைவது எந்த விதத்திலும் மன்னிக்க முடியாதது என்றும் அவர் தம் அறிக்கையில் கூறியுள்ளார்

டென்மார்க்கில் சாதனை படைத்த இரு ஈழத்தமிழர்கள்

டென்மார்க்கில் வசித்து வரும் ஜனார்த்தன், வாகீசன் ஆகிய இரண்டு ஈழத் தமிழர்களும் டென்மார்க் விமான நிலைய பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிகளை முடித்து பட்டங்களைப் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள்  குவிந்தவண்ணம் உள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை 70 விகிதத்தால் வீழ்ச்சி – நிதி நெருக்கடியை எதிர்நோக்கும் சிறீலங்கா

கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சிறீலங்காவுக்கவுக்கு வருகைதந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதம் 70 விகிதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளதாக சிறீலங்காவின் சுற்றுலா மேம்பாட்டுத்துறைத் தலைவர் கிசோ ஹேம்ஸ் நேற்று (04) தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல்களில் மூன்று ஆடம்பர விடுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகியதே இந்த வீழ்ச்சிக்குக் காரணம். அதன் பின்னர் பெருமளவான பயணிகள் சிறீலங்காவைத் தவிர்த்து வருகின்றனர்.

கடந்த வருடம் மே மாதம் 129,000 சுற்றுலாப் பயணிகள் வருகைதந்திருந்த போதும், இந்த வருடம் மே மாதம் 37,000 பயணிகளே சிறீலங்காவுக்கு வந்திருந்தனர்.

இந்த வீழ்ச்சியானது ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் 30 தொடக்கம் 40 விகிதமாக குறைவடையலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சிறீலங்காவின் பிரதான வருமானத் துறையான சுற்றுலாத்துறையின் வீழ்ச்சி சிறீலங்காவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவில் 15ஆயிரத்திற்கும் அதிகமானோர்க்கு சமுர்த்திக் கொடுப்பனவு

முல்லைத்தீவில் நீண்ட காலமாக வழங்கப்படாதிருந்த சமுர்த்திக் கொடுப்பனவு எதிர்வரும் 08ஆம் திகதி நடைபெறவுள்ள “நாட்டிற்காக ஒன்றிணைவோம்” நிகழ்வில் வைத்து வழங்கப்பட ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் க.ஜெயபவானி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 3ஆயிரத்தி697 குடும்பங்களுக்கும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 6ஆயிரத்து 11 குடும்பங்களுக்கும், மாந்தை கிழக்கில் 657 குடும்பங்களுக்கும், துணுக்காயில் 642 குடும்பங்களுக்கும், ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 1758 குடும்பங்களுக்கும், வெலிஓயா(மணலாறு) பிரதேசத்தில்878 குடும்பங்களுக்கும் என ஆக மொத்தம் 13ஆயிரத்து 643 குடும்பங்களுக்கான சமுர்த்தி திட்ட அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், எதிர்வரும் 08ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் முல்லைத்தீவில் நடைபெறும் ”நாட்டிற்காக ஒன்றிணைவோம்” நிகழ்வில் வழங்கப்படவுள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

பூஜித், ஹேமசிறி ஆகியோருக்கு தெரிவுக்குழு அழைப்பாணை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் பாராளுமன்ற தேர்வு குழு (PSC) காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை தேய்வுக்குழுவின் முன் சமூகமளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் (CID) பொறுப்பாளரான பிரதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டிஐஜி) மற்றும் CID மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு (TID) ஆகியோரை முதலில் அழைத்து விசாரிப்பதற்கு முன்னர் திட்டமிட்டிருந்ததாக தெரிவுக்குழுத் பிரதித் தலைவர் ஜயபிட்டி விக்ரமரத்ன தெரிவித்தார்.

“ஐ.ஜி.பீ, மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரிடமிருந்து முதன்முதலில் சான்றுகளை பெறுவது சிறப்பாக இருக்கும் என்று தெரிவுக்குழு முடிவு செய்துள்ளது,” என்று அவர் கூறினார்.

நடப்பு பாதுகாப்பு செயலாளர் நாயகம் சாந்த கோட்டகொட தேசிய புலனாய்வு முன்னாள் டி.ஐ.ஜி. சிசிர மென்டிஸ் மற்றும் டி.டி.ஐ யின் முன்னாள் பணிப்பாளர் டி.ஐ.கே. நலகா டி சில்வா ஆகியோர் இதுவரை PSC க்கு முன் சான்றுகள் வழங்கியுள்ளனர்.

பொலன்னறுவையில் தேரர்கள் எதிர்ப்பு பேரணி

இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொலன்னறுவை பௌத்த பிக்குமார் 2,000 க்கு மேற்பட் டோர் ஒன்றிணைந்து இன்று பாரிய ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.​பொலன்னறுவை- மட்டக்களப்பு பிரதான வீதியில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றுள்ளது.

சஹ்ரானின் நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ச்சியாக அறிவித்துவந்தேன் – நாலக்க டி சில்வா

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடியது.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவின் தலைமையில் தெரிவுக்குழு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடியது.

பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா இன்று சாட்சியமளித்தார்.

பிரமுகர் கொலைச்சதி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாலக்க டி சில்வா பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சக்கர நாற்காலியிலேயே இன்று அவர் சாட்சியமளிக்க வந்திருந்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படுவதனால் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விடயங்களை ஒளிப்பதிவு செய்வதற்கு ஊடகங்களுக்கு அனுமதியில்லை என சாட்சி விசாரணை ஆரம்பமாவதற்கு முன்னர் தெரிவுக்குழு அறிவித்தது.

சாட்சியாளர்கள் அல்லது தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் அது தொடர்பில் முன்வைத்த கோரிக்கைக்கமைய, ஊடகங்களுக்கு இந்த வரையறை விதிக்கப்படுவதாக குழுவின் தலைவர் அறிவித்தார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் வருண ஜயசுந்தர ஆகியோர் இன்று அழைக்கப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரிடம் சாட்சி விசாரணை முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் மேற்குறிப்பிட்ட நபர்களை அழைப்பதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவுக்குழு இன்று அறிவித்தது.

இன்றைய விசாரணையின் போது, ஏப்ரல் 21 தாக்குதல்தாரியான சஹ்ரான் தொடர்பில் தாம் 2013 ஆம் ஆண்டு முதல் அறிந்திருந்ததாக பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

சஹ்ரானின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரிக்கும்போது, அவரின் இணையத்தளம், முகப்புத்தகப் பக்கம் என்பவற்றை கண்காணித்து வந்ததாகவும் அவர் வன்முறை கடும்போக்குவாதம் நோக்கிப் பயணிப்பது தெரியவந்ததாகவும் நாலக்க டி சில்வா சாட்சியமளித்துள்ளார்.

இவை தொடர்பாக தொடர்ச்சியாக காவல்த்துறை அதிபருக்கு தான் கைதுசெய்யப்படுவரை அறிவித்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ். இராணுவ கட்டளைத் தளபதியை தொடர்பு கொண்ட மனோ

யாழில் அதிகமாக உள்ள சோதனைச் சாவடிகள் தொடர்பாக பேசுவதற்கு, அமைச்சர் மனோ கணேசன் யாழ். கட்டளைத் தளபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

யாழிலிருந்து வெளியிடங்களுக்கு செல்பவர்கள் அதிக சோதனை கெடுபிடிகளை சந்திப்பதைப் பற்றி குறிப்பிட்ட மனோ கணேசன், அது குறித்து கேள்வியெழுப்பினார்.

வடக்கில் ஐ.எஸ் தாக்குதல் அபாயம் ஏற்படாதிருக்க அவதானமாக இருப்பதாக குறிப்பிட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி, தற்போதைய நிலைமை சுமுகமாகி வருவதால் சோதனை நடவடிக்கைகளை தளர்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளதாக மனோ கணேசன் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.